கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 September, 2011

பறிகொடுத்து விட்டோம் மூவரை.... நெஞ்சை பதற வைத்த சம்பவம்

திருவள்ளூர் அடுத்த ஒரு 18 கிமீ தூரத்தில் இருக்கும் வெள்ளியூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. மாணவர்கள் இன்று காலை 7.00 பள்ளிக்கு வந்து விட்டு காலை உணவுக்காக அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சாலை ஓரம் இருக்கும் அந்த ஹோட்டலில் தான் சீக்கிறமாக வரும் மாணவர்கள்  காலை டிபன் சாப்பிட்டுவது வழக்கும்.

இன்று காலாண்டு தேர்வு எழுத வந்த +2  மாணவர்கள் அங்கு காலைவுணவு சாப்பிடும் போது அந்த வழியாக வேகமாக வந்த மணல் லாரி தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து அந்த ஓட்டலில் புகுந்தது. அப்போது ஓட்டலில் 9 மாணவர்கள் இருந்தனர் அதில் 3 மாணர்கள் சம்பவஇடத்திலேயே உயிர் இழந்து விட்டனர். 

காயமடைந்த மீதி 6 மாணவர்களுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் இரண்டு மாணவர்கள் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் அவர்கள் மட்டும் சென்னை பொது மருத்துவ‌மனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைக் நடந்த கொஞ்ச நேரத்தில் 108 மூலமாக மாணவர்கள் திருவள்ளூர் நகருக்கு கொண்டு வரப்பட்டனர். (நான் திருவள்ளூர் இருந்தேன்) நான் விஷயம் அறிந்து  108 வருவதற்க்குள் மருத்துவனைக்கு சென்றேன்.

நான் கண்ட காட்சி என்னை அப்படியே சுக்குநூறாக்கிவிட்டது. ஒரு ஆம்புலென்ஸ் முழுக்க காயப்பட்ட மாவணர்களை பார்த்தவுடன் என்மனது பதறிய பதற்ம் வார்த்தைகளில் சொல்லி மாளாது. அதில் இறந்த மூன்று மாணவர்களின் பார்த்து கதரும் சக மாணவர்களின் குமுறுல் என்னை அ‌‌‌ழ வைத்து விட்டது. அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து 10.30 மணிக்கு அவர்களுக்கு முதலுதலி அளிக்கப்பட்டது.

மூன்று மாணவர்களின் நிலை மோசமடைவதை அறிந்து அவர்களை சென்னை பொது மருத்துவனைக்கு 108 மூலமாக அனுப்பி வைத்தோம். 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து சிகிச்சையை துரிதப்படுத்தினர்.

இந்த சம்பவத்துக்கு மிக முக்கிய காரணம் விரைவாக லாபம் ஈட்ட வேண்டும் ‌என்ற மணல் லாரி ஓட்டுனரின் தவறே காரணம். அவர்களின் பணத்தாசைக்கு இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க போகிறோம்.

இந்த கொடுர காட்சியை பார்த்திலிருந்து இன்னும் நான் சகஜநிலைக்கு வரவில்லை.  லாரி ஓட்டுனர் தப்பி‌யோடிவிட்டார். கனவுகளோடு காலை தேர்வுக்கு வந்த இவர்கள் தற்ப்போது சவக்கிடங்கில். காலத்தை நேரத்தை நான் எப்படிதான் மன்னிப்பதோ...?

எனக்கு தெரிந்து இவ்வளவு பெரிய விபத்து இப்பள்ளியில் நடந்ததில்லை. வெள்ளியூர் தான் எனக்கும் வேடந்தாங்கல் கருணுக்கும் சொந்த ஊர். +2 வரை நாங்களும் இந்த பள்ளியில் தான் படித்தோம்.

இறந்த அந்த மாணவர்களுக்காக ஊரை சோகத்தில் மூழ்கி உள்ளது. 
..

25 comments:

 1. மனம் கணக்கும் பதிவு சௌந்தர் ..

  ReplyDelete
 2. இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலிகள்!...மெத்தனப்போக்கை கையாளும் ஓட்டுனர்களை நடு ரோட்டில் வைத்து சுடவேண்டும்...பிஞ்சுகளின் வாழ்கையை அழித்து விட்டானே பாவி!

  ReplyDelete
 3. நெஞ்சம் பதைக்கும் சம்பவம், மணல் லாரி உரிமையாளர்களையும் நிக்க வச்சி சுடனும். இறந்த அன்பு மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி....

  ReplyDelete
 4. இந்த பதிவுக்கு லைக் போட மனம் வரவில்லை...

