கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 August, 2011

பாவப்பட்ட பூமியில் சபிக்கப்பட்ட மனிதர்கள்.. என்று மாறும்..?


சோமாலியாவில் பஞ்சமும், பட்டினியும் படு வேகமாகப் பரவி வருவதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவு தலைவர் வெலரி அமோஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலக நாடுகள் சோமாலியா விவகாரத்தில் உடனடியாக பெருமளவில் உதவிகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. இல்லாவிட்டால் சோமாலியாவின் சில பகுதிகளில் நிலவி வரும பஞ்சமும், பட்டினிச் சாவுகளும் நாடு முழுவதும் பரவி விட வாய்ப்புள்ளது.

பல லட்சம் பேரின் உயிர்கள் இன்று அங்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உலக நாடுகளுக்கு உள்ளது. தற்போது 2 பகுதிகளில் மட்டும் பஞ்சமும், பட்டினியும் தலை விரித்தாடுகிறது. இருப்பினும் இது நாடு முழுவதும் பரவும் அபாயமும் உள்ளது.

விரைவிலேயே இந்த பஞ்சம் மேலும் 6 பகுதிகளுக்குப் பரவும் உடனடி அபாயம் உள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே பஞ்சத்திற்கும், பட்டினிக்கும் பலியாகியுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பஞ்சம் பெரிதாகியுள்ளது. கிட்டத்தட்ட 10.25 லட்சம் பேர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோமாலியா மட்டுமல்லாமல் அதன் எல்லைப் புறங்களில் அமைந்துள்ள கென்யா, எத்தியோப்பியா, டிஜிபோதி ஆகியவற்றிலும் பஞ்சம் பரவியுள்ளது.

சோமாலியா நெருக்கடியைத் தீர்க்க ஆப்பிரிக்க யூனியன் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஐ.நா. தயாராக உள்ளது என்றார் அவர்.
கற்பழிப்புக்குள்ளாகும் பெண்கள்

இதற்கிடையே, சோமாலியாவிலிருந்து வெளியேறி கென்யாவின் எல்லைப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள சோமாலியாப் பெண்களுக்கு புதிய பிரச்சினை உருவெடுத்துள்ளது. சோமாலியா ராணுவத்திலிருந்து வெளியேறி ஊடுறுவியர்களும், கென்யாவைச் சேர்ந்த சமூக விரோதிகளும் இந்தப் பெண்களை இரவு நேரங்களில் சரமாரியாக கற்பழித்து வருகின்றனராம்.

முகாம்களில் இரவு நேரங்களில் துப்பாக்கி சகிதம் புகும் இந்த சமூக விரோதிகள், பெண்களை பலவந்தமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துகின்றனர். தங்களது குழந்தைகள் கண் முன்பாகவே பல பெண்கள் கற்பழிக்கப்படும் கொடூரமும் அரங்கேறி வருகிறதாம். முகாம்களைக் கண்காணிக்க இரவு நேரங்களில் யாரும் இருப்பதில்லை என்பதால் அதைப் பயன்படுத்தி இந்த பாலியல் சித்திரவதைகள் நடந்து வருவதாக பெண்கள் குமுறுகிறார்கள்
ஓ.. வல்லரசுகளே... ஓ... உலக நாடுகளே நவநாகரீகத்தை அடைந்துவிட்ட நம் பூவுலகில் பட்டினியால் இன்னும் உயிரை விட்டுக்கொண்டிருப்பது கொடுமையல்லாவா. அதை வேடிக்கைப்பார்த்து ஏதும் செய்யதமல் இருந்து தகவல் மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பது அதை விட கொடுமையானது.

உண்மையான வல்லரசுகள் உலக மக்கள் சோலிய மக்களுக்கு உதவ முன் வரவேண்டும்.  மனதாபிமானத்தை இப்போது காட்டாவிட்டால் பிறகு எப்படி நாம் மனித இனத்தில் இனைத்துக் கொள்ள முடியும்.

27 comments:

  1. நெஞ்சு பொருக்குதில்லையே...

    ReplyDelete
  2. படத்தைப் பார்க்கவும், செய்தியைக் கேட்கவும் மனது பதறுகிறது. மிகவும் கொடுமையாக உள்ளதே!

    ReplyDelete
  3. உலகிற்கே இது ஒரு எச்சரிகை. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப்ப உணவு உற்பத்தி இல்லையென்றால் - பெரும்பாலான நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட்டு விடக்கூடும்.

    ReplyDelete
  4. //பெண்களை இரவு நேரங்களில் சரமாரியாக கற்பழித்து வருகின்றனராம்.

