கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 February, 2012

இந்த படங்களை மட்டும் ஏங்க இவ்வளவு பேர் பாக்குறாங்க...?

இந்த படங்களுக்கு நான் விளக்கம் சொல்லி 
உங்களுக்கு புரியவைக்கனும் என்ற அவசியம் இல்லீங்க..

அதனாலே இன்னைக்கு இந்த கதையை நீங்கத்தான் சொல்லனும்...

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

படம் 5

படம் 6


அதனால் மக்களே புரிஞ்சி நடந்துக்குங்கோ...!

படம்பார்த்து கதைச்சொல் அப்படின்னுதான் தலைப்பு வச்சிருந்தேன்...
அப்புறம் மாத்திட்டேனுங்க... 


24 February, 2012

டிஜிட்டல் தமிழகம்... ஜெயலலிதாவுக்கு போட்டியாக மு.க.ஸ்டாலின்..


இன்றைய தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வகிக்கும் பதவியை அடிக்கடி மக்களுக்கு, அவர்களின் கட்சிகாரர்களுக்கும் ஞாபகம் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கட்சியின் பலமான கட்சிக்காரர்கள் மற்றும் தொண்டர்கள் தங்கள் தலைமையை அன்றாடம் பாராட்டி தள்ள வேண்டும். அதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் டிஜிட்டல் பேனர். தன்னுடைய வீடு எப்படி போனாலும் பரவாயில்லை, ஆனால் தன் பெயரில‌் எதாவது ஒரு டிஜிட்டல் கட்அவு்ட் ரோட்டில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

சாதாரண வீட்டு காதுகுத்து விழா தொடங்கி, இரங்கல் செய்தி வரை இன்று எதற்கெடுத்தாலும் டிஜிட்டல் பேனர் வைப்பது என்பது சர்வசதாரண நிகழ்வாக ஆகிவிட்டது. அது அரசியல் கட்சிகளிடம் இருக்கிற மிகப்பெரிய ஆயுதமாக தற்போது உறுமாறிவருகிறது. 

தமிழகத்தின் தொன்மை வாய்ந்த தொழிலும், லாபம் ஈட்டக்கூடிய மிக முக்கிய தொழிலாக விளங்கிவருவது அரசியல் தான். அரசியலில் வார்டு உறுப்பினர் பதவியில் ஆரம்பித்து கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய, மாவட்ட த‌லைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என ஒவ்வொறு படிநிலையிலும் அதற்கேற்ற நிலையில் இங்கு சம்பாதிக்க முடியும். அப்படி வருமானத்திற்கு உத்திரவாதம் கொண்ட தொழிலாக அரசியல் விளங்கி வருகிறது.


தமிழகத்தில் பிரதான கட்சியாக விளங்கி வருபவை திமுக மற்றும் அதிமுக என்ற இரண்டு ஜாம்பவான் கட்சிகள்தான். இதன் கட்சிக்காரர்கள் நம் தமிழகம் எங்கு நிறைந்து காணப்படுகிறார்கள். இந்த கட்சிக்காரர்கள் தலைமைக்கு தன்னுடைய விசுவாசத்தை காட்ட தலைமையை வாழ்த்தி, பாராட்டி ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் தொடர்ந்து அந்த பதவியில் இருக்க முடியும். அதற்காக முன்பெல்லாம் சுவர்முழுக்க வெள்ளை அடித்து அதில் வாழ்க வளர்க என தன் தலைமையை பாராட்டி வாழ்த்தி விளம்பரம் எழுதுவார்கள். அது ஒருகாலம்.

ஆனால் இன்றைய காலமாற்றத்தால்  கட்சித் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருப்பது டிஜிட்டல் பேனர் என்று அழைக்கப்படும் விளம்பர பேனர்களே.... இதன் வருகையால் பழைய சுவர்விளம்பரங்கள் அறவே ஒழிந்து விட்டது. இன்று (பிப்ரவரி 24) அதிமுக பொதுச்செயலாளர் ‌ஜெயலலிதா அவர்களுக்கும், வரும் மார்ச் 1 அன்று திமுக துணைபொதுச் செயலாளர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பிறந்த நாள் வருகிறது. 

