கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

09 February, 2011

கணவர்கள் நலச் சங்கம்..

 

“காலம் ரொம்ப மாறிப் போச்சு சார்!”

“எதனாலே அப்படிச்  சொல்றீங்க?”

“பேப்பரைப் பாத்த்தீங்களா?”

“என்ன போட்டி்ருக்கு?”

“பெங்களூர்லே கணவர்கள் நலச் சங்கம்..ன்னு ஓர் ‌அமைப்பு ஆரம்பிச்சிருக்காங்களாம்!”

“‌அப்படியா?”

“ஆமாம்! இதை ஆரம்பிச்சிருக்கிறவர் ஓர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாம்.. இப்போ கர்நாடக மாநில உயர்நீதி மன்றத்துலே வழக்கறிஞரா இருக்காராம்!”

“எதுக்காக இப்படி...?”

“வரதட்சணைக் கொடுமை, வரதட்சணைச் சாவு, தற்கொலைக்குத் தூண்டுதல்... இது மாதிரி சட்டப் பிரிவுகள் எல்லாம் திருமணமான பெண்களுக்குச் சாதகமா அமைஞ்சிருக்காம். ஆனால் சட்டத்தின் எல்லாப் பிரிவும் ஆண்களுக்குச் சாதகமா இல்லையாம். குடும்பப் பிரச்சனையிலே கணவனோ, மனைவியோ யார் தவறு செய்தாலும் தண்டிக்கபடுவது கணவன்தானாம், இந்தக் கொடுமையிலிருந்து பாதுகாக்கத்தான் இந்த கணவர்கள் நலச் சங்கமாம்!”

“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார்! விட்டுக் கொடுக்கிற மனப்பான்னை வேணும்... எங்க வீட்டுலே பாருங்க... எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்!”

“சின்ன பிரச்சினைன்னா எது..?”

““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது.. புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்...!”

“பெரிய பிரச்சினைன்னா..?”

“இலங்கைப்பிரச்சனை.. காஷ்மீர்ப் பிரச்சனை... ஈராக்.. ஈரான்... இது மாதிரி..!”

(நன்றி தென்கச்சி சுவாதிநாதன்)


உண்மைதான் இன்றை காலகட்டத்தில் பெண்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு சட்டங்களையும் வகுத்து பெண்ணினத்தின் உயர்வுக்கு வழிசெய்தால் தற்போது அதை பலபெண்கள் ஆண்களை பழிவாங்க பயன்படுத்துகின்றனர்..
 

காவல் துறையிடம் எதை சொன்னால் ஒரு ஆடவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிந்து கொண்டு அந்த வழியை பின்பற்றுகிறார்கள்...
 

இந்த சமுதாயம் பெண்களை மிகஉயரிய அந்தஸ்த்தில் வைத்துபார்க்கிறது அதை பெண்கள் கண்டிப்பாக உணர்வார்கள் சில பெண்கள் செய்யும் தவறால் அதிலிருந்து அவர்களை இறக்கிவிட முடியாது... ‌என்றும் பெண்கள் இந்த நாட்டிக் கண்களாகவே இருக்க விரும்புகிறேன்..

(குறிப்பு : இது பெண்களுக்கு எதிரான பதிவு அல்ல அப்படி நீங்கள் நினைத்தால் பின்னுட்டத்தில் குறிப்பிடுங்கள் இதை நீக்கி விட நான் தயார்)

42 comments:

 1. காவல் துறையிடம் எதை சொன்னால் ஒரு ஆடவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிந்து கொண்டு அந்த வழியை பின்பற்றுகிறார்கள்...