  ReplyDelete
 5. மனவருத்தமான சம்பவம் .... அந்த மாணவர்களின் கனவுகளும் அவர்களை பெற்றவர்களின் கனவுகளும் தவிடுபொடியாகி விட்டதே ((((

  ReplyDelete
 6. தாங்க முடியாத சோகம், இழப்பு. ஓட்டுனர்கள் எப்போது தான் திருந்துவார்களோ?

  ReplyDelete
 7. கேட்கவே மிகவும் வேதனையாக உள்ளது.பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும்? மிகவும் கொடுமையான சம்பவம் தான்.

  ReplyDelete
 8. என்ன கொடுமை ங்கா இது

  ReplyDelete
 9. மனம் பதைபதைக்கிறது நண்பரே... இந்த மணல் லாரி எமன்களினால் இன்னும் எத்தனை உயிர்கள்தான் பாதிக்கப்படுமோ?!

  ReplyDelete
 10. மணல் கொள்ளையர்களால் எத்தனை பேருக்கு துயரம்?

  ReplyDelete
 11. என்ன செய்வது மிகவும் சோகமான செய்தி,, மணல் கொள்ளை அடிக்கும்போதுதான் இப்படி ஓட்டினார்கள் என்றால் அனுமதி பெற்று மணல் அள்ளும் லாரிகளும் இப்படித்தான் ஓட்டுகிறார்கள்...

  ReplyDelete
 12. மிகவும் துயரமான சம்பவம் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..

  ReplyDelete
 13. //இந்த சம்பவத்துக்கு மிக முக்கிய காரணம் விரைவாக லாபம் ஈட்ட வேண்டும் ‌என்ற மணல் லாரி ஓட்டுனரின் தவறே காரணம்.//

  இந்த நயவஞ்சகர்களை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும் நண்பரே..

  படித்ததும் இருதயம் மிகவும் கணக்கிறது.என் சகோதரர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  ReplyDelete
 14. மிகவும் மனம் வருந்துகிறேன். இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்....

  ReplyDelete
 15. இது போன்ற சாலையோரப்பள்ளிகள் ஏராளமாய் உள்ளன.அவர்களின் பாதுகாப்புக்கு சிறந்த வழி இருந்தால் யாராவது சொல்லுங்கள்!

  ReplyDelete
 16. அந்தப் பிஞ்சுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்! இப்படியான இடங்களில்(கல்விச் சாலைகள் இருக்கும் பகுதிகளில்)வெளி நாடுகளில் இருப்பது போல் வேகத் தடைகள்,அறிவிப்புகளை அரசு அறிமுகம் செய்தல் வேண்டும்!

  ReplyDelete
 17. கூடவே வாகனங்களின் தரம் கண்காணிக்கப்படுதலும் அவசியம்.

  ReplyDelete
 18. உரிமையாளர்களின் பண வெறிக்கு
  ஓட்டுனர்களின் மெத்தனபோக்கை
  பட்டையம் கட்டி இங்கே ஒரு
  சம்பவம் நிகழ்த்தி இருக்கிறார்கள்.
  நஷ்ட ஈடு கொடுத்து இனிமேல் என்னய்யா புண்ணியம்
  இழந்த உயிர்களை உங்களால்
  கொடுக்க முடியுமா?
  கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து சிந்தியுங்கள்.....

  ReplyDelete
 19. பணம் மட்டுமே குறிக்கோள், மனித உயிர்கள் எல்லாம் துச்சம். மன்னிக்க முடியாத குற்றம்.

  ReplyDelete
 20. அன்பின் க.வீ சௌந்தர் - என்ன பாவம் செய்தனர் இந்த மூன்று மாணவர்களும் ....விதி எப்படி எல்லாம் விளையாடுகிறது .....மனம் பதைக்கிறது ....

  ReplyDelete
 21. ஒருவனின் அலட்சியத்தாலும் அவசரத்தாலும் அப்பாவி மாணவர்களின் வாழ்வு பலியானது மிகுந்த வருத்ததுக்கும் கண்டனத்துக்கும் உரியது. இனியும் இப்படியொரு துயர சம்பவம் நிகழாவண்ணம் சட்டம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  ReplyDelete
 22. ஆழ்ந்த அஞ்சலிகள், மற்ற பசங்களுக்கு ட்ரிட்மெண்டை கவனமாக கண்காணித்து துரிதப்படுத்தவும்...

  ReplyDelete
 23. கொஞ்சமும் பொறுப்புணர்ச்சி இல்லாத சனங்கள். எவ்வளவு வேதனையான சம்பவம். என்று தான் திருந்துவார்களோ? எப்போது பார்த்தாலும் லொறி கவிழ்வது, புரளுவது தான்..கடவுனே! அனைவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...