கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 August, 2012

காமம் பேசும் ஓவியங்களும்...! காதல் பேசும் மொழிகளும்...!
ஒரு புன்னகையால் தூக்கில் பேர்டுவதும்
மறுபுன்னகையால் உயிர்கொடுப்பதும்
உன்னால் மட்டுமே முடிந்தவைகள்...!

****************************************************


எத்தனை பூக்கள் சூடினாலும்
உன்னால் தான் அழகு
அவைகளுக்கு..!

****************************************************


பூகம்பங்களுக்கிடையே
நீ பூத்தாலும்
என் கவிதைகளில்
உனக்கு இடமுன்டு...!

****************************************************


கல்லைத்தான் கொண்டுவந்தார்கள்
இவளை அனுப்பியிருந்தால்
நிலவையே அல்லவா கொண்டுவந்திருப்பாள்..!

****************************************************எனக்கு எப்போதும் பயமில்லை... 
வலிக்கு பயந்திருந்தால் 
நான் காதலிக்க அல்லவா பயந்திருக்க வேண்டும்..!
 
****************************************************என்ன ‌அதிசயம் 
உன் பெயரை உச்சரிக்கும்போதே 
உதடுகள் இனிக்கிறது..!

****************************************************


மௌனத்தை தாய்மொழியாக கொண்டவளே... 
உன் மௌனங்களையெல்லாம் 
மொழி பெயர்க்கும் அகராதி 
என்னிடம் மட்டுமே உள்ளது...!

***************************************************


காகிதத்தில் 
நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....
 
மையாக
கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
 
****************************************************


எனக்கே தெரியாமல்
ஏதேதோ நடக்கிறது...
காதல் உள்பட...!

***************************************************


 
இனிமேல் நீ தரும்
தண்டனைகள் எல்லாம்
முத்தங்களாகவே இருக்கட்டும்....!

**********************************************எவ்வளவு நேரம் என்றாலும்
உனக்கான காத்திருப்புகள்
எனக்கு சுகமானவையே...!

***********************************************


யாருக்கும் தெரியாமல்
ஒவ்‌வொறு சாயங்காலமும்
என்னை மரணப்படுத்துகிறது
உன்னை நினைவுபடுத்தி....!
 
******************************************
காமம் பேசும் அழகிய ஓவியங்ளோடு
காதல்பேசும் என் கவிதை வரிகள்..

29 comments:

 1. காகிதத்தில்
  நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....

  மையாக
  கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!

  கரைந்தே போனேன் நானும் வரிகளில்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சசிகலா..

   Delete
 2. நல்லா இருக்கு....

  ReplyDelete
 3. காகிதத்தில்
  நிறைந்துக்கொண்டிருக்கிறாய் நீ....

  மையாக
  கரைந்துக்கொண்டிருக்கிறேன் நான்...!
  கவிஞரே உண்மையில் இந்த வரிகளில் என் மனம் கரைந்துவிட்டது. அருமை. (த.ம.5)

  ReplyDelete
 4. காதல் பொங்கும் கவிதை. படங்களும் கவிதையாக மிளிர்கின்றன

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி முரளிதரன்...

   Delete
 5. வழமை போல் அருமை ..
  தொடருங்கள்

  ReplyDelete
 6. படத்திற்கேற்ற கவிதையா ? கவிதைக்கேற்ற படமா ? அருமை... நன்றி…(TM.7)


  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 7. காதல்ரசம் பொங்கும் கவிதை வரிகள் அற்புதம்! வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

  ReplyDelete
 8. சிறப்பான வரிகள் ...
  படங்களுக்கு இணையான கவிதை (கள்) ..
  ரொம்ப மயங்கினேன் தலைவரே

  ReplyDelete
 9. படங்கள் அனைத்தும் சூப்பர்....கவிதை வரிகள் அதற்கு மேலும் அழகூட்டுகிறது

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பரே...
   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 10. அனைத்தும் செமையாய் இருக்கிறது தலைவா!

  ReplyDelete
 11. எலேய் நீங்க ரெண்டு பேரும் சொல்லி வச்சியாலேய் பதிவு ஒரே நாள்ல போடுறீங்க..?

  பிச்சிபுடுவேன் பிச்சி....

  படங்களுக்கு கவிதை அழகா...?

  கவிதைகளுக்கு படங்கள் அழகா...? பட்டிமன்றம், கூப்புடுங்கய்யா பாப்பையாவை...!

  ReplyDelete
 12. கவிதைகளூம் படங்களூம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...