கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 January, 2012

சென்னை புத்தகக் கண்காட்சியும்.. என் அனுபவங்களும்...


வழக்கம்போல் சென்‌னையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் ஆரம்பித்திருந்தது 35-வது புத்தக கண்காட்சி. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக (எத்தனை முறை என்று சரியாக ஞாபகம் இல்லை) தொடர்ச்சியாக புத்தகக் கண்காட்சிக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளோம். நானும் வேடந்தாங்கல் கருணும்.

எப்போதும் எங்களுடன், எங்களுடைய நண்பர்கள் யாராவது கூட வருவார்கள். ஆனால் இந்தமுறை யாரும் இல்லாமல் நாங்கள் இருவர் மட்டும் இருசக்கரவாகனத்தில் திருவள்ளூரில் இருந்து கிளம்பினோம். (14-01-2012 சனிக்கிழமை) ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம், வழியாக புத்தக கண்காட்சிக்கு சென்றோம்.
 
பொதுவாக நாங்கள் ஒவ்வொறு வருடமும் மாலை நேரத்தில் செல்வதுதான் வழக்கமாக கொண்டிருந்தோம். ஆனால் இம்முறை காலை 9.00 மணிக்கே கிளம்பினோம். கிளம்பிய ஒரு மணிநேரத்தில் நண்பர் ரஹீம் கசாலி அவர்களிடம் இருந்து என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

”வணக்கம் தலைவரே.. சொல்லுங்க என்றேன்..”
 
“நான் சென்னை வந்திருக்கிறேன். புத்தக கண்காட்சிக்கு வரப்போகிறேன். நீங்களும் வருகிறீர்களா..?” என்று கேட்டார்.

”கிளம்பிட்டேன்... தலைவரே... சரியா.. 11.00 மணிக்கு அங்க இருப்போம்... என்றேன்..”

“அப்படியா நான் 2.00 மணிக்குதான் வருவேன் என்றார்”
 
“கூட யார் வற்றது என்றார்... ” “கருண் என்றேன்...”
 
”ரொம்ப நல்லதா போச்சி..” என்றார்...

சரிங்க பார்க்கலாம்.. என்றேன்...

நாங்கள் சரியாக 11.30 மணிக்கு புத்தக கண்காட்சியை அடைந்தோம். விடுமுறை நாள் என்பதால் அப்போதே கூட்டம் அலைமோதியது. பைக் பார்க் செய்ய ஒரு நீண்ட வரிசை இருந்தது. அதற்கு 10 ரூபாய் வேறு வசூலித்தார்கள். (இதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது).


வாகனங்களை நிறுத்த மிகபெரிய இடம் இப்பள்ளியில் இருக்கிறது. (இதற்கு முன் கயிதே மில்லத் கல்லூரியில் தான் புத்தக கண்காட்சி நடக்கும். அங்கு வாகனங்கள் நிறுத்த மிகபெரிய அவஸ்தையாக இருக்கும் ஸ்பென்சர் பிளாசாவில்தான் பார்க்கிங் இருக்கும்) புத்தக கண்காட்சியை இங்கு மாற்றிய பிறகு அந்த பிரச்சனை இல்லை.

நேராக சென்று நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு நானும் கருணும் புத்தக கண்காட்சி ”பாரதிதாசன் பாதை” வழியாக உள்ளே நுழைந்தோம்.

பொதுவாக கடந்த மூன்று வருடமாக நாங்கள் வாங்க நினைக்கும் புத்தகங்களை பட்டியலிடுவதில்லை. (அதற்கு முன்பெல்லாம் என்னன்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என்று பட்டியலோடு வந்து புத்தகங்களை வாங்குவோம்) இம்முறை நாவல், கவிதை, போன்றவற்றை தவிர்த்து பயன்படும் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றும் நானும்,

தன் மூன்று வயது மகளுக்காக சில புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று கருணும் முடிவு செய்திருந்தோம்.

