கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

03 October, 2011

உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் இப்படி செய்வது நியாயம்தானா...?


தமிழகத்தில் அரசியலுக்கு என்று தனிவரவேற்பு இருக்கிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் ஆளும் கட்சியான திமுக-வை தூக்கிஎறிந்துவிட்டு அடுத்த கட்சியான அதிமுக-விற்கு வாய்ப்பு கொடுத்தாயிற்று. அதே வேகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நாம் சந்திக்க போகிறோம். அதற்கான விறுவிறுப்பு தற்போது தமிழகம் முழுவதும் காணப்படுகிறது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், பெரும்பாலானோர், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என போட்டியிடுவது கிடையாது. வியாபாரம் போல, கொஞ்சம் பணம் செலவு செய்தால், வெற்றி பெற்று பதவிக்கு வந்த பின், நன்கு அறுவடை செய்து கொள்ளலாம் என எண்ணுகின்றனர். இது தவறு, முறையற்ற வழியில் சொத்து சேர்த்தவர்கள் எல்லாம் என்ன நிலையில் உள்ளனர் என்பது எல்லாருக்கும் தெரியும். 
  
வள்ளுவரும், களவினால் வருகின்ற வசதி வாய்ப்புகள் சிறப்பாக இருப்பது போல் தோன்றினாலும், சீரழிவைத்தான் தரும் என்று,"களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்துஆவது போலக் கெடும்' என்று கூறியுள்ளார். இப்போது மக்கள் விழிப்படைந்தோ, பகையினாலோ, ஒருவர் மாறி ஒருவர் முறைகேடுகளை வெளியில் கொண்டு வந்து, தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாக உள்ளனர். இதை அறியாதவர்கள் தான் தப்புக் கணக்கு போட்டு தேர்தலில் ஜெயித்து, கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணத்தில், போட்டி போட்டு பணம் செலவு செய்கின்றனர்.

வாக்காளர்களோ, ஜெயித்தால் நீங்கள் ராஜாதான் பிறகென்ன இப்ப செலவழிக்க வேண்டியதுதானே என போட்டியிடும் எல்லாரிடமும் சாப்பாடு, குவார்ட்டர், செலவுக்கு பணம் என அனுபவிக்கின்றனர். இதில் ஒருவர் தான் வெற்றி பெற முடியும் தோற்றவரின் வெறுப்புக்கும், பகைக்கும் இவர்கள் ஆளாகக் கூடும். இது, உள்ளாட்சி தேர்தல் என்பதால், போட்டியாளர்களும், வாக்காளர்களும் நன்கு அறிமுகமான தெரிந்தவர்களாகத்தான் இருப்பர். இதனால் ஏற்படும் பகை, சண்டை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.சிலஇடங்களில் கடந்த முறை தேர்தலின்போது இருந்தப்பகை கூட தற்போது வெளிப்படும்.

வேட்பாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் விளம்பரத்திற்க்கு, ஓட்டுக்கு, குடிக்க, பொருளாக என அதிகம் பணம் செலவு செய்வதை நிறுத்திக் கொண்டு, சேவை செய்ய வாய்ப்பு கொடுத்தால் சேவை செய்யலாம் என்ற எண்ணத்துடனும், வாக்காளர்கள் இரு பக்கமும் ஜால்ரா அடித்து, ஆசை காட்டி, மோசம் செய்து பகையை தேடிக் கொள்வதையும் நிறுத்திக் கொண்டால், பின்னாளில் மட்டுமல்லாது என்னாளிலும் பிரச்னை இல்லாமல் தேர்தல் கண்ணியத்துடன் நடக்கவும், நிர்வாக அமைப்புகள் சரியாக செயல்படவும் வழிவகுக்கும். எனவே, வேட்பாளர்களும், வாக்காளர்களும் உஷார் ஆகிக்கொள்ளுங்கள்; இல்லையென்றால், துயரம் உங்களுக்கு நண்பனாக இருக்கும். 

உள்ளாட்சி அமைப்புகள் என்பது அருகில் இருக்கும் ஆட்சியாளர்கள் அவர்களை திறம்பட தேர்வு செய்வது வாக்காளர்களின் கடமையாகும். காசுக்கு ஆசைப்பட்டு கடமையிலிருந்து தவறாமல் ஒரு நல்ல குடிமகன் என்று நிருபியுங்கள்...

