கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 November, 2011

என்ன கொடுமை இது... கொலைவெறியுடன் ஒரு பதிவு...


ரேகை சாஸ்திரி : ரொம்ப படிச்ச, மரியாதையான, அடங்கி நடப்பவளான பெண் தான் உனக்கு மனைவியா வருவா சார்..!

மற்றவர் : ஐயையோ..! அப்படியானால் இப்போதிருக்கிற மனைவிளை என்ன செய்வது..?


பிச்சைக்காரன் 1 : டாக்டர், இனிமேல் என்னை ராத்திரியிலே கண்விழிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார்..!

பிச்சைக்காரன் 2 : அதுக்காகவா, கவலைப்படறியா... என்ன...!

பிச்சைக்காரன் 1 : ஆமாம்!. எனக்குச் சாப்பாட்டுக்குப் பிரச்சினையில்லே, ஆனா “ராப்பிச்சை”ன்கிற பட்டம் பறி‌போயிடுமே, அதான் எனக்கு ரொம்ப கவலையாய் இருக்கு...!நபர் 1 : கிளி ‌ஜோசியம் பார்க்கிற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாயே!.. வாழ்க்கை எப்படி இருக்கு..?

நபர் 2 : அதையேன் கேட்கிறே, ‌சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி என்னை ரொம்பவும் வெறுப்பேத்துகிறாள்..!

நபர் 1 : ???????????!!!!!!!!!!!!ரமேஷ் : உங்களுக்கு வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்கிற பழக்கமே இல்லையாமே...! உண்மையா?

சுரேஷ் : நீங்க மத்தவங்க சொல்றதையெல்லாம் நம்பாதீங்க. நீங்க இப்ப எனக்கு 1000 ரூபாய் கடன் கொடுங்க அப்புறம் பாருங்க, என்னோட நாணயத்தை..!

ரமேஷ் : ...!!!!!!!????????மனைவி : என்னங்க, நம்ம பையன் புல்லரிக்கிற மாதிரி ஒரு காரியம் பண்ணிட்டு வந்திருக்கான்...!

கணவன் : வெரிகுட்..! என் பையனாச்சே, அப்படி என்ன காரியம் பண்ணியிருக்கான்..?

மனைவி : புல் தரையிலே விழுந்து புரண்டுட்டு வந்திருக்கான், இப்போ அவனோ் உடம்பு முழுக்க அரிக்குதாம்.
 

வந்தவர் : டாக்டர், போன மாதம் நீங்க எனக்கு ஆபரேஷன் செய்ததுக்கப்புறம் என்னோட வாழ்க்கையே மாறிப்பேச்சு தெரியுமா..!

டாக்டர் : வெரிகுட்..! என்னோட திறமை அப்படி..!

வந்தவர் : மண்ணாங்கட்டி, ஆபரேஷன் செய்து என்னை சாடிச்சது ஞாபகம் இல்லியா..? இப்ப நான் ஆவியா வந்திருக்கேன்..!

 
ஒருத்தி : என்னைப் பெண்பார்க்க வந்தவர்களுக்கு நானே அல்வாவும், கேசரியும் செய்து வெச்சது ரொம்பவும், நல்லதாகப் போச்சுடி..!

மற்றவள் : ஏனடி, அப்படிச் சொல்றே..!

ஒருத்தி : கல்யாணத்துக்கப்புறம் நான் சமைக்க முயற்சி பண்ணக் கூடாதுன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்கிட்டே சத்தியம் வாங்கிட்டாங்..!

ஏன் இந்த கொலைவெறி என்று
மனோ கோவப்படுற மாதிரி தெரியுது...
கோவம் வேண்டாம்... கூல்...

32 comments:

 1. ரசனையான நகைச்சுவைகள்.. ரசித்தேன்

  ReplyDelete
 2. நாங்க ஏன் இந்த கொலைவெறி என்று கேக்க மாட்டோம்? இப்ப trend why this கொலவெறி?

  ReplyDelete
 3. கலக்கலான படங்கள்
  அருமை நண்பா

  ReplyDelete
 4. அழகான படங்கள். ரசிக்க வைத்த நகைச்சுவை. மிக ரசித்தேன்.

