கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 January, 2011

பத்துக்கு பத்து (தமிழ் சினிமா இந்த வாரம்)

கௌதம் படத்தை வாங்கிய கிளவுட் நைன்

கௌதமின் ஃபோட்டோன் கதாஸ் நிறுவனம் மூன்று படங்களை தயா‌ரித்து வருகிறது. நடுநிசி நாய்கள், வெப்பம், அழகர்சாமியின் குதிரை. 
அழகர்சாமியின் குதிரை படத்தை வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் வெண்ணிலா கபடிக்குழுவில் டீக்கடை வைத்திருப்பவராக நடித்த காமெடி நடிகர் ஹீரோவாக்கப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை ஒட்டுமொத்தமாக கிளவுட் நைன் நிறுவனம் வாங்கியுள்ளது. கௌதமின் வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட்டதுதான் கிளவுட் நைனின் முதல் திரை முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. 


********************************************************************************************* 
மீண்டும் தன் கதையை துசு தட்டிய செல்வராகவன்!  

செல்வராகவன் அறிவித்து அறிவிப்போடு நின்றுபோன படங்கள் பல. டாக்டர்ஸ், இது மாலை நேரத்து மயக்கம், சிந்துபாத்... 'காதல் கொண்டேன்' படம் வெற்றிக்குப் பிறகு தனுஷை வைத்து 'டாக்டர்ஸ்' என்ற படத்தை இயக்க முடிவு செய்தார் செல்வராகவன். ஆனால் கதை விவாத்துடன் 'டாக்டர்ஸ்' முடிந்தது. தற்போது தனுஷ், ஆன்ட்‌ரியா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை இயக்கி வருகிறார். இது ஏற்கனவே அவர் அறிவித்த டாக்டர்ஸ் படம் என்ற பேச்சு எழுந்துள்ளது. காரணம் படத்தில் ஆன்ட்‌ரியா மருத்துவராக வருகிறார். மேலும் அவர் மனநல மருத்துவர் என்ற செய்தியும் கசிந்துள்ளது. படத்தில் தனுஷ் கண்ணாடி அணிந்து நாலு நாள் தாடியுடன் வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார். 

**********************************************************************************
நடிகை ரம்பாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கனவருடன் கனடாவில் இருந்தார் ரம்பா.   நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக டொரான்டோ நகரில் உள்ள மவுன்ட் சினை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக, ரம்பாவின் கணவர் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

*********************************************************************************** 
நடிகர் பா.விஜய் வீட்டில் கொள்ளை முயற்சி

வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் ராகவேந்திரா நகரில் சினிமா பாடலாசிரியரும் நடிகருமான பா. விஜய் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு, 1 மணியளவில் இவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து இரண்டு நபர்கள் உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜய்யின் பெற்றோர் திடுக்கிட்டு எழுந்தனர். விளக்கு வெளிச்சத்தில் இரண்டு வாலிபர்களின் நடமாட்டம் தெரிந்தது. விஜய் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் பா.விஜய் வீட்டிற்கு விரைந்தனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபா¢கள் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டனர். போலீசார், மர்ம நபர்களின் அடையாளங்களை விஜய்யின் பெற்றோரிடம் கேட்டறிந்தனர். மர்ம நபர்கள், திருடுவதற்காக வந்தார்களா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

**********************************************************************************
தேவா வேதனை

ஆத்தூர் நகர பொங்கல் விழா கழகம் சார்பில் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த இசை அமைப்பாளர் தேவா கூறியதாவது:-

தற்போது 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சின்னதிரைக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் மத்திய அரசில் வரைபட கலைஞராக தொலைக்காட்சியில் வேலைப்பார்த்தேன்.

நான் சினிமாவுக்கு வந்த பின்பும் அந்த வேலையில் தொடர்ந்தேன். ஏன் என்றால் சினிமாவில் தொடர முடியாது என்ற அச்சத்தில் இருந்தேன். சினிமாவில் `ரீமிக்ஸ்' பாடல்கள் என்று பாடல்களை மாற்றம் செய்கிறார்கள்.

இந்த மாற்றம் பாடலை படைத்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம் அல்ல. பலர் படம் வெளியிட முடியாமல், தியேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றன.

 எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்றவர்களின் பாடல்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது வரும் புதிய பாடகர்களின் பாடல்கள் மக்கள் மனதில் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

புதிய பாடகர்கள் 2 பாடல் முடித்துவிட்டு வேறு வேலைக்கு சென்று விடுகிறார்கள். இவர்கள் தரமான பாடல்கள் தரமுடியாததால் சினிமாதுறையில் நிலைக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
***********************************************************************************

வருடத்திற்கு இரண்டு படங்கள்!

