கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 October, 2011

மாணவ மாணவிகள் ஏன் இப்படி செய்தார்கள்... (பள்ளியில் நடந்த ஒரு உண்மை சம்பவம்)ள்ளியில் துவங்கியது ஆண்டுவிழா
வழக்கமான உற்சாகத்துடன்...

ண்டறிக்கையை தலைமையாசிரியர் வாசிக்க
தலைமையேற்றவரின் உரையோடு
துவங்கியது கோலாகலம்...

மாவட்ட கல்வி அதிகாரி
சிறப்பு விருந்தினராக
மேடையை அலங்கரித்தார்...

ள்ளி மாணவர்களின்
ஆடல் பாடலுடன் அமர்க்களப்பட்டது விழா...
 
சிறந்த மாணவர்களுக்கு
பரிசுகளும்... பாராட்டுகளும்....
கரகோஷங்களுக்கிடையே...!

றுதியாய்...
மாணவர்கள் யாராவது ஆசிரியர்களுக்கு
பரிசளிக்க விரும்பினால்...
என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது..

ரு மாணவ மாணவியர் குழு ‌மேடையேரியது
பரிசு பொருட்களுடன்...

யாரை அழைக்க வேண்டும் என கோரினார் 
சிறப்பு விருந்தினர்...
மாணவர்கள் கூட்டாக கூறினார்கள்
எங்க “சமூக அறிவியல் சார்”.. என்று

தயம் நின்று போனது எனக்கு
பல தெய்வங்கள் குடியிருக்கும்
இந்த கோயிலில்
எனக்கு மட்டும் கும்பாபிஷேகமா என்று...

ண்களில் எட்டிப்பார்க்கும்
கண்ணீரோடு பரிசுவாங்கினேன்
இந்த உலகை காணும் புது உயிர்போல...

ப்படி நான் என்ன செய்து விட்டேன்
இவர்களுக்கு...
தட்டிக்கொடுத்ததை தவிர....!

 அந்தரங்கம்  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... அந்தரங்கம்

46 comments:

 1. தட்டி கொடுத்த கைகளுக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள்.

  ReplyDelete
 2. மாப்ள உன் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. நல்லா இருக்கு சௌந்தர் உங்க கவிதையும் உங்க தொண்டும்

  வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 4. எவ்வளவு பெரிய முதல்வரிடம் வாங்கும் சிறந்த ஆசிரியர் விருதை விட உயரிய விருது இது.. பல ஆசிரியர்களுக்கு கிட்டாத விருது இது... சிறந்த மாணவர்களை சிற்பி போல் செதுக்கி அருமையான சிலையாக அனுப்பி வைக்கிறீர்கள் என்பதற்கு இதை விட வேறு எதுவும் சொல்ல தேவை இல்லை

  ReplyDelete
 5. கவிதை நல்லா இருக்கு

  ReplyDelete
 6. மாணவப் பருவத்தில் குட்டாமல் தட்டிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைப்பதே ஒரு கொடுப்பினை சௌந்தர் சார்! மாணவர்கள் கையால் பரிசு பெற்ற நல்லாசிரியரான தங்களுக்கு வாழ்த்துக்கள். அத்துடன் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. எந்த ஒரு ஆசிரியரும் மாணவரின்
  முன்னேற்றமே தன்னுடைய
  பணியாகக் கருதி பாடு படுவதை
  மாணவர்கள் உணருமாறு நடந்து
  கொண்டால் தட்டிக் கொடுப்பதென்ன
  குட்டிக் கொடுத்தாலும் கட்டுப் படுவார்கள்
  இது என் பணிக்காலத்தில்
  கண்ட, கொண்ட அனுபவம்!

  தங்கள் பணி மேலும் சிறக்க
  வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. தேர்தல் பணிஎல்லாம் முடிஞ்சிடுச்சாய்யா????

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் சார்!
  நல்லாசிரியர் விருதினை விட சிறந்தது நமது மாணவர்களிடம் இருந்து கிடைக்கும் ஒரு சிறு பாராட்டு.

  தேர்தல் பணி முடிந்ததா?

  ReplyDelete
 10. நானும் வாழ்த்துகிறேன் நண்பரே

  அப்புறம் தீபாவளி வாழ்த்துக்கள்

  த,ம 3

  ReplyDelete
 11. மாணவர்களின் அபிமான ஆசிரியராக தாங்கள் இருப்பது மகிழ்ச்சி. மற்ற ஆசிரியர்கள் டென்ஷன் ஆகாமல் இருந்தால் சரி.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள்
  நல்ல பரிசு...
  இதை இட வேறென்ன வேண்டும்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் பாஸ் மாணவர்களின் அன்பைப்பெறுவது..இலகுவானது இல்லை...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. ஆசிரியராய் நீங்கள் செய்த பணி
  சிறப்புடையது நண்பரே..
  காலம் செல்கையில் மாணவனின் மனதில்
  நிழலாய் நீங்கள்...
  வாழ்த்துக்கள் மற்றும்
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. இதை இட வேறென்ன வேண்டும்.

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...