    முகாம்களில் இரவு நேரங்களில் துப்பாக்கி சகிதம் புகும் இந்த சமூக விரோதிகள், பெண்களை பலவந்தமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துகின்றனர். தங்களது குழந்தைகள் கண் முன்பாகவே பல பெண்கள் கற்பழிக்கப்படும் கொடூரமும் அரங்கேறி வருகிறதாம். முகாம்களைக் கண்காணிக்க இரவு நேரங்களில் யாரும் இருப்பதில்லை என்பதால் அதைப் பயன்படுத்தி இந்த பாலியல் சித்திரவதைகள் நடந்து வருவதாக பெண்கள் குமுறுகிறார்கள்

    கொடுமையிலும் கொடுமை

    எங்கு பார்த்தாலும் இந்த கொடுமை தானா...பெண் சுகம் தேடும் இந்த பரதேசி நாய்கள் தன் தாய்,சகோதரியிடம் சென்று முயற்ச்சித்துக் கொள்வார்களா.....ஆண்மையற்ற அரக்கர்கள்

    ReplyDelete
  5. அந்த புகைப்படமே கலங்க வைக்கிறது ((

    ReplyDelete
  6. ENDRU THANIYUM INTHA PANJAM
    IRAIVAA ANAIVARUKKUM NAL VALI KAANBI

    ReplyDelete
  7. VIRAIVIL NAL VALI PIRAKKUM ENA NAMBUVOM

    ReplyDelete
  8. இது தான் வரலாறு

    கேள்வி கேட்க இங்கே யாரும் இல்லை!!??

    சோமாலியா என்றொரு நாடு இருந்தது பஞ்சத்தால் அது அழிந்து விட்டது
    என்றேனும் ஒரு நாள் வரலாற்றில் இப்படி படிக்க நேரலாம்..

    ReplyDelete
  9. உலகுக்கு இது ஒரு எச்சரிக்கை !

    ReplyDelete
  10. புகைப்படம் பார்த்தவுன் பகீர் என்கிறது
    இது மனித இனம்தனே என் இவ்வளவு வேற்றுமை

    ReplyDelete
  11. சபிக்கப்பட்ட மக்களின் நிலை விரைவில் மாறட்டும்

    ReplyDelete
  12. மிகவும் கொடுமை!

    ReplyDelete
  13. அட ச்சீ என்ன கொடுமைடா இது...
    வல்லரசுகள் உதவலாமே வீணே அணு ஆயுதம் அது இதென்று செலவழிப்பதை விடுத்து!!

    ReplyDelete
  14. அல்லது சுவிஸ் பாங்க கள்ள எக்கவுண்ட் பணத்தை எல்லாம் எடுத்து செலவழிக்கலாம்!

    ReplyDelete
  15. படத்தைப் பார்த்தாலே மனதைப் பிசைகிறது.என்று மாறும் இந்நிலை?

    ReplyDelete
  16. படத்தை பார்த்ததுமே மனது கலங்கிவிட்டது

    ReplyDelete
  17. உலக அரங்கம் அமைதி காத்து என்ன பயன்.
    செயல்படுங்கள், கொஞ்சம் மீதி உயிரிருக்கும் போதே
    வாழவையுங்கள்.
    செத்த பின் சிலை வைக்காதீர்கள்.

    ReplyDelete
  18. இதற்கெல்லாம் முடிவு காலமே கிடையாதா

    ReplyDelete
  19. பாவம் இந்த சோமாலிய மக்கள். அவர்களுக்கு சிக்கிரம் உலக நாடுகள் உதவிடவேண்டும்.

    ReplyDelete
  20. Nice.,
    Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

    ReplyDelete
  21. முழுப் பதிவும் ஏற்படுத்தும் தாக்கம், அந்த ஒற்றைப் புகைப்படம் ஏற்படுத்தி விடுகிறது.
    நெஞ்சை உருக்கும் பதிவு.

    ReplyDelete
  22. வணக்கம் சகோ,
    என்ன சொல்ல,

    பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளால், வளம் இல்லையே எனும் நோக்கில் கைவிடப்பட்ட நாடுகள் வரிசையில் சோமாலியவும் ஒன்று.
    காலம் தான் பதில் சொல்ல வேண்டும்,

    மனிதாபிமானம் பற்றிப் பேசும் ஐநா சபையும் உலக வங்கியின் உதவியினைப் பெற்று சோமாலியா மக்களுக்கு உதவி செய்யாத செயல் வியப்பாகத் தான் இருக்கிறது.

    ReplyDelete
  23. கருப்பு ஒரு ஒதுக்கப்பட்ட இனம்...அவர்கள் இறப்பு ஒரு statistics ...ஒரு பின் பக்க செய்தி...

    அவர்களுக்கு உதவி செய்வது கூட ஒரு விளம்பரம் தான் நிறைய பேருக்கு...

    சீனப்பன்னிகளுக்கு சோளம் அனுப்பும் அமெரிக்கா இருண்ட கண்டத்தை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி
    வருகிறது...

    ReplyDelete
  24. மனிதன் மடியவில்லை,மனிதம் மடிகிறது

    ReplyDelete
  25. கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...