கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 August, 2011

தடம்மாறி போகிறது... நம் தேசத்தின் அறப்போர்...

இந்தியாவில் பிரபலமடைய அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களால்  கண்டறியப்பட்ட தற்போதை புதிய வழிதான் உண்ணாவிரதம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முழு பலத்தை அரங்கேற்றியப்பிறகு, எதிர்த்து கேட்க இனி இந்தியாவில் யாரும் இருக்ககூடாது என்று எண்ணிய காலத்தில்,  புதிய  ஆயுதங்கள் கண்டுப்பிடிப்புகள் காரணமாக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய போர் முறைகள் நம்முடையதை விட படுபயங்கரமானதாக இருந்தது. அதற்க்கெல்லாம் மேலானதாக ஒரு போர்முறை இருக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கண்டுப்பிடிக்கப்பட்ட நவீன ஆயுதம்தான் “அஹிம்சை” என்கிற “அறப்போர்“

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்து தன்னை சுதந்திர போராட்டத்தில் இணைத்துக்கொண்டப்பிறகு தன்னுடைய புதிய அறவழிப்போராட்டமான உண்ணாவிரதத்தை 1917-ல் பீகாரில் சம்ப்ரான் என்ற இடத்தில், ஜரோப்பிய அவுரிச்செடி பண்ணையர்களுக்கெதிராக ஒரு போராட்டத்தை அறிவித்து அங்குதான் “சத்தியாகிரகம்” வழியில் முதன்முதலாக உண்ணாவிரதம் என்ற மிகப்பெரிய போர் முறையை அறங்கேற்றினார்.

நாம் துப்பாக்கி தூக்கியிருந்தால் ‌ஆங்கிலேயன் பீரங்கி தூக்கியிருப்பான், நாம் பீரங்கி பயன்படுத்தியிருந்தால் அவர்கள் அதை விட பயங்கரமான ஆயுதத்தை எடுத்திருப்பார்கள்.  நாம் பயன்படுத்தியதோ அஹிம்சை அஹிம்சைக்கு எதிராக எந்த ஆயுதத்தை பயன்படுத்துவது என்று தெரியாமல் விழிப்பிதுங்கிய ஆங்கிலேயன் நம் நாட்டைவிட்டே ஓடிவிட்டான்.

நல்ல நோக்கத்திற்க்காகவும், கண்டிப்பாக பலன் அளிப்பதாகவும், போர்முறையின் உச்சக்கட்ட ஆயுதமாகவும் இருந்த அஹிம்சைப்போரான உண்ணாவிரதம் இன்று தடம்மாறிப் சென்றுக் கொண்டிருக்கிறது.
நாட்டில் எதற்க்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற நிலைக்கு இன்று நாடு வந்துவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உண்ணாவிரதம் மேற்க்கொண்ட ‌விதம் அந்த பிரச்சனைகளை முடித்து வைப்பதாக இருந்தது. இறுதிக்கட்ட ‌ஆயுதமாக இருந்த இப்போராட்டம் தற்போது முதற்கட்ட ஆயுதமாக உறுமாறிவிட்டது. ‌ எதற்கெடுத்தாலும் உண்ணாவிரதம் என்ற போக்கால் அந்த உண்ணாவிரதம் என்ற வார்த்தை கலையிழந்துப்போயிருக்கிறது.

 20 நாட்கள் 30 நாட்கள் கூட உண்ணா‌நோம்பிருந்து தலைவர்கள் நாட்டின் பிரச்சனைக்காக போராடினார்கள். ஆனால் தற்போது 2 மணிநேரம்  3 மணிநேரம் கூட  இப்போராட்டம் அரங்கேருகிறது. தற்போதைய அரசியல் வாதிகளுக்கு இது தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்க்காக இப்போராட்‌டத்தை தற்போது பயன்படுத்திக் கொண்டுவருகிறார்கள்.

டெல்லியில் சமீப காலத்தில் கருப்பு பணம், லோக்பால் போன்ற பிரச்சனையை மையப்படுத்தி ராம்தேவ், அன்னா ஹசாரே, போன்றோரும், ஆந்திராவில் தெலுங்கான பிரச்சனையை மையப்படுத்தியும், தமி‌ழகத்தில் இலங்கைப்பிரச்சனை, காவிரிப்பிரச்சனைகளை முன்வைத்தும் அதிரடியாய் உண்ணாவிரதம் ஆரம்பித்து தன்னுடைய பிரபலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.
லோக்பால் சரியில்லை என இந்திய பாராளுமன்றத்தையே அவமதிப்பதுபோன்று அன்னா ஹசாரே அவர்கள் நேற்று (17-08-2011) தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை  ஆரம்பித்து கைதும் செய்யப்பட்டார். இது வெற்றிப்பெறுமா அல்லது தோல்வியுறுமா என்று எனக்கு தெரியவில்லை. அவருடைய எண்ணம் சரியானதாகவும், கொண்ட போராட்டத்தில் இருந்து விலகாதவரை இப்போர் நன்மையிலே முடியும்.

