கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 January, 2012

மதவாதத்தை தூண்டும் சில மனிதாபிமானமற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை..!



‌அமெரிக்க நாட்டுப் பெண்மணி ஒருத்தி, சுவாமி விவேகானந்தரைப் பார்த்து இறைவன் எல்லை கடந்தவர், மனம், வாக்கு, செயல்களுக்கு அப்பாற்பட்டவர் என்றகிறீர். ஆனால் உங்கள் நாட்டில் உருவமற்ற பரம்பொருளுக்கு உருவம் வைத்து வழிப்படுகின்றீர்களே எதற்காக..? என்று விளக்கம் கேட்டாள்.


உடனே சுவாமிஜி அவள் வீட்டில் உள்ள ஒரு போட்டோவை சுட்டிக்காட்டி “அது யார்”? என்று கேட்டார்.


என் தந்தையார் என்று பதில் சொன்னால் அந்தப் பெண்.

வெறும் சட்டமும், கண்ணாடியும், அட்டையும், ஓவியமாக இருக்கின்ற இது உன் தந்தையா? என்று கேட்டார் சுவாமிஜி.

இது என் தந்தையல்ல. ஆனால் என் தந்தையை நினைவூட்டுகின்ற அடையாளம் என்றால் அப்பெண்.

இதேபோல்தான் எங்கள் நாட்டிலுள்ள விக்ரகங்களுக்ளும் இறைவனை நினைவூட்டுகின்ற அடையாளமாகத் திகழ்கின்றன... என்று விளக்கமளித்தார்.



இந்த உலகில் வாழும் மக்கள் அவரவர் நம்பிக்கைக்கு ஏற்பவும்,  அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பவும், தன்னுடைய சமூக பழக்கவழக்கங்களை அடிப்படையாக வைத்து உறுவானதுதான் சமயங்கள்.


பண்டைய காலங்களில் எதற்கெல்லாம் பயந்தார்களோ, எதன்மீதெல்லாம் நம்பிக்கை வைத்தார்களோ அவையெல்லாம் இந்த பூமியில் தெய்வமாக மலர்ந்தது. சாதாரண செங்கல் முதற்கொண்டு வானுயர்ந்த சிகரங்கள் வரை இங்கு தெய்வமாக பார்க்கப்படுகிறது.


அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப கடவுள்களின் உருவங்களும், சடங்கு சம்பிரதாயங்களும், வழிபாடு முறைகளும் தோன்றியது. இன்றைய காலகட்டத்திற்கும் சிறிதளவும் மாற்றம் அடையால் இந்த உலகில் சமயங்கள் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.


இந்த உலகில் இருக்கும் அனைத்து சமயங்களும் தன்னுடைய தனித்தன்மையை காட்ட பலவகையில் வித்தியாசப்படும். அந்த வித்தியாசத்தை, அவர்கள் வழிப்பாடு முறைகளை, அவரவர் சமய சடங்குகளை மற்ற மதத்தினர்கள் குறைகூறவோ கேலிசெய்ய எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

இந்த உலகில் பிரதான சமயங்களாக உள்ளவைகள் மூன்று மட்டுமே அவை, கிறிஸ்துவம், இஸ்லாமியம், இந்து மதம், இந்த உலகம் முழுவதும் பரவிக்கிடப்பவர்கள் இவர்களே. இந்த மூன்று மதங்கள் சொல்கின்ற தத்துவமும், வாழ்க்கை முறையும் ஒன்று தான் அது சில இடங்களில் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப கொஞ்சம் மாறுபடலாம்.


அந்த மாறுபாட்டை மற்ற மதத்தவர் மதித்து நடந்துவிட்டால் இந்த உலகில் சண்டைசச்சரவுகள் இல்லாமல் இருக்கும். ஆனால் சில தீயசக்திகள் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என மற்றவரை விமர்சித்து அதில் எழும் சண்டைகளில் குளிர்காய்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.


வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே சாதாரண வாழ்நாளைக்கொண்ட நாம் யுகம் வாழ்பவர்கள்போல் மற்ற மதத்தவரை இழிவுபடுத்தியும், அவர்களை சாடியும் இந்த உலகின் சகமனிதர்கள்மீது அக்கறைகொள்ளாமல் வாழ்வது வீணே.


மதங்கள் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதுஇல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தற்போதைக்கு அதுகுறித்து சண்டைச்சச்சரவுகள் இல்லாமல் மட்டும் இருந்தால் போதும்.


எச்சரிக்கை என்றுதான் ‌தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன். இது எச்சரிக்கை ஒன்றும் இல்லை. ஒற்றுமையாக இருப்போம் என்பதற்கான அன்பு கலந்த கோரிக்கை அவ்வளவுதான்.

