கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 February, 2011

அந்த பழக்கம் உள்ளவரா நீங்கள்...

  
“கையிலே அது என்ன புத்தகம்?”
“மகாபாரதம்.”

“அப்படின்னா உங்ககிட்டே ஒரு கேள்வி.”

“கேளுங்க!”

”சூதாட்டத்தைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“இது ‌ரொம்பத் தப்பான ஒரு பழக்கம்.”

“அந்தப் பழக்கம் வர்றதுக்கு என்ன காரணம்?”

“மனசுதான் காரணம்!”

“ஒரு ஹார்மோன் குறைப்பாடுதான் அதுக்குக் காரணமன்னு நிபுணர்கள் சொல்றாங்க!”

“அப்படியா?”

“ஆமாம்.. சார்ல்டன் - அப்படின்னு ஒரு ம‌னோதத்துவ நிபுணர்... அவர் ஒரு நூறு சூதாடிகளைத் தொடர்ந்து பரிசோதனை பண்ணிக்கிட்டு வந்தார். கடைசியிலே என்ன கண்டு பிடிச்சார் தெரியுமா?”

“என்ன கண்டுப்பிடிச்சார்?”


“செரோடோனின் (Serotonin)ங்கற ஹர்மோன் குறைச்சல் தான் இந்த சூதாட்டப் பழக்கத்துக்குக் காரணமன்னு கண்டுப்பிடிச்சார்..!”

“‌அப்படியா?”

“ஆமாம்.. சின்ன வயசுலேயே அடிக்கடி மன இறுக்கத்துக்கு (Tension) ஆளாகிற குழந்தைகளுக்கு செரோடோனின் குறைந்து விடுமாம்.  அப்புறம் சூதாட்டம் பரம்பரை வியாதியாகலாம். செரோடோனின் குறைச்சலை ஈடு செய்ய சரியான மருந்து மட்டும் வந்துட்டா நாட்டில் சூதாட்டமே ஒழிஞ்சுடும்ங்கறார் அந்த நிபுணர்..”

“இப்போதைக்கு நமக்குக் கிடைச்சிருக்கிற மருந்து இந்த மகாபாரதம் தான்..!”

“உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? எங்க அப்பாவுக்கு நாங்க அஞ்சு பிள்ளைங்க.. மகாபாரதம் படிக்கலேன்னா கூட நாங்க அஞ்சு பேரும் பஞ்ச பாண்டவர்கள் தான்..!”

“அது எப்படி?”

“சொத்து எல்லாத்தையும் சூதாட்டத்துலே விட்டுடுட்டோம்...!”

நன்றி  : தென்கச்சி சுவாமிநாதன்


இன்று நாம் நாடு கெட்டு குட்டிச்சுவராய் ஆனதற்கு இந்த சூதாட்டம் தான் காரணம் கிராமத்தில் 5, 10 க்கு ஆரம்பித்து சர்வதேச நிலையில் 50 கோடி.. 100 கோடி என நீள்கிறது..

 நாம் எல்லோறும் ஏதோ ஒரு சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுதன் இருக்கிறோம்..   பிறந்த கு‌ழந்தைகள் முதல் முதியோர் வரை எவ்வளவு பந்தையாம் என்று வார்த்தையில் ஆரம்பித்து நம்மை அறியாமலயே நம்மை சூதாட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறோம். சிறிய பருவத்தில் ஒரு முறை அல்லது இரு முறை சொல்லி பார்த்து பெற்றோர்கள் விட்டு விடுகின்றனர். அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இளைஞன் ஆனதும் மிகப் பெரியதாக ஆகிவிடுகிறது..

சீட்டாடம்,  காட்டன் பேரம், குதிரை ரேஸ். தாயம்,  மூணு சீட்டு,  விளையாட்டில் எந்த அணி ஜெயிக்கும், எந்த அணி தோற்கும்,  என்று ஏதாவது ஒரு பந்தயத்தில் தன்னுடைய உழைப்பு, செல்வம்? உடமை, நேரம், என அத்தனையும் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். 

நம் கண்முண்னே எத்தனையோ குடும்பங்கள் இந்த சூதாட்ட சூழலில் நடுத் தெருவுக்கு வந்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும் இருந்தாலும் இதையெல்லாம் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அதே நிலமை நமக்கு வரும் போது தான் அதைப்பற்றி நாம் உணர்கிறோம். 

அது காலம் தாழ்த்திய செயல்
கண்கணை இழந்தப்பின் 
காணுகின்ற சூரிய உதயம்..

