கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 December, 2010

தன்னை மறந்த நிலையில் தான்...


தன்னை மறந்த நிலையில் தான்....
      ஒருவன் கவிதை எ‌ழுதுகிறான்      
      ஒருவன்  கழுத்தை அறுக்கிறான்
      ஒருவன் தீயிடுகிறான்
      ஒருவன்  தீமிதிக்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் சக்தி பெறுகிறான்
      ஒருவன் முக்தி பெறுகிறான்
      ஒருவன் வாழ்வை வெல்கிறான்
      ஒருவன்  மரணத்தை கொள்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் அமைதி இழக்கிறான்
      ஒருவன்  கோவம் கொள்கிறான்
      ஒருவன் சாபம் கொடுக்கிறான்
      ஒருவன்  நியாயம் மறக்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் வீடுதுறந்து துறவியாகிறான்
      ஒருவன்  தன்னை மறந்து துரோகியாகிறான்
      ஒருவன் காதலித்து பித்தனாகிறான்
      ஒருவன்  கடவுளின் பக்தனாகிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் போதி மரத்தடியில் ஞானமடைகிறான்
      ஒருவன்  மரத்தை வெட்டி பாவியாகிறான்
      ஒருவன் இம்சை செய்து இட்லராகிரான்
      ஒருவன்  அகிம்சை செய்து மாகாத்மாவாகிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் ஆசைக் கொண்டு திருடனாகிறான்
      ஒருவன்  காமம் கொண்டு காமூகனாகிறான்
      ஒருவன் சட்டம் இயற்றி மேதையாகிறான்
      ஒருவன்  சட்டைக் கழற்றி ஞானியாகிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் பணத்திற்காக கொலை செய்கிறான்
      ஒருவன்  நாட்டுக்காக உயிர் கொடுக்கிறான்
      ஒருவன் ஆட்சியேறி அடிமை செய்கிறான்
      ஒருவன்  அடிமையாயிருந்தே புரட்சி செய்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் நாட்டை துறந்து காடுபோகிறான்  (ராமாயணம்)
      ஒருவன்   சூதாடி சூழ்ச்சியில் விழுகிறான் (மகாபாரதம்)
      ஒருவன்  கொலைபழிக்கு ஆளாகிறான் (சிலப்பதிகாரம்)
      ஒருவன்  முல்லைக்கெல்லாம் தேர் கொடுக்கிறான்  (பாரி)

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் நபிகள் மீது கல்‌லெறிகிறான்
      ஒருவன்  ஏசுவை சிலுவையில் அறைகிறான்
      ஒருவன் சிலைகளை கல்லென்கிறான்
      ஒருவன்  சிவன் தலை மீதே கை வைக்கிறான்

      அனுமன் அமைதியாய் இருந்ததும்...
      ராவணன் மதி இழந்ததும்....
      மகாவீரர் அரண்மனையில் இருந்ததும்...
      ஆதிமனிதன் குரங்கில்  இருந்ததும்...
      அ‌லெக்சண்டர் ஆசைக் கொண்டதும்...
      சிவன் சக்தியை எரித்ததும்...
      கண்ணதாசன் மதுவில் இருந்ததும்...

தன்னை மறந்த நிலையில் தான்...     

 

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...