79 comments:

  1. இதத்தாங்க இஸ்லாம் மதம் சொல்கிறது. ஆனால் யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுக்கு இஸ்லாம் என்ற பெயர் ஏன் பலிகடா ஆக்கப்படுகிறது. நடுநிலையாளர்களுக்கு தெரியும் இஸ்லாம் என்றால் என்ன பெயர் என்று. உருவமில்லாத கடவுளுக்கு உருவத்தை கொடுத்து இவர்களால் முஸ்லிம்கள் கேட்டது மட்டும்தான் மிச்சம். இன்று பாருங்கள் எங்கெங்கும் தர்காக்கள் யார் காரணம்...தாங்கள் சம்பாரிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் நடத்தும் தொழில்..கோவிலில் அர்ச்சனை என்ற பெயரில் நடந்த தொழில் என்று முஸ்லிம்கள் தர்கா என்ற பெயரில் வசூல் செய்கிறார்கள். பத்து குண்டு வைத்தாலும் வைத்தவன் கிருஷ்ணனோ, இல்ல ராமனோ அட அதுவும் இல்லனா லாரான்சா இருந்தா பேரு போட்டு எழுதுவானுங்க ஆனா அப்துல்லாவ இருந்தா... இஸ்லாம் தீவிரவாதின்னு சொல்லுவானுங்க. அப்பதானே சொல்லுற அவங்களோட மனசு குளுரும். நடுநிலையாளர்கள் சிந்திக்கவும் - azifair-sirkali.blog

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆதங்களம் புரிகிறதே நண்பரே....

      மதத்தை மட்டும் அப்படி சொல்கிறார்கள் என்று தாங்கள் சொல்வது உண்மைதமான் ஆனால் அது சில இந்த உலகிற்கே தேவையில்லாத மனிதர்கள் அப்படி சொல்வார்கள்.

      இந்த உலகில் இருக்கும் எலலாமதத்திலும் சில மிருக குணம்கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த ஒரு சிலரால்தான் மதத்துக்கே இழிவு ஏற்படுகிறது.

      அடுத்தவர் உயிரை பறிக்கும் யாரும் தீவிரவாதிதான் அது எந்த மதமானாலும் சரி...

      Delete
  2. //மதங்கள் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதுஇல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தற்போதைக்கு அதுகுறித்து சண்டைச்சச்சரவுகள் இல்லாமல் மட்டும் இருந்தால் போதும்.
    //
    இதைதான் அனைவரும் எதிர்பார்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. அனைவரின் எதிர்பார்ப்பும் ஈடேர வேண்டும்
      அதுவே என்னுடைய ஆவலும்

      Delete
  3. மதம் மனிதனை நேர்வழி படுத்தத்தான் .. கெடுக்க இல்லை , சண்டை போடா இல்லை என அனைவரும் உணரவேண்டும்

    ReplyDelete
  4. //எச்சரிக்கை என்றுதான் ‌தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன். இது எச்சரிக்கை ஒன்றும் இல்லை. ஒற்றுமையாக இருப்போம் என்பதற்கான அன்பு கலந்த கோரிக்கை அவ்வளவுதான்//

    முடிவுரை, நல்ல தெளிவுரை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி ஐயா..!

      Delete
  5. வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே சாதாரண வாழ்நாளைக்கொண்ட நாம் யுகம் வாழ்பவர்கள்போல் மற்ற மதத்தவரை இழிவுபடுத்தியும், அவர்களை சாடியும் இந்த உலகின் சகமனிதர்கள்மீது அக்கறைகொள்ளாமல் வாழ்வது வீணே.
    >>>
    நிச்சயம் அனைவரும் யோசிக்க வேண்டிய வரிகள்

    ReplyDelete
    Replies
    1. இதை யோசித்து நடந்தாலே போதும் வாழ்க்கை வசந்தமாகிவிடும்

      Delete
  6. சரியான வார்த்தைகள் தான் மதங்கள் மரியாதையுடன் வாழ சகிப்புத்தன்மை,ஆதிக்கமில்லாத மனப்பான்மையும் தேவை இல்லாவிடில் அவற்றை தூக்கி எறிவதில் தவறில்லை...

    ReplyDelete
    Replies
    1. மதங்களை தவித்து மனிதாபிமானத்துக்கு மட்டுமே நம் கட்டுப்பட்டவர்களாக இருந்துவிட்டால் அந்த பூமி சொர்கம் தான்...

      Delete
  7. ஒற்றுமையாக இருப்போம் என்பதற்கான
    அன்பு கலந்த கோரிக்கை
    அழகாக இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி தோழியாரே...

      Delete
  8. யார் மீது அண்ணா இத்துனை கோபம்?

    ReplyDelete
    Replies
    1. கோவம் ஒண்றுமில்லை நண்பரே...

      இந்த மதவெறியை தூண்டிவிடும் செயல் பதிவுலகம் வரை நீண்டுவிட்டதே என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.

