கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 January, 2011

தேன் நிலவு...!


“என்ன சார்... ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா‌மே..?

“ஹி... ஆமாம் சார்...!“

“ஒருவனுக்கு ஒருத்திங்கறதுதான் நம்ம நாகரீகம்... பண்பாடு...!”
 
“உண்மைதாங்க... இருந்தாலும் சந்தர்ப்பம்.. சூழ்நிலை.. இப்படி ஆயிட்டுது..?”
 
“சரி... தேன் நிலவு எங்கே?”
 
“‌அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்... தேனாவது.. நிலவாவது..!”

“அது சரி.. ஹனிமூன்ங்கற பேரு எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?”
 
“தெரியலையே..!”
 
“கல்யாணத்துக்குப் பிறகு மணமக்கள் முப்பது நாளைக்கு தினமும் தேன் சாப்பிடறது ஒரு பழக்கமாம்! அதை ஹனிமன்த் (HONEYMONTH)-ன்னு சொல்லுவாங்களாம்... இதுதான் பின்னாடி HONEY MOON -ன்னு ஆயிட்டுது..!”
 
“அப்படிங்களா..?”
 
“புது மணமக்கள் ஒரே கிண்ணத்துலே தேன்பருகும் வழக்கம் எல்லா ஐ‌ரோப்பிய நாடுகள்லேயும் இருந்ததாம்..!. மணமகள் வீட்டுக்கதவுலே தேனைத் தெளிக்கறது கிரேக்க விவசாயிகள் வழக்கமாம். ருமேனிய மக்கள் ‌பெண்ணின் முகத்தில் தேனைத் தடவுவாங்களாம்...? போலந்து மக்கள் மணபெண்ணின் உதட்டுலே தேன் தடவுவாங்களாம். சில நாடுகள்லே மணமக்கள் பலகாரங்களைத் தேன்லே தொட்டுச் சாப்பிடறது ஒரு மரபு. ஒரு கோப்பையிலே தேனை வச்சிக்கிட்டு ‌பெண்ணும் மாப்பிள்ளையும் மாறி மாறிச் சாப்பிடறதும் ஒரு வழக்கமாம்..!”
 
“இப்ப ஏன் சார் அதையெல்லாம்  ஞாபகப் படுத்தறீங்க?”
 
“புதுசாக் கல்யாணம் பண்ணியிருக்கீங்க.. அதனாலே தான்?”
 
“ரெண்டாம் கல்யாணம் தானே...!”
 
“உங்களைப் பொறுத்தவரைக்கும் அதுவும் ஒரு சந்தோஷமான சமாச்சாரம் தானே...!”
 
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. என்னோட முதல் மனைவி ரொம்ப நல்லவ சார்..!”
 
“அப்புறம் எதுக்கு ரெண்டாவது மனைவி?”
 
“இவ வந்த பிறகுதானே அவ எவ்வளவு நல்லவங்கறது எனக்குப் புரிஞ்சது...”

(அன்பர்களே... தமிழ‌ர் நெஞ்சங்களில் என்றும் குடியிருக்கும் மரியாதைக்குரிய திரு. தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் நகைச்சுவை ததும்பிய இக்கட்டுரைகள் புத்தகத்தோடு முடிந்தவிடக்கூடாது எக்பதற்காகத்தான் அவருடைய கட்டுரைகளை பதிவாக இடுகிறேன்..)

14 comments:

  1. நல்ல பகிர்வு. நகைச்சுவையோடு நல்ல விஷயமும் கலந்து தர அவரால் மட்டுமே முடியும்..

    ReplyDelete
  2. நகைச்சுவையும் தகவலும் இணைந்து...
    தென்கச்சியாரின் படைப்பை பகிர்ந்ததற்கு
    நன்றி கவிதை வீதி!

    ReplyDelete
  3. நகைச்சுவையோடு முடிப்பதில் தென்கச்சியை முந்த தமிழில் யாரும் இல்லை..
    தயவு செய்து இந்த பதிவை தொடரந்து தாருங்கள்...
    கவிதை வீதிக்கு நன்றி..!

    ReplyDelete
  4. அருமையான நகைச்சுவையான பதிவு...
    தொடருங்கள்..
    மறைந்தும் என்றும் நம்மோடு வாழ்வார் தென்கச்சியார்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்...நண்பரே...

    ReplyDelete
  6. //பாரத்... பாரதி... said...

    நல்ல பகிர்வு. நகைச்சுவையோடு நல்ல விஷயமும் கலந்து தர அவரால் மட்டுமே முடியும்..//

    முதல் கமாண்ட் கொடுத்த பாரத் பாரதிக்கு என் நன்றி...

    ReplyDelete
  7. //கலையன்பன் said...

    Haa.. Ha.. Semai comed//

    நன்றி கலையன்பன்

    ReplyDelete
  8. NIZAMUDEEN said...

    நகைச்சுவையும் தகவலும் இணைந்து...
    தென்கச்சியாரின் படைப்பை பகிர்ந்ததற்கு
    நன்றி கவிதை வீதி!

    நன்றி நிஷாமுதின்..

    ReplyDelete
  9. உங்க வீட்டு பிள்ளை said...

    நகைச்சுவையோடு முடிப்பதில் தென்கச்சியை முந்த தமிழில் யாரும் இல்லை..
    தயவு செய்து இந்த பதிவை தொடரந்து தாருங்கள்...
    கவிதை வீதிக்கு நன்றி..!


    நன்றி உங்க வீட்டுப்பிள்ளை
    பகண்டிப்பாக இந்த பதிவு வாரம் தோரும் தொடரும்

    ReplyDelete
  10. KARUN .V said...

    அருமையான நகைச்சுவையான பதிவு...
    தொடருங்கள்..
    மறைந்தும் என்றும் நம்மோடு வாழ்வார் தென்கச்சியார்


    கண்டிப்பாக தொடருவேன் நன்றி

    ReplyDelete
  11. கிறுக்கல்கள் said...

    வாழ்த்துக்கள்...நண்பரே...வாழ்த்துக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  12. sakthistudycentre-கருன் said...

    அடடா வடை போச்சே..

    தொடர்ந்து முயற்சியுங்கள்
    அட வடை உங்களுக்குதான்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...