கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 August, 2011

அர்த்தம் கெட்டு பேசுவதா..? கலைஞர் இனி பேசாமல் இருப்பதே நல்லது...!


முத்தமிழ் அறிஞர்,  மூத்த அரசியல்வாதி என்று அறியப்பட்டிருக்கும் திமுக தலைவர் டாக்டர்  கலைஞர் அவர்கள், ஆரம்பக்கட்ட அரசியலில் பலமான சாணக்கியராக வலம் வந்து 5 முறை ஆட்சியில் அமர்ந்து அனைத்தையும் பார்த்து விட்டார்.

கலைஞர் பேசினால் தெளிவாக இருக்கும், புள்ளி விவரங்களுடன் இருக்கும், அர்த்தமுள்ளதாக இருக்கும், உள்அர்த்தம் உள்ளதாக இருக்கும் என்று தமிழக மக்களுக்கு அனைவருக்கும் தெரிந்த விஷயம். 

ஆனால் தற்போது சில மாதங்களாக கலைஞர் என்ன பேசுகிறார் என்று அவருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை. ஒரு மூத்த அரசியல்வாதி ஒரு பெரிய கட்சியின் தலைவர், 5 முறை தமிழக முதல்வராக பதவிவகித்தவர். இவ்வளவு இருந்தும் தற்போது யோசித்துபேச தவறிவிடுகிறார்.

நேற்று (07-08-2011) வெளியிட்ட ஒரு அறிக்கையில் “நான் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது” என்று அறிக்கை விட்டிருக்கிறார். பொதுவாக திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லியிருக்கலாம். நான் இருக்கும் வரை, அதற்க்குபின்னரும், அழிவு, என்ற வார்த்தைகள் திமுக அழிவு பாதைக்கு சொல்வது போன்று ஒரு மாயையை இவரே ஏற்படுத்திவிடுகிறார். கட்சியின் அழிவுக்கு காரணம் இவரேதான் என்று கூட தெரியாமல்.

தேர்தல் நேரத்தில் வேலுரில் நடைப்பெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக  ”நான் தமிழகத்தின் முதல்வர்தானா, நான் தமிழகத்தில் தான் இருக்கிறேனா... இங்கு நான்திமுகாதான் ஆட்சி செய்கிறதா” என்று பேசுகிறார். இவர் முதல்வராக இருந்துக்கொண்டு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் எப்படியிருந்தாலும் அதை பாராட்டி சொல்வதை விட்டுவிட்டு அப்படி பேசியது மிகவும் பொருத்தமில்லாதது. 

தற்போதைய அரசு நிலமோசடி குறித்த சட்டம் வெளியிட்டபோது இவராக சொன்று “இது தி.மு.க. வினரை பழிவாங்கவே இச்சட்டம் போடப்பட்டுள்ளது” என்கிறார். “2001 இருந்து இவ்விசாரணை இருக்க வேண்டும் என்றும்” இவரே தாங்கள் தான் குற்றவாளி என்று சொல்வதுபோல் உள்ளது. அவர்கள் குற்றம் செய்திருந்தால் நீங்கள் போய் புகார் கொடுங்கள். தங்கள் மீது குற்றம் இல்லையென்றால் நிறுபித்து விட்டு வெளியில் வாருங்கள்.

இன்னும் திமுக பொதுகுழுவில் என்ன போசுவன்று தெரியாமல் மகன்களின் சண்டையை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது. தன்னுடைய முன்னெச்சிரிக்கை தன்னையில்லாததால் ஆட்சியை இழந்தது, அடுத்த திமுக தலைவர் யார் என்பதை அறிவிப்பதில் தயக்கம் காட்டுவது, குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தைக்கூட தற்போது இவரால் சரிசெய்ய முடியாமல் இருப்பது மிகவும் வே‌தனைக்குறியது.
  • கனிமொழியை ஒரு சர்வதேச தலைவர் போன்று இந்தியா முழுவதும் வலம்வர வைத்தது, 
  • தன்னுடைய கட்சி அமைச்சர்களின் ஊழலை கண்டுக் கொள்ளாதது, 
  • தன்னுடைய பெயரில் முறையில்லாமல் தொலைக்காட்சி ஆரம்பித்தது, 
  • தன்குடும்பத்தினரின் பதிவிக்காக பரிதவிப்பது,
  • தேவையில்லாத திட்டங்களை தீட்டி அதை பிரபலப்படுத்துவது,
  • போன்ற நடவடிக்கைகள் தான் திமுக வை அழிக்க கூடிய வஸ்திரங்கள் அதைவிடுத்து அடுத்த கட்சியை குறைசொல்வது கொஞ்சம் கூட பொருத்தமில்லாது.
ஆகையால் கலைஞர் ஓய்வை அறிவித்துவிட்டு அமைதியாக ஏதும் பேசாமல் இருப்பது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. வயது அவரை செயலிழக்க செய்துவிட்டது. இனி எது பேசினாலும் அது எடுபடுமா என்று கேள்விக்குறியாகவே இருக்கிறது. 

