கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 June, 2011

வலுப்படுத்தும் உறவோடு விவாதியுங்கள்.. (நெல்லை பதிவர் சந்திப்பு வாழ்த்து செய்தி)

அன்புள்ளம் கொண்ட பதிவுலகின் பதிவர்களே... மற்றும் வாசகர்களே....
நாளை (17-06-2011) நெல்லையில் கூடும் பதிவர்சந்திப்பில் கலந்துக் கொள்ள வரும் பதிவர்களையும் மற்றும் வாசகர்களையும் அன்புள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன்...


ஜாதி, மதம், இனம், கட்சி என் அத்தனைக்கும் அப்பாற்பட்டு மொழி என்ற ஒரே ஒரு உணர்வோடு உலகத்தின் மூலைகளில் எங்கோ இருந்துக்கொண்டு நம்முடைய கற்பனைகள், படைப்புகள், தகவல்கள் மூலம் நட்புகளை பறிமாறிக்கொண்டு, நம்முடைய நட்புப்பாலம் உலகம் முழுவதும் விரிந்துக்கிடக்கிறது.

அந்த நட்பை உறுதிப்படுத்த, முகம் காட்டாது இருக்கும் நம் “முக”வரிகளை அறியச்செய்யயும் இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ளுபவர்களுக்கும், கலந்துக் கொள்ளாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்து அறிய பணியாற்றி வரும் அருமை நண்பர் உணவு உலகம் திரு  அ.ரா.சங்கரலிங்கம்  அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவிப்பதில் கவிதைவீதி பெருமைப்படுகிறது.

நாளைய சமூதாயத்தை, நாளைய உல‌கை வடிவமைப்பதில் கண்டிப்பாக பதிவுலகம் ஒரு சிறப்பாக பங்கு வகிக்கும். புதியப்புதிய பதிவர்கள் பதிவுலகிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இளைஞர்களின் வருகை கண்டிப்பாக எதிர்காலத்தில் பதிவுலகின் குரல் ஒரு சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்பதில் யாரும் சந்தேகம் படவேண்டாம்.
சச்சரவுகள் ஏதுமின்றி அடுத்த பதிவர்சந்திப்பிற்குக்கு வித்திடுங்கள்.

 பதிவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் பதிவர்களுக்கும், இணையம் மூலமாக கலந்துரையாடும் பதிவர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். அன்பை பறிமாறிக்கொள்ளுங்கள் அதோடு எதிர்கால கொள்கை, எதிர்கால நோக்கம், பதிவர்களின் கடமைகள் ஆகியவற்றையும் விவாதியுங்கள். இந்த விவாதம் நாளைய உலக மாற்ற வழிவகுக்கலாம்.

மொக்கை பதிவு போட்டு, நகைச்சுவைகள் செய்து, தம்முடைய படைப்புகளை பகிர்ந்து, காபி டூ பேஸ்ட் பதிவுகள் இட்டு என முடிந்துவிடுவதில்லை நம் பயணம் என்று நம்பிக்கையையுங்கள். இந்த பதிவர்கள் சந்திப்பை நாளை வரலாற்றுப்பக்கங்கள் குறித்து வைத்துக் கொள்ளட்டும்.

நெல்லை பதிவர் சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன். 
(என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்பதற்க்கான வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்)

முக்கிய அறிவிப்புகள்
இந்த நிகழ்வை  உறவுகள் அனைவரும் கண்டு களிக்கலாம்.
அனைத்துலகெங்கும் பரந்து வாழும் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் நோக்கிலும்,  பதிவர் சந்திப்பிற்கு வருகை தர முடியாத உறவுகளிற்கு நேரடித் தரிசனம் கிடைக்கும் வண்ணமும், இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளார்கள். நேரஞ்சலானது இந்திய நேரம் காலை 6.00 AM இல் இருந்து ஆரம்பமாகும்.

இந்த சுட்டி கிளிக் செய்து கண்டு ரசியுங்கள்


(இதற்க்கான ஏற்பாடுகள் செய்துவருபவர் நண்பர் நிருபன்...)

மிக்க நன்றிகள்..!‌
வெல்லட்டும் பதிவுலக நட்பு....

40 comments:

 1. நாளை -உடல் சென்னையில் மனம் நெல்லையில்.

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றிகள்.

  வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நானும் வாழ்த்து சொல்லிக்கிறேனுங்கோ

  ReplyDelete
 4. //சச்சரவுகள் ஏதுமின்றி அடுத்த பதிவர்சந்திப்பிற்குக்கு வித்திடுங்கள்.//

  நிச்சயமாக அப்படியே நடக்கும்...

  உங்களின் உற்சாகமான, அக்கறையான வார்த்தைகளுக்கு மிக மகிழ்கிறேன் சௌந்தர்...

  உங்களின் ஆதரவு குரலுக்கு என் நன்றிகள்...

  நாளை விடியலை எதிர்பார்த்து இப்பவே கொஞ்சம் படபடப்பு... அதாங்க டென்ஷன் வந்துவிட்டது... :)))

  ReplyDelete
 5. //////
  சென்னை பித்தன் said... [Reply to comment]

  நாளை -உடல் சென்னையில் மனம் நெல்லையில்.
  /////

  எனக்கும் அப்படித்தான் தலைவரே..
  நானும் கருணும் செல்ல முயன்றோம் ஆனால் அதற்கான தருணங்கள் எங்களுக்கு கூடி வரவில்லை....