  .....பெண்கள், சுதந்திரமாக ஒரு முடிவு எடுக்க இன்னும் காவல் துறையினரையும் சட்டத்தையும் நாட வேண்டிய நிலை இருக்கிறதே ... அந்த நிலை மாறும் போது, இப்படி பிரச்சனைகள் வராது. :-)

  ReplyDelete
 2. சூப்பர் விஷயம்..
  பெண்களுக்கு இன்னும் சரியா நியாயம் நாட்டில் கிடைக்கில் லை அதற்கு காரணம்.. பெண்கள் தான்.. ஏன் என்றால் இருக்கும் வசதியை கூட சில பெண்கள் த வ றாக பயன் படுத்தி கொள்கின்றனர்..
  நேற்று கூட பாருங்கள் மாயாவதி அவர்கள் ஒரு IASஅதிகாரியை காலணியை துடைக்க வைத்தகாட்சி மிகவும் வருத்தப்படககூடிதாக இருந்ததது..
  உயர் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் கண்டிப்பாக பெருந்தன்மையுடன் நடந்துக் கோள்ள வேண்டும்

  ReplyDelete
 3. இன்ற நாட்டு நடப்புக்கு தேவையான விஷயம்..
  தென் கட்சியின் காமெடி கலந்த கருத்துச்சுவையை வெகு நாட்களுக்கு பிறகு ரசித்தேன்..

  ReplyDelete
 4. ஓட்டும் போட்டாச்சி.. பாய்.. பாய்...

  ReplyDelete
 5. இருந்தாலும் பெண்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு தேவை படுகிறது என்பதி ஒத்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன் ......

  ReplyDelete
 6. ////////Chitra said... [Reply to comment]

  காவல் துறையிடம் எதை சொன்னால் ஒரு ஆடவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிந்து கொண்டு அந்த வழியை பின்பற்றுகிறார்கள்...

  .....பெண்கள், சுதந்திரமாக ஒரு முடிவு எடுக்க இன்னும் காவல் துறையினரையும் சட்டத்தையும் நாட வேண்டிய நிலை இருக்கிறதே ... அந்த நிலை மாறும் போது, இப்படி பிரச்சனைகள் வராது. :-)
  ///////

  நன்றி..

  ReplyDelete
 7. //////ai said... [Reply to comment]

  சூப்பர் விஷயம்..
  பெண்களுக்கு இன்னும் சரியா நியாயம் நாட்டில் கிடைக்கில் லை அதற்கு காரணம்.. பெண்கள் தான்.. ஏன் என்றால் இருக்கும் வசதியை கூட சில பெண்கள் த வ றாக பயன் படுத்தி கொள்கின்றனர்..
  நேற்று கூட பாருங்கள் மாயாவதி அவர்கள் ஒரு IASஅதிகாரியை காலணியை துடைக்க வைத்தகாட்சி மிகவும் வருத்தப்படககூடிதாக இருந்ததது..
  உயர் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் கண்டிப்பாக பெருந்தன்மையுடன் நடந்துக் கோள்ள வேண்டும்
  /////

  கண்டிப்பாக பெண்களுக்கு உண்டான மதிப்பை நாடு உயர்த்தும்

  ReplyDelete
 8. ////பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  இன்ற நாட்டு நடப்புக்கு தேவையான விஷயம்..
  தென் கட்சியின் காமெடி கலந்த கருத்துச்சுவையை வெகு நாட்களுக்கு பிறகு ரசித்தேன்..
  /////
  பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  ஓட்டும் போட்டாச்சி.. பாய்.. பாய்...
  ////

  நன்றி பாட்டு ரசிகன்..

  ReplyDelete
 9. ///////அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

  இருந்தாலும் பெண்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு தேவை படுகிறது என்பதி ஒத்து கொள்வீர்கள் என்று நினைக்கிறன் /////////

  உண்மைதான்

  ReplyDelete
 10. டேம்ப்ளேட் ,டிசைன் கலக்கலா இருக்கு

  ReplyDelete
 11. ஆமாங்கய்யா எப்படியாவது ஆண்களை காப்பாத்துங்கய்யா..பாவம் சாவுறானுக

  ReplyDelete
 12. நல்ல விஷயம் தான் சொல்லியிருக்கிஙக.. ஆனா யாரும் பிரச்சனை பண்ணாம பாத்துங்க

  ReplyDelete
 13. /////ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

  டேம்ப்ளேட் ,டிசைன் கலக்கலா இருக்கு
  ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

  ஆமாங்கய்யா எப்படியாவது ஆண்களை காப்பாத்துங்கய்யா..பாவம் சாவுறானுக
  /////

  தங்கள் வருகைக்கு நன்றி...

