கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 April, 2012

அன்பார்ந்த புதுக்கோட்டை வாக்காள பெருமக்களே...! ஜெயலலிதாவின் அடுத்த அதிரடி...!


தமிழகத்தில் அனைத்து மதத்திற்கும் இணையாக, மற்றும் தனித்து இருந்து, எங்கு பார்க்கிலும் அதிகமான மக்கள் தொகையைக்கொண்டுள்ள மிகப்பெரிய இனம் அரசியல் இனம். அந்த இனத்திற்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா வருகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் அனைவருக்கும் ராஜகிரீடங்கள் சூட்டப்படும். அவர்கள் கொண்டாடப்படுவார்கள். அவர்களுக்கு அளிக்க மரியாதை அடைமொழிகளில் அடங்கிவரும். இவர்களே பிரதான மூலவர்களாக அவதரிப்பார்கள். தேர்தல் தேதி அறிவித்து வாக்கெடுப்பு முடியும் வரை வாக்களர்களுக்கு வார உற்சவம் நடைபெறும்.

5 ஆண்டுகள் மட்டும் இருந்த இந்தத் திருவிழாக்கள் பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என கொஞ்சம் விரிவுப்படுத்திக் கொண்டது. (தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பாராளுமன்ற தேர்தல் அதிக அக்கறை செலுத்தப்படுகிறது.) 10 அல்லது 15 ஆண்டுகள் முன் இடைத்தேர்தல் என்ற ஒன்று எங்கு நடக்கிறது. எப்படி நடக்கிறது என்று தெரியாமல் அமைதியாக பரபரப்பு இல்லாமல் நடந்துவிடும்.

ஆனால் தற்‌போது தமிழக இடைத்தேர்தல்கள் ‌ஐ.நா. சபையில் விவாதிக்கு அளவுக்கு மிகப்பெரிய பரபரப்புடன் காணப்படுகிறது. அரசியல் உலகம் பல்வேறு விதத்தில் தயாராகிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இணைய விவாதங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் பற்றியதாக இருந்துவிடுகிறது. தமிழகத்தில் மட்டும் இடைத்தேர்தலுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது.

பொதுவாக ஆளும்கட்சி தன்னுடைய கௌரவத்தை தக்கவைக்க  இடைத்தேர்தலில் ஜெயித்த ஆகவேண்டும். என்றும், பிற எதிர்கட்சிகள் முதல் கடைகுட்டி கட்சிகள் வரை தாம் வாக்கு வங்கிமூலம் தம்முடைய பலத்தை நிறுபிக்க வேண்டும் என்றும் களம் இறங்குகிறது.

தற்போது  தான் சங்கரன் கோயில் திருவிழாவை முடித்த கையோடு அடுத்த திருவிழாவுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அது வேறு ஏதுவும் இல்லை புதுக்கோட்டைதான்.புதுக்கோட்டை ‌தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் எம்.எல்.ஏ. திரு. முத்துக்குமரன் அவர்கள் இம்மாதம் (ஏப்ரல் 2-ந்தேதி) நடந்த சாலை விபத்தில் பலியானார்.  அவர் பலியான கையோடு அந்த இடத்தை பிடிக்க போவது யார் என்ற விவாதங்கள் ஆரம்பித்து விட்டது. கிராமத்தில் ஒரு பழ‌மொழி சொல்வார்கள். ஆண்டி ‌எப்பபோவான் திண்ணை எப்ப காலியாகும் என்பது போல் கூட்டணிக்கட்சிகளை வெளியேற்றிவிட்டு அந்த இடங்களையும் அதிமுக-வே கைப்பற்ற ஆயத்தம் செய்து வருகிறது.
 
இனி என்ன புதுக்கோட்டை அடிப்படை வசதிகள் பூர்த்தியாகும். மக்கள் கௌரவிக்கப்படுவார்கள். பணம் லட்சங்களில் அல்ல கோடிகளில் கைமாறும்,  ரவுடிகள் அந்த தொகுதியை ஆக்கிரமிப்பார்கள். ஊடகம் வாக்கு நாள் வரை அங்கு தங்களுடைய கூடாரங்களை அமைத்துவிடும்.அதற்கும் ‌மேலாக அனைத்து அமைச்சர்களும், நகர்மன்ற தலைவர்களும், ஊள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் அங்கு முகாமிடவேண்டும். (சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் மட்டுமின்றி எங்கள் திருவள்ளூர் நகர் மன்ற தலைவர் பாஸ்கரன் இரண்டு வாரம் அங்கு மூமாமிட்டு இருந்தார்.)  அங்கு வெற்றி‌ பெற்றப்பிறகுதான் அவர்கள் ‌சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.  சரியாக வேலைசெய்யாத அமைச்சர்கள் மாற்றக்கூடப்படலாம்.

