கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 March, 2011

பத்துக்கு பத்து - கோடம்பாக்கம் கார்னர் (05-03-2011)

வாள் சண்டையில் ரஜினி
  


"ரானா" படம் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது. ரானாவில் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இது சரித்திரப் பின்னணி கொண்ட பீரியட் படமாக இருக்கப்போகிறது. இதில் ஒரு ரஜினிகாந்த் கொஞ்சம் கூடுதல் வயதுள்ள கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த கதாபாத்திரத்தின் பிளாஷ் பேக்கில், ஒரு வாள் சண்டை இருப்பது போல் படமாக்கப்பட உள்ளது.

இந்த வாள் சண்டை காட்சிக்காக, ரஜினிகாந்த் வாள் சண்டை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தெலுங்கில் வெளியான "மஹதீரா" படத்தில் வருவது போல், "ரானா" படத்தின் காட்சிகளையும் படமாக்க ஆசைபடுகிறாராம் சூப்பர் ஸ்டார். ஆசைப்படுவது சூப்பர் ஸ்டார் அல்லவா? ஆதலால், எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஏப்ரல் மாதம் முதல் "ரானா" படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.

**********************************************************************************
ஸ்டூடி‌யோவை திறந்து வைக்கிறார் கருணாநிதி!

பையனூரில் திரைப்பட கலைஞர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட சினிமா ஸ்டூடியோவை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார். முதல்வர் கருணாநிதி திரைப்படத் துறையினருக்கு வரிவிலக்கு, இட ஒதுக்கீடு, சூட்டிங் கட்டணம் குறைப்பு என பற்பல சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார். 

கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் திரையுலக கலைஞர்களுக்கு வீடு கட்ட இலவச நிலம் வழங்க வேண்டும் என்று திரைத்துறையை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்த‌ால், சென்னையை அடுத்த பையனூரில் நிலம் ஒதுக்கி உத்தரவித்த கலைஞர், அங்கு வீடு கட்ட நடந்த பூமி பூஜையிலும் கலந்து கொண்டார்.

**************************************************************************************
தமிழ்- இந்தி நடிகர்கள் மோதும் கிரிக்கெட் போட்டி
  தமிழ், இந்தி நடிகர்கள் மோதும் கிரிக்கெட் போட்டி விசாகபட்டினத்தில் நாளை தொடங்குகிறது. ஆறு போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போன்று 20 ஓவரில் இப்போட்டிகள் நடக்கிறது. தமிழ் நடிகர்கள் இடம் பெற்றுள்ள அணிக்கு சவுத் சூப்பர் ஸ்டார்ஸ் என பெயரிட்டுள்ளனர்.

இந்த அணியில் சரத்குமார், ஆர்யா, அப்பாஸ், ஷ்யாம், விக்ராந்த், சாந்தனு, விஷ்ணு, தருண், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சித்தார்த், தாரக்ரத்னா போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தி நடிகர்கள் அணியில் சல்மான்கான், சுனில்ஷெட்டி, ரித்தேஷ் தேஷ்முக், சோகைல்கான் உள்ளிட்ட பலர் உள்ளனர். தமிழ் நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவர்களாக பிரியாமணி, ஸ்ரேயா, டாப்சி, சமந்தா, சார்மி, ராகிணி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தி நடிகர்கள் அணியை விளம்பரப்படுத்தும் தூதுவராக ஜெனிலியாவும் வருகிறார்.
*************************************************************************************
திகில் படத்தில் அருண் விஐய் 

 ‘மலை மலை’, ‘மாஞ்சா வேலு’ படங்களை தயாரித்த பெதர் டச் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘தடையறத் தாக்க’. மகிழ்திருமேனி இயக்குகிறார். அருண் விஜய் ஜோடியாக பிராச்சி தேசாய் அறிமுகமாகிறார். தமன் இசை. சுகுமார் ஒளிப்பதிவு. 