  ReplyDelete
 14. அசுரன் said... [Reply to comment]

  நல்ல விஷயம் தான் சொல்லியிருக்கிஙக.. ஆனா யாரும் பிரச்சனை பண்ணாம பாத்துங்க
  ///

  நன்றி..

  ReplyDelete
 15. சட்டத்தின் பாதுகாப்பு அவசியம் தேவைப்படும் நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

  ReplyDelete
 16. சட்டங்கள் ஆணையும் பெண்ணையும்
  சமனாக பார்க்கும்நிலை வேண்டும்

  ReplyDelete
 17. எல்லாவற்றிலும் சம அந்தஸ்து
  சட்டத்தில் மட்டும் ?

  ReplyDelete
 18. ஆண்களுக்கு சரி சமமாக எல்லா துறையிலும் பெண்கள் வந்தாச்சு. ஒன்று பழைய காலம் போல் அவர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டங்களை பொதுவாகக வேண்டும். இன்று பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். வரும் காலங்களில் பெண்களிடம் இருந்து ஆண்கள் சுதந்திரத்திற்காக போராட வேண்டிவரும்

  ReplyDelete
 19. வார்த்தைகள் வழி அன்பும், வாக்குகள் வழி ஆதரவும் தெரிவித்துக்கொள்கிறோம்..

  ReplyDelete
 20. என்றும் பெண்கள் இந்த நாட்டிக் கண்களாகவே இருக்க விரும்புகிறேன்..

  வழிமொழிகிறேன்!

  ReplyDelete
 21. ஒரு வரி பின்னூட்டத்தில் விவாதம் பண்ணமுடியாத விஷயம் இது.....பார்க்கலாம் :))

  ReplyDelete
 22. சபாஸ் சரியான போட்டி

  ReplyDelete
 23. ////////இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

  சட்டத்தின் பாதுகாப்பு அவசியம் தேவைப்படும் நிலையில் தான் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.
  ////////

  உண்மைதான் அனைத்து பெண்களுக்கும் முழுமையான சடட்டபாதுபாப்பு கிடைக்கும் என நம்புவோம்

  ReplyDelete
 24. யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

  சட்டங்கள் ஆணையும் பெண்ணையும்
  சமனாக பார்க்கும்நிலை வேண்டும்
  யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

  எல்லாவற்றிலும் சம அந்தஸ்து
  சட்டத்தில் மட்டும் ?
  ///////

  கண்டிப்பாக...
  நன்றி ..

  ReplyDelete
 25. ஜீவன்சிவம் said... [Reply to comment]

  ஆண்களுக்கு சரி சமமாக எல்லா துறையிலும் பெண்கள் வந்தாச்சு. ஒன்று பழைய காலம் போல் அவர்களை அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டங்களை பொதுவாகக வேண்டும். இன்று பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். வரும் காலங்களில் பெண்களிடம் இருந்து ஆண்கள் சுதந்திரத்திற்காக போராட வேண்டிவரும்
  //

  இந்தியாவில் அந்த நிலமை வராது என நம்புவோம்

  ReplyDelete
 26. ///////பாரத்... பாரதி... said... [Reply to comment]

  வார்த்தைகள் வழி அன்பும், வாக்குகள் வழி ஆதரவும் தெரிவித்துக்கொள்கிறோம்..
  //////

  தந்த ஆதரவுக்கு நன்றி.. பாரத் பாரதி

  ReplyDelete
 27. //////சென்னை பித்தன் said... [Reply to comment]

  என்றும் பெண்கள் இந்த நாட்டிக் கண்களாகவே இருக்க விரும்புகிறேன்..