தற்போதே புதுக்கோட்டையை பிடிக்க அம்மா அவர்கள் பல அறிவிப்புகளை அறிவித்துக்கொண்டிருக்கிறார். புதுக்கோட்டை நகரம் நிர்மானித்து 100 ஆண்டுகள் ஆவதைஒட்டி பல்வேறு நலதிட்டங்களுக்காக 50 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக தற்போதே ஒதிக்கியாகிவிட்டது. (ஓட்டுக்கு தனியாக ஒதுக்குவார்கள் அந்த தகவல் வெளியில் வராது) இன்னும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் அந்த தொகுதியில் இந்த மாதத்திற்குள் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் மட்டுமே அந்த தொகுதியை கண்டுக்கொள்ள வேண்டும் என்ற அறுவருக்கத்தக்க சம்பிரதாயம் நமது தேசத்தில்தான் இருக்கிறது. மாநில மாநிலக்கு இது மாறுபட்டாலும் தமிழகத்தில் இடைத்தேர்தல் ஒரு சூது ஆட்டம்போல் காணப்படுகிறது. எவ்வளவு பணத்தைப்போட்டு எவ்வளவு ஓட்டு வாங்கவேண்டும் என்று கணக்கும் போடும் அநாகரீக அரசியல் இருக்கும் வரை மக்களின் பிரச்சனை என்றுமே ஒழியாது.


அன்பான புதுக்கோட்டை வாக்காள பெருமக்களே, ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தயவு கூர்ந்து பணத்துக்கு தங்களுடைய பொன்னான ஓட்டுகளை விலைபோகவைக்காதீர்கள்.  அரசியல் வாதிகள் தங்களுக்கு அளிப்பது விருந்து அல்ல. அது தூண்டியலில் மாட்டி தங்களுக்கு அளிக்கப்படும் ஒரு துளி விஷம் தான் அது. யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று நான் சொல்ல வில்லை அதை நீங்களே தீர்மானியுங்கள். அந்த தகுதியை தயவு கூர்ந்து பணத்திடம் விட்டு விடாதீர்கள்.... அவ்வளவுதான்.

18 comments:

 1. அரசியல் பதிவா? மீ எஸ்கேப்

  ReplyDelete
  Replies
  1. இப்படிச்சொன்னா எப்படிக்கா...?

   Delete
 2. நான் வாசிக்க டைம் வேனும்....அப்புறம் வாரன்

  ReplyDelete
 3. நாய்வால் ஆகிவிட்டது மக்கள் மனம்! இனி நிமிர்த்த முடியாது! சா இராமாநுசம்

  ReplyDelete
 4. புதுக்கோட்டை தொகுதிக்கு ஆறு மாதங்களுக்கு பவர் கட் இருக்காது ...

  ReplyDelete
 5. நீங்கள் சொன்னது 100% சரியானது.

  ஆனால் மக்களின் இனறைய நிலை ஒரு மது பாட்டில் வாங்க பணம் கொடுத்தாலே அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்

  ReplyDelete
 6. இப்போதெல்லாம் மக்கள் எப்போ நம்ம தொகுதி எம்‌எல்‌ஏ சாவான்னு காத்திருக்க ஆரம்பிச்சுட்டாங்க. காலக்கொடுமை நண்பா.

  ReplyDelete
 7. இதையும் கொஞ்சம் பார்க்கலாமே நண்பர்களே


  மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

  மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

  கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

  பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

  மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

  மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

  இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

  ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

  இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

  சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

  இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

  இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

  for readmore www.fcrights.in

  ReplyDelete
 8. இதென்ன, இடைத்தேர்தல் விழிப்புணர்வு பதிவா? அருமை. பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.

  ReplyDelete
 9. திருவிழான்னாலே ஊர் மக்களுக்குக் கொண்டாட்டம் தானே.பின் திண்டாட்டம் என்பது வேறு!

  ReplyDelete
 10. அருமையான பதிவு ...
  உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

  ReplyDelete
 11. hii.. Nice Post

  Thanks for sharing

  More Entertainment

  For latest stills videos visit ..

  .

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...