38 comments:

  1. ஒரு நல்ல ’குடி’ மகன் என்று பலர் நிரூபிப்பார்கள்!

    நன்று சௌந்தர்!

    ReplyDelete
  2. வாக்களிப்பதன் அவசியத்தையும், சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இன்னும் தமிழக மக்களுக்கு ஏற்படவில்லை, உள்ளாட்சி தேர்தலை நியாயாமாக சட்டமன்ற தேர்தலைப் போல காவல் போட்டு கண்கானித்து நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரும் சவாலாகவே இருக்கும்...

    தனிமனித ஒழுக்கத்திலேதான் சமூகத்தின் ஒழுக்கமும் அடங்கியிருக்கிறது, ஒவ்வொரு தனிமனிதனும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என்று முடிவு எடுத்தால் மட்டுமே இந்த நிலை மாறும்..

    சரியான நேரத்தில் மிகவும் சரியான பதிவு, நன்றி...

    தமிழ்10: 6, இண்ட்லி: 2, தமிழ்மணம்:1

    ReplyDelete
  3. இன்று நம் வலையில்
    உங்களை ஹாக்கர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள- பாகம் 2...

    http://vigneshms.blogspot.com/2011/10/blog-post_02.html

    வந்து படித்துவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்...

    ReplyDelete
  4. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே பாடல் தான் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
  5. /////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    ஒரு நல்ல ’குடி’ மகன் என்று பலர் நிரூபிப்பார்கள்!

    நன்று சௌந்தர்!

    /////////

    இந்நிலை மாற வேண்டும்
    கேவலம் குடிக்கா ஓட்டை அடகு வைப்பது..

    ReplyDelete
  6. நல்ல சமூக சிந்தனை உள்ள பதிவு சௌந்தர்.

    பார்போம் நல்ல குடிமகன்களின் தேர்வை.

    ReplyDelete
  7. நல்லதோர் பகிர்வு பாஸ்..

    மக்கள் உணர்வுகளை விலை கொடுத்து வாங்கினாலும், உண்மையான மக்களின் முகம் - ஜனநாயக நிலை என்றைக்கோ ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் என்பது உண்மை!

    ReplyDelete
  8. /////
    suryajeeva said...

    இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே பாடல் தான் நினைவுக்கு வருகிறது
    /////////

    மாற்ற வேண்டும் என்று அனைவரும் நினைத்தால் கண்டிப்பாக மாறிவிடும்...
    பார்ப்போம்..

    ReplyDelete
  9. /////
    கும்மாச்சி said...

    நல்ல சமூக சிந்தனை உள்ள பதிவு சௌந்தர்.

    பார்போம் நல்ல குடிமகன்களின் தேர்வை.
    ////////

    உண்மைதான் நல்ல குடிமக்கள் இருந்தால் தான் நல்ல அரசியல்வாதிகளை நாம் பெறமுடியும்...

    தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி

    ReplyDelete
  10. ////////
    நிரூபன் said...

    நல்லதோர் பகிர்வு பாஸ்..

    மக்கள் உணர்வுகளை விலை கொடுத்து வாங்கினாலும், உண்மையான மக்களின் முகம் - ஜனநாயக நிலை என்றைக்கோ ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் என்பது உண்மை!/
    ////////

    தாங்கள் சொல்வது உண்மைதான் நிருபன்...

    ReplyDelete
  11. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட,

    வரலாறு காணாத வகையில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும். மேயர் பதவிக்குப் போட்டியிடுபவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட முடியாது.

    மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்! சொல்லச் சொல்லுங்கள்! இவர்களில் எத்தனை பேர் உண்மையாகவே சமூக சேவை செய்ய வேண்டும், மக்கள் நலப் பணிகள் செய்ய போட்டியிடுகிறார்கள் என்று?

    இவர்களில் நாமும் ஒருவராக இருக்கலாம்?

    அல்லது நம் சித்தப்பா, மாமா, சித்தி, அக்கா என நம் உறவினர்கள் போட்டியிடுபவர்களில் ஒருவராக இருக்கலாம்?

    உண்மையிலேயே ஒரு 100 ரூபாய் லஞ்சமாக கொடுக்காமல் நம்மால், இவர்களால் இப்போதுள்ள மக்களின் வோட்டுக்கு பணம் வாங்கும் மனநிலையில் காசு கொடுக்காமல் வோட்டு வாங்கி ஜெயிக்க முடியுமா?