  வழிமொழிகிறேன்!
  //////

  நன்றி சென்னை பித்தன்...

  ReplyDelete
 28. /////வைகை said... [Reply to comment]

  ஒரு வரி பின்னூட்டத்தில் விவாதம் பண்ணமுடியாத விஷயம் இது.....பார்க்கலாம் :))
  ///

  உண்மை தான்..

  ReplyDelete
 29. /////////rajan said... [Reply to comment]

  சபாஸ் சரியான போட்டி
  ///////

  நன்றி...

  ReplyDelete
 30. லேட்டா வந்துட்டேன்.. ஓட்டும் போட்டாச்சி...

  ReplyDelete
 31. மிகப் பெரிய பிரச்சனையை தென்கச்சியின் நகைச்சுவையுடன் சொன்னதற்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
 32. //////sakthistudycentre-கருன் said... [Reply to comment]

  கவிதை அருமை...
  sakthistudycentre-கருன் said... [Reply to comment]

  லேட்டா வந்துட்டேன்.. ஓட்டும் போட்டாச்சி...
  sakthistudycentre-கருன் said... [Reply to comment]

  மிகப் பெரிய பிரச்சனையை தென்கச்சியின் நகைச்சுவையுடன் சொன்னதற்கு பாராட்டுக்கள்...
  //////

  நன்றி கரண்..

  ReplyDelete
 33. இப்படியாகத்தான் யாராவது ஆரம்பிக்கனும்
  முடிவையார்கிட்ட கேட்கரது...

  ReplyDelete
 34. அறுமை தொடருங்கள்...

  ReplyDelete
 35. //////கிறுக்கல்கள் said... [Reply to comment]

  இப்படியாகத்தான் யாராவது ஆரம்பிக்கனும்
  முடிவையார்கிட்ட கேட்கரது...
  /////

  முடிவு அவரவர் கையில்தான் உள்ளது..
  இந்த விஷயத்தில் சமுகம்தான் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும்

  ReplyDelete
 36. ////அசுரன் said... [Reply to comment]

  அறுமை தொடருங்கள்...
  //////

  தங்கள் வருகைக்கு நன்றி...

  ReplyDelete
 37. yaar thavaru seithaalum thavaru thaan.. vaalththukkal.

  ReplyDelete
 38. //கணவர்கள் நலச் சங்கம்.//இந்த சங்கத்துல சேருவதெப்படி என்ற தகவலையும் சேர்த்து குடுத்திருந்தா மிகவும் உதவியா இருந்திருக்கும்!

  ReplyDelete
 39. //'I Love Wlking in the Rain Because Nobady can see me Crying" -Charlie Chaplin & I// Wlking, Nobady என்ற வார்த்தைகளை Walking, Nobody என்று மாற்றிப் போட முடியுமா?

  ReplyDelete
 40. //////மதுரை சரவணன் said... [Reply to comment]

  yaar thavaru seithaalum thavaru thaan.. vaalththukkal.
  /////

  தங்கள் வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 41. /Jayadev Das said... [Reply to comment]

  //கணவர்கள் நலச் சங்கம்.//இந்த சங்கத்துல சேருவதெப்படி என்ற தகவலையும் சேர்த்து குடுத்திருந்தா மிகவும் உதவியா இருந்திருக்கும்!
  //////
  //'I Love Wlking in the Rain Because Nobady can see me Crying" -Charlie Chaplin & I// Wlking, Nobady என்ற வார்த்தைகளை Walking, Nobody என்று மாற்றிப் போட முடியுமா? ///

  தாங்கள் சுட்டிக்காட்டிய எழுத்து பிழைகளை சரி செய்து கொண்டேன்.. சுட்டி காட்டியதற்கு நன்றி..

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...