கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 January, 2011

இளையராஜாவுக்கு தமிழக அரசு விருது

ஆண்டு தோரும் தமிழக அரசு கலை-பாண்பாட்டுதுறை சார்பில் இயல்-இசை-நாடகத்தில் சாதித்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.


அதன் படி இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இசைஞானி இளையராஜாவுக்கு “எம்.எஸ் சுப்புலட்சுமி” விருது வழங்கப்படுகிறது.
இலக்கியத்துறையில் சாதனைப்படைத்த இலக்கியவாதி சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு “பாரதி விருது“ அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டியத்துறையில் சிறந்து விளங்கும் திருமதி பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு “பால பாரதி விருது”ம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விருதுகளை இம்மாத இறுதியில் கலை-பண்பாட்டுத்துறையால் முதல்வர் தலைமையில் வழங்கப்படும் இத்துடன் 1 லட்சம் ரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்படும்  என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. கலை பண்பாட்டு துறை விருது பெற்ற அனைத்து ஜாம்பவான்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இளையராஜாவின் புகழ் இன்னும் ஓங்கட்டும்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...