உலகமே பார்த்து வியந்த ஒரு அறப்போரை கௌவரப்படுத்தி  காப்பது நாம் ஒவ்வோருவருடைய கடமையாகும். அப்போது தான் உலக அளவில் தன்னை தனித்துவம் கொண்ட நாடாக அடையாளப்படுத்திக் கொண்டுருக்கும், உலகின் சுருக்கமான இந்தியா  தன் கிரீடத்தை கழட்டாமல் இருக்கும்.

35 comments:

  1. அவருடைய எண்ணம் சரியானதாகவும், கொண்ட போராட்டத்தில் இருந்து விலாகாதவரை இப்போர் நன்மையிலே முடியும்.//

    தெளிவான கண்ணோட்டத்தோடு பகிர்ந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. //அவருடைய எண்ணம் சரியானதாகவும், கொண்ட போராட்டத்தில் இருந்து விலகாதவரை இப்போர் நன்மையிலே முடியும்.//

    அவருடைய எண்ணம் எது என்பதுதான் பிரச்சினையே! அது நிச்சயமாக ஊழலை ஒழிப்பது அல்ல என்பது நிதர்சனம்.

    ReplyDelete
  3. சரியாகச் சொன்னீர்கள்
    இன்றுவரை போராட்டத்திலிருந்து விலகாமல் இருக்கவேண்டும்
    என்ற முடிவு தான் தென்படுகிறது...
    பார்ப்போம் எங்கு செல்கிறது என்று.....

    ReplyDelete
  4. சுய முன்னேற்றம் பற்றி சிந்திக்கின்ற இத காலத்தில் ஒரு நியாயமான காரணத்திற்காக ஒரு சாதாரண மனிதர் ஆரம்பித்த அறப்போர் திசைமாறி வீணாகிவிட்டால், இனி இது போன்ற போராட்டங்கள் உருவாகாது.

    ReplyDelete
  5. சார் இவனுங்களுக்கு அறப்போர் எல்லாம் சரி பட்டு வராது எகிப்து பாணி தான் சரி படும்.

    ReplyDelete
  6. அன்னா செய்யும் போராட்டத்திற்கு தேசம் முழுதும் மக்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவை பார்த்தீர்களா? அதுதான் உண்மையான வெற்றி. அவர் பிரபலம் ஆக செய்கிறாரா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. என்ன காரணத்திற்காக போராட்டம் நடக்கிறது என்பதே முக்கியம். அதை அன்னாவோ அல்லது ராம்தேவோ யார் செய்தாலும் ஒன்றுதான்.

    ReplyDelete
  7. மிக சரியான பார்வை ..
    துல்லியமான அலசல்
    பாராடுக்கள் சகோ
    உண்ணாவிரதத்தை கண்ணியபடுத்த ஒரு உண்ணா விரதம் இருக்கணும் போல இருக்கு

    ReplyDelete
  8. உலகின் சுருக்கமான இந்தியா தன் கிரீடத்தை கழட்டாமல் இருக்கும்.//

    கிரீடத்தில் மேலும் வைரக்கற்கள் பதிக்கப்படவேண்டும். கழட்ட முயற்சிக்கக்கூடாது.

    ReplyDelete
  9. நல்லதே நடக்கட்டும்!நன்மையில் முடியட்டும்!

    ReplyDelete
  10. மனதை தொட்டு உண்மையை சொல்லுங்கள் ? லோக்பால் கொண்டு வந்தால் மட்டும் ஊழலை ஒழித்து விட முடிமா ? தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் திருந்தாமல் எதுவுமே நடக்காது !

    ReplyDelete
  11. //உலகமே பார்த்து வியந்த ஒரு அறப்போரை கௌவரப்படுத்தி காப்பது நாம் ஒவ்வோருவருடைய கடமையாகும்.//
    உண்மையான சரியான வார்த்தைகள் .

    ReplyDelete
  12. அகிம்சையை கூட தம் சுயநலத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.. ம்ம் என்ன செய்வது ..(

    ReplyDelete
  13. நல்ல சொன்னிங்க சௌந்தர்.