      சில பதிவர்கள் சமீபத்தில் இஸ்லாமிய நண்பர்கள மனம் சங்கடப்படும்படி பதிவிட்டார்கள் அதைதான் நான் மறைமுகமாக சாடியுள்ளேன்..

      Delete
    2. சில பதிவர்கள் சமீபத்தில் இஸ்லாமிய நண்பர்கள மனம் சங்கடப்படும்படி பதிவிட்டார்கள் அதைதான் நான் மறைமுகமாக சாடியுள்ளேன்.. ---மிக்க நன்றி சகோ.செளந்தர்.

      அப்படிப்பட்ட ஒரு கள்ளப்பேர்வழி (ibnu shakirஎன்ற பெயரில்) கீழே ஒரு நச்சு கமென்ட் போட்டு, எந்த நோக்கத்தில் எழுதினீர்களோ அது நிறைவேறக்கூடாது என்ற கெடும்பு புத்தியோடு விஷத்தை கலந்து விட்டு இருக்கிறார் பாருங்கள், சகோ.செளந்தர்.

      Delete
  9. வணக்கம்! எல்லா சமயமும் ஒன்றே, இறைவன் ஒன்றே என்று சொல்வதற்குக் கூட அனைத்து மத அடையாளங்களையும் நாம் போட்டுக் கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....

      மனதளவில் அந்த செயல் நடக்க வேண்டும் அதுதான் என்னுடைய எண்ணம்..

      Delete
  10. எம்மதமும் சம்மதம் என்ற வாக்கியம் பிரபலமானது போல அது தாங்கி வந்த கருத்து பிரபலமாகவில்லை என்கிறபோது வருத்தமாகத்தானிருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. ஒற்றுமை என்பது பேச்சளவில் இருப்பது வேதனைதான்

      Delete
  11. இந்த அடிதடி இணையம் வரை தொடர்கிறதே என்பது வேதனை. நல்ல கட்டுரை நண்பரே.

    ReplyDelete
  12. எச்சரிக்கை என்றுதான் ‌தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன். இது எச்சரிக்கை ஒன்றும் இல்லை. ஒற்றுமையாக இருப்போம் என்பதற்கான அன்பு கலந்த கோரிக்கை
    நியாமான கோரிக்கை மக்கள் மத்தியில் நிறைவேற்றப்படுமா

    ReplyDelete
    Replies
    1. நாம் எல்லோரும் படித்தவர்கள்...

      படித்தவர்கள் மத்தியில் இந்த ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அவா..!

      Delete
  13. நல்லா சொன்னீங்க மச்சி...

    ReplyDelete
  14. மிக சரியாக சொன்னீர்கள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஹாஜா...

      Delete
  15. நல்ல பகிர்வு பாஸ்

    அமேரிக்க பொண்ணுங்க விவேகானந்தரின் விளக்கம் பிரமாதம்

    ReplyDelete
  16. நலமா அண்ணா .....மத வேறு பாடுகள் அகல ஒன்றுபடுவோம்....நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கூடல் பாலா...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா...

      Delete
  17. ஸலாம் சகோ.செளந்தர்,
    சரியான நேரத்தில், உயர்ந்த நந்நோக்கோடு, தெளிவான பொதுநல சிந்தனையுடன், அருமையான கருத்துக்களைக் கோர்த்து எழுதப்பட்ட மிகச்சிறப்பான பதிவு..! வாழ்த்துகளுடன் மிக்க நன்றி சகோ.செளந்தர்..!

    ReplyDelete
  18. மதம் கடந்து நேசியுங்கள். மனிதம் கடந்தும் நேசியுங்கள். நேசிப்பை மட்டுமே சுவாசியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அழகிய வரிகள் ரசிகன்..

      தங்கள் கருத்தும் மிக்க நன்றி

      Delete
  19. மதம் பிடித்து அலையும் மக்கள் இருக்கும் வரை ஒரே ஒரு மதம் மட்டும் இருந்தால் கூட
    பிரச்னைகள் தொடரும் நண்பரே...உயர்ந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மதங்களை மதிக்கும் மனப்பான்மை அனைவரிடத்திலும் வரவேண்டும்..

      அதற்காகத்தான் இந்த பதிவே..

      Delete
  20. எங்கோ படித்த ஓர் கவிதை...

    பாகனுக்கு அழைப்பு விடுங்கள்..
    மதம் பிடித்துவிட்டது...
    கடைகளை மூடிவிட்டு ஓடிவிடுங்கள்..
    பாகனுக்கு அழைப்பு விடுங்கள்..
    மக்களிடம் இருந்து யானையைக் காப்பாற்ற...!

    ReplyDelete
    Replies
    1. இந்த நிலைதான் தற்போது நடக்கிறது மயிலன்..

      அழகிய வரிகளை கையாண்டுள்ளீர்

      Delete
  21. என்ன தலைவரே..கொஞ்ச நாளா பதிவுகளே இல்ல..?
    திரும்பி வந்தலில் சந்தோசம்...

