கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 July, 2011

இரவில் மட்டும் அந்த ஞாபகம் வந்து விடுகிறது....


காலையில்
சுற்றம் நட்பிடம் உறவாடும் போது
நினைவுக்கு வருவதில்லை...

மாலையில் 
நண்பர்களோடு கலந்துப்போகும் போது
மறந்துத்தான்  போகிறேன்...
கலெல்லாம்
போகும் வரும் இடங்களில்
எங்கேயோ சென்று பதுங்கி விடுகிறது....

னக்கான தேடலில்
கனவுகளோடும் காட்சிகளோடும்
இருவிழிகள் சண்டையிடும் போதும்
அது நினைப்பு வருவதில்லை...

னால்
கவிதை எழுத அமரும் போதும
இரவு நேரங்களில் மட்டும்
நினைவுக்கு வந்துவிடுகிறது...

பாழாய்போன 
இந்த காதல் தோல்வி....

 

44 comments:

  1. கவிதை அருமை!
    அனுபவம் - கொடுமைதான்!
    விடுங்க பாஸ்! மறந்துட்டு அடுத்த தோல்விக்கு(?!) தயார் பண்ண வேண்டியதுதான்! :-)

    ReplyDelete
  2. நல்ல கவிதை.. கடைசி வரி என்னை மிகவும் கவர்ந்துள்ளது...

    கூகிளுக்கு ஏன் இந்த வேலை????

    ReplyDelete
  3. கவிஞ்சா நீர் எப்படி கவிதைல கலக்குரீர்னு புரிஞ்சி போச்சி...நன்றி!

    ReplyDelete
  4. எதுவுமே அனுபவத்திற்கு தான் நண்பரே.

    முயன்றால் எதுவும் முடியும் .
    (நினைக்கவும் முடியும் ,மறக்கவும் முடியும் .)

    ஓய்வு இருந்தால் வாருங்களேன் நம் வலைபதிவிர்க்கு .

    முடியும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்

    ReplyDelete
  5. அப்பிடி ஞாபகம் வரவில்லை என்றால்
    அது உண்மையான காதல் இல்லையே நண்பரே .

    ReplyDelete
  6. கவிதை என்று வந்துவிட்டால் காதல் இல்லாமலா !!

    ReplyDelete
  7. மாப்ள ஏதோ பள்ளத்துல விழுந்துட்டாரு

    ReplyDelete
  8. சரி விடப்பா. அடுத்த ஃபிகர் இருக்கு

    ReplyDelete
  9. நியாபகம் வருதே வா?...ஆனாலும் கவிதை சூப்பர்

    ReplyDelete
  10. தோழரே..

    வருத்தப்படாதீர்கள்..
    உண்மையில் தோல்வியடைந்த காதலில் தான் காதல் உயிரோடு இருக்கிறது.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  11. நண்பரே!
    காதல் தோல்வியில்
    பிறக்கும் கவிதைகளில் தான்
    சுவை அதிகம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ஒண்ணுக்கு அப்பறம் அடுத்த முறை முயற்சி செய்யாதவங்களுக்கு மட்டும் தான் இப்பிடி...

    அட்லீஸ்ட் சீக்கிரம் கல்யாணமாவது பண்ணிடனும் இல்லாட்டி இப்படிதான்

    ReplyDelete
  13. காதல் தோல்வி கசந்தாலும்
    கவிதை இனிப்பாக அமைந்துள்ளது.

    தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்று தெரிகிறது.

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. காதலில் ஜெயித்தவர்களுக்கு சில நாட்களில் காதல் மறந்துவிடுகிறது ...தோற்றவர்களிடம் காலம் முழுவதும் காதல் வாழ்கிறது ....நீங்க குடுத்து வச்சவுங்க அண்ணே....

    ReplyDelete
  16. நமக்கெல்லாம் திரிஷா இல்லைனா திவ்யா. காமெடியா இருந்தாலும் இந்த பாலிசிதான் உலகின் நிதர்சனம்.

    ReplyDelete
  17. ஹ்ம்ம்.. அருமை நண்பா :D

    ReplyDelete
  18. கவிதை எழுதுறதுக்குன்னே ஒருவாட்டி எல்லாரும் காதலிச்சி தோல்வியடையனும், அதையும் உணரனும்........ நல்ல கவிதை..!

    ReplyDelete
  19. படங்களும் ஏற்ற வரிகளும் அருமை.

