கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 September, 2011

கலைஞர், ஜெயலலிதா -வின் விஷப்பரிட்சை... பாடம் கற்க்கப்போவது யார்?

தமிழக அரசியலில் இதுவரை காணாத ஒரு புதிய திருப்பமாக அனைத்துக்கட்சிகளும் தனித்து போட்டி என்ற முடிவு வரவேற்கத்தக்கதா அல்லது  வருத்தப்பட வேண்டியதா என்று தெரியவில்லை.

தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக-வும்,  அதிமுக-வும் எந்த அடிப்படையை மனதில்வைத்து கூட்டணிக்கட்சி‌களை கழட்டிவிட்டது என்று தெரியவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளையும் தற்போது கழட்டிவிட்டு தன்னுடைய சுயரூபங்களை காட்டிவிட்டது இந்த இருகட்சிகளும். 

மூன்றாம் அணி என்ற கனவில் இருந்த தேமுதிக தற்போது தான் ஒருசில கட்சிகளை இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கிறது. மீதமுள்ள கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்திக்கிறது. இதுவும் நல்லதுக்குதான் எந்தக்கட்சி எவ்வளவு பலம் என்று தெரிந்துவிடும். பொதுவாக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு அங்கு நிற்க்கும் வேட்பாளரின் பலத்தை வைத்தே வெற்றி தோல்வி நிர்ணயக்கப்படுகிறது. கட்சி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனால் மேயர் பதவிக்கான தேர்தலில் கட்சிகளே பிராதன இடத்தை பிடிக்கும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில், சட்டசபைத் தேர்தலை விட, போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. எல்லாம் பதவி ஆசை தான். பதவி பெறுவதெல்லாம், மக்களுக்கு உதவி செய்வதற்கே என்ற பொருள் பொதிந்த வாசகம், பொருளற்றதாக ஆகிவிட்டது. பொருள் சேர்க்க வேண்டுமா... ஒன்று, ஆன்மிகத்தில் சேர்; இல்லையேல், அரசியலில் சேர் என்ற நிலை, இன்றைய சமுதாயத்தில் ஊறித் திளைத்து விட்டது. தடி எடுத்தவர்கள், தலைதூக்கும் நிலையைக் காண முடிகிறது. 

இது ஒருபுறமிருக்க, தேர்தலில் கூட்டணி எதற்கு? சில கொள்கைகளை ஆணி வேராகக் கொண்டு, கட்சிகள் தொடங்கப் படுகின்றன. அத்தகைய கொள்கைகளை, தேர்தல் காலங்களில் மக்களிடம் எடுத்துக் கூறி, தனித்தே நிற்பது தான், மக்களாட்சியின் அசைக்க முடியாத தத்துவம். இதை விடுத்து, வெற்றிபெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு, கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்பது, மக்களாட்சிக்கு எதிரான செயல் என்றே கருத வேண்டும். வேண்டுமானால், கட்சியைக் கலைத்துவிட்டு, விரும்பும் கட்சியில் சேர்ந்து செயல்படலாம். 

கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகு, தேர்தலில் தோல்வி கண்டவர்கள் சலிப்புற்று, "கூடா நட்பு கேடாய் அமைந்தது' எனக் கூறுவது, எந்தவிதத்தில் நியாயம்? எனவே தான், ஒவ்வொரு கட்சியும், தனித்தே தேர்தலில் போட்டியிடுவது நல்லது.

திமுக-வும் அதிமுக-வும் தற்போது ஒரு விஷப்பரிட்சையில் ஈடுப்பட்டுள்ளது. தனித்துப்போட்டி என்ற இந்த முடிவில் பாடம் கற்கப்போவது தானைத்தலைவரா அல்லது புரட்சித்தலைவியா.. பொருத்திருந்து பார்ப்போம்...