பலவருடங்களாக அரசியலைப்பார்த்துக் கொண்டுருக்கும் ஒரு சாதாரண காமன் மேனாக (the common man) சில நேரங்களில் கலைஞருக்கு சல்யூட அடித்த அவரது தொண்டர்களின் கைகள் தற்ப்போது அவரைப்பார்த்து கைகொட்டி சிரிக்கிறது. இன்னும் குடும்பத்தையே பார்த்துக் கொண்டு தன் தொண்டர்களை இழக்கும் பட்சத்தில் திமுக அழிவை நோக்கிச் செல்வது மறுக்கமுடியாத உண்மையாகும்.

The Common Man
கவிதை வீதி சௌந்தர்.


48 comments:

  1. ”நான் தமிழகத்தின் முதல்வர்தானா, நான் தமிழகத்தில் தான் இருக்கிறேனா.// இப்படி ஒரு முதல்வரே சொன்னது தப்பு தான்..

    ReplyDelete
  2. கலைஞர் ஓய்வை அறிவித்துவிட்டு அமைதியாக ஏதும் பேசாமல் இருப்பது சரியாக இருக்கும்// இதுதான் சரியான அறிவுரை..

    ReplyDelete
  3. மாப்ள கொன்னுட்டீர்யா!....பதிவ சொன்னேன் ஹிஹி!

    ReplyDelete
  4. ///////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said... [Reply to comment]

    முதல் காமன் மென்..

    /////////

    வாங்க சூப்பர் மேன்...

    ReplyDelete
  5. //////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    ”நான் தமிழகத்தின் முதல்வர்தானா, நான் தமிழகத்தில் தான் இருக்கிறேனா.// இப்படி ஒரு முதல்வரே சொன்னது தப்பு தான்..
    ///////


    வயதின் பக்குவம் தற்ப்போது கலைஞரிடம் இல்லை...

    ReplyDelete
  6. //////
    !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    கலைஞர் ஓய்வை அறிவித்துவிட்டு அமைதியாக ஏதும் பேசாமல் இருப்பது சரியாக இருக்கும்// இதுதான் சரியான அறிவுரை..
    /////////

    யாருக்கு வழிவிடுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்...

    ReplyDelete
  7. உப்பை தின்னா தண்ணி குடிச்சித்தானே ஆகணும் .....

    ReplyDelete
  8. ஆத்திரத்தில் அறிவிழந்து பேசுகிறார்.

    ReplyDelete
  9. பேசின வாய் சும்மா இருக்காது:)

    ReplyDelete
  10. அவரு அமைதியா இருந்தா நாம மறந்துடுவோம் அதான் இப்படி சம்பந்தம் இல்லாம் ஏதேதோ பேசிகிட்டு இருக்கார்...

    ReplyDelete
  11. கலைஞருக்கு வயசு போன நபர்களுக்கு ஏற்படும் மூளை மாறாட்ட நோய் வந்து விட்டது என நினைக்கிறேன்.

    தான் இப்போதும் ஐம்பது வயதில் இருப்பது போன்ற உணர்வுடன் இருப்பதால் தான் இன்னமும் பதவி விலகாது இருக்கிறார் சகோ.

    ReplyDelete
  12. பலவருடங்களாக அரசியலைப்பார்த்துக் கொண்டுருக்கும் ஒரு சாதாரண காமன் மேனாக சில நேரங்களில் கலைஞருக்கு சல்யூட அடித்த அவரது தொண்டர்களின் கைகள் தற்ப்போது அவரைப்பார்த்து கைகொட்டி சிரிக்கிறது.


    உண்மைதான் தோழரே.........

    ReplyDelete
  13. அவர் இவ்வளவு நாள் பேசியதற்கு தான் இப்போது அனுபவிக்கிறார்.
    இனிமேலாவது பேசாமல் இருக்கட்டும்...
    பெத்த பிள்ளைகள் பேசாமல் இருக்க விட்டா தானே .......
    அனுபவி ராஜா அனுபவி

    ReplyDelete
  14. புத்திர சோகம் இப்பிடி தான் வேலை செய்யும்... இது தானே வரலாறு.

