கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 April, 2011

இலங்கை அரசை இனி என்ன செய்ய போகிறது ஐ.நா., - அதிர்ச்சி ரிப்போர்ட்விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இலங்கையில் தனிநாடு கேட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத போராட்டம் நடத்தி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை ராணுவம் கடந்த 2009ம் ஆண்டு இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. 
 
இறுதிக்கட்டமாக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவம் அத்துமீறி செயல்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபை 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தோனேசியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக்குழுவின் அறிக்கை நேற்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை ராணுவம் போர் குற்றம் புரிந்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. விடுதலைப்புலிகள் தரப்பிலும் போர்க்குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. சுமார் 3 லட்சம் அப்பாவி தமிழர்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்தியுள்ளனர். தப்ப முயற்சித்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். 
 
கடைசி கட்ட போரில் இலங்கை ராணுவத்தால் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், ஐநா முகாம்கள் மற்றும் செஞ்சிலுவை சங்க முகாம்களும் இலங்கை ராணுவத்தின் குண்டுவீச்சுக்கு தப்பவில்லை. போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளது. வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகள் சரி இனி என்ன நடவடிக்கைகள் எடுக்கப் பேர்கிறது ஐ.நா., கண்ணுக்கு தெரிந்த ஒரு நிகழ்ச்சிக்கு இந்த விசாரணை ஏன் என்று தெரியவில்லை. சரி விசாரணை முடிந்தும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் ராஜபக்சேவை நிறுத்த ‌ ஐ.நா., நடவடிக்கை எடுக்க யோசிப்பது ஏன்என்று தெரியவில்லை. தமிழர்ளுக்கு எதிராக இவ்வளவு பெரிய நயவஞ்சக செயலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் ஒட்டு மொத்த வேண்டுகோள்.

28 comments:

 1. இலங்கை யை கெஞ்ச்சக்கூடாது, தூக்கிப்போட்டு மிதிக்க வேண்டும் ஐ.நா

  ReplyDelete
 2. ///சரி இனி என்ன நடவடிக்கைகள் எடுக்கப் பேர்கிறது ஐ.நா.,// அமெரிக்காவும் சீனாவும் ரஷ்யாவும் என்ன சொல்கிறார்களோ அதை தான் செய்வார்கள் இந்த கைப்பிள்ளை ஐ நா............. நல்ல ஆய்வு பாஸ்...

  ReplyDelete
 3. போட்டு தாக்கு இலங்கையை...

  ReplyDelete
 4. ஐநா, சோனியாகான் [[அமெரிக்காவின்]] எண்ணப்படியே செயல்படும். நியாயம் கிடைக்கதுன்னே தோணுது. இருந்தாலும் போராடுவோம்....

  ReplyDelete
 5. //தமிழர்ளுக்கு எதிராக இவ்வளவு பெரிய நயவஞ்சக செயலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்களின் ஒட்டு மொத்த வேண்டுகோள்.//

  மிக சரியாக சொன்னீர்கள் மக்கா...

  ReplyDelete
 6. நீதி ஒருநாள் வெல்லும் நிச்சயமாக....

  ReplyDelete
 7. போராடுவோம் .......................வெற்றி நிச்சயம் ...

  ReplyDelete
 8. நல்ல பதிவு.இந்தப் பைரச்சினையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பட்டால் மட்டுமே தமிழர்களுக்கு நியாயமான் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு.னைத்து பதிவர்களும் இவ்வறிக்கை,நியாயமான் விசாரனை குறித்து சில(ஒன்றாவது) பதிவுகள்வெளியிட வேண்டும்.இன்னும் எவ்வ்ளவோ விவாதித்து செய்ய முடியும்.
  பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 9. அருமையான பகிர்வு பதிவுக்கு நன்றி

  ReplyDelete
 10. அரசியல் ஆய்வு.. அலசல் அருமை சகோ.
  புலிகள் பற்றிய மறைக்கப்படும் தகவலை போட்டுத் தாக்கியிருக்கிறீர்கள். இலங்கை அரசிற்கு போர் குற்றம் தொடர்பாக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விட, தமிழர்களுக்கான தீர்வினை எல்லா நாடுகளும் சேர்ந்து கொடுக்க வலியுறுத்த வேண்டும்.

  ReplyDelete
 11. இனித்தான் நம் ஒற்றுமையின் பலம் தேவை.சிங்கள அத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்துவிட்டன.நாம் !

  ReplyDelete
 12. எங்க பாஸ் அது நடக்க போகுது??
  ஐ நாவுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கைக்கு ஆதரவுக்கு தான் சீனாவும் ரஷ்யாவும் இருக்கே!!
  இந்தியா இன்னமும் பக்கப் பாட்டு தான்...
  இவங்களே இப்டி இருக்கும் போது...
  இலங்கை வடிவாக இந்தியாக்கும் சீனாவுக்கும் இடையே தாளம் போடுகிறது...

  ReplyDelete
 13. அருமையான அவசியமான பதிவு.

