கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 November, 2011

தந்தை பெரியார் விரும்பிய திருவிழா...

விஜய் நண்பன் திரைவிமர்சனம்

தீ மிதிப்போம்
தீமைகளை கொளுத்தி..!

லியிடுவோம்
சாதிகளையும், மதங்களையும்....!

வேப்பிலை அடிப்போம்
சூழ்ந்துள்ள அறியாமைக்கு..!

லகு குத்துவோம்
 
இயலாமைக்கும் இல்லாமைக்கும்...!

விழா எடுப்போம்
வன்முறையும், தீவிரவாதமும இறந்த நாளில்...!

குத்தறிவு‌ கொடியேற்றி
கொண்டாட்டங்கள் அரங்கேற்றுவோம்...!

... உண்மையில் 
அதுவன்றோ திருவிழா...படித்து கருத்திட்டு வாக்களித்து
கவிதைகளுக்கு உயிர்கொடுங்கள்...

18 comments:

 1. அழகாக கோர்த்துள்ளீர்கள், மாற்றுக் கருத்து எனக்கு உள்ளது, ஆகையால் மன்னிக்கவும்

  ReplyDelete
 2. //////
  suryajeeva said... [Reply to comment]

  அழகாக கோர்த்துள்ளீர்கள், மாற்றுக் கருத்து எனக்கு உள்ளது, ஆகையால் மன்னிக்கவும்
  /////////

  எந்த கருத்தாக இருந்தாலும் பதிவுச்செய்யுங்கள் நண்புரே..

  எனக்கு அதில் ஒரு கரு கிடைக்கும்...

  ReplyDelete
 3. பகுத்தறிவு‌ கொடியேற்றி
  கொண்டாட்டங்கள் அரங்கேற்றுவோம்...!

  ஓ... உண்மையில்
  அதுவன்றோ திருவிழா.../

  அழ்கான திருவிழா!

  ReplyDelete
 4. உண்மைத் திருவிழாக்கள்
  இப்படித்தான் நடைபெற வேண்டும்
  நடக்குமா..?

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. மூட நம்பிக்கைக்கு மூடுவிழா...
  பகுத்தறிவுக்கு பட்டு கம்பளம்...

  அனைத்தும் அருமை...

  ReplyDelete
 6. அறிவற்ற செயல்கள் நிறுத்தி
  ஆக்கமிகு செயல்கள் நிறைத்து
  சாதிசமயமற்று சமரசம்
  உலாவும் நாளே திருநாளாம்....

  அழகிய கவி நண்பரே...

  ReplyDelete
 7. கவிதை திருவிழா கொண்ட்டாடுவோம் பண்பாடுவோம் மக்களே...!!

  ReplyDelete
 8. நச் கவிதை, சூப்பர்ப் மக்கா...!!!

  ReplyDelete
 9. அருமை அருமை.இதைவிட எப்படிச் சொல்லமுடியும் !

  ReplyDelete
 10. அது தன் உண்மையில் திருவிழா,

  ஆனால் என்ன செய்வது நண்பரே!
  இங்கே பெரியாரின் படத்துக்கே
  மாலை போட்டு கற்பூரம் காட்டுமளவுக்கே சிலருக்கு பகுத்தறிவு வளர்ந்திருக்கிறது.

  நல்ல சிந்தனை.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. ///பலியிடுவோம்
  சாதிகளையும், மதங்களையும்....!
  விழா எடுப்போம்
  வன்முறையும், தீவிரவாதமும இறந்த நாளில்...!////  நிழல்களாய்த் தெரியும்... இவ்விரண்டுமே

  நிஜமாய்... நம்மெதிரில்
  நடமாடினால்....!

  கனவுகளாய் இல்லாமல்...
  நனவாகிப் போனால்...

  "எந்நாடு...! பொன்நாடு...!
  என்மக்கள்...! மகிழ்மக்கள்...!

  நல்ல வரிகள்...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  ReplyDelete
 12. நல்ல திருவிழா சாரி நல்ல கவிதை வரிகள்

  ReplyDelete
 13. <<எந்த கருத்தாக இருந்தாலும் பதிவுச்செய்யுங்கள் நண்புரே..

  எனக்கு அதில் ஒரு கரு கிடைக்கும்...

  haa haa ஹா ஹா அடப்பாவி

  ReplyDelete
 14. நல்ல வார்த்தை கோர்வை,நன்றாக இருக்கிறது.நன்றி வணக்கம்.

  ReplyDelete
 15. இத்தனை சிரமம் எதற்கு? சக மனிதனை மனிதனாகப் பார்த்தால் போதுமே.

  உண்மையில் இன்றைக்குத் தேவையான நல்ல கருத்துகள். பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும்..

  ReplyDelete
 16. சாதியும் மதமும் சமயுமும் காணா
  ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

  சாதியும் மதமும் சமயமும் பொய்யென
  ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

  நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
  நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

  அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
  வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
  வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
  யாதெனில் ..
  சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
  சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
  சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
  சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
  சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

  உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
  கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
  கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
  கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
  காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
  பிள்ளை விளையாட்டு ....

  குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
  அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

  See this site :
  http://www.vallalyaar.com/

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...