    ReplyDelete
  14. அவரால் தான் லோக்பால் மசோதா பற்றி
    தெரிந்துக்கொண்டோம்..

    ReplyDelete
  15. நல்ல அலசல்.. உண்ணா விரதங்களை ஆராய்ந்து பதிவெழுத வேண்டும் என்று யோசித்த விததிற்கே உங்களை பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  16. It's not real Just because of kandi India got freedom. Actually the Indian's should thank the Hitler for that. Because of world war 2 the Europe and Britain got hit with economic crisis and maintaining colones had become a burden to them. That's the main Impact for the Widrawal of British coloney on India.

    ReplyDelete
  17. நல்ல பதிவு சௌந்தர் வாழ்த்துக்கள்

    ஆனா என் மனசுக்கு பட்டதை சொல்லுறேன், கொஞ்சம் பெருசு தான் தப்பா எடுத்துக்காதீங்க சௌந்தர்

    உண்ணாவிரதம் தோற்கடிக்க முடியாத ஆயுதம் தான், அதை விளையாட்டு தனமாய் பயன்படுத்தினால் விளைவு விபரீதம்.

    அதுவும் இல்லாம மகாத்மா காந்திய வெள்ளைக்காரன் கவனிச்சான் அதனால அவரால அஹிம்சை என்னும் ஆயுதத்தை வெற்றிகரமா பயன்படுத்த முடிஞ்சது. இன்னைக்கு அதே ஆயுதத்தை ஹஜாரே கையில எடுத்துகிட்டு இருக்காரு ஆனா அவரை அரசு கவனிக்காம விட்டுட்டா என்னாகும்

    உதாரணம் இரோம் ஷர்மிளா குறைத்து 15 ஆண்டுகளாக அரசுக்கு எதிராய் உண்ணாவிரதம் இருக்கிறார்.

    மேலதிக விரங்களுக்கு

    http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila

    அரசு கவனிக்காம விட்டா ஹஜாரே
    சாகுற வரை உண்ணா விரதம் இருப்பாரா சந்தேகமே. இதுவரை எத்தனை வரலாறு இருக்கிறது நம்மிடையே அரசுக்கு எதிராய் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர்கள்..

    சமீபத்தில கூட கங்கையை சுத்தம் பண்ண சொல்லி உண்ணாவிரதம் இருந்து செத்தாரு ஒரு சாமியாரு எத்தை பேருக்கு இது தெரியும், எல்லாம் மீடியா செய்யுற ஜாலம்..

    மேலோட்டமா பார்த்தா அவர் செய்யிறது சரி

    ஆனா நிறைய உள்குத்து இருக்கு..

    அரசாங்கம் எப்போதும் ஒருத்தர் கையில தான் இருக்கணும், பிடியும் இருக்கமா இருந்தா தான் அது தான் நாட்டுக்கு நல்லது. போற வர எல்லோரும் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சா நாடு நாடா இருக்காதுங்கிறது என் தாழ்மையான கருத்து

    தப்பு பண்ணவங்க தண்டிக்கப்படனும் அதுல ஒண்ணும் மாற்று கருத்து இல்லை, ஆனா அது லோக்பால்-ல மட்டும் சாத்தியம்ன்னு சொல்லறது பைத்தியக்காரதனம்

    லோக்பால் கமிட்டி இருக்குற 90% பேர் ரிட்டையர் ஆனவங்க, எத்தன பேரு பென்ஷன் வாங்குறாங்களோ தெரியாது.. அப்பிடின்னா சோத்துக்கு பிரச்சனை இல்லை, மிச்சம் பேருக்கு சொத்து இருக்கு அவங்களுக்கும் சோத்து பிரச்சனை இல்லை.. ஆனா உங்களுக்கும் எனக்கும் இன்னைக்கு வேலை செய்யலேன்னா நாளைக்கு சோறு கிடைக்கிறது நிச்சயம் இல்லை.. இப்பிடி இருக்குற கூட்டம் இந்தியால 95 % மேல

    அதுவும் இல்லாம லோக்பால் பிரச்சனை 1975 -ல இருந்து இருக்கு
    அப்ப எல்லாம் நம்மளை மாதிரி சும்மா இருந்த ஹசாரே இப்ப மட்டும் ஏன் எதிர்க்கிறாரு கொஞ்சம் யோசிக்கணும்

    நாம கூட லோக்பாலுக்கு உண்ணாவிரதம் இருக்கலாம் நம்மோட 70 வது வயசுல அதுவரை நிறைய வேலை இருக்கு.. சரியா?