படம் பற்றி அருண் விஜய் கூறியதாவது: எனது முந்தைய படங்கள், என்னை ஆக்ஷன் ஹீரோவாக அடையாளம் காட்டியது. அதிலிருந்து வித்தியாசமாக அடுத்த படம் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதற்கேற்ற வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது. இது திகில், மர்மம் கலந்த ஆக்ஷன் கதை. லாஜிக் மீறாத யதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்.  7 ம் தேதி பழனியில் படப்பிடிப்பு துவங்குகிறது. ஜுன் மாதம் நிறைவடையும்

**********************************************************************************
அனுஷ்காவுக்காக அரைடஜன் படங்கள்!

 அஜித் நடிக்கும் பில்லா 2, செல்வராகவன் -கமல் கூட்டணியில் உருவாகும் புதிய படம், மதராசபட்டினம் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் உள்ளிட்ட அரை டஜன் படங்கள் அனுஷ்காவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறதாம். தற்போது வானம் படத்தில் சிம்புவுடன் நடித்துள்ள அனுஷ்கா, தமிழ்ப் படங்களை விட தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால்தான் மேற்படி அரைடஜன் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்க வேண்டிய நிலை. 

இதுஒருபக்கம் என்றால் மற்றொரு பக்கம், இந்த நேரடி தமிழ் படங்களின் ரீலிசுக்குப் பின் ஏற்படப்போகும் அம்மணியின் தமிழ் மார்க்கெட்டை குறிவைத்து, அனுஷ்கா நடித்த அதரப் பழசான தெலுங்கு படங்களையும் அடுகடை படுகடையாக தமிழ்ப்படுத்தி வருகிறது ஒரு‌ பெருங்கும்பல்!   

*********************************************************************************
வானத்தை வாங்கிய தயாநிதி அழகிரி!

 முதல்வர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கிளவுட் நைன் மூவிஸ் நடிகர் சிம்புவின் வானம் படத்தை விலைக்கு வாங்கியுள்ளது. டைரக்டர் கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் வானம். இந்த படத்தின் நாயகியாக அனுஷ்காவும், இன்னொரு நாயகனாக நடிகர் பரத்தும் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வாங்கியிருக்கிறது.

விரைவில் வானம் இசை வெளியீடு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. தயாநிதியின் கிளவுட் நைன் மூவிஸ் தயாரித்து வரும் முக்கிய படமான அஜித்தின் மங்காத்தாவை மே 1ம்தேதி ரீலிஸ் செய்வது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், வானம் படம் அதற்கு முன்னதாகவே ரீலிஸ் செய்யப்படுமா? அல்லது அதற்கு பிறகு ரீலிஸ் செய்யப்படுமா? என்பது தெரியவில்லை.

 *********************************************************************************
பார்வையற்றோரை பார்த்து சமூக சேவகியாக மாறினேன் -ஸ்ரேயா 

 ஸ்ரேயா ஆன்மீகம், சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டுகிறார். யோகா, தியானமும் கற்கிறார். ஏழைகளுக்கு உதவிகளும் செய்கிறார். மனமாற்றம் ஏற்பட்டது குறித்து ஸ்ரேயா சொல்கிறார். சில நாட்களுக்கு முன் பார்வையற்ற கணவன்-மனைவியை பார்த்தேன்.


இருவரும் ஒருவருக்கொருவர் ரொம்ப பாசமாக இருந்தார்கள். அதோடு பிறருக்கு உதவிகளும் செய்து வந்தனர். அவர்களின் நடவடிக்கைகள் என் கண்களை திறந்தன. பார்வையற்ற தம்பதி மற்றவர்களுக்கு உதவும் போது கை, கால், கண் எல்லாம் சரியாக இருக்கும் நாம் ஏன் உதவிகள் செய்யக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

அதன் பிறகு நானும் சமூக சேவகியாக மாறினேன். ஒரு அமைப்பு துவங்கி அதன் மூலம் பார்வையற்றோருக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறேன். இதன் மூலம் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது.