முதலில் ஒரு ஓ‌ஷோ அவர்களின் புத்தம் ஒன்றை வாங்கினேன். அதன் பிறகு சுராவின் இயர்புக், தமிழக வரலாறு புத்தகம், சில நகைச்சுவை புத்தகங்கள், பாடம்சார்ந்த சில புத்தகங்கள் வாங்கினேன்.

அந்த பரபரப்பில் சிபி செந்தில் குமாரிடம் இருந்து போன். எந்த படத்துக்கு போறீங்க.. எந்த படத்துக்கு விமர்சனம் எழுதபோறீங்க என்று கேடடார். நான் விவரத்தை சொல்ல... அவர் நிம்மதியாக வேட்டை படத்துக்கு சென்றார். 

அனைத்தையும் கண்டுகளித்த பிறகு நேரம் 1.30-ஐ எட்டியது. எங்களுக்கு தேவையான சில புத்தகங்களை வாங்கிய பிறகு முதல் பாதை வழியாக வெளியே வந்தோம்.

மணி இரண்டு ஆகபோகிறது என்றவுடன் அடுத்து நாங்கள் சென்ற இடம் உணவகம். இருவரும் டோக்கன் வாங்கி
சோளாபூரி வாங்கி சாப்பிட்டோம். உணவகப்பொறுப்பை பெரிய நிறுவனம் எடுத்திருந்தது. பார்ப்பதற்கும், அங்கு இருந்த சூழலும் 5 நட்சத்திர ‌ஹோட்டலை ஞாபகப்படுத்தியது. விலைதான் கொஞ்சம் அதிகம். சில பள்ளி மாணவர்கள், கல்லூரி பெண்கள் விலை பட்டியலை பார்த்துவிட்டு திரும்பிச்சென்ற காட்சியை பார்க்க முடிந்தது.

மதிய உணவை முடித்துக்கொண்டு புதிய தலைமுறை கலையரங்க பந்தலுக்கு வந்தமர்ந்தோம். மேடையில் மணிமேகலை பிரசுரம் சார்பில் 25 புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. லேனா தமிழ்வாணன் தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு டி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டிருந்தார். பல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களின் வெளியிடு நடந்துக் கொண்டிருந்தது.

அப்போது புத்தக காட்சிக்கு வந்திருந்தார் ரஹீம் கசாலி,  மற்றும் சிராஜ் அவர்களும், அவர்களுடன் மெட்ராஸ பவன் சிவக்குமார். மற்றும் பிலசபி பிரபாகரன் ஆகியோருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அரங்குகளை சுற்றினோம். 

சிராஜ் அவர்கள் சமயம் சார்ந்த நூல்கள் வாங்க பெரிய பட்டிய‌வோடு சில அரங்குகளை முற்றுகையிட்டார். கசாலி இதையெல்லாம் ஊருக்கு நான் சுமந்து ‌செல்ல வேண்டும் என்ற கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
 

வெகுநேரம் ஆனதால் 4.30 மணிக்கு கிளம்ப தீர்மானித்து அனைவரிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.

கிளம்பியபோது மிகபெரிய கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கே.ஆர்.பி. செந்தில், கேபிள் சங்கர் ஆகியோர் மாலை 6.00 மணிக்குதான் கண்காட்சிக்கு வருவதாக சொன்னார்கள். அதனால் அவர்களை பார்க்க முடியவில்லை. வருடாவருடம் புத்தக கண்காட்சிக்கு மக்கள் தரும் ஆதரவு பிரமிக்கவைக்கிறது. இம்முறை குழந்தைகள், சிறார்களை அதிகம் காண முடிந்தது. மக்களிடம் புத்தகம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பது நல்லதே. புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருப்பதும் வரவேற்கத்தக்கதே.


அனைத்து அரங்குகளும் அழகிய வண்ணத்தில் ‌பலலட்சம் புத்தகங்கள் அலங்கதித்தது. விலையில் 10% கழிவு கொடுத்திருந்தார்கள். இதை இன்னும் கொஞ்சம் அதிகரித்து 15 அல்லது 20 சதவீதம் என கொடுத்திருந்தால் புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.


