கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 April, 2011

மாப்பிள்ளை - திரைவிமர்சனம்


சன் பிக்சர் கலாநிதி மாறன் சார்பாக தனுஷ் நடிக்க சுராஜ் இயக்கியிருக்கும் படம் தான் மாப்பிள்ளை. கதை பற்றி சொல்லத் தேவையில்லை பழைய ரஜினி நடித்த  மாப்பிள்ளையின் கதைதான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றி  படம் பார்க்க வந்தவர்களை சிரிக்கவைத்து அனுப்பியிருக்கிறார் சுராஜ்.

சென்னையில் அக்கா வீட்டில் ஒரு நல்ல பக்திமானாக இருக்கும் தனுஷ் (சரவணன்), அந்த பகுதியில் நமீதா ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் விவேக் (சின்னா) -கிற்கு காதலில் உதவ நாயகி ஹன்சிகாவை சந்திக்க,  ஹன்சிகா தனுஷின் நல்ல குணத்தைப் பார்த்து காதலில் விழ இவர் வெறுக்க அவர்  காதலிக்க இறுதியாய் நாயகியின் அம்மாவான கோடீஸ்வரி ராஜேஸ்வரியம்மாவிடம் (மனீஷா கொய்ராலா)  பெண் கேட்க செல்கிறார் தனுஷ். மாப்பிள்ளை நல்ல குணமுடையவர் என தெரிந்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமண ஏற்பாடுகள் நடைபெறும் வேளையில் மாப்பிள்ளை தனுஷ் கும்பக்கோணத்தில் மிகபெரிய முரட்டிபயல் என தெரியவர மாப்பிள்ளையை மாற்றி திருமண ஏற்பாடு நடக்கிறது. அதை முறியடித்து தனுஷ் திருமணம் செய்துக் கொள்கிறார் பின் வீட்டோட மாப்பிள்ளையாக வலம் வருகிறார்.

இருவருக்கும் முதல் இரவு நடக்க விடாமல் தடை செய்யும் மனீஷா அவர்களை பிரிக்க திட்ட மிடுகிறார்.  இதற்கிடையில் தனுஸை சொந்த கிராமத்திற்கு அழைக்க வரும் அப்பா அம்மாவை அவமானம் படுத்திவிட, மேலும் தனுஷின் தங்கை மனீஷாவின் ம‌கனை காதலிக்க அந்த திருமணத்தையும் நடத்த திட்டம் தீட்டி அனைவரையும் கிராத்திற்கு வரவழைக்கும் தனுஷ் பின்பு வில்லன்களின் சூழ்ச்சியில் சிக்கி அவமானம் படுகிறார் தனுஷ். 
இறுதியில் தன் தங்கைக்கு திருமணத்தை நடத்தினாரா? ராஜேஸ்வரி தனுசை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டாரா என் இறுதிகாட்சிகளில் நகைச்சுவையுடன் சொல்லிருக்கும் படமே மாப்பிள்ளை.

இனி விஷயத்துக்கு வர்றேன்...

தனுஷ் ஆரம்பத்தில் பக்திமான் போன்று மிக அமைதியான கேரக்டரில் வந்து விவேக்குடன் கலந்து எல்லாரையும் சிரிக்க வைக்கிறார். அதன் பின்பு கும்பகோணத்தில் கலக்கல் இளைஞனாக வந்து ஊர் முழுக்க கலாட்டா தகராறு செய்யும் போது தனுஷ் அமர்களப்படுத்துகிறார். அதிகமான சண்டைக்காட்சிகள் இணைக்க அதிக அளவு கதை இல்லாததால் யாதர்த்தமான இவரின் காட்சி அமைப்புகள் நகர்கிறது.


கோடீஸ்வரி ராஜேஸ்வரியாக வரும் மனீஷா கொய்ராலா ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டி தன் பெண்ணுக்கு அன்பு அம்மாவாக நடித்திருக்கிறார்.  மாப்பிள்ளை தனுசுடன் போட்டி ‌போடும் போதும் தன்னுடைய பணக்காரத்திமிரை காட்டும் போதும் ஏதோ ஓரளவுக்கு ஸ்கோர் பண்ணியிருக்கிறார். ஆனால் இவரின் நடிப்பு அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை.

