கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 January, 2011

அஜீததுக்கு கண்டனம்

ஆண்டின் முதல் பதிவு தலையோடதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு   - கவிதை வீதியிலிருந்து...
அசல் படம் சரிவு, மங்காத்தா இழுப்பரி, அரசிலுக்கு வர‌வேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளை நிராகரித்தது என அஜீதுக்கு 2010 சரியில்லை என்றே சொல்ல வேண்டும்.

அஜீத்திற்கும், அவரது ரசிகர்கர் மன்றத்திற்கும் எழுந்திருக்கும் பிரச்சனை அவ்வளவு சீக்கிரத்தில் முடியாது போலிருக்கிறது. ரசிகர்கள் தன்னை சந்திக்க மறுப்பதை தொடர்கதையாக கொண்டு இருக்கிறார் அஜீத். இதனால் அவரது ரசிகர்கள் விரக்தியில் கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

நடிகர் விஜய் அரசியலில் பிரவேசம் செய்வது உறுதியாகிவிட்டது. அதேபோல் அஜீத்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ரசிகர்கள் கூட்டவிருந்த கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த அஜித், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன், என்றும் அறிக்கை வெளியிட்டார். இதனால் அப்செட்டான அவரது ரசிகர்கள் ‌இப்போது மேலும் விரக்தி அடைந்துள்ளனர். 

வருடத்திற்கு ஒரு நாளாவது எங்களை சந்திக்க வேண்டும் என்று ரசிகர்கள் துடிக்கின்றனர். ஆனால் அவர்கள் யாரையும் என்னிடம் அனுப்ப வேண்டார். நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்று ரசிகர் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவிடம் உத்தரவிட்டுள்ளார். 

ரசிகர்கள் ஒவ்‌வொரு முறை அஜீத்தை சந்திக்க வரும் போதோ அல்லது அவர்களின் கேள்விக்கோ சுரேஷ் சந்திரா‌வே பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதனால் ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதனை அஜீத்திற்கு தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ரசிகர்கள், சென்னையில் கண்டன போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் "எங்கள் தலையை எங்ளோடு சந்திக்க விடாமல் தடுக்கும் சுரேஷ் சந்திராவை கண்டிக்கிறோம்" என்று அச்சிட்டுள்ளனர். 

ஏய்தவர்(அஜீத்) படப்பிடிப்பில் நிம்மதியாக இருக்கிறார். ஆனால் அம்பாகிய சுரேஷ் சந்திராவோ நொந்து நூடூல்ஸ் ஆகியுள்ளார்.
 
மங்காத்தா, பில்லா-2 ஆகிய படங்களின் முடிவுக்கு பிறகுதான் அஜீத்தின் அரசியலுக்காக அடுத்த அடி இருக்கும் என்பது  ரசிகர்களின் தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.

இன்னும் நான்கு அல்லது ‌ஐந்து மாதத்தில் தேர்தல் வரும் இந்நேரத்தில் அரசியல் தேர்வு பற்றி வாய்திறக்காதது கொஞ்சம் வேதனைதான்..

தற்போது இருக்கும் சூழலில் திமுக-வோ, அதிமுக-வோ நடிகர்களை இழுப்பதிலும், வரவேற்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறது...

தல எந்தப்பக்கம் சாயும்.. பொருத்திருந்து பார்ப்போம்

நண்பர்களே... இதை படிக்கும் நீங்கள் கருத்துரைக்கவோ, வாக்களிக்கவோ இல்லையென்றாலும் பரவாயில்லை ஏதாவது ஒரு கவிதை படித்து விட்டு செல்லுங்கள்... நன்றி...

6 comments:

 1. 100% Genuine & Guarantee Money Making System. (WithOut Investment Online Jobs).

  Visit Here For More Details : http://bestaffiliatejobs.blogspot.com

  ReplyDelete
 2. இப்படியெல்லாம் பேசியே எல்லாரையும் பெரிய ஆளாக்கி விடுறது இந்தத் தமிழர்களின் (ரசிகர்களின்) வேலை.

  ஆமா அஜித் வரனும் என்று கூறுகிறார்களா? வரக்கூடாது என்று கூறுகிறார்களா?

  பதிவுக்கு நன்றி..

  ReplyDelete
 3. தோழரே அந்த word verification ஐ எடுத்துடுங்களேன்.

  ReplyDelete
 4. இந்த பதிவை வாசித்த அனைவருக்கும் நன்றி...

  ReplyDelete
 5. அஜீத்தின் இந்த பதிவை வாசித்த னைவருக்கும் நன்றி

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...