கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

13 July, 2011

நித்தியானந்தா ஆபாசப் பட விவகாரம் - சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது போலீஸில் ரஞ்சிதா புகார்




தன்னையும் நித்யானந்தாவும் இணைத்து ஆபாசப்படம் வெளியிட்டதாக சன் டிவி, தினகரன் மற்றும் நக்கீரன் பத்திரிகை மீது சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

கடந்த வாரம் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் சென்னை நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த புகார் மனுவில், நித்யானந்தா-நடிகை ரஞ்சிதாவை இணைத்து போலியான ஆபாச படங்களை வெளியிட்ட சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த புகார் மனு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், அதே குற்றச்சாட்டை கூறி நடிகை ரஞ்சிதாவும் புகார் கொடுத்துள்ளார். நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு ரஞ்சிதா தனது மூத்த சகோதரியோடும், சீனியர் வக்கீல் ராஜன் உள்பட சில வக்கீல்களோடும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.

கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவரிடம் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவின் நகல் காப்பியை தரும்படி நிருபர்கள் கேட்டனர். அதை தர இயலாது என்று ரஞ்சிதா கூறிச் சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கமிஷனர் திரிபாதி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ரஞ்சிதா கொடுத்த புகார் மனு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து கமிஷனர் திரிபாதி கூறுகையில், "ரஞ்சிதா கொடுத்த புகார் மனுவில், ஆசிரமத்தில் நடந்ததாக போலியான வீடியோ காட்சிகளை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும், எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள் என்றும், அதுதொடர்பாக சன் டி.வி. மீதும், நக்கீரன் உள்பட சில பத்திரிகைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு பணம் கேட்டார்கள் என்பதுபற்றி புகாரில் இல்லை. யார், யார் பெயர் உள்ளது என்பது பற்றி மனுவை முழுமையாக படித்து பார்த்தால்தான் தெரியும்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள். பெங்களூரில் நடக்கும் வழக்கு வேறு. இங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை என்பது பற்றி விசாரணை முடிந்தபிறகுதான் சொல்ல முடியும்.

சக்சேனா மீது நிறைய புகார்கள் இருந்தாலும், இதுவரை 3 புகார்கள் மீதுதான் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
ஆட்சி மாற்றின் விளைவாக  திமுக சார்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. தற்போது பதுங்கி ஒதுங்கி இருந்தவர்கள் கூட வெளியில் வந்துவிட்டார்கள்... வழக்குகள் நியாயம் இருப்பின் சரியான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பது என்னுடைய வாதம். இதில் பழிவாங்கக்கூடிய போக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்...

இனி என்னவாகும் பொறுத்திருந்து பார்ப்போம்.

40 comments:

  1. இனி என்னவாகும் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  2. இனி என்ன ரெண்டு பேருக்கும் குளிர் விட்டு போகும் வேறேன்னா.....

    ReplyDelete
  3. ரஞ்சிதா விஷயத்தில் சன் குழுமம் செய்தது கொஞ்ச நஞ்ச அராஜகம் அல்ல.

    ReplyDelete
  4. இந்த விசயத்தில் மக்களுக்கு ஒன்று சொல்ல நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். . .கடவுளை நாம் மட்டுமே உணர முடியும், யாராலும் நமக்கு உணர்த்த முடியாது. . .பரம்பொருள் என்பது எல்லா மதத்திலும் ஒருவரே. கடவுளை அடைய உங்களுக்கென தனியொரு பாதை வகுக்கப்பட்டிருக்கும், அதைவிடுத்து எந்த தூதுவரின் மூலமும் கடவுளை அடைய முயற்சிக்காதீர். . .கடவுளை நம்புங்கள், இவர்களை போல வித்தை காட்டுபவர்களை நம்பாதீர்கள். . .ஏழையின் சிரிப்பில் மட்டுமே இறைவனை காணமுடியும். . .

    ReplyDelete
  5. இனி என்னவாகும் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஆமா,,,,பொறுத்திருந்து உங்க பதிவைக்காத்திருக்கிறோம்..


    !!!என்ன நம்ம பக்கம் காணக்கிடைக்கல?

    ReplyDelete
  6. ///ஆசிரமத்தில் நடந்ததாக போலியான வீடியோ காட்சிகளை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும், எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள் என்றும், //அப்ப பாருங்களன் )))

    ReplyDelete
  7. நாம ஒழுங்கா இருந்தா இது நடந்திருக்காதே ரஞ்சிதா மேடம்

    ReplyDelete
  8. சகோ ...நம்மளை மறந்துட்டீங்க ...உங்களுக்கு
    ஒரு பரீட்சை நம்ம பக்கம் வாங்க

    ReplyDelete
  9. மனோரஞ்சிதமான பதிவு ஹி ஹி

    ReplyDelete
  10. //ஆட்சி மாற்றின் விளைவாக திமுக சார்ந்தவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. தற்போது பதுங்கி ஒதுங்கி இருந்தவர்கள் கூட வெளியில் வந்துவிட்டார்கள்... வழக்குகள் நியாயம் இருப்பின் சரியான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பது என்னுடைய வாதம். இதில் பழிவாங்கக்கூடிய போக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்...//

    correct.

    ReplyDelete
  11. அப்போ அந்த வீடியோ டூப்பிளிக்கேட்டா...

    இனி என்னவெல்லாம் நடக்கப் போகுதோ.

    ReplyDelete
  12. அன்பின் சௌந்தர் - பொறுத்திருப்போம் - காவல் துறை நீதி மன்றம் - பார்ப்ப்போம் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழரே..

    மொத்தத்தில் தர்மம் நிலைநாட்டப் படவேண்டும்..