சமூகத்தில் எத்தனை பரிமாற்றங்கள் வந்தாலும் புத்தகங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு மற்றும் ஆர்வம், புத்தக வாசிப்பு இந்த நூற்றாண்டுகளில் முடிந்துவிடும் நிகழ்வு என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு உள்ளது.

46 comments:

 1. நண்பா... நானும் மாலை 6 மணிக்கு வந்திருந்து கஸாலி, சிராஜ், சிவகுமார் ஆகியோரை சந்தித்து பேசி மகிழ்ந்தேன். நீங்களும் கருணும் வந்து போய் விட்டதாகச் சொன்னார்கள். தோழனைப் பார்க்கும் வாய்ப்பை தவறவிட்டதை அறிந்து வருந்தினேன். இறைவன் சித்தமிருப்பின் விரைவில் சந்திக்கிறேன்.

  ReplyDelete
 2. //////
  கணேஷ் said... [Reply to comment]

  நண்பா... நானும் மாலை 6 மணிக்கு வந்திருந்து கஸாலி, சிராஜ், சிவகுமார் ஆகியோரை சந்தித்து பேசி மகிழ்ந்தேன். நீங்களும் கருணும் வந்து போய் விட்டதாகச் சொன்னார்கள். தோழனைப் பார்க்கும் வாய்ப்பை தவறவிட்டதை அறிந்து வருந்தினேன். இறைவன் சித்தமிருப்பின் விரைவில் சந்திக்கிறேன்.
  //////


  நீங்க ஒரு போன் செய்திருந்தால் கண்டிப்பாக காத்திருந்திருப்போம் தலைவரே...

  கண்டிப்பாக விரைவில் சந்திப்போம்...

  ReplyDelete
 3. பகிர்வுக்கு மகிழ்ச்சி .
  எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 4. நீங்க வரப்போற டைமை முதல்லியே போஸ்ட்ல சொல்லி இருந்தா நான் பஸ் பிட்ச்சி சென்னை வந்திரிப்பேன், சென்னை வந்த வெண்ணை என ஒரு போஸ்ட் போட்டிருக்கலாம் ஹி ஹி

  ReplyDelete
 5. மிகச் சிறப்பாகப் பகிர்ந்துள்ளீர்கள். கண்காட்சியுமாச்சு;பதிவர் சந்திப்புமாச்சு!

  ReplyDelete
 6. /////
  நண்டு @நொரண்டு -ஈரோடு said... [Reply to comment]

  பகிர்வுக்கு மகிழ்ச்சி .
  எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

  /////////

  தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. வழக்கமாக புதுச்சேரி புத்தக கண்காட்சிக்கு (25 % கழிவு) செல்லும் நான், இந்த ஆண்டு அங்கே நடத்தப்படாததால், சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்தேன். புத்தக கண்காட்சி என்றாலே திருவிழா தான். பல நாள் தேடிய பல புத்தகங்கள் கிடைத்தன. தூக்க முடியாமல் தூக்கி வந்தேன்.

  மனம் நிறைய புத்தகம் வாங்கி இருக்கிறீர்கள். நிறைய படித்து விட்டு நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சென்னை புத்தக கண்காட்சியில் கூட 20 அல்லது 25 சதவீதம் தள்ளுபடி கொடுத்தால் நன்றாக இருக்கும் ...

   Delete
 8. /////
  சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

  நீங்க வரப்போற டைமை முதல்லியே போஸ்ட்ல சொல்லி இருந்தா நான் பஸ் பிட்ச்சி சென்னை வந்திரிப்பேன், சென்னை வந்த வெண்ணை என ஒரு போஸ்ட் போட்டிருக்கலாம் ஹி ஹி

  //////////

  ரைட்டு...

  ReplyDelete
 9. வருடாவருடம் புத்தக கண்காட்சிக்கு மக்கள் தரும் ஆதரவு பிரமிக்கவைக்கிறது. இம்முறை குழந்தைகள், சிறார்களை அதிகம் காண முடிந்தது. மக்களிடம் புத்தகம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பது நல்லதே. புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருப்பதும் வரவேற்கத்தக்கதே./

  Nice..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி தோழி....