    ReplyDelete
  18. அவருடைய எண்ணம் சரியானதாகவும், கொண்ட போராட்டத்தில் இருந்து விலகாதவரை இப்போர் நன்மையிலே முடியும்./
    நன்மையிலே முடியட்டும்...

    அருமையான விளக்கங்களுடன் அகிம்சைதொடர்பான பதிவு....
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  19. உண்ணாவிரதம் என்னும் ஆயுதம் யாருடைய கையில் இருக்கிறது என்பதை பொருத்துதான் அதன் மதிப்பு கூடுகிறது... அன்னா ஹசாரேவினால் அதன் மதிப்பு கூடிக்கொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete
  20. நல்ல தெளிவான அலசல்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  21. நல்ல பகிர்வு சௌந்தர்...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. Unmaithaan.

    Ippoluthellam unna viratham yendraaley comedey nigalchi aagi vittathu.

    athuvum neengal sonnathu ppola antha 3 mani nera unna viratham.. mattrum kadaisi 6 maathamaanga karnataka arasiyalil nadakkum unna virathamngal athan peyarai kedukkindaran. India yenra idathil thondriya intha poraatam velinaadugalil athusayamaaga paarkka pattahu.. ippothu kevalamaaga paarkkum soolnilai uravaagivittathu.

    nalla idugai. vaalthukkal

    ReplyDelete
  23. அருமையான ஆக்கம் ஏறவேண்டியவர்கள் காதில் ஏறுமா??

    காட்டான் குழ போட்டான்....

    ReplyDelete
  24. அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள் ஆனா நீங்க என் தளத்துக்கு வராதது மனதில் உள்ளது பெரிய
    ஏக்கம் .சொன்ன வேலையை செய்யவில்லை என கோவமோ!...அடுத்த ஆக்கம் கிட்டத்தட்ட நீங்கள்
    கொடுத்த தொடர்பகுதிதான் .நன்றி சகோ பகிர்வுக்கு.

    ReplyDelete
  25. நல்ல பகிர்வு சௌந்தர்...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  26. சுதந்திரம் பெறும் வரை நாட்டில்
    பொதுநலம் மட்டுமே குறிக்கோளாக
    இருந்தது. அதன் பின்..
    இன்று தன்நலம் ஒன்றே
    குறிக்கோளாக மாறிவிட்டது
    கிணற்று நீரில் நஞ்சு
    கலந்தது என்றால் நீரை முற்றும்
    அகற்றினால் போதும் ஆனால..?
    ஊற்றே நஞ்சானால்
    இன்றுள்ள அரசியல் அதுதான்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. நல்லதே நடக்கும் என நம்புவோம்

    ReplyDelete
  28. சகோ,

    சமீப காலமாக உண்ணாவிரத போராட்டங்கள் அதை கீழ்மை படுத்தியே நடந்துள்ளது தான் தங்களின் இந்த பதிவிற்கு காரணம்.

    இங்கு அன்னாவின் உ.வி. போராட்டாத்தை எதிர்க்கும் நண்பர்கள் அதை வைத்து மட்டுமே பார்க்கக் கூடாது.

    அவர்களின் முதல் கேள்வியான லோக்பால் வந்தால் ஊழல் முழுவதுமாக ஒழிந்துவிடுமா என்றால் அதற்கு பதில் இல்லை என்பது தான். ஆனால், லோக்பால் அதை உயர் மட்ட அளவிலாவது ஓரளவு கட்டுப்படுத்தும் என்பதே உண்மை. மற்றபடி “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பது தான் நடைமுறை உண்மை.

