கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 August, 2012

காணாமலேபோய் விட்ட டெரர் கும்மிஸ்...! என் சவாலை ஏற்பார்களா..?


அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஆகஸ்ட் 30-ம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 


உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


"அனைத்துலக காணாமற்போனோர் நாள்" குறித்து பல்வேறு உலக தன்னார்வ அமைப்புகளின் சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கவும் இன்னும் தன்னார்வலர்களை சேர்ப்பதற்கும் இந்நாள் உதவுகிறது. (விக்கிபீடியா)


இந்நாளில் பதிவுலகில் இருந்து காணாமல் போய்விட்ட இந்த டெரர் கும்மிஸைப்பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் இந்த டெரர் கும்மி குழுவினர்கள் டெரர் கும்மி தளத்திலும் தங்களுடைய சொந்த தளங்களிலும் நையாண்டி, நக்கல், மொக்கை, அறுவை, சண்டை, எகத்தாளம், ரம்பம், பிளைடு, என்ற பதிவுலகமே கேட்டிராத தலைப்புகளில் லேபிள்களில் பதிவிட்டுவந்தனர். அவைகள் படிப்பதற்கும் ஒருமாதிரியிருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கும்.


இவர்கள் தினம் ஒரு பதிவை எடுத்துக்கொண்டு அதில் வெட்டு குத்து நடக்கும் அளவுக்கு கருத்துக்கள் குவியும்... இவர்களின் கருத்துக்கள் இடம்பெறாதா என்று ஏங்கிய பதிவர்களில் நானும் ஒருவன். இவர்கள் கும்மியடிக்க ஆரம்பித்தால் அடுத்த வருபவர்கள் பதிவை படிப்பதை விட்டுவிட்டு இவர்களின் கும்மிகளைத்தான் படிப்பார்கள். பதிவுகளும் மிக வித்தியாசமானதாகவே இருக்கும். நான்கூட எவ்வளவு முயன்றும் இதுபோன்ற வித்தியாசமான மொக்கை பதிவுகளை போடமுடியவில்லை.
 

யாரின் கண்பட்டதோ என்று தெரியவில்லை இவர்களின் ஆதிக்கம் பதிவுலகை விட்டே தற்பேர்து போய்விட்டது. இவர்கள் இல்லாத குறையால் அதிகமான மொக்கை பதிவுகள் படிக்க முடிவதில்லை. தினம் ஒரு கருத்துச்சண்டைகள் இல்லை. சுவாரஸ்யமான பதிவுலக மோதல்கள் இல்லை. (ஆனா நிம்மதியா இருக்கு..)

ஆகையால் கீழ்கண்ட இப்பதிவர்கள் தன்னுடைய பழைய பாணியில் மீண்டும் பதிவுலம் வரவேண்டும் என்று வரவேற்கவே இப்பதிவு...


  
டெரர் கும்மி குழுவின் உறுப்பினர்கள் :  மேற்கண்ட இந்த குழுவினர்கள் எங்கிருந்தாலும் வந்து டெரர் கும்மி தளத்திலும் தங்களுடைய தளத்திலும் எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. மீண்டும் பழைய பாணியில் அவர்கள் திரும்புவார்கள் என்று நான் சவால் விடுகிறேன்.. என் சவாலை ஏற்பார்களா..?

  கோரி‌க்கையை ‌ஏற்று களத்தில் இறங்குவார்களா..? அல்லது அப்படியே காணாமல் போய் விடுவார்களா...?   இதற்கு தங்களின் பதில் என்ன..? நீங்களே சொல்லுங்கள்...!

  50 comments:

  1. டெரர் கும்மி குழுவின் உறுப்பினர்கள் - இவ்வளவு பேர்கள் இருக்கிறார்களா... என்று உங்கள் பதிவின் மூலம் தான் தெரியும்... (TM 2)

   ReplyDelete
   Replies
   1. ஆமா தலைவரே....

    தங்கள் வருகைக்கும் நன்றி

    Delete
  2. இன்னிக்கு உங்க பின்னூட்ட பெட்டி நிரம்பி வழியப்போகுதுன்னு நினைக்கிறேன்! :)

   ReplyDelete
  3. உங்கள் பதிவின் மூலம் தான் தெரியும்..

   ReplyDelete
  4. என்னங்க ஒரு மணி நேரம் மேல ஆச்சு.. இன்னும் யாரும் வரல.. :):)
   வருவாங்களா..???

   ReplyDelete
  5. என்ன இவங்க வந்து அப்படியே பதிவுலகை புரட்டிப்போட போறாங்களா போய் வேலையை பாருமய்யா ஏதோ தமிழ்மணத்தில் இருக்கும்போது ஏதோ நான்தான் பெரியஆளு என்ற போர்வையில் சுத்திக்கிட்டு இருந்தாங்க இப்அவங்களை கண்டுக்கூட ஆள் இல்லை மிஸ்டர்....