  ReplyDelete
 5. கவிதை வீதி எங்கும் நீங்கள் பதித்த சிரிப்பு முத்துக்களை, தேடி படித்தேன்!!
  படங்கள் கூட தன் பங்கிற்கு சிரிப்பூட்டின! அருமை அருமை!!

  ReplyDelete
 6. அனைத்தும் அருமை ...ஒன்றை ஓன்று மிஞ்சுகிறது வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 7. நீங்க கலக்குங்க கவிஞரே ..
  படங்களும் , துணுக்குகளும் சுவை கூட்டுது ...

  ReplyDelete
 8. இந்த படங்கள் எங்க சார் கிடைக்குது உங்களுக்கு...

  ReplyDelete
 9. சிரிப்பிற்கு உத்தரவாதம்.

  ReplyDelete
 10. ஜோக்ஸ் நல்லா இருக்குய்யா! மாப்ள இந்த தலைப்ப பாத்து ஆடிப்போயிட்டேன்..ஹிஹி..சரி விடு!

  ReplyDelete
 11. படங்களை ரசிப்பதா
  பதிவை ரசிப்பதா என திக்குமுக்காடிப் போனேன்
  பதிவும் படங்களும் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. நகைச்சுவை கலக்கல் நண்பரே

  ReplyDelete
 13. என்னை எதுக்குய்யா வம்புக்கு இழுக்குரீர், இருய்யா விக்கிகிட்டே போட்டு குடுக்குறேன் ஹி ஹி...

  ReplyDelete
 14. விக்கியுலகம் said...
  ஜோக்ஸ் நல்லா இருக்குய்யா! மாப்ள இந்த தலைப்ப பாத்து ஆடிப்போயிட்டேன்..ஹிஹி..சரி விடு!//

  டேய் அப்போ நீ தலைப்பை மட்டும்தான் படிச்சியா ராஸ்கல்...

  ReplyDelete
 15. தனுஷின் கொலவெறி பாட்டை உமக்கு டேடிக்கேட் பண்ணுறேன்.....

  ReplyDelete
 16. அடுத்து இரண்டு நாள் விடுமுறை வாறதால வெள்ளிக்கிழமையில இப்பிடி ஒரு கொலை வெறி வருமோ சௌந்தர் !

  ReplyDelete
 17. நல்ல நகைச்சுவைப் பதிவு
  அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. படங்களும் பதிவும் அருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. அருமை அண்ணா.. சிரித்தேன்..

  ReplyDelete
 20. படங்களை எங்க எடுக்குறீங்க கலக்கல் அன்பரே நகைச்சுவையும் தான்

  ReplyDelete
 21. நல்ல நகைச்சுவை பதிவு :)

  ReplyDelete
 22. சரியாக் கேட்டாரு சூரியஜீவா!
  த.ம.6

  ReplyDelete
 23. ரசனையான நகைச்சுவை. படங்கள் எல்லாம் கலக்கல்.

  ReplyDelete
 24. Sago. Appave vote poten. Anal comment anuga mudiyala. Athan ippa comment poduren. Kalakkal.

  ReplyDelete
 25. அன்பின் சௌந்தர் - படம் / ஜோக்ஸ் - எல்லாமே நல்லா இருக்கு - ரொம்ப ரசிச்சேன் - படமெல்லாம் கூகுள்ள தேடுறதே வேலையா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 26. கொலைவெறி கொஞ்சம் தூக்கலா இருக்கு.

  ReplyDelete
 27. பார்த்தேன்... ரசித்தேன்... படித்தேன்... சிரித்தேன்... நன்றி நண்பரே!

  ReplyDelete
 28. அந்த நாய்க்குட்டி படம் சிறப்பாக இருக்கு நண்பரே

  அன்பு கலந்த வணக்கம் நண்பரே இன்று நான் இந்த வலையுலகம் என்னும் கடலில் நீந்த வந்திருக்கின்றேன்..உங்கள் ஆதரவையும் தாறுங்கள்

  ReplyDelete
 29. ஹா ஹா! நல்ல ஜோக்ஸ். குறிப்பா ஆயிரம் ரூபாய் கடன் கேட்கும் அந்த ஜோக்.

  கலக்குங்க.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...