சமீரா ரெட்டி தமிழில் நடித்துள்ள "நடுநிசி நாய்கள்' படம் தெலுங்கிலும் டப் ஆகிறது. வருடத்திற்கு இரண்டு பெரிய படங்களிலாவது நடிக்க வேண்டும் என்பது இவரது முடிவாம்.
*********************************************************************************** 
அதர்வா நடிக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள்  
பெயரையே கவிதையாக தேர்ந்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கணேஷ். இவரது முதல் படத்தின் பெயர், முப்பொழுதும் உன் கற்பனைகள்.
லண்டன் கணேஷ் தயா‌ரிக்கும் இந்தப் படத்தில் சமீபத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கிறார். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரைப் பதித்த அதர்வா இந்தப் படம் தன்னை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்துக்காக பல வாரங்கள் நடிப்புப் பயிற்சியும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த சின்சியா‌ரிட்டிக்காகவே இந்தப் படம் ஓடும் என்கிறார்கள் ஸ்டுடியோ வட்டாரத்தில். ***********************************************************************************


எஸ்ஏசி; அலுவலக எ‌ரிப்பு காட்சி 

சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதில் தனது மகன் விஜய்யின் காவலன் படத்தை திரையிடவிடாமல் தடுத்த அரசியல் சக்திகளை வெளுத்து வாங்கியிருக்கிறார். இதற்காக அவர் கைகோர்த்திருப்பது சத்யரா‌ஜ் மற்றும் சீமான்.

இந்தப் படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சித்திருக்கிறாராம். இதற்காகவே ஒரு நீதிமன்ற காட்சியை படத்தில் சேர்த்திருக்கிறாராம் எஸ்ஏசி. அதேபோல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக ஒரு காட்சியையும் சமீபத்தில் ஷூட் செய்திருக்கிறார்.

காட்சிகளில் ரவுண்ட் கட்டுகிறவர் வசனத்தில் நெருப்பை கக்கியிருக்கிறார். ரணகள ஆட்டத்துக்கு ரசிகர்கள் இப்போதே தயார். 


***********************************************************************************
ஆடுகளத்தை தாக்கும் சுனாமி 

இப்படியே போனால் மௌனப் படம் மட்டும்தான் எடுக்க முடியும்போல.
எப்படி வசனம் எழுதினாலும், இது எங்களை கேவலப்படுத்துது என்று முண்டாதட்ட ஒருசிலர் இருக்கதான் செய்கிறார்கள். ஆடுகளம் படமும் இதற்கு பலியாகியுள்ளது.
பயத்தைப் பற்றி இந்தப் படத்தில் பேசும் தனுஷ், பயமா... எனக்கா... நாங்க சுனாமியிலேயே ஸ்விம்மிங்கை போடுறவங்க என்பார். சும்மா ரைமிங்காக எழுதப்பட்ட வசனம்.
இது சுனாமியால் வீடு, வாசல், உறவுகளை இழந்த எங்களை அவமானப்படுத்துகிறது என மீனவ அமைப்புகள் கூட்டம் போட்டு கொதிப்பை காட்டியிருக்கின்றன.
மேலும் குறிப்பிட்ட வசனத்தை உடனே நீக்க வேண்டும் என்று கோ‌ரிக்கையும் வைத்திருக்கிறார்கள். 


*********************************************************************************** 
அருள்நிதி நடிக்கும் உதயன் 

முதல் படத்திலேயே தனது திறமையை வம்சம் 'அருள்நிதி' வம்சம் படத்துக்குப் பிறகு ஏராளமான கதைகளை கேட்டு வந்தார். இந்நிலையில் இரண்டு கதைகளை மட்டும் ஓகே செய்திருந்தார் அருள்நிதி. ஒன்று ஈரம் அறிவழகன் கூறிய கதை. இரண்டாவது அறிமுக இயக்குனர் சாப்ளினுடையது. ஆனால் சாப்ளினை அழைத்து படத்தை தொடங்குவதற்கான உத்தரவை வழங்கியிருக்கிறார் அருள்நிதியின் தந்தையும், படத்தை தயா‌ரிக்கப் போகிறவருமான மு.க.தமிழரசு. நகரத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இந்தப் புதிய படத்துக்கு உதயன் என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படம் முடிந்த பிறகு அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பார் என தெரிகிறது.

**********************************************************************************

4 comments:

  1. சிறக்கட்டும் உங்கள் பணி..
    அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. நான் ஓட்டு போட்டுட்டேன்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...