   Delete
 10. வணக்கம்!
  தமிழ் நாட்டின் மையத்தில் இருப்பதால், எங்களைப் போன்றவர்கள் புத்தகக் கண்காட்சிக்காக மெனக்கெட்டு சென்னை வரமுடிவதில்லை. கண்காட்சியைப் பற்றிய பதிவர்களின் பதிவுகளையும் படங்களையும் பார்த்துக் கொள்வதோடு சரி. உங்கள் பதிவும் அந்தவகையில் பயன் தந்தது. நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி இளங்கோ...

   Delete
 11. //லேனா தமிழ்வாணன் தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு டி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டிருந்தார்.//

  அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.....

  ReplyDelete
  Replies
  1. டி ஆரை பார்த்தவுடன் நம்ம டீக்கடை சிராஜ் அவர்கள் அடித்த கமாண்ட்...

   இங்க கரடியைபத்தி ஏதாவது புத்தகம் வெளியிடுறாங்களா..!

   Delete
  2. இப்படி உண்மைகளை உடைக்கக்கூடாது....அவ்வ்வ்வ்வ்

   Delete
  3. சகோ சவுந்தர்,

   இந்த மாதிரி விஷயங்கள பகிரங்கமா சபையில சொல்லக்கூடாது. TR க்கு தெரிஞ்சா ஆப்ரிக்கா மியூசிக் போட்டே என்ன கொன்னுடுவாரு.
   பதிவுலகத்தில செய்ய வேண்டிய வேலை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. அதுக்கிடையில் நம்மள காலி பண்ணிறாதீங்க....

   Delete
  4. நீங்க கலக்குங்க சிராஜ்...

   கரடிக்ககெல்லாம் பயந்தா ஆகுமா..?

   Delete
 12. //இம்முறை நாவல், கவிதை, போன்றவற்றை தவிர்த்து பயன்படும் புத்தகங்கள் வாங்க வேண்டும் என்றும் நானும்,//

  பதிவுலக பாதிப்பா அண்ணே...?

  ReplyDelete
  Replies
  1. பாதிப்பு ஒண்றும் இல்லை மயிலன்...

   பொதுவாக நாவல்கள் கவிதை நூல்கள் ஒரு முறை வாசித்துவிட்டபின் மீண்டும் அதை வாசிக்க முயல்வதில்லை.   வைரமுத்து, கண்ணதாசன், மற்றும் பிரபல கவிஞர்களின் படைப்புகள் அனைத்தும் இருக்கிறது. ஒருமுறை படித்துவிட்டபின் அவைகள் அலமாரியில் தூங்கிக்கொண்டு இருக்கிறது...

   இலக்கிய சார்ந்த புத்தகங்கள், பயன்படு கலைகள், இலக்கணம், வரலாறு, பொது அறிவு போன்ற நூல்கள் நமக்கும் பிறருக்கும் அடிக்கடி பயன்படும் எனபதாலே இந்த முடிவு...

   தற்போது அதுபோன்ற புத்தகங்களையே வாங்கினேன்...

   தங்கள் வருகைக்கு நன்றி..!

   Delete
 13. நல்ல பகிர்வு நண்பா......

  நல்ல புத்தகங்கள் வாசிக்க உபயோகமான விழா புத்தக திருவிழா....

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நல்லது பிரகாஷ்....

   அப்புறம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளைக்கு நடக்கபோகுது...
   பார்க்க போறீங்களா...

   Delete
 14. நூல்கள் விற்பனை ஆறுதலான தகவல் நன்றி
  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  www.eraeravi.com
  www.kavimalar.com
  www.eraeravi.wordpress.com
  www.eraeravi.blogspot.com
  http://eluthu.com/user/index.php?user=eraeravi
  http://en.netlog.com/rraviravi/blog
  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 15. //அந்த பரபரப்பில் சிபி செந்தில் குமாரிடம் இருந்து போன். எந்த படத்துக்கு போறீங்க.. எந்த படத்துக்கு விமர்சனம் எழுதபோறீங்க என்று கேடடார். நான் விவரத்தை சொல்ல... அவர் நிம்மதியாக வேட்டை படத்துக்கு சென்றார். //

  ஹா.ஹா...சிபியை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள் போல..

