கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 August, 2011

மரண தண்டனையைத்தான் முதலில் தூக்கில் போட வேண்டும்

காந்திய வழியில் நடப்பதாக கூறப்படும் நமது நாட்டில் மரண தண்டனையைத்தான் முதலில் தூக்கில் போட வேண்டும். மூன்று தமிழர்களின் உயிர்களைக் காக்க மீடியாக்கள் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்று நக்கீரன் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு நிறைவேற்றவிருக்கும் தூக்கு‌த் தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உய‌ர்‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌‌றிஞ‌ர்கள் கயல் என்கிற அங்கையற்கன்னி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா ஆகியோர் சென்னை கோயம்பேடு பேரு‌ந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அவர்களை பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர்.

அதில் பங்கேற்ற நக்கீரன் ஆசிரியர் கோபால் பேசுகையில்,

பொதுவாக நமக்கெல்லாம் இல்லாத தைரியம் இந்த மூன்று பேருக்கும் இருக்கிறது. இதை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். யாராவது ஒரு கல்லெறியனுமே; அந்த கல்லு இந்த மூன்று பேரின் உருவமாக வந்திருக்கிறது. 4வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இது பெரிய விஷயம். ஒரு விடியலை நோக்கி இந்த மூவரும் உண்ணாவிரதம் இருப்பதை தமிழகமே இன்று கவனிக்கிறது. .மரண தண்டனையை தூக்கில் போட வேண்டும். இன்றைக்கு ஜனநாயம் பேசுகிறோம். காந்தியம் பேசுகிறோம். காந்திய முறையில்தான் நாம் சுதந்திரத்தை வாங்கியிருக்கோம் என்று படிக்கிறோம்; சொல்கிறார்கள். காந்திய வழியில்தான் நம் நாடு நடக்கிறது என்கிறார்கள். ஆனால், அரசாங்கம் இன்று மூன்று பேரை காட்டுமிராண்டித்தனமாக தூக்கில் போட்டுத்தான் ஆவேன் என்று தேதியை குறித்திருக்கிறது. நாம் காட்டுமிராண்டிகள்தான் என்று சொல்லாமல் சொல்கின்ற ஒரு நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கின்றோம்.

அன்னா ஹசாரே என்கிற காந்தியவாதி உண்ணாவிரதம் இருக்கிறார். பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை விவாதிக்கிறார்கள். இந்த அளவிற்கு பாராளுமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்ததற்கு காரணம், மீடியாதான்.

மீடியாவின் முயற்சியால்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. இதனால்தான் மத்திய அரசே பயந்து பாராளுமன்றத்தில் லோக்பால் நிறைவேற்றியிருக்கிறது.

இதே போல், இந்த மூன்று சகோதரிகளின் உண்ணாவிரதத்தை மீடியாக்கள் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். பிரிவினை பார்க்காமல் மீடியாக்கள் இந்த விஷயத்தில் ஒன்றுபடவேண்டும்.

கால அவகாசம் குறைவாக இருப்பதால் இந்த நிமிடத்தில் இருந்து உறுதிமொழி எடுத்து மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் மீடியாக்கள். ஏன் என்றால் விட்டுவிட்டால் பிடிக்க முடியாது.

செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி இந்த விவகாரம் ஆகிவிடக்கூடாது. அதனால் அன்னா ஹசாரே மாதிரியான பொதுவான ஒரு நபரை வைத்து போராடவும் வேண்டும்.

தூக்குதண்டனையை தடுப்பதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இன்னும் பத்து நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனிதநேயமிக்க அனைவரையும் ஒன்றினைத்து பெரும் போராட்டமாக ஆரம்பித்து மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட எழுச்சியால்தான் தூக்குத்தண்டனையை நிறுத்த முடியும்.

