கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 July, 2011

என் புனல் விசாரனை.... அதிரடியான உண்மை சம்பவம்....


நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தேன். மதிய நேரம் என்பதால் டிவி- பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சமையலறையில் இருந்து என் அம்மா என்னை அழைத்தார்கள். என்ன என்று கேட்டவாரே சமையலறைக்கு சென்றேன். 

அங்கே மண்ணென்னை கேனுடன் எனது அம்மா நின்றுக் கொண்டிருந்தார்கள்.

என்னம்மா என்று கேட்டேன்...
 
சமையல் செய்யனும்....
 
சரி செய்யுங்க என்றேன்..
 
இந்த மண்ணென்னையை அடுப்பில் (ஸ்டவ்) மண்ணென்னை தீர்ந்து விட்டது அதை  ஊற்ற வேண்டும். ஆனால் புனலை தேடிப்பார்க்கிறேன் காணவில்லை. அதை யார் வாங்கிச்‌ சென்றது என்றும் தெரியவில்லை என்றார்கள்.

அதன்பிறகு அதை எதிர்வீடு அல்லது பக்கத்து வீட்டில்தான் வாங்கிச் சென்றிருப்பார்கள் என்று முடிவுகட்டி நேராக எதிர்வீட்டிற்க்குச் சென்றேன். 

அந்த வீட்டிற்க்கு சென்று கதவைத்தட்டினேன்.
 
கமலா அக்கா வெளியில் வந்தார்கள்..
 
அக்கா எங்க வீட்டில் இருந்து புனல் வாங்கி வந்தீர்களா என்று கேட்டேன். (எவ்வளவு திறமையான கேள்வி பாருங்க.)
 
அதற்க்கு ஆமா என்றார்கள்..
 
அதை அம்மா வாங்கி வரச் சொன்னார்கள் என்று சொன்னேன்.. சரி என்று சொல்லி... வீட்டிற்க்குள் சென்று புனலை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தேன்.

பரவாயில்லை உடனே கண்டுப்பிடித்துவிட்டாயே என்று பாராட்டினார்கள்...

புனல் விசாரணை முடித்து நான் நிம்மதியாக டிவி-தொடங்கினேன்...


ஓ... புனல் என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியவில்லையா..
சரி அந்த படத்தையும் போட்டு விடுகிறேன்...


என்ன கோவமா.. சரியா தலைப்பை படிங்க இது புனலைப்பற்றி விசாரித்ததால் இது புனல்  விசாரணை  ஆயிற்று...
எப்பூடி...

31 comments:

  1. என் புனல் விசாரனை... அதிரடியான உண்மை சம்பவம்....//

    புனலை வைத்து ஓர் புலன் விசாரணை செய்திருக்கிறீங்களே.

    ReplyDelete
  2. சமையல் செய்யனும்....

    சரி செய்யுங்க என்றேன்..//

    உங்களை வந்து சமையல் செய்யச் சொல்லியிருப்பா. சமைச்சு கொடுத்திருக்கலாம் தானே சகோ.

    ReplyDelete
  3. அக்கா எங்க வீட்டில் இருந்து புனல் வாங்கி வந்தீர்களா என்று கேட்டேன். (எவ்வளவு திறமையான கேள்வி பாருங்க.)//

    நல்ல வேளை, துடப்பங்கட்டையால் எடுத்து நாலு அடி தரவில்லை அவங்க.

    ReplyDelete
  4. மாப்ள இது ஒரு புனல் வழிச் செய்தியா ஹிஹி!

    ReplyDelete
  5. தலைப்பா தப்பா(புலன்) போட்டுடீங்கனு படிக்க வந்த நெஜமாவே இது புனல் விசரணை தான்....

    ReplyDelete
  6. ஓ... புனல் என்றால் என்னவென்று தங்களுக்கு தெரியவில்லையா..
    சரி அந்த படத்தையும் போட்டு விடுகிறேன்...//

    ஓவர் குசும்பு...
    ஹி..ஹி...

    ReplyDelete
  7. எங்கையா அந்த வேலக்குமாறு /

    ReplyDelete
  8. இது ஓவர் குசும்பு.....
    எனது பக்கமும் முடிந்தால் வாருங்கள்...
    கூகிளுக்கு ஏன் இந்த வேலை????

    ReplyDelete
  9. ஓவர் குசும்பு...
    ஹி..ஹி...

    ReplyDelete
  10. உண்மையிலேயே அவசரத்தில் நானும் தலைப்பை தப்பாத் தான் வாசிச்சேம்பா..ஹ..ஹ..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

    ReplyDelete
  11. அருமையான உண்மைச்சம்பவத்திற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. இப்பவே கண்ண கட்டுதே. . .

    ReplyDelete
  13. புலன் விசாரனை என்று வாசித்துவிட்டேன்...

    http://daarbaar.blogspot.com

    ReplyDelete
  14. ஹிஹிஹி
    பாஸ் புனல் என்றால் தண்ணீரையும் குறிக்கும் , நான் நினைத்தேன் முடிவு தண்ணீரில் தான் முடியும் என்று ))

    ReplyDelete
  15. WOW..

    BEAUTIFUL

    COLORFUL

    WONDERFUL HEADING..

    ReplyDelete
  16. இந்தாள் தப்பிக்காம யாராவது பிடிங்க. ஒரே போடா போட்டுடலாம் இன்னைக்கு

    ReplyDelete
  17. எல்லாம் என் நேரம் ...

    ReplyDelete
  18. நல்லாத்தானே இருந்தீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?

    ReplyDelete
  19. உங்களை மாதிரி ஒருத்தரு சி‌பி‌ஐ-ல இருந்திருந்தா இந்தியா-ல ஒரு கேஸ் கூட மிச்சம் இருந்திருக்காது ஹி ஹி ஹி

    ReplyDelete
  20. இது உனக்குத் தேவைதான் ....


    முத்தான மூன்று
    ( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )

    என ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..

    நன்றி.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  21. அற்புதம் அன்பரே

    ReplyDelete
  22. தலைப்பைப் பார்த்தவுடன்...என்ன இது எழுத்துப்பிழையோ என்று நினைத்து...ஸீரியஸாகவே வாசிக்கத்தொடங்கினேன்.
    வாசித்தவுடன்தான் எல்லாம் புரிந்தது.

    ReplyDelete
  23. நண்பரே இது மொக்கைக்கே மொக்க மாதி இருக்கு..

    ReplyDelete
  24. படவா பிச்சுப்போடுவன் பிச்சு!!!

    ReplyDelete
  25. புனல் விசாரனை அருமை - நன்கு விசாரனை செய்த சௌந்தருக்கு வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  26. ஐயோ ராமா, என்னை ஏன் இப்படி மொக்க பதிவு போடுறவன்களோட கூட்டு சேர வைக்கிற?

    ReplyDelete
  27. கொஞ்ச நாளா மொக்கை இல்லாம இருந்துச்சு. இப்போ ஸ்டார்ட்...

    ReplyDelete
  28. நாங்கூட
    தண்ணியடிக்கிற விசாரணைன்னு நினைச்சுட்டேன்....(புனல் - தண்ணீர்)
    hi hi hi....

    ReplyDelete
  29. நண்பர் தலைப்பை தப்பா எழுதிட்டார்னு அத சொல்ல வந்தா ....


    ஐயோ ஐயோ முடியல .

    ReplyDelete
  30. புனல் பற்றிய புலன்விசாரணை
    அருமை

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...