இந்த இருவரும் தமிழகத்தில் நிலவிவரும் மின் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தன்னுடைய பிறந்தநாள் விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கட்சித் தொண்டர்கள் அப்படி விடுவதாக இல்லை. தன்னுடைய விசுவாசத்தை காட்டவும், கட்சி பொருப்பில் நிலைத்து இருக்கவும் இவர்கள் ஏதாவது செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த ஒரு வாரமாய் எங்கு பார்க்கிலும் கட்சி பேனர்கள்  ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது. இன்று ஜெ., அவர்களின் பிறந்த நாள் விழாவுக்கு பேனர்கள் வைத்ததின் விளைவாக எதிர்கட்சியான திமுக வும் தன்னுடைய பங்குக்கு ஏட்டிக்குபோட்டியாக அவர்களுக்கு நிகராக பிரமாண்ட பேனர்களை வைத்து வருகிறார்கள். திருவள்ளூரில் இருந்து ‌சென்னை சென்று வந்தேன் போய் வரும் வழியெல்லாம் எங்கு பார்க்கிலும் இந்த வாழ்த்து டிஜிட்டல் பேனர்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு பிரமாண்டமாய் ‌காட்சியளிக்கிறது.

ஏன் இதை சொல்கிறேன் என்றால், இன்று தமிழகம் மிகப்பெரிய மின்பற்றாக்குறையால் தத்தளித்து வருகிறது. அது போதாதென்று தினம் ஒரு கொள்ளையும் அரங்கேறி வருகிறது. இப்படி இருக்க இந்த ஆடம்பர டிஜிட்டல் பேனர்கள் அவசியம் தானா என்பது என்னுடைய கேள்வி. கிராமங்களில் உள்ள கடைசி மட்ட தொண்டர்கள் கூட ஆளுக்கு இரண்டு டிஜிட்டல் பேனர்கள் கட்டி தன்னுடைய விசுவாசத்தை காட்டிகொண்டிருக்கிறார்கள்.

இந்த டிஜிட்டல் பேனர் அச்சடிக்க ஒரு சதுர அடிக்கு 8 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை செலவு பிடிக்கிறது.  பத்துக்குபத்து (10x10) அளவு கொண்ட ஒரு டிஜிட்டல் பேனர் அச்சடிக்க டிசைன் சார்ஜ், பிரிண்டிங், ‌பேனருக்காக சட்டம், அதை கட்ட சாரம், கூலி என கிட்டதட்ட 2000 ரூபாய் வரை செலவு பிடிக்கும். அப்படியென்றால் தங்கள் பகுதியில் இருக்கும் அனைத்து டிஜிட்டல் பேனர் அச்சடிக்க எவ்வளவு செலவு ஆகியிருக்கும் என்று நீங்களே கணக்குபோட்டு‌ கொள்ளுங்கள். இன்று தமிழகம் முழுவதும் இன்று எங்கு பார்க்கில் இந்த பேனர்கள் தான்.

அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைக்குட்டிகள் நன்றாக இருக்க கோடிக்கோடியாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதைஅறியாத கடைக்கோடி தொண்டன் தன்னுடைய வருமானத்தை இழந்து இதுபோன்ற செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள். சமூகத்திற்கும் குடியானர்களுக்கு கேடுவிளைவிக்கும் இந்த டிஜிட்டல் சாம்ராஜ்ஜியம் என்றுதான் ஒழியுமோ...

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற டிஜிட்டல் பேனர்கள் வைக்க கூடாது என்று கட்டுபாடுவிதிக்கும் தேர்தல் ஆணையம் எல்லாகாலங்களிலும் இதற்கு தடைவிதித்தால் சுற்றுசூழல் மாசில் இருந்து இந்த நாட்டை காக்கவும் ஒரு வழி ஏற்படும். குடியானவனின் பணம் வீணடிக்கப்படுவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.


20 February, 2012

இளம் பெண்களை கொல்ல எளிய வழி...! பதிவு உபயம் : ராஜபாட்டை ராஜா...


