கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 December, 2010

கனிமொழி - திரைவிமர்சனம்


விஷ்காம் படிக்கும் ஜெய்க்கு பெரிய டைரக்டராக வேண்டும் என்று ஆசை. எப்போதும் கற்பனையில் மிதப்பவர். அவருக்கு வடநாட்டிலிருந்து வந்து சென்னையில் செட்டிலாகியிருக்கும் ஷசான் மீது காதல். பணக்கார வீட்டு இளைஞனான விஜய்க்கும் அவர் மீது காதல். ஜெய் அவரிடம் காதலை சொல்ல துணிச்சலில்லாமல் தவிக்க, விஜய் யதார்த்தமான ரூட்டில் காய் நகர்த்தி கல்யாணம் வரைக்கும் போய்விடுகிறார். மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு நடக்கும் கிளைமாக்சில் ஓர் ஆச்சர்ய அதிர்ச்சி கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.

ஹீரோ ஜெய்க்கு வழக்கமான கேரக்டர் என்பதால் எதிர்பார்க்கவும் வைக்கவில்லை; ஏமாற்றவும் செய்யவில்லை. அம்மாவுடன் வம்பு, நண்பர்களுடன் காம்பவுண்ட் சுவர் அரட்டை, கிரவுண்டில் கிரிக்கெட் விளையாட்டு, பாரில் போதை, அடுத்த ஏரியாவுக்குச் சென்று தகராறு என்று, ‘சென்னை&28’ ஜெய் ரிபீட் ஆகியிருக்கிறார். இருந்தாலும் சில இடங்களில் கவனிக்க வைக்கிறார்.  ஹீரோயின் ஷசானுக்கு வேலை இல்லை.

வழக்கம்போல ஹீரோவின் நண்பர்கள் அவரையும் நம்மையும் கலகலப்பூட்ட முயற்சிக்கிறார்கள். ‘நான் வச்சிட்டுப்போன பீர் எங்கடா?’, ‘கொட்டிடுச்சு’. ‘எங்கடா கொட்டுச்சு’. ‘என் வாயிலதான்’. இப்படி அவ்வப்போது வந்து விழும் வசனங்கள் கலகலப்பூட்டுகிறது. சிதம்பரத்தின் கேமரா பாடல் காட்சிகளுக்கு வர்ணம் பூசியிருக்கிறது. சதீஷ் சக்ரவர்த்தியின் இசை பாடல்களில் பாசாகிறது. பின்னணியில் பின்னால் நிற்கிறது.

காட்சிகளை யதார்த்தமாகப் படம் பிடித்திருப்பதிலும், அவ்வப்போது வரும் சின்ன ட்விஸ்ட்டும், கிளைமாக்ஸ் திருப்பமும் படத்துக்கு பலம். வழக்கமான சினிமா ஃபார்முலாவிலிருந்து விலகி யதார்த்தமாக படம் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபதி ரெங்கசாமி. ஆனால் பெரிதாக சிந்தித்தவர், அதை சினிமாவாக்க முடியாமல் திணறியிருக்கிறார். 

நடிப்பு : ஜெய், ஷசான் பதம்ஸி, விஜய் வசந்த், அஸ்வின் ராஜா.
 
இயக்கம் : ஸ்ரீபதி ரெங்கசாமி
 
தயாரிப்பு : அம்மா கிரியேஷன்ஸ்
 
இசை : சதீஷ் சக்ரவர்த்தி
 
ஒளிப்பதிவு : பி.சிதம்பரம்

நான் தர்ர மார்க்  48

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...