    ReplyDelete
  20. அப்ப நீங்க எழுதற கவிதை எல்லாமே மிட் நைட்ல எழுதுனதா?

    ReplyDelete
  21. ஆரம்ப வரிகள் காரணமாய் இருக்கலாமோ காதல் தோல்விக்கு? நான் சரியா கேட்கிறேனா?

    ReplyDelete
  22. கறை நல்லது என ஒரு சோப்பு விளம்பரம் வரும்
    அதைபோல காதல் தோல்வி நல்லது எனத்தான்
    சொல்லத் தோன்றுகிறது
    இல்லையெனில் இத்தனை காவியங்களும் காப்பியங்களும்
    கவிதைகளும் கிடைக்காமல் அல்லவா போயிருக்கும்
    தங்கள் கவிதை உட்பட
    என்வே வாழ்க காதல் தோல்வி என
    வாழ்த்தத்தான் தோன்றுகிறது
    சூப்பர் கவிதை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. தனிமையில் இருக்கும்போதுதான் சோகங்கள் மீண்டும் மீண்டும் எழும்!

    ReplyDelete
  24. என்ன பாஸ் கடைசியில் இவ்வாறு முடித்துவிட்டீர்கள்!!

    ReplyDelete
  25. காதலில் தோல்வியும் ஒரு இன்பம்தான் மறக்காமல் இருக்க முடிகின்றதே !
    அடுத்த காதலைத் தேடுங்கள் பாஸ்!

    ReplyDelete
  26. காதல் தோல்வி மறக்க இயலவில்லையா - இயற்கை தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  27. கண்ணாடி என்ற நினைவு முன் நிதானமாக பார்க்கும் போது தான்
    வாழ்வில் ஏற்படும் நீங்கா தழும்புகள்.. மனதை கீறும்.....

    ReplyDelete
  28. ம்....உண்மைதான் !

    ReplyDelete
  29. சகா உன்மைய இப்படி போட்டு உடைத்துடிங்களே. . .காதலில் தோற்றவர்களே சாகும் வரை காதலை நினைவில் வைத்திருக்கிறார்கள். . .வென்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள். காதலை கொண்டாடுங்கள். . .வெற்றியை பிரகடனப்படுத்துங்கள். . .அப்பொழுதுதான் உலகத்திற்கு காதலின் மேல் நம்பிக்கை பிறக்கும். . .

    ReplyDelete
  30. நண்பர் பிரணவன் சொன்னதுபோல் வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுங்கள்..
    கண்டிப்பாக பூமியில் காதலின் மரியாதை கூடும்....

    ReplyDelete
  31. ஆழ்ந்த அனுதாபங்கள் . அண்ணே

    ReplyDelete
  32. சரி விடுங்கள் நீங்கள் கவிதை எழுத காரணமான அந்த காதல் தோல்விக்கு நன்றி சொல்லுங்கள் . ஒன்றின் இழப்பு இன்னொன்றின் உருவாக்கம் .

    ReplyDelete
  33. உணர்வுக் காதல் கவிதை

    ReplyDelete
  34. அருமை .............

    உண்மையான காதல் என்றுமே தோற்பதில்லை

    ReplyDelete
  35. நண்பரே தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.

    http://balapakkangal.blogspot.com/2011/07/blog-post_21.html

    ReplyDelete
  36. அனுபவப் பதிவா!.. சீச்சி இருக்காது.
    அனுபவிச்சு எழுதி இருக்காரு.அருமையான
    கவிதை வாழ்த்துக்கள் சகோ...................

    ReplyDelete
  37. கவிதை நல்லாருக்குங்க

    ReplyDelete
  38. தலைப்பில் சஸ்பென்ஸ் வைத்து, காதல் தோல்வியின் வலியினை உணர்த்தும் கவிதையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    மனதில் பல நிகழ்வுகளைப் பற்றிய எண்ணம் இருக்கும் போது மறைந்து விடும்,
    ஆனால் மனம் ஒன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது வலி எனும் உணர்வு தானாகவே வந்து ஒட்டிக் கொள்ளும்.

    ReplyDelete
  39. அரும்மைய்யா...........

    ReplyDelete
  40. கவிதையின் வாசலில் நின்றுகொண்டு காதல் தோல்வி நினைவு வராமல் போகுமா?!!

    நல்ல கவிதை நண்பரே!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...