    ReplyDelete
    Replies
    1. குறைத்துக்கொண்டேன் நண்பரே...

      இனி வாரத்திற்க்கு 1 அல்லது 2 பதிவுகள் மட்டுமே வரும்
      தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி

      Delete
  22. “//அந்த மாறுபாட்டை மற்ற மதத்தவர் மதித்து நடந்துவிட்டால் இந்த உலகில் சண்டைசச்சரவுகள் இல்லாமல் இருக்கும்//”
    மாமன்,மச்சான்,என்று முறை வைத்து கூப்பிட்ட இருபொறும்சமுகம், ஒருசில நயவஞ்சக நரிகளால் இன்று பிளவுபட்டுஉள்ளது.மாற்று மதநண்பர்களிடம் பழகிய அந்த கள்ளகபடமில்லா சூல்நிலை இன்று என்குழந்தைகளுக்கு இல்லாததை நினைத்தால்???
    எங்கே போனது அந்த மனிதநேயம்.

    ReplyDelete
    Replies
    1. இன்றை சூழ்நிலையை கண்டு மனம் வருந்துகிறேன் நண்பரே...

      இன்ற சமுதாயம் ஒரே கட்டிடத்தில் பலவாக பிரிந்திருக்கிறது..

      ஒற்றுமையான ஒரு சமுதாயம் இன்று கனவாகவே உள்ளது

      Delete
  23. வணக்கம் அண்ணா, சமூகத்திற்கு மிகவும் வேண்டப்பட்ட பதிவு. நான் ஆதங்கப்படும் அதே விடயத்தை இன்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. சகோ சவுந்தர்,

    உரிய நேரத்தில் வந்த அற்ப்புதமான பதிவு. சண்டை இட்டு நாம் சாதிக்கப்போவது எதுவும் இல்லை.
    குட்டக் குட்ட குனிபவனும் முட்டாள், குனியக் குனிய குட்டுபவனும் முட்டாள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்து உண்மைதான் நண்பரே...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  25. நேற்றே தங்கள் தளத்திற்கு வந்தேன். வாக்கிட்டேன். ஆனால் இணையப் பிரச்சனையினால் பின்னூட்டமிட இயலவில்லை சார். அருமையான உள்ளடக்கம் கொண்ட பதிவு. நீங்கள் ஊத வேண்டிய சங்கை ஊதி விட்டீர்கள். கேட்க வேண்டியவர்களுக்கு காது கேட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தளம்ட படிக்கப்படுவது என்பதால் இதைபடிப்பவர்கள் கண்டிப்பாக படித்தவர்களாகத்தால் இருக்க முடியும்.

      படித்த நம்மிடையே இந்த ஒற்றுமை இல்லாதிருந்தால் எப்படி..

      ஒன்று படுவோம்

      Delete
  26. மிகவும் அவசியமான பதிவு சௌந்தர்.மிக்க நன்றி !

    ReplyDelete
  27. காபிர் சகோ,

    //அந்த வித்தியாசத்தை, அவர்கள் வழிப்பாடு முறைகளை, அவரவர் சமய சடங்குகளை மற்ற மதத்தினர்கள் குறைகூறவோ கேலிசெய்ய எந்த ஒரு அதிகாரமும் இல்லை.//

    அதெல்லாம் சரிப்படாதுங்க. எங்க காககககே மொஹம்மது இப்னு அப்பதல்லா, இப்படி கேலி செய்து குறைகூறியே,, அப்புறம் என்னென்னவோ செய்து இறைவனின் உண்மையான ரைட் ராயல் ஒரிஜினல் மதத்தை கட்டியிருக்கிறார். நீங்கள் என்னடாவென்றால் அடிமடியிலேயே கை வைக்கிறீர்களே.
    இது ஒரு குற்றமுன்னா, காபிர்களை நாயே பேயேன்னு திட்டற குரானையே தடை செஞ்சிருவீங்க போலருக்கே..


    இந்த லட்சணத்தில் மதமல்ல மார்க்க சகோக்கள் வேறு இங்கு வந்து இந்த அபத்த களஞ்சியத்துக்கு ஆதரவு வேறு.

    காககககே சொன்ன இறுதி தீர்ப்பு நாள் வரபோகுதோன்னு அச்சமாருக்கு.

    ReplyDelete
    Replies
    1. //இப்படி கேலி செய்து குறைகூறியே//
      //காபிர்களை நாயே பேயேன்னு திட்டற//

      எங்கே ஆதாரம்...? அப்படி தரவில்லை என்றால், 'உன்னை மனிதத்தன்மை உள்ளவன்' என்று கூட ஒப்புக்கொள்ள மாட்டேன்.

      இந்த ஒரே ஒரு முறை இவனைஎல்லாம் ஒரு பொருட்டாக மதித்து ரிப்ளை போட்டதற்கு மற்றவர்கள் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

      Delete
    2. உங்களுடைய கருத்து மிகவும் ஆட்சேபனைக்குறியது..

