கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 November, 2011

இவர்களை விட்டுவிட்டு கனிமொழியை மட்டும் தண்டிப்பது நியாயமா..?


கடந்த 100 நாட்களாக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் தகவல் கனிமொழி ஊழல் பற்றியதே. அவர் கைது மற்றும் அதற்கு பின் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா..? கிடைக்காதா.. ? என்ற பிரச்சனை பரவலாக பேசப்பட்டு வருகிறது..

இப்படி ஆளாளுக்கு அவரை இம்சிப்பது ஏன்என்று தெரியவில்லை. அப்படி என்ன செய்துவிட்டார் அவர். தனக்கு நெருக்கமான ஒரு அமைச்சரிடம் வெறும் 200 கோடி பணம்பெற்று அதை தமிழக மக்களும், உலக மக்களும் பயன்பெரும் வகையில் கலைஞர் பெயரில் பல்வேறு தொலைகாட்சி சானல்களை தானே தொடங்கினார் அதைஎப்படி தவறு என்று சொல்வது. அந்த பணத்துக்கு ஏதாவது ‌வாங்கி செலவு செய்துவிட்டாரா என்ன..?

வெறும் 200 கோடிக்கு போர்கொடி தூக்கும் நீங்கள் கீழ்கண்டவர்கள் தவறு செய்யும்போது ஏன் வாயை மூடிக்கொண்டு இருந்திர்கள்.. முதல் அவர்களை கேளுங்கள் அப்புறம் கனிமொழியை கேட்க்கலாம்.


சிவாஜி தி பாஸ் என்ற பெயரில் ஒருவர் பல்லாயிரம் கோடி ஊழல் செய்து தன்னுடைய பெயரில் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை என்று அமைத்துக்கொண்டார். அதற்கு நீங்கள் அமைதியாய் இல்லாவிட்டாலும் பரவாயில்லை பாராட்டி வெற்றி கொண்டாட்டம் செய்தீர்கள். அவரை சூப்பர்ஸ்டார் என்று தலையில் தூக்கிவச்சி கொண்டாடினீர்கள்..!


கந்தசாமி என்ற ஒருவர், வருமானவரித் துறையில் பணிபுரிந்துக்கொண்டு வரிஏய்ப்பு செய்பவர்களிடம் இருந்து பணத்தை சுருட்டி அவர் இஷ்டத்துக்கு யார்யாருக்கோ கொடுத்தார். அப்போது நீங்கள் ஏன் எதற்கு என்று கேட்டீர்களா...!

தற்போது கூட மங்காத்தா ஆடுவதாக சொல்லி இரண்டு போலீஸ் அதிகாரிகள்  500 கோடியை அபேஷ் செய்தார்கள் அதற்கு தைதட்டி பாராட்டினீர்கள்...

இவர்களெல்லாம் பலநூறு‌கோடி ஊழல் செய்து விட்டு சந்தோஷமாக வெளியில் இருக்கிறார்கள். பாவம் கனிமொழியை மட்டும் உள்ளே வைத்திருப்பது கொஞ்சம் கூட நியாயம் இல்லை தானே...


இதையெல்லாம் தவறு என்று சொல்லாத நீங்கள் ஒன்றும் தெரியாத வெறும் 200 கோடியை மட்டுமே வாங்கிய கனிமொழியை மட்டும் குறைசொல்வது எந்தவிதத்தில் நியாயம்...

(கனிமொழியை பற்றிய பரபரப்பு செய்திகளுக்கு மத்தியில் அதே குற்றத்தை வைத்துக்கொண்டு ஒரு நகைச்சுவை பதிவு...)
 

டிஸ்கி : எங்க திரும்பினாலும் கனிமொழி பற்றிய பதிவும் செய்தியும் படிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரே மாதிரி இருப்பதால் மிகவும் வெறுப்படைந்து கொஞ்சம் நகைச்சுவை கலந்து தந்திருக்கிறேன்.

டிஸ்கி 1 : அதை விடுத்து நீ என்ன கனிமொழிக்கு கைகூலியான்னு யாராவது கேட்டா அம்புட்டுத்தான்.

31 comments:

 1. கனி மேல ரொம்பக் ’கனி’வுதான்!

  ReplyDelete
 2. உங்களிக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயமா?

  ஆனா நல்லா யோசிக்குறிங்க போங்க!

  ReplyDelete
 3. ரஜினி ஒரு அப்பாவி. அவரை வம்புக்கு இழுக்கலாமா?

  ReplyDelete
 4. அவங்க நிழலில் செய்ததை கனிமொழி நிஜத்தில் செய்த கதாநாயகி!

  ReplyDelete
 5. ஹிஹி...உமக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது ஒத்துக்கறேன்!

