கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 March, 2012

“மதுச் சிதைவு” விளைவு விதி


பிரிட்டிஷ் அரசு சி.வி.இராமனுக்கு 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கி ‌கௌரவித்தது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விருதுபெற்ற விஞ்ஞானி இராமனை சிறப்பிக்கும் விதத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள். விருந்தின் போது மது தாராளமாக வழங்கப்பட்டது.


விஞ்ஞானி இராமனிடம் மது அருந்தும் பழக்கம் இல்லை. அதனால் அவர் மது எதையும் தொட்டுக்கூடப்பார்க்க வில்லை. சில விஞ்ஞானிகள் இராமனிடம் வந்து தலைமை விருந்தினரான தாங்கள் மதுவை அருந்தாவிட்டால் எப்படி? என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.


அதற்கு இராமன் எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று பதில் அளித்தார்.


இதுவரை பழக்கமில்லாமல் இருக்கலாம். இன்றே அப்பழக்க‌த்தை ஆரம்பியுங்களேன். மது குடித்தால் உடலின் என்ன விளைவு ஏற்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று விஞ்ஞானிகள் இராமனை வற்புறுத்தினார்கள்.


அதற்கு இராமன் ஒளிச் சிதைவு விளைவுகளைப் பற்றித்தான் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டுமே தவிர, மது குடிப்பதினால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டாமே என்றார்.

இவரின் சிறப்புகள் :

இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹீட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது

இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது.

மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.

பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.

1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.

39 comments:

  1. இதுவரை அறியாத அரிய தகவல்கள்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா..!

      Delete
  2. எல்லாம் புதிய தகவல்கள் எனக்கு மிக்க நன்றி.......!!!

    ReplyDelete
  3. சர் சி .வி . இராமன் அவர்களைப் பற்றி
    தெரியாத சில விஷயங்களை அறிய முடிந்தது

    நல்ல பதிவு நன்றி கவிஞரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா..!

      Delete
  4. சர் சி.வி.இராமன் அவர்களைப்பற்றி அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. நல்லா பாடம் எடுக்கிறிங்க..
    அறிய தகவலுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. நல்ல படிக்கனும் அப்பத்தான் மார்க் நிறைய பேர்டுவேன்...

      தங்கள் வுருகைக்கு நன்றி அரசன்

      Delete
  6. வாழ்வில் சாதித்த சர் சி .வி . இராமன் தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே

      Delete
  7. Replies
    1. வாங்க தல..

      எப்ப பதிவுலகம் வருவீங்க...

      Delete
  8. நல்ல தகவல்களின் தொகுப்பு

    ReplyDelete
  9. அறிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .

    ReplyDelete
  10. பல தகவல்கள் எனக்கு புதுசு.. பகிர்வுக்கு நன்றி சார்..!

    ReplyDelete
  11. ராமன் கதை அருமை

    ReplyDelete
  12. ராமன் பற்றிய தகவல்கள் பெருமிதத்தை உண்டாக்குகின்றன. பகிர்வுக்கு நன்றிகள் சௌந்தர்..

    ReplyDelete
    Replies
    1. மீண்டுமட் வந்ததற்கு நன்றி...

      தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி

      Delete
  13. தெரிந்த ராமன்,தெரியாத தகவல்கள்.

    ReplyDelete
  14. சர்.சி. ராமனைக் குறித்த அருமையான தகவல். பண்பிலும் அறிவிலும் பெரியவர்தான் அவர். பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  15. பெயரளவில் தெரிந்த சர்.சி.வி.ராமனை பற்றிஅரியாத தகவல்கள் பலவற்றை இன்றுதான் தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  16. சர்.சி.வி.ராமன் அவர்களின் வாழ்க்கை சம்பவம்
    ஒன்றை எங்களுக்கு அறிமுகப் படுத்தியமைக்கு
    நன்றிகள் நண்பரே..
    அவர் வாங்கிய பட்டங்களில் நோபல் பரிசு தவிர
    மற்ற அனைத்தும் அறிந்துகொள்ள பகிர்ந்தமைக்கும்
    நன்றிகள்.

    ReplyDelete
  17. நான் அறியாத பல தகவல்களை( சி.வி அவர்கள்பற்றி)
    தெரிவித்துள்ளீர் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  18. அரிய தகவல்கள் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  19. சர் சிவி இராமனைப் பற்றிய பல தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி சௌந்தர் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  20. சும்மா குடித்துத்தான் பார்ப்போமே என்றுதான் ஆரம்பிக்கிறது வீதிக்கு வந்த பல குடிகாரர்களின் தொடக்கம்! மதுவை ஆரம்பத்திலேயே மறுப்பதுதான் மதிநுட்பமான செயல்.
    நல்ல உதாரணத்துடன் கூடிய விழிப்புணர்வு மற்றும் அறிந்திராத தகவல்களுடனான பதிவுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. நல்ல தொகுப்பு ..... பல தகவல்கள் அறியாதவை ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  22. அரிய பல தகவல்களை அள்ளித்தந்த சௌந்தர்-நன்றி

    ReplyDelete
  23. hii.. Nice Post

    Thanks for sharing

    More Entertainment

    For latest stills videos visit ..

    .

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...