பெண் : 
உனக்கு தாடி வச்சா
ரொம்ப நல்லா இருக்கும்... டா..?


பையன் : 
கழட்டி விடப்போ‌றேன்னு...சொல்லு.. டி...  

**********************************************************


விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!

கூகுள் : என்னிடத்தில் எல்லாம் இருக்கிறது..!


இண்டர்நெட் : நான் இல்லாமல் நீங்க யாரும் இல்லை...!


மின்சாரம் : என்னடா அங்க சத்தம்...?


மூவரும் : சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா...?


**********************************************************


பெண்ணை கொல்வது எப்படி : 

ஒரு அழகான பெண்ணிடம்...
 புதிய ஆடைகள், அழகிய நகைகள், விலை உயர்ந்த அழகு சாதனப் ‌பொருட்கள் கொடுத்து ஒரு தனி அறையில் அடைத்து விடுங்கள்....

அந்த அறையில் கண்ணாடி இல்லாமல் இருக்கட்டும்...

அவ்வளவு தான்....

ஒரு பையனை கொல்வது எப்படி : 

ஒரு பையன் கையில் செல்போன் தாருங்கள்...

அந்த செல்போனில் நிறைய அழகிய பெண்களின் செல்போன் நம்பர்கள் இருக்கட்டும்...

அவனை சிக்னல் இல்லாத இடத்தில் விட்டு விடுங்கள்...

அவ்வளவு தான்...


அந்த பெண்ணும் பையனும் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை...
எப்பூடி...
**********************************************************

ஒருவர் : என்ன சார் ஃசுட்ஜ் போர்டை தண்ணிய ஊத்தி கழுவுறீங்க
ஷாக் அடிக்காது...!

அடுத்தவர் : என்ன தம்பி காமெடி பண்ணுறீங்க...
 நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா...
போய் பொ‌ழப்பை பாருங்க தம்பி...
இங்கையாவது ஷாக் அடிக்கிறதாவது..!

********************************************************** 

காதலியை மட்டும் சைட் அடிச்சா அது WORK

கூட அவங்க பிரண்ட்ஸ் சேர்த்து சைட் அடிச்சா அது HARD WORK

தத்துவம் : சிலசமயம் Work  தொல்வி அடையலாம் ஆனால் HARD WORK  என்றும் தோல்வி அடையாது


( இதைத்தான் “Hard Work Never Fails" அப்படிங்கிறாங்க...)

**********************************************************

நீதிபதி : உனக்கும் உன் கணவருக்கும் விவாகரத்து தர முடியாதும்மா..? 

பெண் : ஏன் சார்..?

நீதிபதி : ஒரு சரியான காரணம் சொல்லும்மா..?

பெண் : என் கணவர் ஒரு குடிக்காரர்...?


நீதிபதி : இதெல்லாம் செல்லாது... செல்லாது....

பெண் : அப்புறம்... பவர்ஸ்டார் படம் வந்தா முதல் நாள் முதல் ஷோக்கு கூட்டிகிட்டு போறாரு...?

நீதிபதி : படுபாவி அவ்வளவு கொடுமையா செய்யுறான்...
உனக்கு உடனே அவன் கிட்டே இருந்து விடுதலை கொடுத்தாச்சி...

********************************************************* 
கூகுளில் சுட்ட படங்களுடன், என்னுடைய செல்போனுக்கு SMS-களாக ராஜபாட்டை ராஜா அவர்கள் அனுப்பிய நகைச்சுவை துணுக்குகள்...



ரசியுங்கள் அனைத்தையும்...
 தங்கள் வருகைக்கு நன்றி..!

14 February, 2012

ஏங்க காதலிக்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கு...?



 நிசப்தமான வேளைகளில்
வெயிற்கால மூங்கில்கள் போல்..

என்னை கேட்காமலே பற்றிக் கொள்கிறது
அவளின் நினைவுகள்...!

***********************************************************


வ்வொறு முறையும்
சகுனம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..!

காதல் என்பது
அனைத்துக்கும் அப்பாற்பட்டது என்று அறியாமல்...!