பார்வையற்ற தம்பதியை சந்தித்ததில் இருந்து அழகு பற்றி யோசிப்பதை விட்டு விட்டேன். மனம்தான் அழகு என்பதை புரிந்து கொண்டேன். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
*************************************************************************************
ஒரு பாடலுக்கு ஆடுகிறேனா?   

மலையாளப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதாக வந்த தகவலை சோனியா அகர்வால் மறுத்தார். மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் படம் ‘டபுள்ஸ்’. இதில் சிறப்பு தோற்றத்தில் சோனியா நடிக்கிறார் என்றும் குத்துப்பாடலுக்கு ஆட இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது. 

இதுபற்றி சோனியாவிடம் கேட்ட போது, ‘‘டபுள்ஸ்’என்ற மலையாள படத்தின் இயக்குனர் சோஹன், என்னிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டது உண்மை. தனிப்பட்ட காரணங்களுக்காக, அதை மறுத்துவிட்டேன். அதைவிட்டுவிட்டு நான் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாக செய்தி வருவதில் உண்மையில்லை’ என்று கூறியுள்ளார். 
***********************************************************************************
பழைய பாணிக்கு திரும்பி விட்டேன் 

 ‘சட்டப்படி குற்றம்’ படத்தை இயக்கி தயாரித்து வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். சத்யராஜ், விக்ராந்த், ஹரீஷ் கல்யாண், பானு நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு நடந்து வருகிறது. 

படம் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:  சமூகத்தின் தவறுகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோபத்தை ஒருங்கிணைத்து, அவர்களை தவறுகளுக்கு எதிராக போராட வைத்து, பிரச்னைகளுக்கு தீர்வும் சொல்லும் படம். இளைஞர்களை வழிநடத்தும் கேரக்டரில் சத்யராஜ் நடிக்கிறார். மதவாதி, அரசியல்வாதி, அதிகாரிகளால் பாதிக்கப்படும் இளைஞர்கள், அதை எப்படி எதிர்த்து நிற்கிறார்கள் என்பது திரைக்கதை. 75 சதவிகிதம் அடர்ந்த காட்டுக்குள் படமாக்கப்பட்டுள்ளது. அரசியலையும், சட்டத்தையும் வைத்து விளையாடும் திரைக்கதை கொண்டதாக எனது ஆரம்பகால படங்கள் இருந்தது. அவைதான் எனக்கு புகழை பெற்றுத் தந்தன. பிறகு காதல், கிராமம் என்று பயணத்தை மாற்றினேன். இப்போது திரும்பவும் பழைய பாணிக்கு திரும்பியிருக்கிறேன். இந்த மாத இறுதியில் படம் வெளிவருகிறது
********************************************************************************* 
புற்றுநோய் மருத்துவமனைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் நன்கொடை


சென்னை, அடையாறிலுள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு சுழல் மேஜை இந்தியா (ரவுன்ட் டேபிள் இந்தியா) அமைப்பு சார்பில் ரூ.6 லட்சத்தை இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ் நன்கொடையாக வழங்கினார்.
 
18 வயது முதல் 40 வயதுள்ள இளைஞர்களுக்கான சுழல் மேஜை இந்தியா அமைப்பு செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பின் சென்னை காஸ்மாபாலிட்டன் ரவுன்ட் டேபிள் 94 கிளை சார்பாக கடந்த அக்டடீபர் மாதம் சூப்பர் கார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதன் மூலம் நிதி திரட்டப்பட்டது.

இந்த நிதியிலிருந்து ரூ.6 லட்சத்தை, மறைந்த திரைப்பட இசையமைப்பாளர் மகேஷ் நினைவாக உருவாக்கப்பட்ட, மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நிதிக்கான காசோலையை பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்
************************************************************************************

கவிதையே ருசித்த உங்களுக்கு இன்று சினிமா..
வாசித்த உங்களுக்கு நன்றி..!