மூன்று உயிர்களுக்காக நேற்று ஒரு உயிர் தீக்குளித்து இறந்தது. இப்போது மூன்று உயிர்கள் போராடிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அனைத்து பத்திரிகை முதலாளிகளையும் சந்தித்து இந்த போராட்டத்தை மக்களிடையே பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று கெஞ்சிக்கேட்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

நான்காவது நாளாக இந்த பெண்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். இந்த உண்ணாநோன்பு, வெற்றி பெற்ற உண்ணா நோன்பாக முடியும் என்று நம்புகிறேன் என்றார் நக்கீரன் கோபால்.

31 comments:

  1. நல்லது நடக்கணும்!அதுதான் நம்ம எல்லோருடைய எதிர்பார்ப்பு!

    ReplyDelete
  2. நல்லதே நடக்கட்டும்

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றிங்க மாப்ள!

    ReplyDelete
  4. மக்கள் சக்திக்கு முன்னால் அரசாங்கம் வெறும் மண்ணுதான் நக்கீரன் கோபால் சொல்லுவது போல எல்லா தரப்பினரும் போர் கால அடிப்படையில் செயல்படனும் நண்பர்களே அயல் நாட்டில் வாழ்வோர் அட்லீஸ்ட் ஒரு கண்டன குரலாவது ஜனாதிபதிக்கு அனுப்புங்கள்.

    கெஞ்ச வேண்டாம் ஏன் என்றால் மக்கள் ஒன்று கூடி விட்டார்கள் இனி மக்கள் கையிலும் பத்திரிகை கையிலுதான் தீர்ப்பு இருக்கின்றது அரசாங்கம் தீர்ப்பை எழுதி விட்டது அந்த தீர்ப்பை அழிக்கும் சக்தி மக்கள் சக்திக்கு மட்டுமே இருக்கு.

    தேர்தல் என்று ஒரு நாள் வரும் அப்போது காட்டுங்கள் உங்கள் வெறியை இந்த அரக்கர்களிடம் வெளி நாட்டு வாழ் நண்பர்கள் இன்றே அனுப்புங்கள் கண்டன கடிதத்தை ஜனாதிபதிக்கு

    பொம்மையாக செயல் படும் ஜனாதிபதி ஒன்னும் அரசாங்கத்தால் நிர்னயித்தவர் அல்ல மக்கள்களால் நிர்னயித்தவர் என்பதை நினைவில் கொள்ளனும்

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  6. தலைப்பு நிஜமாக நடக்கணும்..

    ReplyDelete
  7. தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி
    தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா

    தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முருகன்,சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி,தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    இது குறித்த பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

    NAKKERAN

    ReplyDelete
  8. /////////
    அந்நியன் 2 said... [Reply to comment]

    தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி
    தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா

    தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முருகன்,சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி,தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

    இது குறித்த பரிந்துரையை கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

    NAKKERAN

    ///////////


    நல்ல செய்திதான் நிறைவேறினால் மகிழ்ச்சிதான்...

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. இந்த மூவறுக்கும் கடவுளிடம் பிராத்திப்போம்

    ReplyDelete
  11. ஏது எப்படியோ
    நல்லது நடக்க வேண்டும்

    ReplyDelete
  12. தூக்குத்தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    மேல்முறையீட்டு மனு மீதான விவாதத்தில் சென்னை ஐகோர்ட் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.


    nakkeeran

    ReplyDelete
  13. இம்மனு மீது இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உட்பட பல வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து மூவரின் தூக்கை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


    தூக்கில் போட தடை விதிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கொண்டாடினர்.

    மேலும், தூக்குக்கு எதிராக தமிழகமெங்கும் போராடியோர் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    nakkeeran

    ReplyDelete
  14. சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதா என்று கவிஞர் பாடியது போல் இருக்கிறது!

    ReplyDelete
  15. மூன்று உயிர்களின் உன்னதம் உண்மையான மனிதர்களுக்கு புரிந்திருக்கின்றது. காந்தி என்று பெயருக்கு பின்னால் வைத்து கொண்டு அட்டூழியங்கள் செய்வதும், கொலை செய்ய தொடங்குவதும், கொள்ளை அடிப்பதும் வழக்கமாகி விட்டது.

