கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

07 November, 2011

என் தரப்பு நியாயங்கள்

அன்பார்ந்த வாசக‌ பெருமக்களே... இந்த கட்டுரை என்மனதில் மட்டுமல்ல உலகில் பரந்து கிடக்கும் எல்லா மானிட நெஞ்சங்களிலும் புழுங்கிக்கிடப்பது...

உலகில் உள்ள எல்லா இடங்களிலும் வாழும் மனித மனங்களில் அநியாயத்துக்கு எதிராக ஒரு அக்னி எரிந்துக் கொண்டிருக்கிறது...

தீவிரவாதம் மட்டுமல்ல யாரெல்லாம் தன்னுடைய கடமையிலிருந்து விலகி நிற்கிறாரோ அவரும் தண்டனைக்குரியவரே....

 

இந்த சமூகம்... நான் என்பதோடு முடிந்து விடுவதில்லை நாம் என்பதில் தான் அடங்கிக்கிடக்கிறது... அந்த நாம்-க்குள்ளேதான் நான் என்ற ஒரு தனிமனிதனும் அடங்கியிருக்கிறான்...  

ஒரு நிமிடம் யோசியுங்கள் யாரோ ஒருவர், தவறு செய்யும் போது நாம் கொதித்து போகிறோம்... அந்த தவறை தட்டி ‌கேட்காவிடினும் குறைந்த பட்சம் இப்படி நடக்கிறதே எனறு புலம்பிக்கொண்டு போகிறோம். அது நமக்கு தவறென்று புரிகிறது.. ஆனால் அதே தவறை நாம் செய்யும் போது?
 
கொஞ்சம் யோசித்து பாருங்கள் மற்றொருவர் செய்யும் போது தவறானதாகதெரியும் ஒரு விஷயம் நாம் செய்யும் போது எப்படி சரியானதாக மாறிவிடுகிறது...



யோசித்து பாருங்கள்.. சாலை விதிகளை மதிக்காதவர் மீது நாம் கோவப்படுவோம்..

  • வேகமாக செல்லும் போது...
  • தேவையில்லாத இடத்தில் வானங்களை நிறுத்தும் போது..
  • அதிகமான ஆட்களை ஏற்றும் போது..
  • சாலை விதிகளை மதிக்காத போது...

    நாம் பிறறை குறை சொல்வோம்.. அதே தவறை நாம் செய்தால் சரியென்றும்.. “இப்ப என்ன அதற்கு” என்று வாக்குவாதம் செய்வோம்...


     

    ஓ... உலகத்தீரே நாம், என்றும் சமுதாய அக்கரையோடு வாழ்ந்தாக  வேண்டும். உலகம் சுருங்கிக்கொண்டு போகும் இன்‌றைய சூழலில் வாழ்க்கையும் சுருங்கிக்கொண்டே போகிறது.. 100 ஆண்டுகள் சராசரி வாழ்நாள் ‌என்பது மலையேறி விட்டது . 80, 60, தற்போது இந்தியரின் சராசரி வாழ்நாள் 48 ஆண்டுகள் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இயற்கையான மரணத்தை துறந்து அதை நாம் தேடி ‌செல்கிறாம்.
     
    என் தரப்பு நியாயம் :
     

    சாலையில் செல்லும் போது முறையான வேகத்தை கடைபிடிப்போம்.  

    சாலை விதிகளை குறைந்த பட்சமாவது கடைபிடிப்போம்.
     

    குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்ப்போம்.
     

    பிறறது உணர்வுகளை மதிப்போம்.
     
    பிறருக்கு தவறுகளை சுட்டிகாட்டுவதை விட அந்த தவறை நாம் ‌செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

    அதிகமான விபத்துகள் குடி போதையில் தான் நடக்கிறது.. குறிப்பாக மேலை நாடுகளில் அதிகமான விபத்துகள் குடிபோதையில் தான் நடக்கிறது என்கிறது ஒரு ஆய்வு..

    ‌‌அதை பார்த்து அதே தவறை நாம் செய்கிறோம். பிறர்க்கு அறிவுரை சொல்லும் போது அந்த அறிவுரைக்கான தகுதியை தாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

     
    தமிழகத்தில் வருடத்தின் முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது (1-1-2011 முதல் 7-1-2001 வரை) அதை உலகம் முழுவதும் விரிவுபடுத்துவோம்..

    நான் சாலை விதிகளை முறையாக பின்பற்றுகிறேன் - என்று நமக்குள்ளே
    உத்திரவாதம் கொடுத்துக்கொள்வோம் பிறகு பிறர்க்கு உபதேசிப்போம்..

    நம் உயிரும்.. நம் உறுப்புகளும்... விலைமதிக்க முடியாதவை.. நம்மை நம்பியே நாமும், நமது குடும்பமும், நமது சமுதாயமும் உள்ளது என்று உணர்வோம்... (இது ஒரு மீள் பதிவு)

     

    அன்பிற்கினிய இஸ்லாமிய நண்பர்களுக்கு 
    என் உளம்கனிந்த பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்..