  ReplyDelete
 16. எல்லா விருதுகளையும் விட இதுலதான்யா ஆத்மதிருப்தி இருக்கு..... வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் சார். தட்டிக்கொடுக்குங்கள் உங்களால் பல தலைவர்கள் உருவாவார்கள்.
  தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. ஆசிரியர்கள் இன்று தங்கள் பணியை ஒரு தொழிலாக செய்ய நீங்கள் அதை மகத்துவமான கடமையாக செய்து உள்ளீர்கள் . நல்ல ஆசிரியர்கள் என்றும் மாணவர்கள் மனதை விட்டு நீங்க மாட்டார்கள் ..... நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ விரும்பி வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 19. ஒரு ஆசிரியருக்கு மதிப்பெண் போடும் தகுதி மாணவர்களைத்தவிர வேறு யாருக்கு இருக்கிறது...நீங்கள் வாங்கியது எனக்கே பெருமையாக இருக்கிறது....உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதைப்போல....உங்களின் அளப்பரிய தொண்டிற்கு மாணவ மாணவிகள் பின்னூட்டம் அளித்துள்ளார்கள்...இன்று தட்டிக்கொடுக்கும் ஆசிரியர்களை பார்ப்பது மிகவும் அரிது.....மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 20. மாணவர்களுக்கு கல்வியின் மேல் ஒரு ஆர்வத்தை கொடுத்து, நன்றாக படிக்க உற்சாகமூட்டும் ஆசிரியர்கள் - எப்பொழுதும் மரியாதைக்கு உரியவர்கள்.
  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. தட்டிக்கொடுத்ததை தவிர...!//
  சாதாரண விஷயமா இது ? தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. பரிசுபெற்ற உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ .
  தட்டிக் கொடுத்தல் என்பதுதானே இந்த மாணவச் செல்வங்களை
  நாளை புகளின் உச்சத்திற்க்குக் கொண்டு சேர்க்கும்.இதில் என்ன
  ஆச்சரியம்.அவர்கள் நற் குணத்தைக் கண்டு நானும் மகிழ்கின்றேன் .
  மிக்க நன்றி பகிர்வுக்கு .உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் என்
  தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோ .வாழ்க என்றும் வளமுடன் .

  ReplyDelete
 23. மாணவர்களிடம் பாராட்டு பெறுவதை விட ஒரு ஆசிரியருக்கு வேறு எந்த வகையிலும் நிறைவு வராது. நீங்கள் உங்களை பரிபூரணனாக உணர்ந்த தருணம் அதுவாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  வணக்கங்கள். ஒரு பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்கும் பணியில் பொறுப்புடன் செயல் படுவதற்கு.

  ReplyDelete
 24. மாணவர்கள் மனதைப் புரிந்துகொண்ட நீங்கள் பரிசுக்குரியவர்தான்.

  ReplyDelete
 25. பெரிய தொண்டு வாத்தியாரே ....

  ReplyDelete
 26. பசங்க விரும்புவதே தட்டிக் கொடுப்பதைத்தான்...

  ReplyDelete
 27. தீபாவளி வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 28. //எவ்வளவு பெரிய முதல்வரிடம் வாங்கும் சிறந்த ஆசிரியர் விருதை விட உயரிய விருது இது.. பல ஆசிரியர்களுக்கு கிட்டாத விருது இது... சிறந்த மாணவர்களை சிற்பி போல் செதுக்கி அருமையான சிலையாக அனுப்பி வைக்கிறீர்கள் என்பதற்கு இதை விட வேறு எதுவும் சொல்ல தேவை இல்லை//

  வழிமொழிகிறேன்

  ReplyDelete
 29. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. நல்ல விசயம் ங்கோ.
  தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. அப்படி நான் என்ன செய்து விட்டேன்
  இவர்களுக்கு...
  தட்டிக்கொடுத்ததை தவிர....!


  தட்டிக்கொடுத்து தரணியில்
  தலைநிமிர்ந்து வாழ வழி அமைத்த
  ஆசிரியருக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 33. அருமையான படைப்பு.
  என் இனிய
  அன்பின் நண்பனுக்கு .
  இனிய தீபாவளி நல்
  வாழ்த்துக்கள் .
  அன்பின் .
  "யானைக்குட்டி "
  ஞானேந்திரன்

  ReplyDelete
 34. அருமையான படைப்பு.
  என் இனிய
  அன்பின் நண்பனுக்கு .
  இனிய தீபாவளி நல்
  வாழ்த்துக்கள் .
  அன்பின் .
  "யானைக்குட்டி "
  ஞானேந்திரன்

  ReplyDelete
 35. தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

  ReplyDelete
 36. உண்மைசம்பவம்.. ஆசிரியரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு...

  ReplyDelete
 37. உண்மையான ஆசிரியருக்கு கிடைத்த பரிசு.

  தீபாவளி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. உலகத்தின் உயரிய விருது உங்களுக்கு கிடைத்துள்ளது வாழ்த்துக்கள் .மேலும் பல அப்துல் காலம் உருவாக்குங்கள் .உங்களிடம் சிறந்த உளி உள்ளது உலகத்தின் தலைசிறந்த கல்விமான்கள் என்ற சிற்பங்கள் செதுக்கும் கால சிற்பி நீங்கள் வாழ்த்துக்கள்
  வந்தே மாதரம்
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 39. உங்களுக்குக் கிடைத்த மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள். வளரட்டும் உங்கள் ஆசிரியத் தொண்டு. மற்ற ஆசிரியர்களுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக அமையும். அமையவேண்டும்.

  ReplyDelete
 40. வழக்கம் போல் இதுவும் சிறப்பு!!!

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...