கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 April, 2011

இப்படியெல்லாம் அவளின் இம்சைகள்...




உன் பிரிவு
நான் வாழ்வதற்கு சாத்தியமே...
நான் செல்லும் இடங்களிலெல்லாம்
உன் நினைவுகள் இருப்பதால்...

***************************************************

ஒவ்வொறு
ரயில் பயணத்திலும் தொடர்கிறது...
மறந்து விட்டுப்போன
உன் கைகுட்டையின்
ஞாபகங்கள்...
மற்றும் 
உன் நினைவுகளை சுமந்திருக்கும்
அந்த இருக்கை...

***************************************************


உனைக் காணாமல்
திரும்பும் போதெல்லாம்
எனக்கு தெரியாமலே மரணப்படுகிறது
என் மனது...

உன் நினைவுகள் தவிர்த்து
‌அத்தனையையும் சலவைச் செய்கிறது மூளை...

***************************************************



நம் சந்திப்பின் ஞாபகங்களை
மிச்சப்படுத்திக் கொண்டிருக்கி‌றேன்...
நீ வருவதாய் சொல்லி
ஏமாற்றிவிட்ட நிமிடங்களின்
வலியைப் போக்கிக்கொள்ள...


***************************************************

படங்கள் : ஓவியர் இளையராஜா
அவருடைய இணைய முகவரி.
http://www.elayarajaartgallery.com

***************************************************
தங்கள் வருகைக்கான தடயங்களை 
இங்கே விட்டச் செல்லுங்கள்
தங்களின் கருத்துக்காக காத்திருக்கிறேன்...

27 comments:

  1. நண்பர்களை மாலை 5.00 மணிக்கு சந்திக்கிறேன்...

    ReplyDelete
  2. உனைக் காணாமல்
    திரும்பும் போதெல்லாம்
    எனக்கு தெரியாமலே மரணப்படுகிறது
    என் மனது...

    சூப்பர் சூப்பர்... அழகான காதல் பேசும் வரிகள்..வாழ்த்துகள் நண்பரே.... புகைப்படமும் அருமை...அந்த நண்பருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. ஓவியம் போன்ற கவிதைகள்..கவிதை போன்ற ஓவியங்கள்..சபாஷ், சரியான போட்டி!

    ReplyDelete
  4. இளையராஜா ஓவியத்தோடு கவிதை சூப்பர்.

    ReplyDelete
  5. கவிதைகள் அருமை. ஆனால், திரு.இளையராஜாவின் ஓவியங்கள் கவனத்தை திருப்பி விடுகின்றன.... கொள்ளை அழகு!

    ReplyDelete
  6. சும்மா நச்சினு இருக்கு..

    ReplyDelete
  7. படங்கள் மெய்மறக்க வைத்தது. கவிதை அருமை.

    ReplyDelete
  8. நல்லாயிருக்கு

    கனவு பலித்ததே

    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_05.html

    ReplyDelete
  9. அழகான் ஓவியங்கள்;
    ஓவியம் போன்ற கவிதைகள்!

    ReplyDelete
  10. மாப்ள கவிதை ஊடே பயணிக்கும் அழகு ஓவியங்கள் அருமை

    ReplyDelete
  11. படங்கள் கவிதைக்கு அருமையாக மேட்ச் ஆகி இருக்கு...

    ReplyDelete
  12. ஒவ்வொரு ஓவியமும் கவிதை பேசுகிறதே மௌனமாய்....

    ReplyDelete
  13. //விக்கி உலகம் said... [Reply to comment]
    மாப்ள கவிதை ஊடே பயணிக்கும் அழகு ஓவியங்கள் அருமை//

    நமீதா படம் பாக்க வந்த ஆளு ஹா ஹா ஹா ஏமாந்து போனார் ஹி ஹி ஹி ஹி...

    ReplyDelete
  14. //இருப்பாதால்..// இது என்னன்னு பாருங்க, கவிதை அருமை

    ReplyDelete
  15. மிக அருமையான இளையராஜா ஓவியங்களை வெளியிட்டதற்கு சந்தோசம்..இளையராஜ முகவரியும் கொடுத்ததற்கு நன்றி எல்லா கவிதையும் கலக்கல்

    ReplyDelete
  16. கண்ல ஒத்திக்கிற ஓவியங்கள்

    ReplyDelete
  17. இரண்டு கிளிகளும் அந்த பெண்ணும் அழகோ அழகு..
    அருமையான வரிகள் 'உன் நினைவுகள் தவிர்த்து அத்தனையும் சலவை செய்கிறது மூளை'
    வண்ணங்களை குழைத்து பெண்ணை வரைந்தபின்.. எண்ணங்களை எப்படி மாற்ற முடியும்?!

    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  18. உனைக் காணாமல்
    திரும்பும் போதெல்லாம்
    எனக்கு தெரியாமலே மரணப்படுகிறது
    என் மனது...

    உன் நினைவுகள் தவிர்த்து
    ‌அத்தனையையும் சலவைச் செய்கிறது மூளை...
    ஓவியம் கவிதை இரண்டும் ஆண்மயில் தோகை விரித்தாடும் நடனம் பார்த்த சந்தோசத்தை தந்தது. ஓவியம் கண்ணுக்கும் கவிதை கருத்துக்கும் விருந்தாக அமைந்தது.

    ReplyDelete
  19. இப்படியெல்லாம் அவளின் இம்சைகள்...


    சுகமான இம்சை இல்லையா................ தோழரே

    ReplyDelete
  20. கவிதைக்கு உயி்ர் கொடுக்கும் வகையில் படங்களுடன் இணைத்து வடித்திருப்பது மிகவும் அருமை நண்பரே..!!

    ReplyDelete
  21. பச்சைக்கிளியோடு இச்சைக்கிளியின் படமும்,கவிதையும் அருமை.

    ReplyDelete
  22. படங்களும் கவிதைகளும் போட்டி போடுகிறது.அனைத்தும் அசத்தல் !

    ReplyDelete
  23. சபாஷ்! சரியான போட்டி! தொடரட்டும்...! இசையாலும், வண்ணப் பசையாலும் நம்மை உலுக்கி, உருக்குலைப்பதே இந்த இளையராஜாவுக்கு வேலையாப் போச்சே...! :)))

    ReplyDelete
  24. ம்... படங்கள் கவிதை அசத்தல்..

    ReplyDelete
  25. அன்பின் சௌந்தர்

    ஓவியங்கலூம் அதற்கேற்ற கவிதை வரிகளும் அருமை. கவிதை வரிகளும் அவற்றிற்கேற்ற ஓவியங்களும் அருமை. எப்படிச் சொல்வது சரியானது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...