34 comments:

  1. இதுல தெரிஞ்சிடும் உண்மையான பலம்

    ReplyDelete
  2. இதே மாதிரி எல்லா தேர்தலும் நடந்தா நல்லா தான் இருக்கும்.. ரன்னிங் ரேஸ் மாதிரி யார் மொதோ வர்றாங்களோ அவங்களுக்கு ஆட்சி ஹி ஹி ஹி

    ReplyDelete
  3. தனித்துப்போட்டி என்ற இந்த முடிவில் பாடம் கற்க்கப்போவது தனைத்தலைவரா அல்லது புரட்சித்தலைவியா.. பொருத்திருந்து பார்ப்போம்.../

    பொறுத்திருப்போம்..

    ReplyDelete
  4. wait பண்ணி இருந்து see பண்ணுவோம்.

    ReplyDelete
  5. திமுக-வும் அதிமுக-வும் தற்ப்போது ஒரு விஷப்பரிட்சையில் ஈடுப்பட்டுள்ளது. தனித்துப்போட்டி என்ற இந்த முடிவில் பாடம் கற்க்கப்போவது தானைத்தலைவரா அல்லது புரட்சித்தலைவியா.. பொருத்திருந்து பார்ப்போம்...

    நன்றி சகோ பகிர்வுக்கு .....

    ReplyDelete
  6. //தனித்துப்போட்டி என்ற இந்த முடிவில் பாடம் கற்க்கப்போவது தனைத்தலைவரா அல்லது புரட்சித்தலைவியா//
    பொது மக்களாகிய நமக்கும் தானே

    ReplyDelete
  7. ஜெயலலிதா அதிகாரத்தில் இருப்பதால் ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கு....!

    ReplyDelete
  8. அண்ணே ஹி ஹி நேற்று நாம சாட்டிங்க்ல பேசுனதை பதிவா போட்டுட்டேன் ஹி ஹி...

    ReplyDelete
  9. ஹி ஹி ஹி....

    நாறுதுயா இப்போ....

    பாப்போம்...

    ReplyDelete
  10. //
    கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிறகு, தேர்தலில் தோல்வி கண்டவர்கள் சலிப்புற்று, "கூடா நட்பு கேடாய் அமைந்தது' எனக் கூறுவது, எந்தவிதத்தில் நியாயம்?
    //

    நல்ல கேள்வி

    ReplyDelete
  11. //
    இதுவும் நல்லதுக்குதான் எந்தக்கட்சி எவ்வளவு பலம் என்று தெரிந்துவிடும்//

    சாதி கட்சிகளின் முகத்திரை கிழிந்துவிடும்

    ReplyDelete
  12. // பொருள் சேர்க்க வேண்டுமா... ஒன்று, ஆன்மிகத்தில் சேர்; இல்லையேல், அரசியலில் சேர் என்ற நிலை, இன்றைய சமுதாயத்தில் ஊறித் திளைத்து விட்டது//

    இன்றைய சமுதாயமா? அந்த நிலை வந்து பல்லாண்டு ஆகுதே வாத்யாரே..

    ReplyDelete
  13. சபாஸ் சரியான போட்டி...............ட்

    ReplyDelete
  14. நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் பாடம், அடி தடி உடன் தேர்தல் நடந்தால் அது மசாலா படம்

    ReplyDelete
  15. தனித்துப்போட்டி என்ற இந்த முடிவில் பாடம் கற்க்கப்போவது தானைத்தலைவரா அல்லது புரட்சித்தலைவியா..//

    இப்படிக்கு கேள்வி மட்டுமே கேட்போர் சங்கம்.

    ReplyDelete
  16. என்னதான் நடக்கப்போகிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  17. பொறுத்திருப்போம் முடிவுகளுக்கு

    ReplyDelete
  18. இந்த முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு கட்சி பலம் பற்றிய பெரிய முடிவுகள் எதற்கும் வர முடியாது என்றே நினைக்கிறேன் .

    ReplyDelete
  19. அனைத்து கட்சிகளுக்கும் ஒரு பாடமாக அமையும்...
    தேர்தல் ஆணையர் மீண்டும் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. முடிவு வராமையா போகபோகுது
    எப்படியும் வந்துதான் ஆகனும் அப்போ பாப்போம்

    ReplyDelete
  21. உள்ளாட்சி தேர்தலில் கட்சி அரசியல் அவசியமா?