    ReplyDelete
  15. ஓய்வை அறிவிப்பதை விட கட்சியை கலைத்து விடுவது மிக பொருத்தமான முடிவாக இருக்கும். எனெனில் தி.மு.க தமிழருக்கான கட்சியாக ஒரு காலத்தில் இருந்து (அண்ணா இருந்த போது)இப்பொழுது தமிழரை அழிக்கும் கட்சியாக மாறி விட்டதால்!

    ReplyDelete
  16. தவறு செய்தார்கள் அனுபவிக்கிறார்கள்

    ReplyDelete
  17. //////
    விக்கியுலகம் said... [Reply to comment]

    மாப்ள கொன்னுட்டீர்யா!....பதிவ சொன்னேன் ஹிஹி!

    /////////

    ரைட்டு...

    ReplyDelete
  18. //////
    ரியாஸ் அஹமது said...

    GOOD POST ..
    ////

    வாங்க ரியாஸ்...

    ReplyDelete
  19. ?////////
    koodal bala said...

    உப்பை தின்னா தண்ணி குடிச்சித்தானே ஆகணும் .....
    ///////

    தற்ப்போது அதைத்தான் செய்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்...

    ReplyDelete
  20. ////////
    தமிழ் உதயம் said...

    ஆத்திரத்தில் அறிவிழந்து பேசுகிறார்./
    ////////

    உண்மை..

    ReplyDelete
  21. எல்லா விதத்தாலும் வந்து இடிக்க கலைஞர் என்ன தான் செய்வார். எவ்வளவு தான் அடிவாங்கினாலும் தெம்பா நிக்க அவர் என்ன வடிவேலா , அது தான் இந்த மாறாட்டங்கள் ஹிஹி

    ReplyDelete
  22. //கலைஞர் ஓய்வை அறிவித்துவிட்டு அமைதியாக ஏதும் பேசாமல் இருப்பது சரியாக இருக்கும்//

    இது... இதுதான் சரி.

    ReplyDelete
  23. ////////
    ராஜ நடராஜன் said... [Reply to comment]

    பேசின வாய் சும்மா இருக்காது:)

    //////////


    அதான் பேசி கெட்டுப்போகிறார்...

    ReplyDelete
  24. //////
    Heart Rider said... [Reply to comment]

    அவரு அமைதியா இருந்தா நாம மறந்துடுவோம் அதான் இப்படி சம்பந்தம் இல்லாம் ஏதேதோ பேசிகிட்டு இருக்கார்...

    ////////

    அதுவும் சரிதான்...

    ReplyDelete
  25. ///////
    நிரூபன் said... [Reply to comment]

    கலைஞருக்கு வயசு போன நபர்களுக்கு ஏற்படும் மூளை மாறாட்ட நோய் வந்து விட்டது என நினைக்கிறேன்.

    தான் இப்போதும் ஐம்பது வயதில் இருப்பது போன்ற உணர்வுடன் இருப்பதால் தான் இன்னமும் பதவி விலகாது இருக்கிறார் சகோ.

    ///////////

    இருக்கலாம்...

    ReplyDelete
  26. ///////
    Shiva sky said... [Reply to comment]

    பலவருடங்களாக அரசியலைப்பார்த்துக் கொண்டுருக்கும் ஒரு சாதாரண காமன் மேனாக சில நேரங்களில் கலைஞருக்கு சல்யூட அடித்த அவரது தொண்டர்களின் கைகள் தற்ப்போது அவரைப்பார்த்து கைகொட்டி சிரிக்கிறது.


    உண்மைதான் தோழரே.........

    //////////

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  27. //////
    மகேந்திரன் said...

    அவர் இவ்வளவு நாள் பேசியதற்கு தான் இப்போது அனுபவிக்கிறார்.
    இனிமேலாவது பேசாமல் இருக்கட்டும்...
    பெத்த பிள்ளைகள் பேசாமல் இருக்க விட்டா தானே .......
    அனுபவி ராஜா அனுபவி
    /////////

    வாங்க நண்பரே...

    ReplyDelete
  28. வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வதென்பது இது தானோ???

    ReplyDelete
  29. சாதாரண வேலைக்கு கூட ரிடயர்மென்ட் வயசு என்று வரையறை இருக்கும் போது இந்த அரசியலில் எங்கு பார்த்தாலும் அறுபதை தாண்டியவர்கள் :(

    ReplyDelete
  30. //“நான் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது”

    நான் இருக்கும் வரை தி.மு.க வை யாராலும் காப்பாற்ற முடியாது.

    ReplyDelete
  31. // Unknown said...