படம் துவக்கம் காமெடி எக்ஸ்பிரசாக ‌ஜெட் வேகத்தில் புறப்படுகிறது. நமீதா ரசிகர் மன்றம் நடத்தும் விவேக், சத்யன், பாலாஜி கூட்டணி கா‌மெடியில் பிச்சியெடுக்கிறார்கள். நாயகியை காதலிக்க தனுஷிடம் ஐடியா கேட்டு பின்பு அதில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் அவஸ்தை மற்றும் இந்த நால்வரின் வசனங்கள் ஹேர் ஸ்டைல் ஒரு கலக்கு கலக்குகிறது. அதன்பிறகு தனுசுக்கு உதவ பணக்காரர் வேஷம் கட்டும் போதும் விவேக்கின் காமெடி படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
 
நாயகி  ஹன்சிகா அதிக வேலை இல்லை. இவர் பதிவுலகில் டாப்ஸி இடத்தை பிடிக்க முயற்சிப்பார் என்று தெரிகிறது.

வில்லன் ஆஷீஸ் வித்யார்த் அதிக வேலையில்லை தனுசின் அப்பாவாக பட்டிமன்ற ராஜா இவர் சினிமா அப்பாவாக வந்துப் போகிறார். மணிசர்மாவின் இசையில் பாடல்கள் செல்லும்படி இருக்கிறது. என்னோட ராசி நல்ல ராசி என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். சிட்டிபாபு, மதன்பாப், மனோபாலா மனீஷா கொய்ராலாவை உடன் வந்து தன் பங்கிக்கு காமெடி செய்திருக்கிறார்கள்

இறுதிக்கட்ட காட்சிகள் பரபரப்பாக ஆரம்பித்து நகைச்சுவையுடன் முடிகிறது. படம் முழுக்க வசனங்கள் பஞ்ச் டயலாக் போன்றே வளம் வருகிறது.. விவேக்கின் டயலாக் மிக  மிக சூப்பர். கோடை வெயிலுக்கு இதமான ஒரு நகைச்சுவை கதை‌யை எடுத்துக்கொண்டு தன் பாணியில் சொல்லி ஜெயித்திருக்கிறார். சுராஜ்.

சன் பிக்சரின் மற்றும்மொறு மாசாலா படம் இந்த மாப்பிள்ளை.

32 comments:

  1. வடை...நம்ம கடையிலயும் இதே சரக்கு தான் ஓடுது!

    ReplyDelete
  2. விமர்சனம் சூப்பரு மாப்ள

    ReplyDelete
  3. படம் பாக்கலாம்ன்னு சொல்லறீங்க..

    ReplyDelete
  4. ///
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    சூப்பர்...
    //////

    வாங்க பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  5. ஓட்டுப் போட்டாச்சு!

    ReplyDelete
  6. ///
    செங்கோவி said... [Reply to comment]

    வடை...நம்ம கடையிலயும் இதே சரக்கு தான் ஓடுது!
    ///

    அதையும் பார்த்துட்டா போச்சி..

    ReplyDelete
  7. ///
    விக்கி உலகம் said... [Reply to comment]

    விமர்சனம் சூப்பரு மாப்ள
    ////

    நன்றி மாப்ள..

    ReplyDelete
  8. ////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    கலக்கல்..
    ////

    ம்.. நன்றி..

    ReplyDelete
  9. ///
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    படம் பாக்கலாம்ன்னு சொல்லறீங்க..
    ////

    டிக்கெட் நீங்க எடுக்கிற மாதிரி இருந்தா இன்னோரு முறைக்கூட பார்க்கலாம்..

    ReplyDelete
  10. செங்கோவி அண்ணன் காட்டிய வழியா? நான் 3வதா? அவ் அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. விமர்சனம் கலக்கலா இருக்கு.

