கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

28 August, 2012

அப்போது கூட தண்ணியில் இருந்தவர்கள்.... படங்களுடன்...


வணக்கம் மக்களே..!
எல்லாம் எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு மிகவும் சிறப்பான முறையில் நடந்தேரியது. அதற்காக பாடுபட்ட அனைத்து நண்பர்களுக்கும், விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து பதிவுலக பெருமக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற சந்திப்புகள் வருடாவருடம் தமிழகத்தின் வேற்வேறு இடங்களில் நடைப்பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.... அடுத்த சந்திப்பிற்காக காத்திருக்கிறேன்... நன்றி..!

****************************************

Fun In The Flood
 
டாக்டர் : ரெண்டு வாரத்துக்கு முப்பது மாத்திரைகள் கொடுத்திருக்கேன். தினமும், காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை எடுத்துக்கனும்...!
 
பெண் : சரிங்க டாக்டர் .. எடுத்த மாத்திரையை எங்க வைக்கனும்..?
 
**********************************************
 
Fun In The Flood
 
நண்பர் 1 : எதுக்கு காதலிக்கிட்டே கடன் கேட்கற..?

நண்பர் 2 : கடன் அன்பை முறிக்கும்ன்னு சொன்னாங்க.. அதான்..!
 
**********************************************

Fun In The Flood

 
போலீஸ் : திருடப்போற இடங்களுக்கு சம்சாரத்தையும் கூட்டிக்கிட்டு போறியாமே, ஏன்?

திருடன் : திருடற பொருட்கள் முழுசா வீடு வந்து சேர்றதில்லைன்னு புலம்புறா. அதான்...!
 
**********************************************

Fun In The Flood

 
நண்பர் 1 : மூணு வேளையும் டிப்பனே சாப்பிடுறியே ஏன்..?

நண்பர் 2 : யாரும் என்னை தண்ட சோறுன்னு சொல்லிடக்கூடாது பாரு அதான்..!
 
**********************************************

Fun In The Flood

 
நீதிபதி : சாமி தலையில் இருக்கிற கிரீடத்தை திருடினியா..?

திருடன் : ஆமாய்யா..?
 
நீதிபதி : ஏன்..?
 
திருடன் : சாமிக்கு - மொட்ட போடுறதா வேண்டிக்கிட்டேன் அதான்..!
 
**********************************************

Fun In The Flood

 
நண்பர் 1 : அந்தப்படத்துல எதுக்கு அடிக்கடி சாராய பாட்டிலை காட்டுறாங்க..?

நண்பர் 2 : யாரோ ஒருத்தர் படத்துல சரக்கே இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்... அதான்..!
 
**********************************************

Fun In The Flood

 
வேலைக்காரி :  அய்யா..! நான் முழுகாம இருக்கேன்..!

முதலாளி : இதை ஏம்மா என் கிட்ட சொல்ற..?

வேலைக்காரி : மாசமானா வந்து சம்பளம் வாங்கிக்கனு நீங்க தானே

சொன்னீங்க..!
 
**********************************
 
நீங்க என்னங்க நினைச்சிங்க...!

54 comments:

 1. தலைப்ப வச்சே பதிவுகளைப் படிக்க வச்சுடுறாங்கய்யா..

  ReplyDelete
  Replies
  1. அப்பத்தானே இந்த பக்கம் உங்களை வரவைக்க முடியுது..

   Delete
 2. தலைப்பை பார்த்து கோபத்தோடு வந்தேன். முழுசா பார்த்துட்டு சிரிப்போடு செல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. எங்கப்பார்த்தாலும் ஒரே மாநாட்டு போட்டாவாகத்தான் இருக்குது..


   அதான் இப்படி...

   Delete
 3. உங்களை பத்தி தெரிஞ்சிருந்தும்! என்னமோ ஏதோன்னு நினைச்சு படிக்க வந்தேன் பாருங்க, எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

  ReplyDelete
  Replies
  1. நாங்ககெல்லாம் அப்பவே அப்படி... இப்ப சொல்லனுமா...!

