கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 August, 2012

பதிவர் சந்திப்பை புறக்கணிக்கும் பிரபல சென்னை பதிவர்கள்... மறைக்கப்படட உண்மைகள்.!

(தமிழ் பதிவர் சந்திப்பிற்கான அழைப்பிதழ்
கிளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்)
அனைத்து பதிவர்களையும் என்னுடைய சார்பில் அழைப்பு விடுக்கிறேன்...

சென்னை மற்றும் தமிழக பிறபகுதிகளில் சிறுசிறு அளவில் நடந்துக்கொண்டிருந்த பதிவர் சந்திப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 26 -ந் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் தமிழின் முன்னணி மற்றும் பிரபல பதிவர்கள் கலந்துக்கொள்ளும் பதிவர் சந்திப்பிற்காக ஏற்பாடுகள் மிகவும் சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது.
(வீடு திரும்பல் மோகன்குமார், அரசன்.சே.,  ஜெயக்குமார், கணேஷ் ஐயா)

புலவர் ராமானுஜம் ஐயா அவர்களின் சீறிய முயற்சியிலும், சென்னை பித்தன், பால கணேஷ்  ஐயா அவர்களின் ஆதரவோடும் நண்பர் மதுமதி அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை சீறிய முறையில் செய்துவருகிறார். இவர்கள் மட்டுமின்றி சென்னையின் அனைத்து பதிவர் நண்பர்களின் கூட்டு முயற்சியில் இப்பதிவர் சந்திப்பு சாத்தியப்பட்டிருக்கிறது.
(தென்றல் சசிகலா, மதுமதி, நானும் மெட்ராஸ் பவன் சிவாவும்)

விழாகுறித்த ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் நிறைவு செய்வது குறித்து சூலை 29, மற்றும் ஆகஸ்ட் 5 ந் தேதியும் சென்னையை சார்ந்த சில பதிவர்கள் கலந்து பேசி நல்லதொரு முடிவெடுத்தார்கள். அந்த இரண்டு சந்திப்பிலும் நானும் கலந்துக்கொண்டு என்னுடைய கருத்துக்களை பதிவுசெய்தேன்.

முதல் மற்றும் இரண்டாவது ஆலோசனை கூட்டத்திலும் சென்னைபித்தன் ஐயா அவர்கள் கலந்துக்கொள்ள வில்லை. ஒருவேளை அவர் பதிவர்சந்திப்பை புறக்கனிக்கிறாறோ என நினைத்தபோது, அவருக்கும் உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தது. இருந்தாலும் ஆலோசனையின்போது அவர் போன் செய்து வாழ்த்துகூறினார்.

கணேஷ் ஐயா, மதுமதி, செல்வின், ஆருர் முனா செந்தில், சிவா, சிராஜ்)

ஆகஸ்ட் 5-ந் தேதி கூடிய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சி நிரலும் இறுதி வடிவம் பெற்றது. இந்த கூட்டத்தில் டீக்கடை சிராஜ் அவர்கள் கலந்துக்கொண்டது சிறப்பாக இருந்தது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வருவதாக வாக்குகொடுத்திருந்த கேபிள் சங்கர் வருவரா மாட்டாரா என்ற எண்ணம் சில பதிவர்களுக்கு இருந்தது. ஆனால் அதற்கு இடம்கொடுக்காமல் ஆலோசனைக்கூட்டத்தில் கேபிள் சங்கர் அவர்கள் கலந்துக்கொண்டு தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். முக்கியமாக மதிய உணவு குறித்து அதிகமாக அவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

(என்னுடன், ராமனுஜம் ஐயா, ‌ஜெயக்குமார், பிரபாகரன்)

பிலாசபி பிரபாகரன், அஞ்சா சிங்கம் செல்வின் ஆகியோர் வந்திருந்தார்கள் இதில் செல்வின் நிறைய பேசினார், பிரபா ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. ஒருவேளை இவர் பதிவில்மட்டும்தான் போசுவார்போல... இன்னும் பட்டிகாட்டான் பட்டணத்தில் ஜெயக்குமார் மிகவும் உதவிகரமாக இருந்தார். (இவர்தாங்க நிகழ்ச்சியின் பொருளாளர்).
(ஜெயக்குமார், பிரபா, சிராஜ், சிவா, செந்தில், செல்வின், மதுமதி)

பிரபல சென்னை பதிவர்களான கேபிள் சங்கர், ‌ஜாக்கி சேகர், மெட்ராஸ்பவன் சிவா, பிரபாகரன், என சென்னைப்பதிவர்கள் அனைவரும் இந்த நி‌கழ்ச்சிக்கு சீரிய முறையில் ஒத்துழைப்பு நல்கிவருகிறார்கள். ஆகையால் சென்னையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பு ஒருதலை பட்சமாகவோ அல்லது சிலபதிவர்கள் புறக்கணிப்போ என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையால் சென்னை பதிவர் சந்திப்பை சென்னை பதிவர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆகையால் இன்னும் தன்னுடைய பெயரை பதிவு செய்யாத பிற பகுதி பதிவர்கள் தன்னுடைய பெயரை பதிவு செய்துகொள்ளும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. (அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்ய).

வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து வரும் பதிவர்களுக்காக சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உளள்து. இந்த பதிவர் சந்திப்பை அனைத்து பதிவர்களும் எந்த வித பேத, ஏற்றதாழ்வுகளை மனதில் கொள்ளாமல் சிறந்த முறையில் நடத்தி நாளைய வெற்றி பாதைக்கு வழிவகுப்போம்.

இடம், பகுதி, ஜூனியர் சீனியர் பாகுபாடின்றி நடைப்பெறும் இப்பதிவர் சந்திப்பில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பானதாக மாற்றுமாறு அன்போடு அழைக்கிறேன்.

98 comments:

  1. Replies
    1. நன்றி சங்கவி...

      தங்களையும் காண ஆவலோடு இருக்கிறேன்...

      Delete
  2. தலைப்பை பார்த்ததும் அடிச்சி புடிச்சி வந்தேன் இப்படியா செய்விங்க.

    ReplyDelete
    Replies
    1. பாருங்க... எப்படியெல்லாம் பிரபலபடுத்த வேண்டியிருக்கு...


      தங்கள் வருகைக்கும் நன்றி...

      தங்களின் புத்தக வெளியீடு அன்று நடைப்பெற இருக்கிறது அந்த நிகழ்வை காணவும் தங்கள் கவிதையை வாசிக்கவும் ஆவலாக இருக்கிறேன்...

      Delete
  3. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. அடக் கொடுமையே... எதுக்குய்யா இப்படி ஒரு தலைப்பு வெச்சி பீதியக் கிளப்புறீங்க...? எழுதினது என்னமோ நல்லாத்தான் எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... அப்பத்தான் மக்கள் ஆர்வமாக படிப்பாங்க கலந்துக்கொள்ள ஆர்வமும் வரும்...


      தலைப்பு என்னோட ஸ்டைலில்...

      Delete
  5. சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... (TM 1)

    நல்லா பீதியே கிளப்புறாங்கப்பா... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. பீதியா.. அதுதாங்க தமக்கு வேலையே....

      தங்களையும் அங்கு எதிர்பார்க்கிறேன்...
      கண்டிப்பாக வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்

      Delete
  6. பரபரப்ப கிளப்பிவிட்டுட்டீங்களே சௌந்தர்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுமதி...

      வருகிற 26-ந் தேதி வரைக்கும் பதிவுலகம் இப்படித்தான் இருக்கனும்....

      Delete
  7. நீங்க கலக்குங்க தலைவா....எல்லோரையும் இன்விடேசனை நாளை காலை போடச் சொன்னா நீங்க இன்னிக்கே போட்டுட்டீங்களா... சரி இதே ஸ்பீடுல இடுங்க தல...

    ReplyDelete
    Replies
    1. ஓ.. காலையில் தான் அழைப்பிதழ் போட வேண்டும் என்ற தகவல் எனக்கு தெரியாது ஜெயக்குமார்....


      நான் கொஞ்சம் ஆர்வக்கோளாரு...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  8. //ஒருவேளை அவர் பதிவர்சந்திப்பை புறக்ககிறாறோ என நினைத்தபோது, //

    ஆகா!கெளம்பிட்டாங்கப்பா!!
    இப்படி ஒரு ச்ந்தேகம் !என் மீது! கவிஞரே!அநியாயம்!!

    ReplyDelete
    Replies
    1. சும்மா தலைவரே...

      நீங்களும் இந்தபதிவர் சந்திப்பிற்கு முக்கியமானவர்... தங்களின் முயற்சியும் ஆர்வமும் நான் அறிவேன்...

      இருந்தாலும் தலைப்பை பதிவில் கோத்துவிடனும் இல்ல அதுக்குத்தான்...

      Delete
  9. சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள் பாஸ்
    எப்புடி எல்லாம் தலைப்பு வைக்கிறாங்க
    நாங்க எல்லாம் உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிறனும் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் கொஞ்சம் பரபரப்புக்குத்தான் ராஜா...

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  10. என்னைத் தொடர்ந்து இணைபவர் ஐநூறாவது நபரை உங்கள் நட்பில் இருப்பார் என்பதை மகிழ்வுடன் சொல்லிக் கொள்கிறேன் சார்.

    //பிரமாண்டமான முறையில்// கேட்பதற்கே மகிழ்வாய் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. 500 வது பதவரும் வந்துவிட்டார் நண்பரே... தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..!

      Delete
  11. எது சென்னை பித்தன் ஐயா புறா விக்கிறாரா...?எப்ப இருந்து இந்த பிசினஸ் பண்றார்!

    ReplyDelete
    Replies
    1. ரண்டு
      புறா
      பாா்சல்ல்

      Delete
    2. ரண்டு
      புறா
      பாா்சல்ல்

      Delete
    3. எலேய்... என்னது சின்ன பிள்ளை தனமா.... இதெல்லாம் பதிவில் சகஜமபபா...