    சன் பிக்ச்சர் ஒன்னும் உங்களை கவனிக்க வில்லையே?

    ReplyDelete
  12. ////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    ஓட்டுப் போட்டாச்சு!
    ///

    பூத் சிலிப் வாங்கியாச்சா..

    ReplyDelete
  13. ///
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    செங்கோவி அண்ணன் காட்டிய வழியா? நான் 3வதா? அவ் அவ்வ்வ்வ்வ்
    ///

    வாங்க சிபி...

    ReplyDelete
  14. அப்படி பேர்டு அருவாள..

    ReplyDelete
  15. ////
    அந்நியன் 2 said... [Reply to comment]

    விமர்சனம் கலக்கலா இருக்கு.

    சன் பிக்ச்சர் ஒன்னும் உங்களை கவனிக்க வில்லையே?
    ////

    125 எனக்குதாங்க செலவு...

    ReplyDelete
  16. நண்பரே அச்சுத்துறை நன்றாக சொல்கிறதா
    தேர்தல் நேரத்தில் சினிமா பார்க்க உங்களுக்கு
    நேரம் உள்ளதா?
    உங்கள் அருகில் இருக்கும் அச்சுத்துறை நண்பன்

    ReplyDelete
  17. என்னங்க பெரிதாக எதிர் பார்த்த அளவுக்கு ஒன்றும் இல்லை போலிருக்கே...

    ReplyDelete
  18. ///
    bharath said... [Reply to comment]

    அப்படி பேர்டு அருவாள..
    ///////


    நன்றி பரத்..

    ReplyDelete
  19. ///
    kiramathu kakkai said... [Reply to comment]

    நண்பரே அச்சுத்துறை நன்றாக சொல்கிறதா
    தேர்தல் நேரத்தில் சினிமா பார்க்க உங்களுக்கு
    நேரம் உள்ளதா?
    உங்கள் அருகில் இருக்கும் அச்சுத்துறை நண்பன்
    ////

    தங்கள் பதிவுலக பயணம் இனிதே வர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. ///
    Chitra said... [Reply to comment]

    Thank you for the review.
    //

    வாங்க சித்ரா..

    ReplyDelete
  21. //நாயகி ஹன்சிகா அதிக வேலை இல்லை. இவர் பதிவுலகில் டாப்ஸி இடத்தை பிடிக்க முயற்சிப்பார் என்று தெரிகிறது.//

    நீங்களும் கருத்து கணிப்பில் இறங்கி கலக்குறீங்க...

    ReplyDelete
  22. //ஆனால் இவரின் நடிப்பு அந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை.//

    வேறு நடிகையை போட்டிருக்கலாம். விமர்சனம் எழுதிய அனைவருக்கும் மனிஷாவின் நடிப்பு பிடிக்கவில்லை. பாவம்.

    ReplyDelete
  23. ///
    Speed Master said... [Reply to comment]

    வந்தேன் வாக்களித்து சென்றேன்


    முடிஞ்சா பதில் சொல்லுங்க

    http://speedsays.blogspot.com/2011/04/blog-post_09.html
    /////

    வாங்க..

    ReplyDelete
  24. ///
    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply to comment]

    25
    ////

    29

    ReplyDelete
  25. சன் பிக்சர்சின் கைக்கூலி சௌந்தர் வால்க..........!

    ReplyDelete
  26. /////நாயகி ஹன்சிகா அதிக வேலை இல்லை. இவர் பதிவுலகில் டாப்ஸி இடத்தை பிடிக்க முயற்சிப்பார் என்று தெரிகிறது.
    //////////

    அது டாப்ஸி இல்லீங்கோ தப்சிங்கோ.... அப்புறம் சிபி கோச்சுப்பாரு சொல்லிட்டேன்.....

    ReplyDelete
  27. நன்றி கருன்.படம் பாக்கலாம் அப்போ !

    ReplyDelete
  28. கலக்கல் கண்ணா

    முட்டையா...? கோழியா...?
    http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_8763.html

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...