கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 April, 2011

இந்திய அணிக்கு ஒபாமா விருந்தா?..


கிரிக்கெட்டுக்கு சற்றும் சம்பந்தமில்லாத அமெரிக்காவிலிருந்தும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து வந்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோதி ரோமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதனால் இந்திய கிரிக்கெட் அணியை அதிபர் ஒபாமா நேரில் அழைத்து பாராட்டி விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவை நேற்று ரோமர் சந்தித்தார். அப்போது ஒபாமாவின் சார்பில் இந்திய கிரிக்கெட் அணியை, குறிப்பாக நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் டோணி ஆகியோரைப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

சச்சின் குறித்து ரோமர் கூறுகையில், கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் சச்சின், தனது வாழ்நாள் கனவை நனவாக்கியிருப்பது விசேஷமானது. அதேபோல எந்தவிதமான பிசிரும் இல்லாமல், மிகவும் துல்லியமாகவும், சிறப்பாகவும் முடிவெடுக்கும் கேப்டன் டோணியின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது.

கிரிக்கெட் ராஜாக்களின் இந்த சாதனையை நாங்கள் பாராட்டுகிறோம். இந்தியா கேட் பகுதியில் நடந்த கொண்டாட்டத்தில் நானே கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால் அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி நான் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டேன்.

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட இந்த கிரிக்கெட் உறவுகள் பயன்படலாம் என்று நம்புகிறேன். பிரகாசமான தொடக்கத்தை என்னால் காண முடிகிறது. உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை மிகச் சிறப்பாக நடத்த இந்திய பாதுகாப்புப் படையினரும் பெரும் பங்காற்றியுள்ளனர். அதையும் நான் பாராட்டுகிறேன் என்றார் ரோமர்.

இந்தியாவுடன் முன்பை விட அதிக அளவிலான நெருக்கத்தை தற்போது அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. ஒபாமாவின் நிர்வாகத்தில் இந்திய அமெரிக்கர்கள் நிறையப் பேர் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒபாமா வாழ்த்து தெரிவித்திருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

எனவே இந்தியா மற்றும் இந்தியர்களுடன் மேலும் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் டோணி தலைமையிலான இந்திய அணியினரை வாஷிங்டனுக்கு நேரில் அழைத்து ஒபாமா விருந்தளித்துக் கெளரவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

22 comments:

  1. இதிலென்ன ஆச்சர்யம்.. ஒபாமாவின் கைக்கூலிகள் இந்த காங்கிரஸ் காரன்கள்..

    ReplyDelete
  2. டபுள் ஆக்டிங்க் டக்ளஸ்....

    ReplyDelete
  3. எதோ உள் குத்து இருக்குது

    ReplyDelete
  4. அமெரிக்காகாரன் என்ன வேனா செய்வான்

    ReplyDelete
  5. இந்திய அணி காட்டில் மழை!

    ReplyDelete
  6. இதுல என்ன ஆச்சர்யம் இருக்கு மக்கா சொனியாகான் அமெரிக்காவின் அடி வருடிதானே....

    ReplyDelete
  7. இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட இந்த கிரிக்கெட் உறவுகள் பயன்படலாம் என்று நம்புகிறேன். //
    நம்பிக்கை தானே வாழ்க்கை!!

    ReplyDelete
  8. தெரியாத செய்தி. தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  9. /////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    இதிலென்ன ஆச்சர்யம்.. ஒபாமாவின் கைக்கூலிகள் இந்த காங்கிரஸ் காரன்கள்..
    //////////

    உண்மைதானே...

    ReplyDelete
  10. ////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    டபுள் ஆக்டிங்க் டக்ளஸ்....
    //////

    உண்மை..

    ReplyDelete
  11. ///
    Speed Master said... [Reply to comment]

    எதோ உள் குத்து இருக்குது
    ////
    ஆமாம்...

    ReplyDelete
  12. ///
    கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]

    அமெரிக்காகாரன் என்ன வேனா செய்வான்
    ////

    உண்மைதாங்க...

    ReplyDelete
  13. ////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    இந்திய அணி காட்டில் மழை!
    ////

    ஆமாங்க..

    ReplyDelete
  14. ////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    இதுல என்ன ஆச்சர்யம் இருக்கு மக்கா சொனியாகான் அமெரிக்காவின் அடி வருடிதானே....
    ////

    உண்மைதாங்க..

    ReplyDelete
  15. கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் சச்சின், தனது வாழ்நாள் கனவை நனவாக்கியிருப்பது விசேஷமானது.//
    அட..ஆமா இல்ல...

    ReplyDelete
  16. ஒபாமாவின் நிர்வாகத்தில் இந்திய அமெரிக்கர்கள் நிறையப் பேர் இடம் பிடித்துள்ளனர். ....true.

    ReplyDelete
  17. டேய் மாப்ள கோச்சிக்காதே!

    ReplyDelete
  18. நல்ல விஷயம்தான். நடக்கட்டும்.

    ReplyDelete
  19. //
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மேம்பட இந்த கிரிக்கெட் உறவுகள் பயன்படலாம் என்று நம்புகிறேன். //
    நம்பிக்கை தானே வாழ்க்கை!!
    ///

    வாங்க..

    ReplyDelete
  20. ////
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    தெரியாத செய்தி. தெரிந்து கொண்டேன்.
    ///


    நன்றி

    ReplyDelete
  21. ///
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் சச்சின், தனது வாழ்நாள் கனவை நனவாக்கியிருப்பது விசேஷமானது.//
    அட..ஆமா இல்ல...
    ////

    அட ஆமாங்க..

    ReplyDelete
  22. நல்ல மனதோடு வாழ்த்தட்டும்.. நாமும் வாழ்த்துவோம்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...