புகைப்பிடிப்பவன் அந்த பாதிப்பு  பெரியதாக ஆனப்பின்தான் கவலைப்பட்டுக் கிடப்பான்  அது வரை யார் என்ன அறிவுரைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான் அது போல் தான் சூதாட்டமும்.


சூதாட்டத்தில்
இலாபம் அடைந்தவர்கள் 10 பேர்..
ஆனால் இழப்பைசந்தித்தவர்கள் 100 ‌பேர்..சின்ன வயதில் கிரிக்கெட் பார்க்கும் போது.. விளையாட்டாக சொல்வோம் அவன் காசு வாங்கி கொண்டு ஆடுகிறான் என்று.. ஆனால் அதுவே ஒரு காலத்தில் உண்மையாகிவிட்டது.. இந்நிலை நீடித்தால் நாடு அழிவு பாதைக்கே இட்டுச் செல்லக் கூடும். இந்தியா 2020 வல்லரசு கணவை பூர்த்தி  செய்ய சூதாட்டங்களில் இருந்து கொஞ்சம் விலகிநிற்போம்.


43 comments:

 1. கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்...
  தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நருக்குனு நாலு ஓட்டு ...

  ReplyDelete
 3. sakthistudycentre-கருன் said... [Reply to comment]

  கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்...
  தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

  sakthistudycentre-கருன் said... [Reply to comment]

  நருக்குனு நாலு ஓட்டு ...

  வாழ்த்துக்கும் ஓட்டுக்கும் நன்றி..

  -

  ReplyDelete
 4. சங்கவி said... [Reply to comment]

  நச் பதிவு...


  நன்றி.. சங்கவி..

  ReplyDelete
 5. செரோடோனின் (Serotonin) HORMONE பற்றிய விளக்கம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ..இந்தமுறை நன்றாக இருக்கிறது ..:)

  ReplyDelete
 6. அனைவரும் உணர வேண்டிய விஷயம்..
  தொடருங்கள்..

  ReplyDelete
 7. பொத்தாம் பொதுவாக அப்படி சொல்ல முடியாது......மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் சூதாட்ட கூடமே உள்ளது அந்த நாடுகளுக்கு என்ன குறைச்சல்? இதை முழுவதும் ஒழிக்க முடியாது.....இது அவரவர் தகுதியையும் மனநிலையையும் பொறுத்தது......

  ReplyDelete
 8. அனைத்தும் இரசிக்கத் தக்கவை

  ReplyDelete
 9. தமிழ் உதயம் said... [Reply to comment]

  .
  நல்ல பதிவு.

  நன்றி..

  ReplyDelete
 10. S.Sudharshan said... [Reply to comment]

  செரோடோனின் (Serotonin) HORMONE பற்றிய விளக்கம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ..இந்தமுறை நன்றாக இருக்கிறது ..:)


  வாழ்த்துக்கு நன்றி.. நண்பரே..

  ReplyDelete
 11. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

  அனைவரும் உணர வேண்டிய விஷயம்..
  தொடருங்கள்..


  நன்றி பாட்டு ரசிகன்..

  ReplyDelete
 12. வைகை said... [Reply to comment]

  பொத்தாம் பொதுவாக அப்படி சொல்ல முடியாது......மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் சூதாட்ட கூடமே உள்ளது அந்த நாடுகளுக்கு என்ன குறைச்சல்? இதை முழுவதும் ஒழிக்க முடியாது.....இது அவரவர் தகுதியையும் மனநிலையையும் பொறுத்தது.....

  வளர்ந்த நாடுகள்.. பொழுபோக்குக்காக சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்..
  ஆனால் இந்தியாவிலோ பலபேர்.. இதே தொழிலாக வைத்துள்ளனர்

  உங்கள் கருத்துக்கு நன்றி..

  ReplyDelete
 13. வேல் தர்மா said... [Reply to comment]

  அனைத்தும் இரசிக்கத் தக்கவை


  நன்றி..

  ReplyDelete
 14. இன்றைய பதிவு செம கலக்கல்

  ReplyDelete
 15. கலக்கல் பகிர்வுக்கு நன்றி

  நன்றிங்கோ

  ReplyDelete
 16. அசத்தலா அசத்தி இருக்கீங்க...செம அலசல்....

  ReplyDelete
 17. மிகவும் அக்கறையான பதிவு பாராட்டுக்கள் .........

  ReplyDelete
 18. சூதாட்டம் கண்டிப்பா ஒரு பிரச்சினையான கொடுமையான விசயம்தாங்க .. அதுக்கு கூட இப்படி ஹார்மோன் குறைபாடு இருக்கு அப்படிங்கிறது இப்பத்தான் தெரியுது .ஆனா சின்ன வயசுல இருந்தே இந்தப் பழக்கத்தை மாற்றம் செய்யலைனா கண்டிப்பா பஞ்ச பாண்டவர் கதைதான் ..