      மீண்டும் சொல்கிறேன். மற்றவரின் மதச்சடங்குகளையோ, மத பழக்க வழக்கங்களையோ, அவர்களின் போக்கையோ மதம்சார்ந்ததாக இருப்பின் அதை விமர்சிக்க மற்றவருக்கு அதிகாரம் இல்லை.

      இது அவர்களை தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் செயலாகத்தான் இருக்கும்.

      Delete
    3. Ibnu ShakirJan 24, 2012 04:00 PM

      காபிர் சகோ,
      /////////
      இது ஒரு குற்றமுன்னா, காபிர்களை நாயே பேயேன்னு திட்டற குரானையே தடை செஞ்சிருவீங்க போலருக்கே..
      /////////

      மீண்டும் சொல்கிறேன் சகோ..

      உலகில் இரண்டாவது அதிக மக்களால் புனித நூலாக கடைபிடிக்கப்படும் குரானின் இருக்கும் அத்தனை வார்த்தைகளும் அதை வழிப்படுபவர்களுக்கு வேதமே.. அந்த புனித நூலில் எந்தக்கருத்தாக இருந்தாலும் அதை வழிப்படாத மற்றவர் அதை குறைக்கூறுவது இருக்கும் பிரச்சனை தூண்டுவிடுவதுபோல்..

      ஒற்றுமையுடன் இருந்துவிட்டால் இந்த உலகம் அழிந்துபோதைகூட அன்போடு வரவேற்கலாம்.

      ஒற்றுமை இன்று இந்த உலகம் கோடி வருடங்கள் உயிரோடு இருந்தாலும் வீண்தான்.

      Delete
  28. மயிலனின் "பாகனுக்கு அழைப்பு விடுங்கள்..
    மக்களிடம் இருந்து யானையைக் காப்பாற்ற...!" என்ற வரிகள் எனக்குப் பிடித்திருக்கிறது
    மதம் என்ற பெயரில் சிலர் செய்வது வேதனை அளிப்பது உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வியபதி

      Delete
  29. அன்புள்ள சகோ.செளந்தர்,
    இங்கு ஒருவர் முஸ்லிம் பெயர் போன்ற கள்ள ஐடி யில் கள்ளத்தனமாக ஒளிந்து கொண்டு,
    //..காபிர்களை நாயே பேயேன்னு திட்டற குரானை..// இப்படி கூறுகிறார் அல்லவா..? இந்த மதஎதிர்வாதிபற்றித்தான் நீங்கள் பதிவில் எச்சரித்து உள்ளதாக நான் புரிகிறேன். சரிதானே..?

    எனது தளத்தில் யாரேனும், கிறிஸ்டின் பெயர் போன்றோ, இந்து பெயர் போன்றோ வைத்துக்கொண்டு இதுபோல பைபிள் அல்லது கீதை சொல்வதாக ஆதாரம் இல்லாமல் அப்பட்டமாக பொய் சொன்னால்....

    அல்லது, அடுத்த மத கடவுள்/மதத்தலைவர்களை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுடன் இழிவுபடுத்தினால்...

    அப்படி வரும் அந்த கமெண்டை நான் வெளியிட மாட்டேன். ஏனெனில், இப்படி பிற மதத்தினரரின் கடவுள்களை ஏசாதீர்கள் என்றுதான் குர்ஆன் (6:108) முஸ்லிம்களுக்கு கட்டளை இட்டு இருக்கிறது. இப்படித்தான் அடுத்த மதத்தினரையும் நான் நேசிக்கிறேன்.

    இங்கே அப்படியான ஒரு அவதூறு கமென்ட் போட்டவரை குர்ஆனிலிருந்து அதற்கான ஆதாரம் தருமாறு கேளுங்கள் சகோ. அப்படி அவர் தரவில்லையேல், அவருடைய கமென்ட்ஐ நீக்கிவிட தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    பின்னர் இதுபோன்ற புல்லுருவிகளை உங்கள் தளத்தில் அனுமதிக்காதீர்கள் சகோ.செளந்தர்.

