கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 July, 2011

சன் பிக்சர்ஸ் நிர்வாகி கைது... திரை உலகினர் கொண்டாட்டம்...
சன் பிக்சர்ஸ், ஹன்ஸ் ராஜ் சக்சேனா, கலாநிதி மாறன் இவர்களை வானளாவப் புகழாத வாய்களே இல்லை எனும் அளவுக்கு இருந்தது நிலைமை, கடந்த 5 ஆண்டுகளில்.

எந்த சின்ன / பெரிய பட பூஜை அல்லது இசை வெளியீடாக இருந்தாலும் 'சாக்ஸ்' வந்தா நல்லாருக்கும் என்று கேட்பது வாடிக்கையாக இருந்தது.

ஆனால் இன்று அதே சினிமா உலகில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மோசடி வழக்கில் சக்சேனா கைது செய்யப்பட்டதை அறிந்ததும், பிலிம்சேம்பர் எனப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நேற்று பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடியுள்ளனர் சினிமாக்காரர்கள்.

மாருதி பிலிம்ஸ் ராதாகிருஷ்ணன், ஆர்.வி. கிரியேஷன்ஸ் வடிவேலு தலைமையில் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் கூடிய திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் பிலிம்சேம்பர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், "கடந்த 5 ஆண்டுகளாக சங்க பதவியை முறைகேடாக பிடித்தவர்கள், தயாரிப்பாளர்கள் நலனை காக்கத் தவறி குறிப்பிட்ட சேனல்களின் நலனில் அக்கறை செலுத்தி தமிழ் திரைப்பட துறையினரின் பலகோடி ரூபாய் நஷ்டத்திற்கு காரணமானவரும், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களையும் வஞ்சித்தவருமான சன் டி.வி. தலைமை நிர்வாகி சக்சேனாவை கைதுசெய்ததன் மூலம் தமிழ்த்திரையுலகம் சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோடானுகோடி நன்றி," என்று கூறியுள்ளனர்.

30 comments:

 1. 40 ஆட்டோவுல போயி ஒரு ஹோட்டலையே துவம்சம் செய்த வரலாறும் இவருக்கு உண்டு

  ReplyDelete
 2. அடி கொடுத்த காலம் போய் அடி வாங்கும் காலம் வந்துள்ளது. வாங்கட்டும்.

  ReplyDelete
 3. பார்ரா இந்த உலகத்த!

  ReplyDelete
 4. காலங்கள் மாறும். கா(க)ட்சியும் மாறும்

  ReplyDelete
 5. நடக்கட்டும்

  ReplyDelete
 6. காலம் மாறிப்போச்சு!

  ReplyDelete
 7. என்னும் எனவெல்லாம் நடக்க போகுதே..

  ReplyDelete
 8. நல்லதே நடந்தால் சரி தான் ..

  ReplyDelete
 9. என்ன நடந்தாலும் நமக்கு திரை அரங்கில விலை குறையப் போவதில்லை.

  ReplyDelete
 10. வேட்டை ஆரம்பமாகிடுச்சே அடுத்து யாருக்கோ

  ReplyDelete
 11. காலங்கள் மாறும். கா(க)ட்சியும் மாறும்

  ReplyDelete
 12. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் "டப்பா டான்ஸ் ஆடும் சன்" திரைப்படம் விரைவில்....

  ReplyDelete
 13. இந்த மனிதரை பார்த்தாலே ஒரே ஹைகிளாஸ் வில்லன் போலவே தோன்றும். அதிலும் இவர் ஒரு பெண்ணை வீட்டிற்கே சென்று அடித்து மிரட்டிய செய்தியை கேள்வி பட்டு பதறி விட்டேன். அது பொய்யாக இருந்தால், இவர் ஏன் சிங்கப்பூருக்கு சென்று பதுங்க வேண்டும்? உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.

  ReplyDelete
 14. என்னவொரு ஆட்டம் போட்டானுங்க தேவைதான் இவனுக்கு

  ReplyDelete
 15. எத்தனையோ பேரோட பாவம் தான்....அனுபவிக்கட்டும்

  ReplyDelete
 16. பதவியில் இருப்பவர்களின் தயவு தேவைப் படும்போது, அயோக்கியனையும் ரொம்ப நல்லவன் என்று தான் புளுக வேண்டியிருக்கிறது. அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கும் வாய் திறக்க முடியாது. கே.டி. பிரதர்ஸ் கொட்டம் அடங்க வேண்டும்.

  ReplyDelete
 17. சூப்பர் வேட்டை ஆரம்பமா

  ReplyDelete
 18. ஆட்சி மாறும் போது காட்சிகளும் மாறத்தானே செய்யும். பார்ப்போம் நம் கனவுகள் நனவாகிறதா என்று

  ReplyDelete
 19. காலங்கள் மாறும். கா(க)ட்சியும் மாறும்

  இது நூறு வீதம் உண்மைதான்........

  ReplyDelete
 20. வாக்களித்தேன்.

  ReplyDelete
 21. 2006 வரும் வரை இப்படித்தான் நடக்கும். ஒன்றும் செய்ய முடியாது

  ReplyDelete
 22. அரசன் அன்று கொல்வான்..

  தெய்வம் நின்று கொல்லும்..

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 23. சாக்ஸ் மாட்டிகிச்சி. ஷூ எப்ப மாட்டும்??

  ReplyDelete
 24. எத்தன பேரு வயித்தெரிச்சலோ அதெல்லாம் சும்மா விட்ருமா?

  ReplyDelete
 25. ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...