கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 August, 2011

மங்காத்தாவால் பெருத்த அவமானம்... தல-யின் கலங்க வைக்கும் அறிக்கை...


அஜித் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் தான் மங்காத்தா. ஆனால் இந்த பதிவு அதைப்பற்றியல்ல என்று தெளிவாக முதலில் சொல்லிவிடுகிறேன்.


எங்கள் ஊரில் சில இளைஞர்களும், ஆண்களும் வேலைவெட்டிக்கு செல்லாமல் எப்போதும் அருகே இருக்கும் ஏரிக்கரையோரம் உள்ள முள்காட்டில் அமர்ந்து காலை முதல் மாலை வரை தொ்டர்ந்து மங்காத்தா ஆடிக்கொண்டிருந்தார்கள்.

இது குறித்து பெண்கள் மிகவும் கவலையடைந்து வந்தார்கள். வேலைக்கு செல்லாமல் இப்படி மங்காத்தா ஆடுகிறிர்களே என அவர்களது கணவர்களிடம் கேட்டும் அதற்க்கெல்லாம் அவர்கள் காது கொடுத்து கேட்பதாக இல்லை தொடர்ந்து மங்காத்தா எனும் சீட்டாட்டத்தை தொடர்ந்து ஆடிவந்தார்கள்.

பொறுத்துக்கொள்ள முடியாத எங்க ஊர் பெண்கள் எங்க ஊர் தலையிடம் (எங்க ஊர் தலைவரைத்தான் நாங்க தல-ன்னு கூப்பிடுவோம்) முறையிட்டார்கள்.

இது குறித்து உடனடியாக முடிவுகட்ட நினைத்த தல விரைவாக மங்காத்தா ஆடும் இடத்திற்க்‌கே சென்று அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லி அவர்களிடம் இனி மங்காத்தா ஆடக்கூடாது என கட்டளையிட்டார். மேலும் இப்படி வேலை வெட்டிக்கு போகலால் வாழ்க்கையை வீணடித்து விடுகிறீர்களே என கண்கலங்கி அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தர்.


இனி ஆடமாட்டோம் என அவர்களும் உறுதியளித்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

அம்புட்டுத்தான்..

இப்படி உங்க ஊரிலும் ஏதாவது தல மேட்டர் இருந்தா அப்படியே சொல்லுங்க...

45 comments:

 1. மேலும் இப்படி வேலை வெட்டிக்கு போகலால் வாழ்க்கையை வீணடித்து விடுகிறீர்களே என கண்கலங்கி அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தர்.//?????!!!

  ReplyDelete
 2. எங்க தல பற்றி வம்புக்கு இழுதிங்களோனு வந்தேன்... நீங்க சொன்னது வேற தல பத்தி... தப்புசிங்க.

  ReplyDelete
 3. தலப் பாடா அடிச்சிகிட்டேன் ! இந்த கவிதை வீதி சௌந்தருக்கு இன்ன்மோ ஆயிடுச்சு!

  ReplyDelete
 4. யோவ் உனக்கு மனசாட்சியே இல்லையா

  ReplyDelete
 5. தலைப்பை பார்த்து தலை அஜித்தைதான் கலாய்க்கப்போறீங்கனு பார்த்தா.பதிவில் முதல்லே சொல்லிட்டீங்க.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 6. சசிகுமார்
  யோவ் உனக்கு மனசாட்சியே இல்லையா

  சரி இந்த ஆழமட்டும் விட்டுங்க சகோ ....
  இதில இருந்து புதுசா உங்கழுக்கு ஒரு
  தொழில் கிட்டினாதாத் தெரியுது .
  வாழ்த்துக்குள்.எங்க எங்கடபக்கம்
  வருவதில்லை?......எதாச்சும் கோவமா?....

  ReplyDelete
 7. ரைட்டு,,

  லந்து ஆரம்பிச்சாச்சா?

  ReplyDelete
 8. ரைட்டு தமிழ் டென் க் காணோம்?

  ReplyDelete
 9. //மங்காத்தாவால் பெருத்த அவமானம்.//
  ஒப்பு கொள்கிறேன். (நானும் படத்தை சொல்லவில்லை)

  ReplyDelete
 10. ஐயோ சாமி நீங்க அந்த தலைய சொன்னிங்களா

  ReplyDelete
 11. ஆனா உங்க தல இதுக்கு கண்ணீர் எல்லாமா வீட்டாரு ? இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையேனா :))

  ReplyDelete
 12. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்

  ReplyDelete
 13. எதிர்பார்ப்போடு வந்தேன்..ஏமாத்திட்டிங்களே பாஸ்..