    ReplyDelete
    Replies
    1. //////~முஹம்மத் ஆஷிக் citizen of world~Jan 24, 2012 07:46 PM

      அன்புள்ள சகோ.செளந்தர்,
      இங்கு ஒருவர் முஸ்லிம் பெயர் போன்ற கள்ள ஐடி யில் கள்ளத்தனமாக ஒளிந்து கொண்டு,
      //..காபிர்களை நாயே பேயேன்னு திட்டற குரானை..// இப்படி கூறுகிறார் அல்லவா..? இந்த மதஎதிர்வாதிபற்றித்தான் நீங்கள் பதிவில் எச்சரித்து உள்ளதாக நான் புரிகிறேன். சரிதானே..?
      ////////

      கண்டிப்பாக...
      இதுபோன்றவர்களைதான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

      Delete
    2. //////
      இங்கே அப்படியான ஒரு அவதூறு கமென்ட் போட்டவரை குர்ஆனிலிருந்து அதற்கான ஆதாரம் தருமாறு கேளுங்கள் சகோ. அப்படி அவர் தரவில்லையேல், அவருடைய கமென்ட்ஐ நீக்கிவிட தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

      //////////

      கண்டிப்பாக நண்பரே...
      அவருடைய கருத்து ஏற்புடையது அல்ல..
      தங்கள் கேள்விக்கு இன்று மாலைக்குள் அந்த நபர் சரியான விளக்க அளிக்கவில்லையென்றால் அதை கண்டிப்பாக இன்று மாலை நீக்கிவிடுகிறேன்.

      ஒற்றுமையை வலியுறுத்தியே இந்த பதிவு
      அதில் சில வில்லங்கமான பிரச்சனையை தூண்டிவிட்டு அதில் குளிர்காய நினைப்பவர்களை ஒருபோதும் கவிதைவீதி அனுமதிக்காது.

      Delete
  30. நல்ல விளக்கம் ! முடிவில் அருமை! நன்றி !

    ReplyDelete
  31. இருமுனைக் கத்தி போன்றதொரு
    தலைப்பினை அழகாய் கையாண்டு எழுதியிருக்கிறீர்கள்
    நண்பரே.
    பாதைகள் வெவ்வேறாயினும் சென்று சேரும்
    இலக்கு ஒன்றுதான்.
    எம்மதமாயினும் அதன் கருத்துச் சாரம் ஒன்றே...
    மதத்தின் பெயரால் மதம் பிடித்து விளையாடுபவர் விளையாடட்டும்
    நாம் அவர்களை துச்சமாக மதித்து
    நல்வழி செல்வோம்..

    ReplyDelete
  32. மதம் பிடிக்காமல் இருக்க வேண்டும் மக்களுக்கு!நன்று

    ReplyDelete
  33. மதமல்ல மார்க்க சகோ ஆஷிக் மாதிரி தக்கியா பண்ணுவது சிறப்பென்றாலும், தற்போதைக்கு ஆண்டி தக்கியா..

    Non-Muslims are Arrogant and Divided

    Nay, but those who disbelieve are in false pride and schism.
    Qur'an 38:2

    Non-Muslims are close-minded

    As for the Disbelievers, Whether thou warn them or thou warn them not it is all one for them; they believe not.
    Qur'an 2:6
    They desire to deceive Allah and those who believe, and they deceive only themselves and they do not perceive.

    There is a disease in their hearts, so Allah added to their disease and they shall have a painful chastisement because they
    Qur'an 2:9-10
    Such are the men whom Allah has cursed for He has made them deaf and blinded their sight.

    Do they not then earnestly seek to understand the Qur'an, or are their hearts locked up by them?
    Qur'an 47:23-24

    Non-Muslims are Deaf, Dumb and Blind

    As for the Disbelievers, Whether thou warn them or thou warn them not it is all one for them; they believe not.
    Qur'an 2:6
    The likeness of those who disbelieve is as the likeness of one who shouts to that which hears nothing, save a call and a cry; deaf, dumb, blind -- they do not understand.
    Qur'an 2:171

    Non-Muslims are Evil

    Do not befriend non-Muslims

    O you who believe! do not take for intimate friends from among others than your own people; they do not fall short of inflicting loss upon you; they love what distresses you; vehement hatred has already appeared from out of their mouths, and what their breasts conceal is greater still; indeed, We have made the communications clear to you, if you will understand.
    Qur'an 3:118

    O ye who believe! Take not for friends unbelievers rather than believers: Do ye wish to offer Allah an open proof against yourselves?
    Qur'an 4:144
    O ye who believe! take not the Jews and the Christians for your friends and protectors: They are but friends and protectors to each other. And he amongst you that turns to them (for friendship) is of them. Verily Allah guideth not a people unjust.
    Qur'an 5:51
    O Ye who believe! Choose not for guardians such of those who received the Scripture before you, and of the disbelievers, as make a jest and sport of your religion. But keep your duty to Allah if ye are true believers.
    Qur'an 5:57
    There is for you an excellent example (to follow) in Abraham and those with him, when they said to their people: "We are clear of you and of whatever ye worship besides Allah: we have rejected you, and there has arisen, between us and you, enmity and hatred for ever,- unless ye believe in Allah and Him alone": But not when Abraham said to his father: "I will pray for forgiveness for thee, though I have no power (to get) aught on thy behalf from Allah." (They prayed): "Our Lord! in Thee do we trust, and to Thee do we turn in repentance: to Thee is (our) Final Goal.
    Qur'an 60:4

    ReplyDelete
  34. Forsake your non-Muslim family members
    O ye who believe! Choose not your fathers nor your brethren for friends if they take pleasure in disbelief rather than faith. Whoso of you taketh them for friends, such are wrong-doers.
    Qur'an 9:23
    You shall not find a people who believe in Allah and the latter day befriending those who act in opposition to Allah and His Messenger, even though they were their (own) fathers, or their sons, or their brothers, or their kinsfolk; these are they into whose hearts He has impressed faith, and whom He has strengthened with an inspiration from Him: and He will cause them to enter gardens beneath which rivers flow, abiding therein; Allah is well-pleased with them and they are well-pleased with Him these are Allah's party: now surely the party of Allah are the successful ones.