   ReplyDelete
   Replies
   1. யாரப்பா இது...

    உமக்கு என்னங்க பிரச்சனை...

    Delete
  6. அது இருக்கட்டும் உமக்கு என்னய்யா திடிர்ன்னு அவங்கமேல கரிசனம்
   ஓடடு ஏதாவது உமக்கு குறையுதா இல்லை கமாண்ட் பாக்ஸ் நிறையலையா
   பதில்சொல்ல கூட யாரும் வரலபோல

   ReplyDelete
  7. ஆமா., நண்பா,, ராமசாமியை நான் ரொம்ப மிஸ் பண்றேன்...

   ReplyDelete
  8. #தினம் ஒரு கருத்துச்சண்டைகள் இல்லை. சுவாரஸ்யமான பதிவுலக மோதல்கள் இல்லை. (ஆனா நிம்மதியா இருக்கு..)#


   அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே...

   ReplyDelete
  9. // உமக்கு என்னங்க பிரச்சனை... //

   டென்ஷனாகாதிங்க சௌந்தர். நீங்க விஜயகாந்த படமெல்லாம் பாக்கரது இல்லியா? இந்த சத்ரியன் படத்தில் கூட நீ திரும்ப வரனும் செல்வம் அப்படினு சொல்லி வில்லன் கொடுமை பண்ணுவனே. உன்னால முடியாது.. நான் சொல்ரேன் உன்னால பழைய செல்வமா ஆக முடியாது அப்படினு விஜயகுமார் (சும்மா ஏத்திவிட) சொல்லுவாரேரரரரர. அது மாதிரி தான் இவங்க எல்லாம். அவ்வளவு அன்பு. நன்றி! :))

   ReplyDelete
   Replies
   1. என்ன ஒரு அறிவார்ந்த விளக்கம்

    Delete
  10. உனக்கு ஏதாவது புரிஞ்சதா சௌந்தர்

   ReplyDelete
  11. வருவாங்க என்று நெனைக்கிறேன் வரணும் ...

   ReplyDelete
  12. யாருக்கும் பயப்படாதவன்...August 30, 2012 2:13 PM

   என்ன இவங்க வந்து அப்படியே பதிவுலகை புரட்டிப்போட போறாங்களா போய் வேலையை பாருமய்யா ஏதோ தமிழ்மணத்தில் இருக்கும்போது ஏதோ நான்தான் பெரியஆளு என்ற போர்வையில் சுத்திக்கிட்டு இருந்தாங்க இப்அவங்களை கண்டுக்கூட ஆள் இல்லை மிஸ்டர்....//

   ஆமா அண்ணன்தான் யாருக்கும் பயப்படாம கார்கில் போர்ல முன்னாடி நின்னவரு.

   ReplyDelete
  13. நல்லதொரு அழைப்பு! வருவார்களா? காத்திருப்போம்!

   இன்று என் தளத்தில்
   குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
   http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

   ReplyDelete
  14. வடிவேல் போல வீட்ல ரெஸ்ட் எடுக்கிறாங்க போல

   ReplyDelete
  15. ///திண்டுக்கல் தனபாலன்...டெரர் கும்மி குழுவின் உறுப்பினர்கள் என்று உங்கள் பதிவின் மூலம் தான் தெரியும்... (TM 2)//

   TM 2 என்றால் என்ன அர்த்தம்? சில இடங்கலகில் த.ம 1 என்றும் உள்ளது.

   ReplyDelete
  16. இவர்கள்ள பண்ணிக்குட்டி ராமசாமி மட்டும் கொஞ்சம் தெரியும் ஒரு முறை எனக்கு கருத்து போட்டிருக்கார். மீதி பேர் யாருன்னே எனக்கு தெரியாது.நல்ல அறிமுகம்தான்.? கண்டினியூ

   ReplyDelete
  17. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   ReplyDelete
  18. யாருக்கும் பயப்படாதவன்... said...
   என்ன இவங்க வந்து அப்படியே பதிவுலகை புரட்டிப்போட போறாங்களா போய் வேலையை பாருமய்யா ஏதோ தமிழ்மணத்தில் இருக்கும்போது ஏதோ நான்தான் பெரியஆளு என்ற போர்வையில் சுத்திக்கிட்டு இருந்தாங்க இப்அவங்களை கண்டுக்கூட ஆள் இல்லை மிஸ்டர்....//


   பார்ரா.. அண்ணன் சொல்லிட்டாரு! நாங்க பெரியாளுன்னு என்னைக்காவது உங்ககிட்ட அவனது சொன்னமா? ஏதோ அங்க இருந்தததால மாசம் பத்தாயிரம் பதிவு எழுதி சம்பாதிச்ச மாதிரியும் இப்ப ஏதோ உன்கிட்ட வந்து பிச்சை எடிக்குற மாதிரியும் பேசுற? போயி உன் பொழப்ப முதல்ல பாருயா :-))