    அடுத்த கேள்வி, 1970-களிலேயே ஆரம்பித்த (சரியாக சொன்னால் 1965-ல் ஆரம்பித்தது) இது இப்பொழுது ஏன் பெரிது படுத்தப் படுகிறது - அதுவும் அன்னாவால்- என்பதே. 1966-ல் லோக்பாலும், லோகாயுக்தாவும் சட்ட வரைவுகளாக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டாலும் (தொடந்து 2007 வரை 10 முறை கொண்டுவரப் பட்டும் நிறைவேறவில்லை) லோகாயுக்த் சில மாநிலங்களில் ஏற்கப் பட்டுள்ளது. அதன் பயனை சமீபத்தில் கர்நாடகத்திலும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகவே இந்த முயற்சி. இதற்கு முன் அன்னா ஏன் இது போன்று போராடவில்லை என்றால், அன்னா, இதற்கு முன் பல போராட்டங்கள் மாநில அளவில் (மகாராஷ்டிரா) செய்துள்ளார். அவரின் மிகப் பெரிய முயற்சியால், அம்மாநிலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டமாக இயற்றப் பட்டது (2000 வருடத்தில்). அதைத் தொடர்ந்து, அந்த மாநில சட்டத்தை முன் வடிவாகக் கொண்டே மத்திய அரசு 2005-ல் மத்தியிலும் கொண்டுவந்தது. அதில், இருந்த ஒரு பெரிய ஓட்டையை அடைக்கவும் அவர் 2006-ல் தொடர்ந்து 10 நாட்கள் (9-19.8.2006) உண்ணாவிரதம் இருந்துள்ளார். அதைத் தொடர்ந்தே அவர் மத்தியிலும் பிரபலமானார். ஆனால் அதற்கு முன் அவர் அவ்வளவு பிரபலமில்லை அதனால் ஊடகங்களை பொருத்த மட்டில் அது ஒரு சாதாரண செய்தியாக இருந்தது.
    எனவே, அவர் இப்போது புதிதாக போராட்டத்தில் இறங்கியுள்ளார் என்பது தவறு.

    மூன்றாவதாக சொல்வது, மக்களாட்சியில் சட்டம் இயற்றுவது அரசின் உரிமை. அதை இவர் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே. சட்டம் இயற்றுவது அரசின் உரிமை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், அரசு மக்களின் விருப்பப்படி தான் இயங்கவேண்டும். தமக்கு எந்த வித சட்டம் தேவை என்பதை தீர்மாணிக்க மக்களுக்கும் உரிமை உள்ளது. ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்களை புடம் போட ஒரு சட்டம் தேவை என்பதி மக்களும் தீர்மாணிக்க உரிமை வேண்டும். அதற்காக மக்களைத் திரட்டியே அவர் போராட்டம் நடத்துகிறார். இதிலும் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

    பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  29. நண்பரே,நன்றாக அடித்து துவைத்து இருக்கின்றீர்கள்.ஆனால் அழுக்குப் போகவில்லை என நான் கருதுகின்றேன்.இன்னும் நன்றாக யாராவது அலச முடியுமா? எழிலன்.

    ReplyDelete
  30. உண்ணாவிரதமும் ஆயுதமே!
    எல்லா ஆயுதமும் இலக்கை அடைவதில்லை.

    அன்னா ஹசாரே சுட்டது நெத்திப்பொட்டில்.

    ReplyDelete
  31. நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  32. நல்லப் பல விஷயங்களை அன்ன ஹசாரே மகாராட்டிராவில் செய்திருந்தாலும் அவரின் அனைத்து செயல்களும் பக்குவமுள்ளவையாக இருப்பது போல் தெரியவில்லை. அரசியற்வாதிகளை குறிவைக்கும் இவர் தொண்டுநிறுவனங்களை இம் மசோதாவில் இணைக்கக் கூடாது என்பதில் வீம்பாக இருப்பது ஏன் என்று தான் தெரியவில்லை!?

    ReplyDelete
  33. இங்கு உண்ணாவிரதத்தை விமர்சித்த பெரியோர்களே நீங்கள் ஒருமுறை தில்லி ராம்லீலா மைதானம் வந்து பாருங்கள்.அப்ப புரியும் அன்னா ஹசாரே யார் என்று. இந்திய தேசிய ஒருமை பாட்டை அங்கு நீங்கள் காணலாம்.நானும் அதில் கலந்து கொண்டேன் என்பதில் பெருமை அடைகிறேன்.அவருடையை வரலாறு படியுங்கள்.பின் புரியும்.முதலில் வீட்டை திருத்து அப்புறம் நாட்டை திருத்தலாம் என்பர் அதை போல அவர் அவரின் ஊரை திருத்தி இப்போ நாட்டை திருத்துகிறார். ஒருநாள் உண்ணாமால் நீங்கள் இருங்கள் பார்க்கலாம்.எட்டு நாள் ஆகிறது தலைவா.உண்மையில் ஜன் லோக்பால் பற்றி படித்து விட்டு எழுத வாருங்கள்.கண்ணுக்கு தெரியாமால் ஆயிரம் அணுக்கள் போராடி சென்றாலும் ஜெயிப்பது ஒரு அணு தானே.அது அன்னா ஹசாரே தானே.
    மற்ற ஈன தலைவர்களோடு அன்னாவை ஒப்பிட்டது கொஞ்சம் கூட பிடிக்க வில்லை நண்பர்களே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...