    In their hearts is a disease, and Allah increaseth their disease. A painful doom is theirs because they lie.
    Qur'an 2:10
    O ye who believe! spend of that wherewith We have provided you ere a day come when there will be no trafficking, nor friendship, nor intercession. The disbelievers, they are the wrong-doers.
    Qur'an 2:254
    And We prescribed for them therein: The life for the life, and the eye for the eye, and the nose for the nose, and the ear for the ear, and the tooth for the tooth, and for wounds retaliation. But whoso forgoeth it (in the way of charity) it shall be expiation for him. Whoso judgeth not by that which Allah hath revealed: such are wrong-doers.
    Qur'an 5:45
    The similitude of those who were charged with the (obligations of the) Mosaic Law, but who subsequently failed in those (obligations), is that of a donkey which carries huge tomes (but understands them not). Evil is the similitude of people who falsify the Signs of God: and God guides not people who do wrong.
    Qur'an 62:5
    Allah has promised, to those among you who believe and work righteous deeds, that He will, of a surety, grant them in the land, inheritance (of power), as He granted it to those before them; that He will establish in authority their religion - the one which He has chosen for them; and that He will change (their state), after the fear in which they (lived), to one of security and peace: 'They will worship Me (alone) and not associate aught with Me. 'If any do reject Faith after this, they are rebellious and wicked.
    Qur'an 24:55
    No plea had they, when Our terror came unto them, save that they said: Lo! We were wrong-doers.
    Qur'an 7:5
    O Children of Adam! Let not Satan seduce you as he caused your (first) parents to go forth from the Garden and tore off from them their robe (of innocence) that he might manifest their shame to them. Lo! he seeth you, he and his tribe, from whence ye see him not. Lo! We have made the devils protecting friends for those who believe not.
    Qur'an 7:27
    Evil as an example are people who reject Our signs and wrong their own souls.
    Qur'an 7:177

    Non-Muslims are Greedy

    And you will most certainly find them the greediest of men for life (greedier) than even those who are polytheists; every one of them loves that he should be granted a life of a thousand years, and his being granted a long life will in no way remove him further off from the chastisement, and Allah sees what they do.
    Qur'an 2:96

    ReplyDelete
  35. Non-Muslims are Like Animals

    If it had been Our will, We should have elevated him with Our signs; but he inclined to the earth, and followed his own vain desires. His similitude is that of a dog: if you attack him, he lolls out his tongue, or if you leave him alone, he (still) lolls out his tongue. That is the similitude of those who reject Our signs; So relate the story; perchance they may reflect.
    Qur'an 7:176
    And well ye knew those amongst you who transgressed in the matter of the Sabbath: We said to them: "Be ye apes, despised and rejected."
    Qur'an 2:65
    Shall I tell thee of a worse (case) than theirs for retribution with Allah? (Worse is the case of him) whom Allah hath cursed, him on whom His wrath hath fallen and of whose sort Allah hath turned some to apes and swine, and who serveth idols. Such are in worse plight and further astray from the plain road.
    Qur'an 5:60
    When in their insolence they transgressed (all) prohibitions, We said to them: "Be ye apes, despised and rejected."
    Qur'an 7:166
    Or thinkest thou that most of them listen or understand? They are only like cattle; - nay, they are worse astray in Path.
    Qur'an 25:44

    Non-Muslims are Perverse

    And the Jews say: Ezra is the son of Allah, and the Christians say: The Messiah is the son of Allah. That is their saying with their mouths. They imitate the saying of those who disbelieved of old. Allah (Himself) fighteth against them. How perverse are they!
    Qur'an 9:30
    When thou lookest at them, their exteriors please thee; and when they speak, thou listenest to their words. They are as (worthless as hollow) pieces of timber propped up, (unable to stand on their own). They think that every cry is against them. They are the enemies; so beware of them. The curse of Allah be on them! How are they deluded (away from the Truth)!
    Qur'an 63:4

    ReplyDelete
  36. Non-Muslims are Unclean

    O ye who believe! Truly the Pagans are unclean; so let them not, after this year of theirs, approach the Sacred Mosque. And if ye fear poverty, soon will Allah enrich you, if He wills, out of His bounty, for Allah is All-knowing, All-wise.
    Qur'an 9:28

    Non-Muslims are Unintelligent

    O Prophet! Exhort the believers to fight. If there be of you twenty steadfast they shall overcome two hundred, and if there be of you a hundred (steadfast) they shall overcome a thousand of those who disbelieve, because they (the disbelievers) are a folk without intelligence.
    Qur'an 8:65

    Non-Muslims are the Worst of Creatures

    For the vilest beasts in God's sight, are the deaf, the dumb, who understand not.
    Qur'an 8:22
    For the worst of beasts in the sight of God are those who reject Him: They will not believe.
    Qur'an 8:55
    Verily those who believe not, among those who have received the scriptures, and among the idolaters, [shall be cast] into the fire of hell, to remain therein [for ever]. These are the worst of creatures.