    கனிமொழி மற்றும் கருணாநிதி உண்மையில் அவர்களின் அரசியல் ஆற்றல் கணிசமான எதுவும் செய்யவில்லை. பார்வையில் ரஜினி தான் புள்ளி பாருங்கள் வைத்திருக்கவும் . . . . . . . . //
    நண்பர்களே,எச்சரிக்கை. சம்பந்தமில்லாத இத்தகைய லிங்க்குகளை கவனமாக கையாளுங்கள். அந்த லிங்க்கில் சொடுக்காமல் இருப்பதே புத்திசாலித்தனம். தளத்தின் உரிமையாளரே இத்தகைய லிங்க்குகளை அழித்து விடலாம்.

    ReplyDelete
  32. இதைத்தான் முதுமைமழுக்கம் (senility) என்று சொல்வது!

    ReplyDelete
  33. “நான் இருக்கும் வரை திமுகவை யாராலும் அழிக்க முடியாது”//

    ஒரு வேளை இதுக்கு அர்த்தம் ''என்னைத் தவிர யாராலும் திமுகவை அளிக்க முடியாது''அப்படின்னு இருக்குமோ?

    ReplyDelete
  34. விடும்மைய்யா அவரு பாவம்

    ReplyDelete
  35. இவருக்கு முதல்வர் பதவியில் துளியும் விருப்பம் கிடையாது. ஆனால் தான் இரு மகன்களுக்குள்ளே நடக்கும் அதிகார போட்டியில் இவர் பலியாகிறார்.

    ReplyDelete
  36. ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா???

    ReplyDelete
  37. அடுத்த திமுக தலைவர் யார் என்பதை அறிவிப்பதில் தயக்கம் காட்டுவது, குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தைக்கூட தற்போது இவரால் சரிசெய்ய முடியாமல் இருப்பது மிகவும் வே‌தனைக்குறியது.

    .... so true. well-written.

    ReplyDelete
  38. 'Common Man' பதிவு சூப்பர்.

    ReplyDelete
  39. களிங்கர்ஜீ எப்பவும் பதவில இல்லேன்னா இப்படித்தான் ஒளருவாருன்னு தெரியாதா?

    ReplyDelete
  40. வயசாயிட்டு பாஸ் விடுங்க...

    ReplyDelete
  41. அன்பின் சௌந்தர் - கலைஞரைப் பேச்சில் - அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இப்பொழுது இது மாதிரிப் பேசுகிறார் என்றால் - ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இப்பொழுது உள்ளன அல்லவா ........ என்ன செய்வார்....

    ReplyDelete
  42. பாவம் சகா அவரு. . .எல்லாம் அவரு செய்த பாவம். . .

    ReplyDelete
  43. அரசியல் வாதி ஜெயித்தால் சட்ட சபையில் பேசுவான்.

    தோற்றால்...சம்பந்தம் இல்லாமல் பேசுவான்.

    இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவோம் பாஸ்.

    ReplyDelete
  44. அன்பு சௌந்தர் அவர்களுக்கு,

    உங்களது செய்தி நியாயமானதே...இவருக்கே இன்னமும் பதவி நாற்காலி ஆசை விடவில்லை, இவர் எப்படி மற்றவர்களை அமர வைத்து அழகு பார்ப்பார். இவர் எப்படி நாற்காலியில் அமர போட்டி போட்டாரோ அதே பாணியை இன்றும் ஸ்டாலினும், அழகிரியும் செய்கின்றார்கள்.

    நீ எதற்கும் இனி லாயக்கில்லை என்றுதானே சிம்மாசனத்தில் இருந்து இறக்கி விட்டார்கள் தமிழக மக்கள்..அதை அவர் இன்னமும் உணரவில்லை என்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.

    அதுமட்டுமல்ல, இன்னமும் நிறையவே அவரது பிதற்றல் பேச்சுக்கள் இருக்கின்றது...ராசாவை கைது செய்ததை பற்றி கேள்வியாளர்கள் கேட்ட போது அவர் மட்டும் தனியாக இதை செய்ய முடியாது என்று உளறினார். அடுத்தது யார் மீதோ இருக்கும் கோபத்தில் பத்திரிக்கையாளர்களை கடுமையாக தாக்கி பேசினார். கூடா நட்பு என்று காங்கிரசை சொல்லிவிட்டு அடுத்த நாள் பத்திரிக்கைகளை சொன்னதாக சொன்னார். அவரது முதுமை அவரை உளற வைக்கின்றது. வேறு ஒன்றுமில்லை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. குழப்பத்தில் இருக்கிறார்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...