  ReplyDelete
 14. இந்த விஷயத்தில் இலங்கையின் ரத்தவெறி ராஜபக்ஷேவுக்கு இந்தியாவின் மன்மோகன் உதவி செய்யக்கூடும் என்று தினமணி எழுதியிருக்கிறது, அப்படி ஒருவேளை இந்தியா செய்தால் அது அத்தனை தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 15. //சரி இனி என்ன நடவடிக்கைகள் எடுக்கப் பேர்கிறது ஐ.நா.???/// ??? நச் !

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. இந்திய மீனவர் கொலைகளும் ஐநா அறிக்கையில் இருந்தால் நல்லாஇருக்கும்

  ReplyDelete
 18. இலங்கை அரசு என்ன செய்யப்போகிறது என்பதல்ல கேள்வி!தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது மட்டுமே.

  தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஈழப்பிரச்சினையில் கருணாநிதியையும்,ஜெயலலிதாவையும் யாராவது ஒன்று சேர்க்க இயலுமா? சாத்தியமில்லைதானே?

  சரி!இன்னுமொன்னும் சொல்றேன்.சுயநல அரசியலில் பிரிந்து போனாலும் ஈழப்பிரச்சினையில் ஒரே மாதிரி குரல் கொடுத்த வை.கோ,நெடுமாறன்,தா.பா,மகேந்திரன்,திருமா,ராமதாஸ்,சுப.வீரபாண்டியன்,தமிழ்மணியன்,பெ.தி.க,வீரமணி இவர்கள் அனைவரும் ஒரே அணியில் குரல் கொடுக்கவும்,இணையவும் சாத்தியமிருக்குதா?இதுவும் இல்லைதானே!

  சரி!மூணாவதா ஒண்ணு சொல்றேன்.இந்தக் கிழடுகளையெல்லாம் மூடிகிட்டு மூலையில் உட்காரச் சொல்லுங்க.இளைஞர்களிடம் இந்தப் பிரச்சினையை விட்டு விடுங்க.போராடினோன் வெற்றி பெற்றோம் இல்லை தோல்வியடைந்தோம் என வருங்கால சரித்திரம் சொல்லும்.

  ReplyDelete
 19. போன பின்னூட்டத்தோட விட்டுடுவேன்னு நினைச்சீங்களாக்கும்:)

  புலம் பெயர் தமிழர்கள்,கோயில் கோயிலா சுத்தறதையும்,பட்டு புடவை,வேஷ்டியில் சுத்திகிட்டு வெட்டிக்கதை பேசுவதை நிறுத்தச் சொல்லுங்கள்.ஜோசியகாரன் பின்னால் போவதை விடச் சொல்லுங்கள்.அவர்களுக்கென்று நிறைய தொலைக்காட்சி ஊடகஙகள் வைத்திருக்கிறார்கள்.மெகா சீரியல்களை தமிழ்நாட்டுலருந்து ஓசி வாங்கிப் பார்த்தாலும் பரவாயில்லை.மக்கள் கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கச் சொல்லுஙக்ள்.தமிழ்ன்னு மட்டும் கிண்ற்றுக்குள்ளிருந்து கூவுவதை விட்டு செய்தி நேரத்தில் கொஞ்ச நேரம் ஆங்கிலத்துக்கும் ஒதுக்கச் சொல்லுங்கள்.சானல் 4,அல்ஜசிரா,மனித உரிமை அமைப்புக்களுடன் நல்லுறவு பேணச் சொல்லுங்கள்.

  முக்கியமா இன்னும் தூங்கிகிட்டு இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரவுக்குரலில் தட்டி எழுப்புங்கள்.

  ReplyDelete
 20. இதெல்லாம் சரி!மே மாத உழைப்பாளர் தினத்துக்கு ராஜபக்சே ஆட்கள் திரட்டுகிறாராம்.கூடவே பிள்ளையானும்,கருணாவும் தமிழக பிரியாணி பார்முலா மாதிரி வண்டி கட்டி கொழும்புக்கு கூட்டிகிட்டுப் போறாங்களாம்.இதுக்கு என்ன செய்வீங்க?இதுக்கு என்ன செய்வீங்க?

  ReplyDelete
 21. கண்டிப்பா விரைவான நடவடிக்கை எடுக்கணும்! அப்போதான் போர்க் குற்றங்கள் குறையும். இங்கனு இல்ல , எல்லா இடத்திலும் நாம போர்குற்றங்கள் செஞ்ச தட்டிக்கேட்க நமக்கும் மேல இருக்காங்க அப்படிங்கிற பயம் வருமளவு தண்டனைகள் இருக்கவேண்டும்!

  ReplyDelete
 22. இனியாவது நியாயம் கிடைக்குமா? :(

  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete
 23. பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது.
  சுமார் 3 லட்சம் அப்பாவி தமிழர்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்தியுள்ளனர். தப்ப முயற்சித்தவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.

  தமிழகத்தில் மறைக்கபடும் தகவல்களையும் வெளிபடுத்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 24. இயலாமை நினைத்து வெட்க படுகிறோம் .......

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...