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. ஏன் சௌந்தர் இப்படி அடிக்கடி மொக்க பண்றிங்க?

  ReplyDelete
  Replies
  1. வாங்க பிரசாத்...

   பதிவுலகில் இதெரல்லாம் சாதாரணமப்பா...

   Delete
 6. /// நீங்க என்னங்க நினைச்சிங்க...! ///

  நாங்க எதாவது நினைக்க முடியுமா..என்னா...?

  போட்டுத் தாக்குங்க...!

  வாழ்த்துக்கள் சார்... நன்றி... (TM 4)

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் தலைவரே... வலைச்சி வலைச்சி போட்டோ எடுத்திங்க....

   அதெல்லாம் பேர்டுங்க தலைவரே...

   Delete
 7. பலஜோக்குகள் ஏற்கனவே படித்தவைகளாக இருப்பினும், மீண்டும் படித்ததில் சந்தோஷமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. படங்களும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 8. பதிவர் சந்திப்ப வச்சி இன்னும் எப்படியெல்லாம் அசத்த போறீங்க பா.

  ReplyDelete
 9. ஹா ஹா ஹா....ஏதோ அடுத்த சர்ச்சைகள் ரெக்கை கட்டி பறக்க போகிறதோ என படிக்க வந்தேன்...இருந்தாலும் இந்த தலைப்பெல்லாம் டென் மச்சுங்க ..ஹி ஹி ஹி....

  ReplyDelete
 10. சகோ அருமையான படங்கள்

  பதிவர் மாநாட்டில் நாம் இருவரும் எடுத்துகொண்ட படம்
  சரியாக என் கேமராவில் பதியவில்லை உங்களிடம் இருந்தால்
  அனுப்புங்கள் நண்பா

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்...

   Delete
 11. ம்ம்ம்..
  இப்படியுமா? நடத்துங்க.. நடத்துங்க...

  ReplyDelete
 12. தலைப்பை வச்சே எங்களை மிரட்டுரீங்களே!

  ReplyDelete
 13. தண்ணி ஜோக்ஸ் சூப்பர்!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
  http://thalirssb.blogspot.in/2012/08/6.html
  மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

  ReplyDelete
 14. ஸ்ஸப்பா... த ம 8

  ReplyDelete
 15. என்னமா தலைப்பை வச்சி இழுக்குறாங்கபா.

  ReplyDelete
 16. தா.ம.ஒ . ஒன்னும் கிடையாது ...

  ReplyDelete
  Replies
  1. இப்படி சொன்னா எப்படி செல்வின்...

   Delete
 17. இங்கேயெல்லாம் நல்லா படம் புடிச்சு போடுங்க:)

  ReplyDelete
 18. ஆசிரியரின் குசும்பு தலைப்பு இப்படி குறும்பாக இருக்கின்றது ... நன்றி அண்ணே

  ReplyDelete
 19. படங்கள் என்றால் இவைகள் படங்கள்
  நகைச்சுவை என்றால் இவைகள்தான்
  நகைச்சுவைத் துணுக்குகள்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. எப்படியெல்லாம் ஏமாத்து றாங்க

  ReplyDelete
 21. பதிவர் சந்திப்பின்போது எந்த ஊர்லயோ எவனோ ஒருத்தன் தண்ணியில மிதக்கரத காட்டி தலைப்பை உண்மை ஆக்கிட்டீங்களே சௌந்தர்.

  ReplyDelete
  Replies
  1. எப்படியாவது மேட் பண்ணிடுவேம்ல...

   Delete
 22. படங்களுடன் கூடிய நகைச்சுவை பார்க்க சிரிப்பாக இருந்தது டைட்டிலில் கொஞ்சம் உள் குத்து இருக்கு ஜாக்கிரதை ! ( தமாஷ் )

  ReplyDelete
 23. படமும் அருமை, நகைச்சுவையும் அருமை

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...