33 comments:

 1. //////
  ரஹீம் கஸாலி said... [Reply to comment]

  vadai
  ///////

  நிம்மதியன பின்னுட்டம்..
  இருந்தாலும் பரவாயில்லை..

  ReplyDelete
 2. தமிழ் 007 said... [Reply to comment]

  வடை போச்சே!ஃ
  /////////

  ஆளாளாளுக்கு என்னப்பா இப்படி கிளம்பிட்டிங்க..

  ReplyDelete
 3. இன்று கவிதை ஏதும் இல்லையா?

  ReplyDelete
 4. திரையுலகின் - பத்துக்கு பத்து, சுவைக்கு சுவை.

  ReplyDelete
 5. வந்தாச்சு

  இவ்வளவு மேட்டர் எங்க்ய கிடைச்சது

  ReplyDelete
 6. ////
  சென்னை பித்தன் said... [Reply to comment]

  இன்று கவிதை ஏதும் இல்லையா?
  ////

  பல்சுவையும் வேணும் என்பதால் இன்று.. சினிமா..

  ReplyDelete
 7. ///
  தமிழ் உதயம் said... [Reply to comment]

  திரையுலகின் - பத்துக்கு பத்து, சுவைக்கு சுவை.
  ////

  நன்றி தமிழ் உதயம்

  ReplyDelete
 8. சினிமா நியூஸ் சவுந்தர் வாழ்க

  ReplyDelete
 9. என்னைய்யா இன்னைக்கு கடும் நீளமா சினிமா நியூஸா இருக்கு....
  அந்த வாள் சண்டை புதிய தகவல்....

  ReplyDelete
 10. ஞாயித்துக்கிழமை தானே சினிமா நியூஸ்..இன்னிக்கே போட்டாசா

  ReplyDelete
 11. அனுஷ்கா,ரஜினி மேட்டர் எல்லாம் சூப்பர்

  ReplyDelete
 12. தமிழ் ரணதீரா வா தலைவர் தலைவர்தான்

  ReplyDelete
 13. ///////
  Speed Master said... [Reply to comment]

  வந்தாச்சு

  இவ்வளவு மேட்டர் எங்க்ய கிடைச்சது
  ///

  எல்லாம் அப்படி புடிச்சதுதான்..

  ReplyDelete
 14. ////////
  வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

  ஆகா.. சினிமாவா?
  ///


  நீங்க ஞாயிறு..
  நான் இன்னிக்கு..

  ReplyDelete
 15. ///////
  சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  சினிமா நியூஸ் சவுந்தர் வாழ்க
  ///////

  நன்றி தல...

  ReplyDelete
 16. //////
  MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

  என்னைய்யா இன்னைக்கு கடும் நீளமா சினிமா நியூஸா இருக்கு....
  அந்த வாள் சண்டை புதிய தகவல்....
  //////

  வாங்க..

  ReplyDelete
 17. ./////////
  ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

  ஞாயித்துக்கிழமை தானே சினிமா நியூஸ்..இன்னிக்கே போட்டாசா
  //////

  அப்படியே போடரதுதான்..

  ReplyDelete
 18. ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

  அனுஷ்கா,ரஜினி மேட்டர் எல்லாம் சூப்பர்
  ////////


  தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 19. கவிதை மட்டுமல்ல, கனவுலகிலும் கலக்கறீங்க!

  ReplyDelete
 20. //வானத்தை வாங்கிய தயாநிதி அழகிரி!//

  hahaha....... நல்ல தலைப்பு

  ReplyDelete
 21. //திரையுலகின் - பத்துக்கு பத்து, சுவைக்கு சுவை.//

  ரிப்பீட்டேய்...

  ReplyDelete
 22. இன்றைய பிழைகள்:

  //அனுஷ்கா நடித்த அதரப் பழசான//

  அரதப்பழசான

  //டேபிள் 94 கிளை சார்பாக கடந்த அக்டடீபர்//

  அக்டோபர்

  ...பாத்து எழுதுங்க சகோ.