  ReplyDelete
  Replies
  1. அப்படி புரிஞ்சிக்கலன்னா இங்க அவ்வளவுதான் சிவா

   Delete
 16. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. பதிவைப் படித்தேன் ஓட்டும் போட்டேன் அதற்குள்
  மின் தடை!
  தற்போதுதான் வந்தது
  நானும் இன்று புத்தகச் சந்தைக்குச்
  சென்றேன்!
  புத்தாண்டு+பொங்கல் வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. யோவ் 11.30 மணிக்கு வந்துட்டு எனக்கு 3 மணிக்கு போன் பன்றானா அந்த ராஸ்கல்......

  ReplyDelete
  Replies
  1. யோவ் உனக்கு பிரண்ஸை விட சர்க்கஸ் முக்கியமா போயிடிச்சி...

   Delete
  2. நீதான் சர்க்கஸ் போயிட்ட அப்புறம் எப்படி முன்னாடியே கூப்பிடறது

   Delete
 19. கொடுத்து வெச்சவங்கப்பா புத்தக கண்காட்சிய எஞ்சாய் பண்றீங்க......!

  ReplyDelete
 20. ////அந்த பரபரப்பில் சிபி செந்தில் குமாரிடம் இருந்து போன். எந்த படத்துக்கு போறீங்க.. எந்த படத்துக்கு விமர்சனம் எழுதபோறீங்க என்று கேடடார். நான் விவரத்தை சொல்ல... அவர் நிம்மதியாக வேட்டை படத்துக்கு சென்றார்.////

  அவர் கவலை அவருக்கு........

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னீங்க...

   நீங்களும் வாங்க தல அடுத்த புத்தக கண்காட்சியில் சந்திடிச்சிடுவோம்...

   Delete
 21. கணேஷ் அண்ணன்,
  உங்களுடன் நான் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. மன்னிக்கவும். நீங்களே காரணம் அறிவீர்கள்.

  ReplyDelete
 22. சகோ சவுந்தர்,

  கருண் மற்றும் உங்களைச் சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது. அதுவும் கூடவே கசாலி, சிவா மற்றும் தத்துவ ஞானி பிரபாகரும் இருந்தால் கேட்கவும் வேண்டுமா???

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை சந்திக்கும்போது நிறைய போசுவோம்...

   இம்முறை சரியாக பேச முடியவில்லை...

   Delete
 23. thanks for sharing u r experience about book fair...belated pongal wishes..

  ReplyDelete
 24. சுகமான அனுபவம். பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 25. புத்தகக் கண்காட்சி குறித்த தங்களின் பதிவு சிறப்பு.

  ReplyDelete
 26. புத்தகங்களை போன்ற நல்ல நண்பன் வேறில்லை என்பதை மக்கள் புரிந்துக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது சகோ

  ReplyDelete
 27. //அனைத்து அரங்குகளும் அழகிய வண்ணத்தில் ‌பலலட்சம் புத்தகங்கள் அலங்கதித்தது. விலையில் 10% கழிவு கொடுத்திருந்தார்கள். இதை இன்னும் கொஞ்சம் அதிகரித்து 15 அல்லது 20 சதவீதம் என கொடுத்திருந்தால் புத்தகம் வாங்குவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.//

  நியாயமான கோரிக்கை பதிப்பகத்தில் இருந்து நேரடியாக புத்தகம் வாசகனுக்கு செல்கிறது ஆகவே கழிவு கூடுதலாக கொடுக்கலாம்

  ReplyDelete
 28. நானும் சென்றுவிட்டு வந்தேன் சௌந்தர்....பதித்தும் விட்டேன்.....
  http://vannathuli.blogspot.com/2012/01/35.html
  நீங்கள் விவரித்திருந்த விதம் மீண்டும் புத்தக் கண்காட்சிக்கு போய் வந்த உணர்வை ஏற்படுத்தியது...

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...