கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 September, 2011

புரிதலின் இடைவெளியில் சில தருணங்கள்.....


டுகளை மேய்த்தே
அறிவு வளர்த்தோன் நம் முன்னோர்...

வாழ்க்கையை நகர்த்த மட்டுமல்ல
வாழ்க்கையைக்கூட கற்றுக் கொடுக்கும்
ஆடு மேய்த்தல்....

டுகளை பின்தொடர்வோர் கற்றுக் கொள்வார்
வாழ்க்கைக்கான பள்ள மேடுகள்...

ன் வாழ்க்கையில் முதல் ஆசிரியர்
இந்த ஆடுகள்தான்...‌


டுகளை தவிர்த்து அளவிடமுடியாது
மனிதனது வரலாற்றை

ஒருவருக்கு அது உணவுப்பொருள்...
அடுத்தவருக்கு அது உயிர்பொருள்...

நேற்று எங்க வீட்டு ‌சொக்கலிங்க தாத்தா 
ஆடு ஓட்டி செல்லவில்லை

ற்போழுது
அவர் கால்களில் முள் தைத்திருந்தது
ஆடுகளுக்கு தெரியாது...

மேய்ச்சலுக்கு போகாமல்

பசியோடு இருக்கும் ஆடுகளின் கோவம்
அவரும் அறிந்திருக்கவில்லை...

புரிதலின் இடைவெளியில்
ஐந்தறிவும்... ஆறறிவும்...


வேலாயுதம் தங்கள் வருகைக்கும்,
வேலாயுதம்
வேலாயுதம் கருத்துக்கும் மிக்க நன்றி... வேலாயுதம்

28 comments:

 1. கவிதைகள் விஷயத்தில் எனக்கு ஐந்தறிவு தான்

  ReplyDelete
 2. இனிய காலை வணக்கம் பாஸ்,

  புரிதலின் அடிப்படையில் ஐந்தறிவிற்கும், ஆறறிவிற்கும் இடையிலான வேறுபாடுகளை நல்லதோர் கவிதை மூலமாகத் தந்திருக்கிறீங்க.

  ReplyDelete
 3. ஆடுகளை தவிர்த்து அளவிடமுடியாது
  மனிதனது வரலாற்றை
  ஒருவருக்கு அது உணவுப்பொருள்...
  அடுத்தவருக்கு அது உயிர்பொருள்...//////

  ஆஹா அருமையான கவிதை!

  ReplyDelete
 4. ஆடுகளை வைத்தே ஒரு இனிய கவிதை.......

  ReplyDelete
 5. ///ஆடுகளை பின்தொடர்வோர் கற்றுக் கொள்வார்
  வாழ்க்கைக்கான பள்ள மேடுகள்...//////

  சூப்பர் லைன்ஸ்.........

  ReplyDelete
 6. ///தற்போழுது
  அவர் கால்களில் முள் தைத்திருந்தது
  ஆடுகளுக்கு தெரியாது...

  மேய்ச்சலுக்கு போகாமல்
  பசியோடு இருக்கும் ஆடுகளின் கோவம்
  அவரும் அறிந்திருக்கவில்லை...

  புரிதலின் இடைவெளியில்
  ஐந்தறிவும்... ஆறறிவும்////

  சூப்பர் வரிகள் பாஸ்...

  ReplyDelete
 7. புரிதலின் விசயத்தில் ஐந்தறிவும் ஆறறிவும்...
  அருமை...
  கவிதை பாடம் சொல்கிறது.

  ReplyDelete
 8. அழகிய கவிதை வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ...

  ReplyDelete
 9. //நேற்று எங்க வீட்டு ‌சொக்கலிங்க தாத்தா
  ஆடு ஓட்டி செல்லவில்லை

  தற்போழுது
  அவர் கால்களில் முள் தைத்திருந்தது
  ஆடுகளுக்கு தெரியாது...

  மேய்ச்சலுக்கு போகாமல்
  பசியோடு இருக்கும் ஆடுகளின் கோவம்
  அவரும் அறிந்திருக்கவில்லை...

  புரிதலின் இடைவெளியில்
  ஐந்தறிவும்... ஆறறிவும்..//

  அருமை அருமை கவிஞரே

  ReplyDelete
 10. புரிதலின் இடைவெளியில்
  ஐந்தறிவும்... ஆறறிவும்...//


  செமையான கவிதை வரிகள்....!!!

  ReplyDelete
 11. கவிதையும் தலைப்பும் மிக அழகு...

  ReplyDelete
 12. //மேய்ச்சலுக்கு போகாமல்
  பசியோடு இருக்கும் ஆடுகளின் கோவம்
  அவரும் அறிந்திருக்கவில்லை...
  புரிதலின் இடைவெளியில்
  ஐந்தறிவும்... ஆறறிவும்...//

  சூப்பர்

  சூப்பர்

  சூப்பர் வரிகள் நண்பரே..

  அருமையான கவிதை

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 13. 'ஆடு'களக் கவிதை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 14. அழகிய கவிதை சௌந்தர் புரிதலில் ஆறறிவிற்குள்ளே இன்னும் நிறைய இடைவெளி உண்டு

  ReplyDelete
 15. புரிதலின் இடைவெளியில்
  ஐந்தறிவும்... ஆறறிவும்.../

  கவிதைப் பாடம்...

  ReplyDelete
 16. புரிதலின் இடைவெளியில்
  ஐந்தறிவும்... ஆறறிவும்...  நல்ல வரிகள்.

  ReplyDelete
 17. // புரிதலின் இடைவெளியில்
  ஐந்தறிவும்... ஆறறிவும்//

  நல்ல முடிவு!

  பொருள் பொதிந்த கேள்வி
  தொக்கி நிற்கிறது!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. அருமையான கவிதை .வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. அப்னின் க.வீ.சௌந்தர் - புதிய சிந்தனை - புரிதலுணர்வு ஐந்திற்கும் ஆறுக்கும் - ம்ம்ம் நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 20. புரிதலுக்குள்ளே ஆறறிவுக்குள்ளும் பல அறிவு

  ReplyDelete
 21. // புரிதலின் இடைவெளியில்
  ஐந்தறிவும்... ஆறறிவும்//


  ஏழாம் அறிவு கொண்டு படைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. புரிதலின் இடைவெளியில்
  ஐந்தறிவும்... ஆறறிவும்...

  நல்ல புரிதல் நண்பா..

  ReplyDelete
 23. கிட்டத்தட்ட நாங்க கூட ஆடுகள் தான் தல!ஏன்னு கேளு!
  உன்ன கண்ண மூடிக்கினு
  பின் தொடர்ரமே!மே...மே...

  ReplyDelete
 24. கவிதைக்குள்ளிருக்கும் பொருள் அபாரம். புரிதலின் இடைவெளிகள் ஒத்த அறிவுக்குள்ளும் நிகழும்போது உண்டாகும் மனக்கசப்புகளுக்கும் பதில் கிடைப்பதே இல்லை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 25. நல்ல கவிதை சௌந்தர்.வாழ்த்துக்கள்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...