   ReplyDelete
  19. யாருக்கும் பயப்படாதவன்... said...
   என்ன ஒரு அறிவார்ந்த விளக்கம்//


   விளக்கம் என்னமோ அறிவார்ந்த விளக்கம்தான்! ஆனா அது புரியணும்னா நீ சொன்னது வேணும் :-)

   ReplyDelete
  20. @ சௌந்தர்
   எங்க மேல உள்ள நம்பிக்கை நன்றி! எல்லாத்துக்குமே பீக் பீரியட்னு ஒன்னு இருக்கும், அதுபோலதான் எங்களுக்கும், இப்ப எங்கள்ள நிறைய பேரு வேற வேலை மாறிட்டோம், பதிவு போட சூழ்நிலை இல்லை ஒருபக்கம், போடற மொக்கைகளை பிளஸ்சோட நிப்பாட்டிக்கிறோம்! :-)

   ReplyDelete
  21. யாருக்கும் பயப்படாதவன்... said...
   இப்அவங்களை கண்டுக்கூட ஆள் இல்லை மிஸ்டர்....////

   இத கூட நீ சொல்லி தான் ராசா எங்களுக்கு தெரியுது..

   ReplyDelete
  22. யோவ் வைகை அவரு யாருக்கும் பயப்படாதவரு. நீ வேணும்னா உங்க ஊர்ல உள்ள ஜூல உள்ள சிங்க கூண்டுக்குள்ள விட்டு பாரேன்

   ReplyDelete
  23. வைகை said...
   யாருக்கும் பயப்படாதவன்... said...
   என்ன ஒரு அறிவார்ந்த விளக்கம்//


   விளக்கம் என்னமோ அறிவார்ந்த விளக்கம்தான்! ஆனா அது புரியணும்னா நீ சொன்னது வேணும் :-)//


   அட விடுங்கண்ணே அது இருந்தா பயபுள்ள இங்கே வந்து சவுண்டு விட்டிருக்காதே

   ReplyDelete
  24. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
   யோவ் வைகை அவரு யாருக்கும் பயப்படாதவரு. நீ வேணும்னா உங்க ஊர்ல உள்ள ஜூல உள்ள சிங்க கூண்டுக்குள்ள விட்டு பாரேன்///


   அப்பிடியா? சரி விடு.. அட்டைக்கத்தி படம் பார்த்துட்டியா? :-)

   ReplyDelete
  25. அப்பிடியா? சரி விடு.. அட்டைக்கத்தி படம் பார்த்துட்டியா? :-)//

   :)

   ReplyDelete
  26. யாருக்கும் பயப்படாதவன்... said...
   அது இருக்கட்டும் உமக்கு என்னய்யா திடிர்ன்னு அவங்கமேல கரிசனம்
   ஓடடு ஏதாவது உமக்கு குறையுதா இல்லை கமாண்ட் பாக்ஸ் நிறையலையா
   பதில்சொல்ல கூட யாரும் வரலபோல///


   அது இருக்கட்டும், உனக்கு என்ன திடீர்னு எங்க மேல காண்டு? மண்டபத்துல இருந்து அனுப்பிச்சாங்களா? :-)

   ReplyDelete
  27. யோவ் யாருயா அது அண்ணனை கலாய்க்கிறது.. அவர் யாருக்கும் பயப்படாதவரூ தெரியுமா உங்களுக்கு

   ReplyDelete
  28. வைகை said...யாருக்கும் பயப்படாதவன்... said...
   அது இருக்கட்டும் உமக்கு என்னய்யா திடிர்ன்னு அவங்கமேல கரிசனம்
   ஓடடு ஏதாவது உமக்கு குறையுதா இல்லை கமாண்ட் பாக்ஸ் நிறையலையா
   பதில்சொல்ல கூட யாரும் வரலபோல///


   அது இருக்கட்டும், உனக்கு என்ன திடீர்னு எங்க மேல காண்டு? மண்டபத்துல இருந்து அனுப்பிச்சாங்களா? :-)//

   அவரை யாரும் தேடலைன்னு லைட்டா பொறாமையா இருக்கும் மச்சி :)

   ReplyDelete
  29. என்னடா நடக்குது இங்க ......
   வேலை வெட்டி இல்லாத பசங்க யாருக்கும் பயப்பட வேண்டாம் .....
   போங்கடா போங்க போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா ..

   ReplyDelete
  30. இம்சைஅரசன் பாபு.. said...
   follow up///

   follow up ன்னா வெயிட் பண்ணிட்டு இருக்கொமின்னு தானே அர்த்தம்..