  ReplyDelete
 14. தல news காக வெயிட் பண்றேன்

  ReplyDelete
 15. எவனோ மைனஸ் ஒட்டு போட்டிருக்கான் தல!!!
  சத்தியமா நான் இல்லே!!நான் பதினோராவது நல்ல ஒட்டு!!

  ReplyDelete
 16. சும்மா சொல்லக் கூடாது கதை நல்லா இருந்துச்சு....
  தலைப்பை பார்த்து ஏமாந்து போனாலும்
  பதிவு நல்லா இருந்துச்சு.

  ReplyDelete
 17. சௌந்தரு - இப்படியும் கத எழுதலாமா - பரவா இல்லையே - பொழைக்கற வழி நல்லாவே இருக்கு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 18. அஜித் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் தான் மங்காத்தா. ஆனால் இந்த பதிவு அதைப்பற்றியல்ல என்று தெளிவாக முதலில் சொல்லிவிடுகிறேன்.//

  ஆகா...வாசலிலேயே BE Aware என்று போட்டு வைச்சிருக்கிறீங்களே....

  ReplyDelete
 19. அடடா...ஊர் மக்களை நல்வழிப்படுத்திய தலையை வைத்து, சிலேடைப் பதிவு போட்டிருக்கிறீங்க.
  இதே போல் எல்லா ஊர்களிலும் மக்கள் விழிப்படைந்தால், வேலைக்குச் செல்லாதிருக்கும் சோம்பேறிகளிற்கு ஓர் முடிவு கட்டலாம் அல்லவா.

  ReplyDelete
 20. என் வலையில் இன்று,
  பாட்டு ரசிகனுக்கு விருது.
  நேரம் இருந்தால் உங்கள் வருகையினையும் எதிர்பார்க்கிறேன்.

  http://www.thamilnattu.com/2011/08/blog-post_19.html

  ReplyDelete
 21. சௌந்தர் நண்பரே
  என்னால முடியல

  ReplyDelete
 22. தமிழ் மணம் 14

  ReplyDelete
 23. ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே...

  ReplyDelete
 24. ரொம்ப ஓவர்ங்க ... நான் என்னமோ எதிர் பார்த்தேன்

  ReplyDelete
 25. உங்களை ...............................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 26. என்னமா யோசிக்கராங்கய்யா ..ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுற மாதிரி..

  ReplyDelete
 27. நம்மளை விட மோசமான ஆளா இருப்பிங்க போலருக்கே..

  உங்களை மாதிரியே நானும் போட்டு பாக்க முடிவோடத்தான் இருக்கேன்.

  pagadu.blogspot.com

  ReplyDelete
 28. இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்

  ReplyDelete
 29. தலைப்பு அதிர வைக்குது!

  ரைட்டு!
  உண்மையிலேயே இவரு தான் உண்மையான தல!

  ReplyDelete
 30. எலேய் யாருலேய் அங்கே, பயபுள்ளைக்கு என்னமோ தலையில பலமா அடிபட்டுருக்கும் போல, உடனே ஆம்புலன்சை கூப்பிடு கீழ்ப்பாக்கம் கொண்டு போயிருவோம்....

  ReplyDelete
 31. என்னாசுய்யா எல்லாமே நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சி....

  ReplyDelete
 32. பிச்சிபுடுவேன் பிச்சி ம்ஹும்.....

  ReplyDelete
 33. அடபாவி மக்கா இதுக்கு எவம்லேய் மைனஸ் ஓட்டு போட்டது...?? நாசமாபோக.....!!!

  ReplyDelete
 34. அண்ணாச்சி உங்கள சிரிக்க வைக்க என் நகைச்சுவை காத்துக்கிடக்கின்றது .
  வந்து சிரித்துவிட்டு போட வேண்டிய ஓட்டையும் கருத்தையும் போடுங்க....
  இது ஓர் அன்புக் கட்டளைதான் ...

  ReplyDelete
 35. எதுக்காக இந்த மாதிரி எல்லாம் தலைப்பு வைக்கறீங்க. படிச்சோன கடுப்புத்தான் வருது.

  ReplyDelete
 36. ஒரு முடிவோடைதான் புறப்பட்டிருக்கிறீர்கள் போல.

  ReplyDelete
 37. நல்ல வேளை!
  எங்கே தலைவரும்
  மங்காத்தா ஆட உக்காந்து வடுவாரோ அப்பிடின்னு பார்த்தேன்
  பாவம்!பிழைக்கத் தெரியாத
  நல்ல தலைவரு.

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 38. எப்படியெல்லாம் பதிவு போடறாங்கய்யா.. நல்லா யோசிக்கறீங்க நண்பரே :)

  பதிவு ரசிக்கும்படியாய் இருந்தது!

  ReplyDelete
 39. ரைட்டு இப்படியும் ஒரு வழி இருக்கோ ..

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...