  ReplyDelete
 23. என்னப்பா ஒரு சினி புத்தகமே வாசிச்சமாதிரியுல்ல இருக்கு... மிக்க நன்றிங்க...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

  ReplyDelete
 24. ///////
  FOOD said... [Reply to comment]

  கவிதை மட்டுமல்ல, கனவுலகிலும் கலக்கறீங்க!
  //////

  நன்றி தவைலா..

  ReplyDelete
 25. ஃ///////
  THOPPITHOPPI said... [Reply to comment]

  //வானத்தை வாங்கிய தயாநிதி அழகிரி!//

  hahaha....... நல்ல தலைப்பு
  //////

  தொடர்ந்து வாங்க தொப்பீ தொப்பீ..
  நான் உங்கள் ரசிகன்..

  ReplyDelete
 26. //////
  கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]

  //திரையுலகின் - பத்துக்கு பத்து, சுவைக்கு சுவை.//

  ரிப்பீட்டேய்...
  /////////

  நன்றி தல..

  ReplyDelete
 27. ///////
  தமிழ் ஈட்டி! said... [Reply to comment]

  இன்றைய பிழைகள்:

  //அனுஷ்கா நடித்த அதரப் பழசான//

  அரதப்பழசான

  //டேபிள் 94 கிளை சார்பாக கடந்த அக்டடீபர்//

  அக்டோபர்

  ...பாத்து எழுதுங்க சகோ.
  //////

  இனி தவறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்..
  நண்பா..
  நன்றி..

  ReplyDelete
 28. ///
  ♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]

  என்னப்பா ஒரு சினி புத்தகமே வாசிச்சமாதிரியுல்ல இருக்கு... மிக்க நன்றிங்க...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
  ////

  இதோ வற்றேன்..

  ReplyDelete
 29. மீண்டும் பிழைகள்: உங்கள் பின்னூட்டங்களில் ...


  //நிம்மதியன பின்னுட்டம்....

  நிம்மதியான பின்னூட்டம்


  //ஆளாளாளுக்கு என்னப்பா இப்படி கிளம்பிட்டிங்க//

  ஆளாளுக்கு


  //தொடர்ந்து வாங்க தொப்பீ தொப்பீ..//

  தொப்பி தொப்பி


  //இதோ வற்றேன்//

  இதோ வர்றேன்


  கவிஞர் இப்படி எழுதலாமா????? தயவு செய்து பிழைகளை தவிருங்கள் சகோ.

  ReplyDelete
 30. /////
  தமிழ் ஈட்டி! said... [Reply to comment]

  மீண்டும் பிழைகள்: உங்கள் பின்னூட்டங்களில் ...


  //நிம்மதியன பின்னுட்டம்....

  நிம்மதியான பின்னூட்டம்


  //ஆளாளாளுக்கு என்னப்பா இப்படி கிளம்பிட்டிங்க//

  ஆளாளுக்கு


  //தொடர்ந்து வாங்க தொப்பீ தொப்பீ..//

  தொப்பி தொப்பி


  //இதோ வற்றேன்//

  இதோ வர்றேன்


  கவிஞர் இப்படி எழுதலாமா????? தயவு செய்து பிழைகளை தவிருங்கள் சகோ.
  /////

  கண்டிப்பாக நண்பரே..
  பிழைகள் இல்லாமல் தான் ஒவ்வோறு பதிவுகளையும்.. பின்னுட்டங்களையும் தர முயல்கிறேன்


  பின்னுட்டம் இடும்போது அது இன்னோறு முறை படிக்க தவறுவதால் ஏற்படுகிறகுறையால் அது நிகழ்கிறது..

  ஆனால் பதிவுகளில் இனி வரும் காலங்களில் பிழைகள்யில்லாமல் பார்த்து கொள்கிறேன்..

  தங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி..

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...