கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 August, 2011

அழகிரிக்கு ஆப்பு... 20 கோடி நிலமோசடி.. சிஎன்என்-ஐபிஎன் பரபரப்பு புகார்..மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், பிற திமுக தலைவர்களும் பெருமளவில் நில அபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தினர் செய்த நில அபகரிப்புகள் தொடர்பாக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய லாட்டரி அதிபர் சான்டியாகோ மார்ட்டினிடமிருந்து ரூ. 20 கோடி மதிப்புடைய கோவில் நிலத்தை ரூ. 85 லட்சத்துக்கு தனது மனைவி காந்தி அழகிரி பெயரில் வாங்கியுள்ளார் அழகிரி. 2010ம் ஆண்டு இந்த நில விற்பனை நடந்துள்ளது.

மு.க.அழகிரி மத்திய அமைச்சரான பின்னர்தான் இந்த நிலத்தை பெற்றுள்ளனர். முறைகேடாக நடந்த இந்த நில விற்பனை தொடர்பாக அழகிரியின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழகிரி தவிர திமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் அமைச்சர்கள், 3 மூத்த திமுக தலைவர்களும் தமிழகம் முழுவதும் பெருமளவில் நில அபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் வீரபாண்டி ஆறுமுகம் முக்கியமானவர். இவர் தவிர கே.என்.நேரு மற்றும் பரிதி இளம்வழுதி ஆகியோரும் நிலஅபகரிப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வும், மு.க.ஸ்டாலினின் வலது கரமுமான ஜே.அன்பழகனும் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் 24 குடும்பத்தினருக்குச் சொந்தமான அங்கம்மாள் காலனியில் வீரபாண்டி ஆறுமுகத்திடம் நிலத்தை இழந்தவர்களில் ஒருவரான உமா என்பவர் கூறுகையில், எங்களது சொந்த வீட்டை விட்டு அவர்கள் எங்களை விரட்டியடித்தனர். எங்களை தெருவில் அலைய விட்டனர். கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று குமுறினர்.

குணசீலன் என்பவர் கூறுகையில், அமைச்சருக்கு இதில் தொடர்பு இல்லை என்றால் பிறகு ஏன் கலெக்டர், தாசில்தார், ஆர்டிஓ, கமிஷனர் ஆகியோர் நாங்கள் புகார் கொடுத்தபோது உதவ முன்வரவில்லை. எல்லோருமே என் கண்மூடிப் போயிருந்தனர் என்றார்.

நில மோசடி வழக்குகளில் திமுக-வினர் அதிரடியாக அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இன்னும் மிச்சம் இருக்கும் பெரும்தலைகளையும் இச்சட்டம் விட்டுவைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..

16 comments:

 1. ரவுண்டு கட்டிட்டாங்க!

  ReplyDelete
 2. வேணும் இவங்களுக்கு.. இதுவும் வேணும்,, இன்னமும் வேணும்,,

  ReplyDelete
 3. அஞ்சா(?)நெஞ்சன் கதி???

  ReplyDelete
 4. சூடான செய்திகளாகவே தருகிறீர்கள்.. வேகமாக தருவதற்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. இது நல்ல செய்தியா கெட்ட செய்தியா தெர்லயே ஹி ஹி ஹி

  ReplyDelete
 6. ஒண்ணு தெரிஞ்சு போச்சு ஜெயில் எல்லாம் ரிசார்ட் மாதிரி ஆயிடும் போலிருக்கே...

  ReplyDelete
 7. வெயிட் அன்ட் ஸீ.....

  ReplyDelete
 8. சொல்வதற்கு ஒன்றுமில்லை.

  ReplyDelete
 9. இன்னமும் எதிர்பார்கின்றேன். . .

  ReplyDelete
 10. சிஎன்என்-ஐபிஎன் நில் இடம்பிடித்த அஞ்சா நெஞ்சன் வாழ்க வாழ்க என்று நாளை மதுரை பூரா போஸ்டர் ஓட்டலாமா சகோ ...கொஞ்சம் அண்ணன்கிட்ட கேட்டு சொல்லுங்க சகோ

  ReplyDelete
 11. எங்கே போகுமோ தெரியாது
  எப்படி போகுமோ தெரியாது

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. கோடியில் புரளுபவன் தான் அரசியல்வாதி என்ற நிலை ஆகிவிடுமோ

  ReplyDelete
 13. வந்தேன்... சென்றேன்.

  ReplyDelete
 14. // இன்னும் மிச்சம் இருக்கும் பெரும்தலைகளையும் இச்சட்டம் விட்டுவைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..//

  பொறுத்திருந்து பாக்கணுமா? சரி பாப்போம். சண்டே லீவுதான்.

  ReplyDelete
 15. அட சீக்கிரம் புடிச்சு உள்ளே போடுங்கப்பா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...