    (கருத்துரை குறித்த உங்கள் கருத்து எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அருமை.)

    ReplyDelete
  22. ஆளுங்கட்சிக்குத்தான் அதிக வாய்ப்பிருக்கறதா தோனுது.....!

    ReplyDelete
  23. //வெற்றிபெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு, கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்பது, மக்களாட்சிக்கு எதிரான செயல் என்றே கருத வேண்டும். வேண்டுமானால், கட்சியைக் கலைத்துவிட்டு, விரும்பும் கட்சியில் சேர்ந்து செயல்படலாம். //

    சரியாக சொல்லியிருக்கிறீர்கள். மக்களாட்சி என்று சொல்வதற்கு இங்கு ஒன்றுமே இல்லை. இன்னும் சொல்லப் போனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி அடையாளமே தேவையில்லை. மக்களுக்காக பணி செய்பவர்கள் எப்போதுமே செய்ய வேண்டும். அவர்களின் தொண்டைப் பார்த்து மக்களே தங்களின் பிரதிநிதியாக அவரை நிற்கவைத்து தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குப் பெயர்தான் மக்களாட்சி!

    ReplyDelete
  24. உங்கள் பதிவுகளில் அதிக அளவில் சொற்பிழைகள் தென்படுகின்றனவே? கொஞ்சம் கவனம் மேற்கொண்டு சரிசெய்யலாமே?

    //வரவேற்க்கதக்கதா, கழட்டிவிட்து, தற்ப்போது, நிற்க்கும், நிர்ணயக்கப்படுகிறது, பிராத, ஈடுப்பட்டுள்ளது, கற்க்கப்போவது, பொருத்திருந்து //

    பல பதிவர்களிடமும் இந்தக் குறை இருக்கிறது. மேலும், சந்திப்பிழை, சொற்களை சரியாக பிரித்து சேர்த்து எழுதுதல், ஒருமை பன்மை வித்தியாசம் போன்றவற்றில் எல்லாம் அதிக கவனம் தேவை. ஒரு வாசகன் என்ற முறையில் படிக்கும்போது ஒருவித எரிச்சல் ஏற்படுவதனால் இதைத் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  25. @ரிஷி


    சுட்டிகாட்டியதற்க்கு நன்றி ரிஷி...


    தவறுகள் எத்தனைமுறை படித்தாலும் தவறிவிடுகிறது...

    இனி அதிக அளவில் பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  26. பொறுத்திருந்து பார்ப்போம் நண்பரே

    ReplyDelete
  27. தனித்துப் போட்டியிட்டு
    மல்யுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள்..
    பார்ப்போம் என்ன விளைவு வருகிறதென்று...

    ReplyDelete
  28. காங்கிரஸ், திமுக பிரிந்து தனி தனியாக நிற்கின்றது என்று நீங்கள் எல்லோரும் நினைத்தால் அது உங்கள் தவறு. இப்போதும் கலைஞர் ஏதோ உள்நோக்கத்தோடுதான் காய் நகர்த்துகின்றார் என்பதை சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள். இளைஞர் காங்கிரஸ் யுவராஜா தனித்து போட்டி என்று அறிவிக்கின்றார். ஆனால் அதே சமயத்தில் தங்கபாலு இன்னமும் கலைஞரின் வீடு படிகளில் காத்து நிற்கின்றார். உள்ளாட்சி தேர்தல் வரை இவர்கள் பிரிந்திருப்பார்கள், மீண்டும் இணைவார்கள். இது நடக்கத்தான் போகின்றது.

    ReplyDelete
  29. ப்ளாக்கின் இடுகைகளுக்கு STAR RATING WIDGET-ஐ வைக்க எனும் பதிவை UPDATE பன்னி இருக்கிறேன் நண்பா

    இப்போது பாருங்கள்

    ReplyDelete
  30. காலம் பதிலுரைக்கும்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...