    அப்படி காசு கொடுத்து வோட்டு வாங்கி ஜெயித்தால், செலவழித்தப் பணத்தை எப்படி சம்பாதிப்(பா)பீர்கள்?

    ஆக, தமிழகத்தை கொள்ளையடிக்க துடிக்கும் 5, 27, 014 பேரில் நீங்களும் அல்லது உங்கள் உறவினரும் ஒருவர்?

    இப்பொது ஊழலைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது?
    ஊழலில் திளைத்த கருணாநிதி, இப்போது திளைக்கும் ஜெயலலிதா, திளைக்க இருக்கும் ஏறத்தாழ 1 .5 லட்சம் உள்ளாட்சி மன்ற வெற்றி வேட்பாளர்கள், இவர்கள் போடும் திட்டங்கள் கோடிக்கணக்கில், அதில் 12 % கமிசன் கொள்ளையடிக்கப் போகும் BDO அலுவலக அதிகாரிகள்..,

    ReplyDelete
  12. மக்கள் புத்திசாலிகள். சரியான முடிவை எடுப்பார்கள்.

    ReplyDelete
  13. // உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், பெரும்பாலானோர், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என போட்டியிடுவது கிடையாது. வியாபாரம் போல, கொஞ்சம் பணம் செலவு செய்தால், வெற்றி பெற்று பதவிக்கு வந்த பின், நன்கு அறுவடை செய்து கொள்ளலாம் என எண்ணுகின்றனர். //

    உண்மைதான் நண்பரே..போட்டியிடும் ஒவ்வொருவரின் எண்ணமும் இப்படித்தான் இருக்கிறது.

    இத்தேர்தலில் சரியான முடிவு கண்டிப்பாய் வரும்.நன்றி நல்லதோர் விழிப்புணர்வுக்கு

    ReplyDelete
  14. பொறுத்திருந்து பார்ப்போம் மக்களின் மனநிலையை...!!!

    ReplyDelete
  15. நல்லவனா இருந்தால் அவன் அரசியல் வியாதி அல்ல என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம், திகார் போன்ற சிறைகளில்.....!!!

    ReplyDelete
  16. நல்ல விளிப்புனர்வாகத்தான் சொல்லி இருக்கீங்க ,இதனை உணர்வார்களா
    மக்கள்

    voted

    ReplyDelete
  17. நல்ல பதிவு சௌந்தர்,

    ஆசை யாரை விட்டுச்சு?

    ReplyDelete
  18. மக்கள் ஓரளவு யோசிக்க தொடங்கி இருக்காங்க, பார்ப்போம்......

    ReplyDelete
  19. மக்களின் மன மாற்றத்தை நல்லாவே படம்பிடிச்சு காட்டியிருக்கீங்க!

    ReplyDelete
  20. மக்கள் உணருவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  21. மாப்ள நல்லா சொன்னீங்க நன்றி!

    ReplyDelete
  22. அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணமிது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். பிரியாணி பொட்டலத்துக்கும், சேலை, பாத்திரங்கள். ரூபாய் நோட்டுக்களுக்கு நம் எதிர்காலத்தை அடகு வைக்க கூடாது என சபதமேற்போம்.

    ReplyDelete
  23. //////
    KOMATHI JOBS said... [Reply to comment]

    மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்! சொல்லச் சொல்லுங்கள்! இவர்களில் எத்தனை பேர் உண்மையாகவே சமூக சேவை செய்ய வேண்டும், மக்கள் நலப் பணிகள் செய்ய போட்டியிடுகிறார்கள் என்று?
    /////////////////////

    மக்கள் நலனை முன்னிருத்தி இத்தனைபேர் தேர்தலுக்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும்
    ஆனால் தற்போது வாக்குறுதிகளில் மட்டுதான் சேவைகள் செய்வதாக இருக்கும் உண்மையில் இவர்கள் ஜெயித்தபிறகு அவற்றை செய்வார்களா என்றால் அது இல்லை..

    சேவை செய்ய அரசியலே தேவையிலலையே சம்பாதிக்கமட்டும்தான் அரசியல.

    ReplyDelete
  24. /////////
    சம்பத்குமார் said...

    // உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், பெரும்பாலானோர், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என போட்டியிடுவது கிடையாது. வியாபாரம் போல, கொஞ்சம் பணம் செலவு செய்தால், வெற்றி பெற்று பதவிக்கு வந்த பின், நன்கு அறுவடை செய்து கொள்ளலாம் என எண்ணுகின்றனர். //

    உண்மைதான் நண்பரே..போட்டியிடும் ஒவ்வொருவரின் எண்ணமும் இப்படித்தான் இருக்கிறது.

    இத்தேர்தலில் சரியான முடிவு கண்டிப்பாய் வரும்.நன்றி நல்லதோர் விழிப்புணர்வுக்கு
    /////////

    கண்டிப்பாக மக்களுக்காக என்று அரசியல் மாறவேண்டும்...

    எல்லோருடைய எண்ணமும் அதுவே..!

    ReplyDelete
  25. தக்க சமயத்தில் சரியான பதிவு
    இப்போது மக்கள் மாறிவிட்டார்கள் என நினைக்கிறேன்
    பணம் அல்லது குவார்டர் வாங்கிக் கொண்டாலும்
    மாற்றிப் போடுவது தவறில்லை என்கிற
    மனோபாவத்துக்கு மாறிவிட்டார்கள்
    எனவே செலவழிப்பவர்கதான் யோசித்துக் கொள்ளவேண்டும்
    த.ம 14

    ReplyDelete
  26. நல்ல பதிவு நண்பா.மக்கள் நல்ல முடிவையே எடுப்பார்கள்

    ReplyDelete
  27. நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  28. விழிப்புணர்வு பதிவு.மக்களின் விழிப்புநிலை குறித்து தேர்தல் முடிவுகள் சொல்லட்டும்.

    ReplyDelete
  29. அனைத்தையும் உள்வாங்கி...
    சிந்தித்து செயல் பட்டால் நலமே....
    அருமையான பதிவு

    ReplyDelete
  30. நல்லது செய்யணுன்னு தான் முதல்ல வரங்க உள்ள ( சிலரை தவிர்த்து ) அது பிறகு தான் வாடிக்கையே நல்லவனா இருக்க அதிகாரிங்களே விடறதில்ல .. அட நம்ம மக்கா மட்டும் சும்மாவா இருக்காங்க . இந்த நாடு திருந்தனுனா முதல்ல தலைமை ல இருக்கறவங்களை சரி படுத்தனும் அப்பதான் பின்னாடி இருக்கறவனை அவன் கன்ரோல் பன்ன முடியும்

    ReplyDelete
  31. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, வேட்பாளர்களில் நல்லவன் யார்.... கெட்டவன் யார் என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம்...ஏனென்றால்...இது ஒரு குறுகிய வட்டம்....ஆட்களை கண்டுகொள்வது அவ்வளவு கடினமல்ல...ஆனாலும் துட்டுக்கு ஓட்டு என்பதை மக்கள் ஏற்காமல்...நல்லவர்களை பார்த்து ஓட்டு போடுவார்கள் என்று நம்புவோம்...
    ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு வாக்கு செலுத்தி பாவம் செய்திருப்பீர்களானால் அதற்கான பிராயச்சித்தமாக...அல்லது பாவ மன்னிப்பாக...பணம் வாங்காமல், மனம் சொல்லுவதைக்கேட்டு வாக்களிக்க இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக்கொள்ள நாம் கேட்டுக்கொள்வோம்....
    அருமையான பதிவு...அவசியமறிந்து அளித்துள்ளீர்கள்...

    ReplyDelete
  32. என்னமோ போங்க.... அரசியல் ஓட்டு வேட்பாளர் இதையெல்லாம் நினைச்சாலே கடுப்பா இருக்கு

    ReplyDelete
  33. கருத்திட்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  34. உள்ளாட்சித்தேர்தல் என்றால் கட்சியை பார்க்க தேவை இல்லை, அந்தந்த ஏரியாவில் யார் செல்வாக்காக, மக்களூக்கு நல்லது செய்வார்கள் என தோன்றுகிறதோ அவருக்கு போட்டா போதும்

    ReplyDelete
  35. உள்ளாட்சி அமைப்புகள் என்பது அருகில் இருக்கும் ஆட்சியாளர்கள் அவர்களை திறம்பட தேர்வு செய்வது வாக்காளர்களின் கடமையாகும்

    அருமையான பதிவு...

    ReplyDelete
  36. நல்ல பதிவு நண்பா...
    மக்கள் சிந்தித்து செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...