    இத்தனை ஆளுங்கட்சியாக இருந்த திமுக - வை எதிர்க்க திராணியற்று இருந்து
    இப்போது புதிய அரசு தரும் தைரியத்தில் உண்மைகள் வெளிவரலாம்..

    பொறுத்திருப்போம்..
    நம்மால் முடிந்தது அதுதானே ?

    ReplyDelete
  14. மாப்ள...அவரு யதார்த்தமா கேட்டாரு..இந்தம்மா பதார்த்தமா போயிட்டாங்க...இந்த மாதிரி எவ்ளோவோ வெளிவராத விஷயங்கள் இருக்கு...இந்த கருமத்த இன்னும் தொடந்து செய்தி போட்டு கொல்லனுமோ டவுட்டு!

    ReplyDelete
  15. //சி.பி.செந்தில்குமார் said...
    மனோரஞ்சிதமான பதிவு ஹி ஹி//
    சிபி, இது உங்களுக்கு வேண்டாத வேலை. மனோவையும், ரஞ்சிதாவையும் ஏன் முடிச்சு போடறீங்க?

    ReplyDelete
  16. இதுதான் சமயம்ன்னு தப்பிச்சுக்க பாக்குறாங்க .....

    ReplyDelete
  17. பொறுத்திரு பொறுத்திரு

    ReplyDelete
  18. நடப்பவை எல்லாம் நன்மைக்கே ..
    உப்பு தின்றால் தண்ணி குடிச்சே தீரனும் ...

    ReplyDelete
  19. If the current technology was available about 30 years back a video like of MGR and JJ may have been telecasted over the TV channels. Fortunately both escaped.

    ReplyDelete
  20. //வழக்குகள் நியாயம் இருப்பின் சரியான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பது என்னுடைய வாதம். இதில் பழிவாங்கக்கூடிய போக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்...

    இனி என்னவாகும் பொறுத்திருந்து பார்ப்போம்.//
    உண்மை என்னவென்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீதி வெல்லவேண்டும். அவ்வளவுதான்.

    ReplyDelete
  21. அப்போ அந்த வீடியோ டூப்பிளிக்கேட்டா...

    ReplyDelete
  22. இவ்வளவு நாள் என்ன செய்துகொண்டிருந்தார் ரஞ்சிதா
    ஏன் இதுவரை இந்த வெளிப்பாட்டைக் கூறவில்லை

    எல்லாமே அரசியல் விளையாட்டு தானா ???
    என்ன பா இது உலகம்.

    ReplyDelete
  23. பணம் கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இத்தனை நாள் பதுங்கி வாழ்ந்தவர்கள். இப்போது பத்தினி வேசம் போடுவது
    என்ன நியாயம்..

    ReplyDelete
  24. என்ன சொல்லுறது? என்னமோ போங்க.

    ReplyDelete
  25. உங்களின் நடுநிலையான இந்தப் பதிவைப் போல் நடுநிலையான தீர்ப்புகள் வழங்கப்படும் என நாம் நம்புவோம்.

    ReplyDelete
  26. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
    மனோரஞ்சிதமான பதிவு ஹி ஹி//

    டேய் அண்ணா நாசமா போறவனே, என்னை ஏண்டா அங்கே கொண்டு போயி கோர்த்து விடுறே ராஸ்கல்....

    ReplyDelete
  27. விக்கியுலகம் said...
    மாப்ள...அவரு யதார்த்தமா கேட்டாரு..இந்தம்மா பதார்த்தமா போயிட்டாங்க..//

    ஹி ஹி ஹி ஹி.....

    ReplyDelete
  28. FOOD said...
    //சி.பி.செந்தில்குமார் said...
    மனோரஞ்சிதமான பதிவு ஹி ஹி//
    சிபி, இது உங்களுக்கு வேண்டாத வேலை. மனோவையும், ரஞ்சிதாவையும் ஏன் முடிச்சு போடறீங்க?//


    இந்த ராஸ்கல் மட்டும் இன்னொரு முறை என் கையில மாட்டட்டும் ராஸ்கல போங்க வச்சிர்றேன் ஆபீசர்.....

    ReplyDelete
  29. ஆரம்பிக்கிறது எல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா அது சரியா முடியணுமே!!??

    இந்த கேஸ் முடியிறதுக்குள்ள அவங்க ஆட்சிக்கு வந்துட்டா இவங்க நிலைமை என்ன??

    ReplyDelete
  30. சக்சேனா..உண்மைலேயே. பல தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை அழித்தவன்

    ReplyDelete
  31. மேலும் விவரங்கலுக்கு..இந்த வார (குமுதம்) ரிப்போர்ட்டர் ரை பாருங்கள்.சக்சேனா எவ்வளவு பெரிய அயோக்கியன் நு எல்லார்க்கும் தெரியும்

    ReplyDelete
  32. வழக்குகள் நியாயம் இருப்பின் சரியான தண்டனைகள் வழங்கவேண்டும் என்பது என்னுடைய வாதம்.

    சரி

    ReplyDelete
  33. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..

    ReplyDelete
  34. ஊர்ரறிந்து ஒய்ந்து போன ஒன்றை
    இவர்கள் இப்போது ஒப்பாரி வைப்பது
    குளிக்கப்போய் சேற்றைப்
    பூசுவதே ஆகும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. இதெல்லாம் அரசில்ல சாதாரணமப்பா....

    ReplyDelete
  36. யமுனா நதி கரையோரத்தில்... கண்ணா உந்தன் பிருந்தாவனம்

    ReplyDelete
  37. தவறு செய்தவர்கள் எல்லாம் எப்படி தான் இப்படி பேசுராங்கலோ..........

    மனசாட்சி இருந்தா சரி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...