கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 January, 2011

சந்தானம் ரேட்ஏறிபோச்சி..


லொள்ளு சபா மூலம் அறிமுகமாகி தன்னுடைய கலைப்பயணத்தை துவக்கியவர் சந்தானம். நடகத்தில் நடிக்கும் போதே தன்னுடைய டயலாக் மூலம் மக்கள் மனதில் நின்றுவிட்டார்.

அடுத்தக்கட்டமாக தற்போது பெரியத்திரையில் ‌வெற்றிகரமாக வலம்வந்துக்கொண்டிருக்கும் சந்தானம் 2010-ல் மிகப் பெரிய காமெடியனாக வளர்ந்தார். பாஸ் (எ) பாஸ்கரன் மூலம் பட்டித் தொட்டியெல்லாம் அறிமுகமான இவர் 2011 நன்றாக அமையும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறார். இவர் நடித்து பொங்களுக்கு வலம் வரும் சிறுத்தை மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஉலக காமெடி பிதாமகன் கவுண்டமணியின் காமெடியைப் போ‌லவே ரைமிங்... டைமிங்... என்று சகலத்தையும் கலந்து கட்டி ஜெயித்தவர் காமெடி நடிகர் சந்தானம். 

இளம் நாயகர்களின் விருப்ப காமெடியனாக உயர்ந்து வந்திருக்கும் சந்தானத்தின் காமெடி டயலாக்கள் ரொம்பவே பிரபலமவைந்து வருகிறது. அடுத்தடுத்து சந்தானம் நடித்த படங்கள் வெற்றிப்படங்கள் பட்டியலில் இணைந்தாலும் பட்ஜெட்டுக்கு ஏற்ற சம்பளத்தை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்த சந்தானம் 

இப்போது திடீரென தனது சம்பளத்தை விர்ர்ர்ரென உயர்த்தி விட்டார். ஆம்! தற்போது சந்தானம் ஒரு படத்துக்கு ரூ.30 லட்சம் சம்பளம் ‌கேட்கிறார். இந்த தொகை காமெடி நடிகர் கவுண்டமணி வாங்கி அதிகபட்ச சம்பளம் என்பது கூடுதல் தகவல்.

1 comment:

  1. அவருடைய சம்பளம் கூடலாம் தப்பே இல்லை.
    நாகேஷ் வரை நல்ல சுத்தமான நகைச்சுவை என்ற கட்டுக் கோப்பில் இருந்த பகுதி இன்று விரசமும் ஆபாசமும் நிரம்பி வழிகிறது.
    உபயம் :பெரும்பகுதி விவேக்.
    தற்பொழுது வந்திருக்கும் சந்தானம் ,எதிர்காலத்தில் தன் பேரக் குழந்தைகளோடு அமர்ந்து தன் படத்தை சந்தோஷமாக ரசிக்க வேண்டும் “என்ற குறிக்கோளோடு நடிக்கிறார் .சம்பளம் உயர்த்தலாம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...