கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 November, 2011

சென்னை எல்லா நாட்டையும் விஞ்சிவிட்டது... இதற்கு உங்கள் பதில்...!


 கடந்த வாரம் முழுவதும் தமிழகம் பலத்த மழையை சந்தித்துவருகிறது.
குறிப்பாக சென்னை, மதுரை, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரி, மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை  முழுமையாக நிரம்பி ‌வழிகிறது. இதன்காரணமாக இவ்ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன் விளைவாக சென்னை மழை நீரால் மட்டுமின்றி திறந்துவிடப்பட்ட இவ்ஏரிநீராலும் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

எல்லா நாட்டிலும் தண்ணீரில் கப்பல் விடுகிறார்கள்.. 
நாங்கள் சென்னையில்..!





இது எப்படியிருக்கு...!


மழை என்றால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். நாம் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாத வரை இந்த பிரச்சனைகளில் இருந்து மீளமுடியாது. அனுபவித்தே ஆகவேண்டும்.

அம்புட்டுதாங்க விஷயம்...

25 comments:

  1. மழை என்றால் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். நாம் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாத வரை இந்த பிரச்சனைகளில் இருந்து மீளமுடியாது. அனுபவித்தே ஆகவேண்டும்.
    >>>
    சரியாத் தான் சொல்லியிருக்கீங்க சகோ. “சம்பந்தப்பட்டவங்க” இதை உணர வேண்டுமே!?

    ReplyDelete
  2. வருடந்தோரும் சந்திக்கும் வழக்கமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. வேறு என்ன சொல்வது?

    ReplyDelete
  3. மாப்ள நல்லா சொல்லி இருக்கீங்க...அப்பவும் பாருங்க நீங்க போட்டு இருக்க மத்த படத்துல இருக்க வண்டில பொது மக்கள் போக முடியாது...ஆனா கடைசி போட்டோல இருக்க வண்டி ஒன்லி பொது மக்களுக்கு தான்யா...வாழ்க ஜனநாயகம்!

    ReplyDelete
  4. இன்னும் கொஞ்ச நாட்களில் தண்ணீர் பஞ்சம் வர வேண்டாமா? அதற்கான முன்னோட்டம்தான் இது.

    ReplyDelete
  5. வேதனைக்குரிய செய்திதான்...
    மழைநீர் வடிகால் அமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்
    என்று இயற்கையின் இடித்துரைக்கும் செயலைப் புரிந்து கொண்டு
    ஆள்வோர் செயல்பட வேண்டும்...

    ReplyDelete
  6. ''..இது எப்படியிருக்கு...!''

    ''...அம்புட்டுதாங்க விஷயம்...''

    குறுகலாகவும் தெளிவாகவும்....

    கண்கள் திறக்கட்டும்...
    வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.

    http://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
  7. நிதர்சன உண்மை..

    பார்ப்போம் அம்மா இந்த சாலைகளை என்ன பண்றாங்கன்னு..

    ReplyDelete
  8. இன்னும் இரண்டு நாட்கள் சென்னையில் மழை கொட்டினால் மெயின் ரோடுகளில் படகு விடும் நிலைதான் வரும். அதில் போனாலும் நல்லதுதான். பஸ் டிக்கட்டை விட கம்மியாகத்தான் கேட்பார்கள்.

    ReplyDelete
  9. எல்லாம் சரிதான் மழை நீரை சேமிக்கதெரியாமல் விட்டுட்டு இன்னும் கொஞ்ச நாள்ல தண்ணீர் பஞ்சம் என்று கிளம்புவாங்க பாருங்க..

    ReplyDelete
  10. வொய் திஸ் கொலவெறி மாப்பு...

    ReplyDelete
  11. நானும் என்னமோ விஷேசமா சொல்லப்போராருன்னு நினைச்சேன் பாவி இப்பிடி கவுத்துபுட்டியே ஹி ஹி...

    ReplyDelete
  12. சென்னையை எம்புட்டு நாறடிக்கனுமோ அம்புட்டு நாரடிச்சாச்சு போ ராசா போயி தூங்கு நிம்மதியா...!!!

    ReplyDelete
  13. ஹா ஹா நண்பா.... பட விளக்கம் சூப்பர்யா. சென்னை மட்டுமல்ல இன்றைய இந்தியா ஊழலில் மூழ்கி இருக்கும் போது எதுல மூழ்கினாலும் காப்பாத்த ஆள் இல்லை.

    ReplyDelete
  14. எனக்குள் நான் அப்படிங்கற பயங்கரத்துக்கு உங்கள கூப்பிடிருக்கேன். எழுதிடுங்க.


    நம்ம தளத்தில்:
    எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

    ReplyDelete
  15. நம் துரதிர்ஷ்டம் அன்றி வேறென்ன?

    ReplyDelete
  16. சரியா சொன்னீங்க .
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. புகைப்பட விளக்கம் அருமை..

    ReplyDelete
  18. நம்ம பஸ் ரோடுல போறதே சாதனை... தண்ணியில போறது...?

    ReplyDelete
  19. எல்லாரும் தண்ணில கப்பல் தான் விடறாங்க. நாம பஸ்ஸே விடறோம்.

    என்னமோ போங்க, இந்தியா வெளங்கிரும்.

    ReplyDelete
  20. சிரிக்க சிந்திக்க.

    ReplyDelete
  21. நானும் 20௦ வருடங்கள் (10 வருடங்களுக்கு முன்) சென்னையில் வசித்திருக்கிறேன். வருடா வருடம் இதே நிலைமை தான். இன்னும் சென்னை மாறவில்லை.
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete
  22. Other Towns are verymuch BETTER than Chennai in this season...
    S. Lurthuxavier
    Arumuganeri

    ReplyDelete
  23. அதெல்லாம் நீர்மூழ்கி நம்மது நீர்ல மூழ்குனா நாம காலி..ஹஹஹ

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...