கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 November, 2010

படுக்கை அறைகனவுகளின் தொழிற்சாலை...
ஏக்கங்களின் உற்பத்திக்கூடம்...
ஓடிய படகுகள் ஒதுங்கும் கறை...
பாடும் பறவைகளின் பல்லவிதேசம்...
வாழ்க்கை தேசத்து வசந்த மண்டபம்...
 

இளைய தலைமுறையின் அந்தப்புறம்...
பணம் படைத்தவனுக்கு
இங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
 

ஏழை வாசிக்கு
இங்கு சொர்கத்தின் சுகங்கள்


நாணம் கொள்ள இது நாடகமேடை...

மோகம் கொள்ள இது பள்ளியறை...
 

குடுமபத்தலைவிக்கு
‌இது விண்ணப்ப மையம்...
 

பெண்ணை பெற்றவனுக்கு
இது வேதனை கூடம்...
 

சோகங்களை சொல்லி அழுது
தலையனைகளோடு
தாம்பத்தியம் கொள்வதும் இங்குதான்


மோங்களை அள்ளி அனைத்து
தலைகால் புரியாமல்
தலை சுற்றி கவிழ்வதும் இங்குதான்...
 

கட்டில் வெறுத்து தொட்டில் வெறுத்து
முட்டிய காமத்தை முழுதாய் தீர்த்து
காவிக்கதைகள் துவங்கியதும் இங்குதான்
 

காதல் ‌கொண்டவனுக்கு
இவ்விடம் முட்களை விதைக்கிறது...
 

காதலை ‌வென்றவனுக்கு
இவ்விடம் மலர்களை விதைக்கிறது...
 

இங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...
 

நித்தம் நித்தம் தென்றல் வீசி
ஜன்னலோடு சில கதைகள் பேசி
வாடிய மனதை மலர வைக்கும்
வாலிப மனதை வாட வைக்கும்
 

கவிதை வரும்
அதை எழுதித் தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை எதிரியாய் நடத்தும்
 

ஜீவன் சுமந்து ஜீரணிக்கும் வரை
படுக்கை அறை ஒரு சுதந்திரசிறை
 

படுக்கை அறையில் சண்டைகள் இருக்கும்
தோற்றவர் வெல்வார் வென்றவர் தோற்பார்
படுக்கை அறையில் மௌனம் இருக்கும்
உறக்கத்தில் கொஞ்சம் மயக்கத்தில் கொஞ்சம்
 

இறுதியாய்...
 

படுக்கை அறை
ஆக்கலும் அழித்தலும் மட்டுமல்ல
காத்தலும் செய்கிறது...
 

படுக்கை அறை
ஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது...0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...