    Acts Against Kafir are Acts of Allah

    These verses validate Islamic terrorism because acts of terror that are committed against kafir are really acts of Allah and not acts of the believer.
    Fight them! Allah will chastise them at your hands, and He will lay them low and give you victory over them, and He will heal the breasts of folk who are believers.
    Qur'an 9:14
    The only reward of those who make war upon Allah and His messenger and strive after corruption in the land will be that they will be killed or crucified, or have their hands and feet on alternate sides cut off, or will be expelled out of the land. Such will be their degradation in the world, and in the Hereafter theirs will be an awful doom.
    Qur'an 5:33

    Broken Treaties

    If thou fearest treachery from any group, throw back (their covenant) to them, (so as to be) on equal terms: for Allah loveth not the treacherous.
    Qur'an 8:58

    இவை எல்லாமே காககககே மொஹம்மத் இப்னு அப்பதல்லா அல்குரானில் எழுதி வைத்தவைதான்.

    நேரமிருந்தால் அடுத்தது விவாகானந்தர் மேலே போட்டோவை பற்றி சொல்வது எவ்வாறு காககககே மொஹம்மது இப்னு அப்பதல்லாவுக்கு புர்யலை என்று பாப்பம்

    ReplyDelete
  37. அப்துல் சத்தார் கேள்வி கேட்டுள்ளார் குண்டு வச்சவன் கிருஷ்ணனோ,லாரன்ஸ்ஸோ என்றால் பேர் போட்டு எழுவானுங்க அதுவே அப்துல்லாவா இருந்தா முஸ்லீம் தீவிரவாதீன்னு எழுதுவானுங்கன்னு வருத்தப்பட்டு அழுதிருக்கார்.சத்தார் ஒண்ணு தெரிஞ்சுக்கணும் கிருஷ்னனோ,லாரன்ஸோ குண்டுவைத்தால் தங்கள் மதத்தை இழுத்துக்கொண்டு வருவதில்லை:ஆனால் முஸ்லீம் அல்லாவின் பேரை,இஸ்லாமின் பேரை சுட்டிக்காட்டித்தான் குண்டு வைக்கிறான். அதனால்தான் அப்துல்லாவை மட்டும் முஸ்லீம் தீவிரவாதியென்று சொல்லுறாங்க

    ReplyDelete
  38. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. மதங்கள் வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதுஇல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். தற்போதைக்கு அதுகுறித்து சண்டைச்சச்சரவுகள் இல்லாமல் மட்டும் இருந்தால் போதும்.//


    தற்போதுன்னா உங்க வேலைப்பளுவெல்லாம் முடிஞ்சி ஃப்ரியாகுற வரைக்குமா? :)

    ReplyDelete
  40. விவேக் அது யாருன்னு கேட்டா அது என் அப்பான்னு தான் சொல்ல முடியும்!

    அது யாரோட போட்டோன்னு கேட்டா சரியான பதில் வந்திருக்கும்!

    விவேக் என்னவோ பெரிய ஆன்மீக பிஸ்தா மாதிரி ப்ளீம் காட்றீங்களே தல!

    ReplyDelete
  41. மிகவும் நல்ல பதிவு ....ஆனா பாருங்க நான் கூட இன்று மதங்களை தாகி ஒரு பதிவ போட்டுவிட்டேன்....
    //இந்த உலகில் இருக்கும் அனைத்து சமயங்களும் தன்னுடைய தனித்தன்மையை காட்ட பலவகையில் வித்தியாசப்படும்.அந்த வித்தியாசத்தை, அவர்கள் வழிப்பாடு முறைகளை, அவரவர் சமய சடங்குகளை மற்ற மதத்தினர்கள் குறைகூறவோ கேலிசெய்ய எந்த ஒரு அதிகாரமும் இல்லை.//
    இதை அனைவரும் கடைபிடிக்க இறைவன் அருள் செய்யட்டும்

    ReplyDelete
  42. நாம் இன்னும் எவ்வளவு தான் நாகரீகத்தில் உயர்ந்தாலும் நம் மனதில் இருக்கும் சதி, மதம், போன்ற விஷயங்களை நம்மால் ஒருக்காலும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...