***********************************************************


புரிதலின் இடைவெளியில்
நீயும் நானும்
பயணித்துக் கொண்டிருக்கிறோம்..!

இன்னும் பூப்பெய்தாமல் இருக்கிறது
உன்னை தரிசிக்காத
என் கவிதைகள்...!

***********************************************************


கைகளில் நடுக்கம்
மனதில் ஒரு தயக்கம்
கண்களில் ஒரு கலக்கம்
 
காதலிக்கு
ஒரு கடிதம் எழுத
இவ்வளவு வேதனையா..?

ஏங்க காதலிக்கிறது 
இவ்வளவு கடினமாக இருக்குது..

***********************************************************

 
ன்னும் எத்தனை நாட்களுக்கு
என்னை ஏமாற்றப் போகிறாய்...

உன் உதடுகள் சொல்ல மறுத்தாலும்
எனக்கான உன் காதலை
முன்பாக சொல்லிவிடுகிறது
உன் க‌ண்கள்...!

***********************************************************

 
காற்று இல்லாமல் சுவாசிக்க 
பழகிக்கொண்டேன்...!

காதல் இல்லாமல் சுவாசிக்க
எப்போது பழகப்போகிறேனோ..!

***********************************************************

நண்பர்களுக்கு வணக்கம்...!
இந்த தினத்தை மகிழ்ச்சியை காதலில் இருந்து விலக்கி
அன்பு கொண்ட எல்லோரிமும் பகிர்ந்துக் கொள்வோம்.

08 February, 2012

எதிர்பாராமல் நிகழ்ந்து விடுகிறது இப்படியெல்லாம்...!


 
வ்வோறு நாளும் 
எதிர்பார்க்காமல் 
நிகழ்ந்து விடுகிறது இப்படி.. 

ன்னவளை
சந்திக்கலாம் என்றிருந்த 
நாட்களிலெல்லாம்...
 
சாலையோராமாய்
என்னை ஒதுங்க வைத்து விடுகிறது
திடிரென பெய்யும் மழை...

தேடும் போது 
எதிர்படும் தெரிந்தவர்களின் 
பேச்சுத் தொல்லை...
 
ன்றைக்குமே இல்லாமல்
அன்று மட்டும் அவளின்
முகம் மறைக்கும் வண்ணக்குடை...
 
துமட்டுமின்றி வேகமாய் துடிக்கும்
என் கடிகாரத்திடம்
 “நேரம் எவ்வளவு என்று”
நலம் விசாரிக்கும் யாரோ ஒருவர்..!

டிமனதில் ஒரு அதிர்ச்சி
எதிர்பாராமல் வந்துவிட்ட
கிண்டலடிக்கும் என் நண்பர் ஒருவர்...

துபோன்று பல.. பல...
 
னால்...!
நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
அவளின் முகம் மட்டும்
என் கண்களுக்கு அகப்படாமல்
இன்னும் தூரமாய்....!

03 February, 2012

இவையெல்லாம் அம்மாவுக்ககவே....!


நேரில் தவி‌ர்க்க முடிந்த அவளை
எவ்வளவு முயன்றும்
நினைவில் முடியவில்லை...!

காதல் தொடங்காமலே
விழியிலிருந்து விலா எலும்பு வரை
வலிக்க வைத்தவளை 
எப்படி மறந்துபோவது..!
 
னக்குள் நானே
புரியாமல் புரிந்துக்கொள்கிறேன்
உடலில் இன்னும் உயிர் இருக்கிறதென்று...!

யிரை மட்டும் விலக்கி வைக்க
யாராலும் முடியாதுதான்
இருந்தாலும் முயற்சிக்கிறேன் நான்..!
 
யிருக்கும் உடலுக்கும் இடையில்
ஒவ்வொறு நொடியும் 
யாருக்கும் தெரியாமல் மரணப்படுகிறேன்...!
 
ல்லா குழப்பத்திற்கு பிறகு
மௌனமாய் 
ஒரு முடிவு செய்றேன்..!
 
ளையெடுத்துப் படிக்க வைக்கும்
என் அம்மாவுக்காக
காதல் வேண்டாம் என்று...!


Related Posts Plugin for WordPress, Blogger...