  ReplyDelete
 19. ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

  இன்றைய பதிவு செம கலக்கல்

  நன்றி தலைவா..

  ReplyDelete
 20. விக்கி உலகம் said... [Reply to comment]

  கலக்கல் பகிர்வுக்கு நன்றி

  நன்றிங்கோ


  நன்றி விக்கி உலகம்..

  ReplyDelete
 21. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  அசத்தலா அசத்தி இருக்கீங்க...செம அலசல்....


  ஆனா இன்னைக்கு உங்க பதிவு செம கிர்ர்ர்ர்ர்..

  வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 22. சூதாட்டத்தை பத்தி புதிய தகவல் இது ..

  ReplyDelete
 23. அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

  மிகவும் அக்கறையான பதிவு பாராட்டுக்கள் .........


  பராட்டுக்கு நன்றி.. அஞ்சா சிங்கம் அவர்களே ..

  ReplyDelete
 24. கோமாளி செல்வா said... [Reply to comment]

  சூதாட்டம் கண்டிப்பா ஒரு பிரச்சினையான கொடுமையான விசயம்தாங்க .. அதுக்கு கூட இப்படி ஹார்மோன் குறைபாடு இருக்கு அப்படிங்கிறது இப்பத்தான் தெரியுது .ஆனா சின்ன வயசுல இருந்தே இந்தப் பழக்கத்தை மாற்றம் செய்யலைனா கண்டிப்பா பஞ்ச பாண்டவர் கதைதான் ..

  விமர்சனத்திற்கு நன்றி..

  ReplyDelete
 25. கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]

  சூதாட்டத்தை பத்தி புதிய தகவல் இது ..


  நன்றி சார்..

  ReplyDelete
 26. எல்லாமே அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை.பெண்டாட்டியை வைத்து ஆடும் அளவு போவானேன்...........எப்பொழுது நிறுத்தணும் என்று புரிந்து கொண்டு ஆடணும்....ஷேர் மார்க்கெட் ஒரு சூது-ஆட்டம்தானே

  ReplyDelete
 27. ///////goma said... [Reply to comment]

  எல்லாமே அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை.பெண்டாட்டியை வைத்து ஆடும் அளவு போவானேன்...........எப்பொழுது நிறுத்தணும் என்று புரிந்து கொண்டு ஆடணும்....ஷேர் மார்க்கெட் ஒரு சூது-ஆட்டம்தானே
  //////

  விமர்சனத்திற்கு நன்றி..

  ReplyDelete
 28. T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply to comment]

  நச்

  நன்றி.. பாஸ்..

  ReplyDelete
 29. Chitra said... [Reply to comment]

  well-written! Super!


  தங்கள் வருகைக்கு நன்றி தோழி..

  ReplyDelete
 30. எல்லாமே அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை.
  வாழ்வே ஒரு சூதாட்டம் நண்பா
  வரட்டா? பாய் !

  ReplyDelete
 31. நல்ல,சிந்தனையைத்தூண்டும் பதிவு!நன்று!

  ReplyDelete
 32. கண்கணை இழந்தப்பின்
  காணுகின்ற சூரிய உதயம்//

  very True.

  ReplyDelete
 33. //சூதாட்டங்களில் இருந்து கொஞ்சம் விலகிநிற்போம்.//

  கொஞ்சம் என்ன ரொம்பவே ஒதுங்கி நிற்போம்

  ReplyDelete
 34. யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

  எல்லாமே அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை.
  வாழ்வே ஒரு சூதாட்டம் நண்பா
  வரட்டா? பாய் !

  நன்றி.. தலைவா..

  ReplyDelete
 35. சென்னை பித்தன் said... [Reply to comment]

  நல்ல,சிந்தனையைத்தூண்டும் பதிவு!நன்று!


  நன்றி..

  ReplyDelete
 36. இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

  கண்கணை இழந்தப்பின்
  காணுகின்ற சூரிய உதயம்//

  very True.


  நன்றி..

  ReplyDelete
 37. மதுரை சரவணன் said... [Reply to comment]

  nalla kelvi pathil... vaalththukkal


  நன்றி

  ReplyDelete
 38. ஹைதர் அலி said... [Reply to comment]

  //சூதாட்டங்களில் இருந்து கொஞ்சம் விலகிநிற்போம்.//

  கொஞ்சம் என்ன ரொம்பவே ஒதுங்கி நிற்போம்


  கண்டிப்பாக..

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...