  ReplyDelete
 6. ///////
  வை.கோபாலகிருஷ்ணன் said...

  தகவலுக்கு நன்றிகள்.

  வெற்றிபெற வாழ்த்துக்கள்.///////


  தங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா...

  ReplyDelete
 7. சந்திப்பு நன்றாக அமைய வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 8. அட போங்கப்பா.. பத்து நாளா நெல்லையில் இருந்துவிட்டு இப்போதான் ஊர் திரும்பி இருக்கிறேன். மறுபடியும் கேட்டா விட மாட்டாங்க. சரி சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. சந்திப்பு சிறப்புற வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 10. விண்ணப்பித்தும் விடுமுறை கிடைக்கவில்லை இது வரை,
  நண்பர்கள் மன்னிக்கவும், குறிப்பாக உணவு உலகம் அவர்கள்.

  அடுத்தமுறை நிச்சயம் எல்லோரையும் சந்திக்கிறேன்

  ReplyDelete
 11. @Kousalya


  தங்கள் வருகைக்கு நன்றி...

  என்னால் வரமுடியவில்லை. கூடும் நண்பர்களை உற்சாகப்படுத்துவது என் கடமை தோழி....

  ReplyDelete
 12. /////
  கந்தசாமி. said... [Reply to comment]

  சந்திப்பு நன்றாக அமைய வாழ்த்துக்கள் ...
  ///////


  ரொம் நல்லது கந்தசாமி...

  ReplyDelete
 13. ////
  பாலா said... [Reply to comment]

  அட போங்கப்பா.. பத்து நாளா நெல்லையில் இருந்துவிட்டு இப்போதான் ஊர் திரும்பி இருக்கிறேன். மறுபடியும் கேட்டா விட மாட்டாங்க. சரி சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  //////

  இப்படி சொன்ன எப்புடிங்க...

  ReplyDelete
 14. /////
  யாழ் கணினி நூலகம் said... [Reply to comment]

  வாழ்த்துக்கள்
  ///////

  நன்றிங்க...

  ReplyDelete
 15. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. விரைவில் ஒரு சந்திப்பில் நானும் பங்கேற்பேன் ...
  அதுவரை என் தொல்லை இல்லாமல் நடத்துங்க நடத்துங்கோ ....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. இப்பதிவர் சந்திப்பு வெற்றியாய் அமைய எனது வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 20. பதிவர் சந்திப்பு நல்லபடியாக நடக்க வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 21. பதிவுலக சூறாவளியால் நெல்லையில் பரவச மழை பொழியட்டும் ...

  ReplyDelete
 22. ///////
  Mahan.Thamesh said... [Reply to comment]

  சந்திப்பு சிறப்புற வாழ்த்துகிறேன்
  ////////

  கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என நம்புவோம்...

  ReplyDelete
 23. //////
  ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

  விண்ணப்பித்தும் விடுமுறை கிடைக்கவில்லை இது வரை,
  நண்பர்கள் மன்னிக்கவும், குறிப்பாக உணவு உலகம் அவர்கள்.

  அடுத்தமுறை நிச்சயம் எல்லோரையும் சந்திக்கிறேன்
  //////////

  எனக்கும் இதே நிலைதான்..

  ReplyDelete
 24. /////////
  ஜ.ரா.ரமேஷ் பாபு said... [Reply to comment]

  பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  //////////

  ரைட்டு...

  ReplyDelete
 25. நெல்லையின் பெருமைகளில் காந்திமதியம்மன் நெல்லையப்பர் மற்றும் அல்வாவுடன் நம் சகோதரர் சங்கரலிங்கம் சார் ஏற்பாடு செய்திருக்கிற பதிவர்களின் சங்கமமும் இடம்பிடிக்க மனதார வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 26. இந்த பதிவர்கள் சந்திப்பை நாளை வரலாற்றுப்பக்கங்கள் குறித்து வைத்துக் கொள்ளட்டும்.// I like it

  ReplyDelete
 27. பதிவர் சந்திப்பு வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நாளை நெல்லையில் கூடுவோம் - நட்புடன் சீனா

  ReplyDelete
 28. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. என்றென்றும் நட்பு தொடரட்டும்

  ReplyDelete
 30. நீங்களெல்லாம் வர இயலவில்லையே என்ற வருத்தம் எனக்கு.... அடுத்த சந்திப்பை விரைவில் நடத்துவோம்... ஒன்று கூடுவோம்.

  ReplyDelete
 31. நெல்லை வரும் அனைத்து நண்பர்களையும்,வாழ்த்தும் நெஞ்சங்களையும் வணங்கி வரவேற்கிறேன்.

  ReplyDelete
 32. வணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்
  சென்று அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்...........

  ReplyDelete
 33. நெல்லை பதிவர்கள் சந்திப்பு அசத்தலாய் நடைபெற நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. சந்திப்பு இனிதாக அமைய வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 35. நேரஞ்சலானது இந்திய நேரம் காலை 6.00 AM இல் இருந்து ஆரம்பமாகும்.//

  அடிங்...இப்பத் தான் எந்திருச்சு பல்லே விளக்கப் போறேன், அதுக்க நேரடி ஒளிபரப்பு ஆறுமணியிலிருந்தாம்.
  ஹி...

  ReplyDelete
 36. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 37. எல்லாருக்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும்படியாக சந்திப்பு அமையட்டும்,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. ஒன்று கூடலுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...