    20 comments:

    1. -மிகச் சரியாகச் சொன்னீர்கள் சௌந்தர் சார்... நான் இந்த உறுதிமொழியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து செயல்படுத்தி வருகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நன்று.

      ReplyDelete
    2. உண்மைதான்.நாம்தான் முதலில் செயல்படுத்த வேண்டும். த.ம1

      ReplyDelete
    3. சரியாகச்சொன்னீர்கள் விழிப்புணர்வூட்டும் சிந்திக்கவேண்டிய கட்டுரை

      ReplyDelete
    4. நல்ல ஒரு சமூக நலப் பதிவு. பகிர்வுக்கு நன்றி.

      ReplyDelete
    5. மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்.. நாம் முறையாக இருப்போம்.. அப்படி ஒவ்வொருவரும் பின்பற்றினாலே சமூகம் சரியாக இருக்கும்... உணரவேண்டிய பதிவு... பகிர்வுக்கு நன்றி நண்பரே!

      ReplyDelete
    6. நான் சாலை விதிகளை முறையாக பின்பற்றுகிறேன் - என்று நமக்குள்ளே
      உத்திரவாதம் கொடுத்துக்கொள்வோம் பிறகு பிறர்க்கு உபதேசிப்போம்..//

      கண்டிப்பாக நானும் உறுதிமொழி எடுத்துகொள்கிறேன்...!!

      ReplyDelete
    7. சமூக அக்கறையான பதிவு நன்றி மக்கா...!!!

      ReplyDelete
    8. பிறருக்கு தவறுகளை சுட்டிகாட்டுவதை விட அந்த தவறை நாம் ‌செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

      //

      நிச்சயம் சொல்லி மட்டும் நிற்காமல் செய்வோம்!

      ReplyDelete
    9. ////ஒரு நிமிடம் யோசியுங்கள் யாரோ ஒருவர், தவறு செய்யும் போது நாம் கொதித்து போகிறோம்... அந்த தவறை தட்டி ‌கேட்காவிடினும் குறைந்த பட்சம் இப்படி நடக்கிறதே எனறு புலம்பிக்கொண்டு போகிறோம். அது நமக்கு தவறென்று புரிகிறது.. ஆனால் அதே தவறை நாம் செய்யும் போது?////

      நண்பரே...!

      சிந்திக்கச் சொல்றீங்க...!
      ரைட்டு...!

      சிந்திக்கிறேன்...!
      என்னை மட்டும்...!
      என் நலன் மட்டுமே சிந்திதிப்பவன் நான்...!

      என்னைத்தவிர மற்றவற்றைப் பேசுங்கள்...!

      ஆனா...!
      என்னைப் பற்றி மட்டும் பேசாதீர்கள்..!

      காரணம் நா...! யோக்கியயய்யா...!

      யோக்கியனுக்கு இருட்ல என்ன வேலன்னு கேட்காதீங்க...!

      ReplyDelete
    10. அலைபேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவதும் கூட இப்பொழுது அதிகமாகி இருக்கிறது... அதையும் உங்கள் பதிவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

      ReplyDelete
    11. சொல்வது அனைத்தும் சரிதான்.

      ReplyDelete
    12. உண்மைதான் நண்பரே. ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் தனிமனித ஒழுக்கங்களை கடைபிடித்தாலே குற்றங்கள் குறைய தொடங்கும்.

      ReplyDelete
    13. அருமையான கருத்தை தந்துள்ளீர்கள் நண்பரே ,அவ்வாரே கடைப்பிடிப்போம்

      ReplyDelete
    14. * வேகமாக செல்லும் போது...
      * தேவையில்லாத இடத்தில் வானங்களை நிறுத்தும் போது..
      * அதிகமான ஆட்களை ஏற்றும் போது..
      * சாலை விதிகளை மதிக்காத போது...

      ....
      இதுமட்டுமா சகோ! கரெக்டா தெரு முனையில ஒரு நாலு பேரு சைக்கிள், வண்டியில, நின்னுக்கிட்டு உலக சமாதானத்தை பேசுவாங்க பாருங்க. இறங்கி ஒரு அப்பு அப்பிட்டு வரலாமான்னு கூட நினைச்சுப்பேன்.

      ReplyDelete
    15. மீள் பதிவா???
      மீளச்செய்யும் பதிவு.
      வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    16. நானும் உங்கள் தரப்பில். விழிப்புணர்விற்கு நன்றி.

      ReplyDelete
    17. இனியாவது பிழை இன்றி எழுதுங்கள் சார்..

      - இப்படிக்கு பள்ளி மாணவன்.

      ReplyDelete

    நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
    கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

    Related Posts Plugin for WordPress, Blogger...