  ReplyDelete
 6. ஹா.ஹா.ஹா.ஹா...........நான் கூட ஆரம்பத்தில் சீரியஸ் பதிவுனு நினைச்சுட்டேன் அப்பறம் படிக்கதான் தெரியுது மொக்கைனு....சூப்பர் பாஸ்

  ReplyDelete
 7. எலேய் எங்களை கொல்லுறியே அவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 8. எங்க திரும்பினாலும் கனிமொழி பற்றிய பதிவும் செய்தியும் படிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரே மாதிரி இருப்பதால் மிகவும் வெறுப்படைந்து கொஞ்சம் நகைச்சுவை கலந்து தந்திருக்கிறேன்.//

  ஹா ஹா ஹா ஹா முடியல, நான் எங்கேயாவது மலையில இருந்து குதிக்கப்போறேன் விடுங்கய்யா என்னை....

  ReplyDelete
 9. இதையெல்லாம் தவறு என்று சொல்லாத நீங்கள் ஒன்றும் தெரியாத வெறும் 200 கோடியை மட்டுமே வாங்கிய கனிமொழியை மட்டும் குறைசொல்வது எந்தவிதத்தில் நியாயம்...//

  கண்ணுல ரத்தக்கண்ணீர் வருதுலேய்...

  ReplyDelete
 10. இப்பிடி ரத்தம் வரவச்சிட்டியே பாவீ.....

  ReplyDelete
 11. நல்லாக் கேட்டீங்களே ஒரு கேள்வி...

  ReplyDelete
 12. மாப்ள நான்கூட ஏதோ சீரியஸ் பதிவோன்னு நெனச்சேன்...

  ReplyDelete
 13. நல்லாத் தான் இருக்கு நண்பரே...

  ReplyDelete
 14. இந்த நேரத்தில் சீரியஸா எதுவும் நடக்காது 20ந் தேதிவரை ! அந்த தையிரியத்தில் கலாயுங்க !

  ReplyDelete
 15. நல்லா தானே போய் கிட்டு இருந்திச்சு, ஏன் இப்படி? ஏன் இந்த கொலை வெறி

  ReplyDelete
 16. ஓட்டு மட்டும்தான் போட்டிருக்கேன் சௌந்தர் !

  ReplyDelete
 17. நல்ல கற்பனை

  த.ம 7

  ReplyDelete
 18. ஜென்டில்மேன் அர்ஜூனை வுட்டுட்டீங்களே....சரி விடுங்க... அப்போ சீக்கிரமாவே ஒரு படம் வந்துடும்ன்னு சொல்றீங்க....ரொம்ப நக்கலான ரசனையுள்ள பதிவு...

  ReplyDelete
 19. நான்கூட கனிமொழிக்கு வக்காலத்து வாங்கி இருக்கீங்கன்னு நினைச்சேன்..

  ஹா.ஹா...

  ReplyDelete
 20. உடனே சிபிஐ க்கு பொன் பண்ணுங்க ...

  ReplyDelete
 21. உங்களிக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயமா?
  >>>
  சரியான கேள்வி சகோ

  ReplyDelete
 22. சிரிப்பு பதிவா இது. ரைட்டு சிரிக்கிறேன்... ஹா..ஹா...


  நம்ம தளத்தில்:
  மதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க!

  ReplyDelete
 23. ஐயோ பாவம் ஆமையை அடுக்கி
  றாங்களே!
  அப்படி சொல்லி அப்படியே
  அடிக்காதீங்கப்பா அதை
  திருப்பிப் போட்டு அடிங்கன்னு
  சொன்னானாம் அது தான் இது!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 24. நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவானாலும் கேட்ட கேள்விகள் சரியானதே.கனிமொழியை குறை கூருபவர்கள் தாங்கள் அந்த 200 கோடியை பெற்று இருந்தால் குறை கூறியிருக்க மாட்டார்கள். எல்லாம் பொறாமைதான் காரணம். கனிமொழியை குறை கூறுபவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல

  ReplyDelete
 25. வழமையான உங்கள் பாணியில் மரணமொக்கை...

  ReplyDelete
 26. கனிமொழியைப் படிக்க சொல்லுங்க... கொஞ்சம் சிரிச்சுக்கிடட்டும்.

  ReplyDelete
 27. வித்யாசமா கலக்கிருக்கீங்க.

  ReplyDelete
 28. என்னவோ ஏதோன்னு நெனச்சேன்....
  நகைச்சுவையா கலக்கிட்டீங்க....
  அரசியலையே நகைச்சுவையா மாத்திட்டீங்க....
  வாழ்த்துக்கள்.....

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...