   ReplyDelete
  31. இம்சைஅரசன் பாபு.. said...
   என்னடா நடக்குது இங்க ......
   வேலை வெட்டி இல்லாத பசங்க யாருக்கும் பயப்பட வேண்டாம் .....
   போங்கடா போங்க போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா ..///


   அருமையான சிந்தனை! ஆழ்ந்த கருத்துக்கள்! தொடருங்கள் தோழரே! :-)

   ReplyDelete
  32. கிராமத்து காக்கை said...
   வடிவேல் போல வீட்ல ரெஸ்ட் எடுக்கிறாங்க போல//


   அண்ணே! அவரு அடி வாங்கி ரெஸ்ட் எடுக்குறாரு! நாங்க அப்பிடியில்ல, பதிவுலகின் "டான்"ன்னு சொல்லிக்கிட்டு இருந்த ஒரு டைனோசர அடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்குறோம் :-))

   ReplyDelete
  33. வெறும்பய said...
   யோவ் யாருயா அது அண்ணனை கலாய்க்கிறது.. அவர் யாருக்கும் பயப்படாதவரூ தெரியுமா உங்களுக்கு//


   நான்தான் போலிஸ்!

   எப்பிடி நம்புறது?

   நீ வேணா போலிஸ்னு கூப்புடுவே நான் திரும்பி பார்ப்பேன்!

   இந்த மாதிரியா? :-)

   ReplyDelete
  34. அவ்வளவுதானா? நான் ஏதோ பெரிய சண்டை நடக்கும்னு நினைச்சி ஜிம்முக்கு எல்லாம் போய் உடம்பை ஏத்திட்டு வந்து இருக்கேன்....

   டேய் நீங்க அடிச்சது புள்ள பூச்சியைடா... கப்பு அவனுக்கு தான்....

   ReplyDelete
  35. ஏதோ வாய்க்கா தகராறு மாதிரி ஆரம்பிச்சு
   அப்படியே முடிஞ்சிடுச்சே..
   அடப்போங்கப்பா!!

   ReplyDelete
  36. பாஸ் இந்த டெர்ரர் கும்மி நாதாரிக எல்லாம் சொரணை கேட்ட ஜென்மங்க சார் ....... அவனுகள விடுங்க நீங்க ஆரம்பிங்க

   ReplyDelete
  37. ரெரர் கும்மி நண்பர்களுக்கு....


   யாருக்கும் பயப்படாதவக் போன்ற அனானமிகளுக்கெல்லாம் நானோ நீங்களோ பதில்சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை... இதுபோன்ற போலி நபர்கள் அறிக்கைகள் கருத்துக்கள் அவ்வளவு ஒன்றும் நம்பகத்தன்மையானதாக எடுத்துக்கொள்ள கூடாது...

   ரெடர் கும்மியினர் தன்னுடைய பழைய பாணியை எதிர்பார்த்தே இந்த பதிவு....

   ReplyDelete
  38. ////////
   @ சௌந்தர்
   எங்க மேல உள்ள நம்பிக்கை நன்றி! எல்லாத்துக்குமே பீக் பீரியட்னு ஒன்னு இருக்கும், அதுபோலதான் எங்களுக்கும், இப்ப எங்கள்ள நிறைய பேரு வேற வேலை மாறிட்டோம், பதிவு போட சூழ்நிலை இல்லை ஒருபக்கம், போடற மொக்கைகளை பிளஸ்சோட நிப்பாட்டிக்கிறோம்! :-)
   ////////

   நல்லது.. வைகை...தாங்கள் அனைவரையும் நல்லதொரு வருகைக்காக காத்திருக்கிறோம்...


   கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..!

   ReplyDelete
  39. நன்றி சௌந்தர்..........அது ஒரு வசந்த காலம், இப்போ சூழல் ரொம்ப மாறிட்ட மாதிரி தோனுது. வெறும் மொக்கை போட்டே பிரபலம் ஆகுறாங்கன்னு கஷ்டப்பட்டு(?) இலக்கியத்தரத்துல எழுதிட்டு இருக்கும் பதிவர்கள் நிறைய பேருக்கு கோவம் வருது போல...! பட் அதுக்காக நாம ஒதுங்க கூடாதுதான்........ விரைவில் களம் இறங்குவோம்....

   ReplyDelete
   Replies
   1. நல்லதுங்க...

    நீங்க சொல்றதும் சரின்னே...

    ஆனா இலக்கிய தரத்தில் பதிவுகள் வருவது மகிழ்ச்சிதான் ஆனால் அதுவே அத்தனை சுவையையும் வழங்கிவிடாது....

    இது தனி சுவை...

    விரைவில் எதிர்பார்க்கிறோம்...

    Delete

  நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
  கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

  Related Posts Plugin for WordPress, Blogger...