    யாரோ 3 பேரை தூக்கில் போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன? என்று சகோதரி செங்கொடி சும்மா இருக்க வில்லை. சாவு என்றால் எப்படி இருக்கும் என்று கேட்டு கொண்டிருக்கவில்லை...இப்படித்தான் இருக்கும் என்று நிருபித்து விட்டால் எனது சகோதரி.

    உண்மையில் இத்தாலிய பெண்ணிற்கு ஈவு இரக்கம் இனியும் இருக்குமேயானால் தூக்கு தண்டனையை உடனடியாக ரத்து செய்யலாம். சட்டத்தின் படிதான் நடக்கின்றோம், நீதியின் படிதான் நடக்கின்றோம் என்று இனியும் பொய் சொல்லவேண்டாம், உங்களது நீதி, சட்ட உணர்வின் லட்சணங்களை அன்னா ஹசாறேவின் போராட்டத்தினால் நாங்களும் புரிந்து கொண்டு விட்டோம். இனி ஒரு செங்கொடி இறக்க வேண்டாம் என்று நாங்கள் அழுதுகொண்டிருக்கின்றோம்..

    ReplyDelete
  16. பலரின் போரட்டம் இன்று வென்றுள்ளது சிறந்த பகிர்வு நண்பரே

    ReplyDelete
  17. நீதிமன்றத்தின் உத்தரவு தற்காலிக வெற்றியை கொடுத்திருக்கிறது. இனி எல்லாம் நன்மையாய் நடக்கட்டும்

    ReplyDelete
  18. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

    ReplyDelete
  19. குற்றத்துக்கு மரண தண்டனை என்பது தீர்வாகாது. ஆனால் ஒரு மரணத்தை தடுக்க இன்னொரு தற்கொலை என்பதும் தவறான முன்னுதாரணம்தானே?

    ReplyDelete
  20. நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு எதுவோ அதுவே எமது ஆவலும் .எந்தலத்திலும் உங்கள் கருத்தை சேருங்கள் சகோ .....நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  21. மரண தண்டனையைத்தான் முதலில் தூக்கில் போட வேண்டும்

    உண்மைதான்.

    ReplyDelete
  22. சார்! பதிவோட தலைப்பே, நெஞ்சில ஆணியடிச்ச மாதிரி எறங்கியிருக்கு! இனிமே இந்த உலகத்துல தூக்குத்தண்டனையே இருக்கக் கூடாது!

    ReplyDelete
  23. அந்நியன்2 இன் அனைத்து காத்திரமான கருத்துகளுக்கும் சல்யூட்.

    ReplyDelete
  24. மரண தண்டனையினை இல்லாதொழிக்க வேண்டும் எனும் கருத்துக்களுக்கு என்னுடைய சல்யூட்டினையும் வழ்ங்குகிறேன்.

    ReplyDelete
  25. அன்பின் சௌந்தர் - நக்கீரன் கோபாலின் பேச்சினைப் பகிர்ந்தது சரி - தங்கள் கருத்து என்ன - உயர் நீதி மன்றம் எட்டு வாரம் தள்ளி வைத்திருக்கிற்து. தமிழக சட்ட சபை தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி இருக்கிறது. அமைச்சரவை கூடி முடிவு எடுக்க வேண்டாமா ? ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  26. சார் உங்க கூகுள் பிளஸ் பட்டனை அமுக்குனா not found ன்னு வருது .......

    ReplyDelete
  27. வலை வந்து கருத்துரை வழங்
    கினிர் நன்றி
    கடுமையான முதுகுவலி
    காரணமாக அமர்ந்து கருத்துரை
    வழங்க இயலவில்லை மன்னிக்க!

    பின்னர் எழுதுகிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. உங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...