      அப்புறம் உங்களை தனியா கவனிக்கலாம் நினைச்சேன்...
      அம்புட்டுத்தான்போ...

      Delete
    4. அண்ணே மனசாட்சி அண்னே...

      அப்புறம் அழுதுபுடுவேன்...

      Delete
  12. விழா சிறக்க வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. ராஜா கண்டிப்பாக பதிவர் சந்திப்பிற்கு வரனும்...

      மகனே வரல்லேன்னு வை.. அப்புறம் அம்புட்டுத்தான்...

      Delete
  13. மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லையே என்று வருத்தமாக உள்ளது. விழா நல்லமுறையில் நடந்தேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மஞசரி...

      Delete
  14. இந்த சந்திப்பிலே பரபரப்பாய் பதிவுக்கு தலைப்பு வைப்பது எப்படி என்ற தலைப்பில் கவிதை வீதி சவுந்தர் அவர்கள்
    உரையாற்றுவார் என எதிர்பார்க்கலாமா? :))

    சிரித்து கொண்டே சில பாராக்கள் படித்தேன் :))

    ReplyDelete
  15. நான் தான் ஐநூறாவது Follower.

    அடுத்த தடவை பார்க்கும் போது உங்கள் ஐநூறாவது வாசகரான எனக்கு ஒரு புக்கு பிரசன்ட் பண்ணனும் ஆமா !

    ReplyDelete
    Replies
    1. மோகன் குமார் சார் நீங்க ஐநூரவது இடம் பிடிச்சதுக்கு இந்தச் சின்ன பையன் தான் காரணம், உங்களுக்கு கிடைக்கிற புத்தகத்த எனக்குக் குடுத்ருங்க...

      இல்ல வேற புத்தகத்த வாங்கி எனக்குக் குடுத்ருங்க...

      ஆண் பாவம் பொல்லாது ( எப்படி எல்லாம் ஒரு புக்க ஆட்டைய போட வேண்டி இருக்கு அவ்வவ்வ்வ்வ் )

      Delete
    2. சீனுசார்... சண்டைபோடாதீங்க உங்களுக்கும் கண்டிப்பாக புத்தக பரிசு உண்டு...

      Delete
  16. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. பதிவர் சந்திப்பிற்கு நீங்களும் வறீங்களா..?

    ReplyDelete
  18. சிறப்பான முறையில்பதிவர் சந்திப்பு நடக்க வாழ்த்துக்கள்! சொந்த அலுவல்கள் காரணமாக என்னால்கலந்து கொள்ள இயலாத ந்நிலை வருத்தமாக உள்ளது. அதனால் பதிய வில்லை!

    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி சுரேஷ்..

      Delete
  19. //அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பானதாக// மாற்றுவோம்.
    //அன்போடு அழைக்கிறேன்.// மகிழ்ச்சி.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...

      Delete
  20. சிங்கமும் புறப்பட்டு வருது.. (நான்தாங்க)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... சிங்கம் களம் இறங்கப்போவுது...
      எல்லாம் ஓரம் போங்கப்பா...

      Delete
  21. அப்புறம் எனக்கு என்ன பதவி நிர்ணயிச்சு இருக்கீங்க?

    ReplyDelete
    Replies
    1. நீங்க.. ம்...ன்னு சொல்லுங்க தலைவரே...

      கேட்கிற பொருப்பை கொடுத்துடுறோம்...
      விழா அன்றைக்கு நீங்க கூட தொகுப்பாளரா இருக்கலாம்...

      Delete
  22. Replies
    1. அண்ணே நம்ப விமானங்க எதிலாவது ஒண்ணத்தில ஏறி வாங்கண்ணே அப்புறம் பாத்துக்கலாம்...

      Delete
  23. பாஸ்,
    சிறு அறிமுகம் என்னை பற்றி....நான் ஹைதரபாதில் இருக்கிறேன்..கடந்த 10 மாசமா தமிழில் வலைப்பூ எழுதி வரேன். எனக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது..
    வாய்ப்பு அமைந்தால் நானும் கண்டிப்பாய் கலந்து கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ராஜ் அவசியம் வர முயலுங்கள் நண்பா. உங்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்

      Delete
    2. ராஜ்..
      தங்களையும் அன்போடு அழைக்கிறோம்...

      இது ஒரு பகுதியை சார்ந்த பதிவர்சந்திப்பாக இல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடாகத்தான் பார்க்கிறோம்.. அதற்கான முயற்சியில்தான் ஈடுபட்டள்ளோம்...

      ஆகையால் தாங்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்...

      Delete
  24. நடத்துங்க நடத்துங்க ... நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!!! முழுசா இல்லாட்டாலும், வெறும் போட்டோவா இல்லாம கொஞ்சமாச்சு வீடியோ பண்ணி காட்டுங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹாலிவுட் ரசிகனும் விழாவுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

      தாங்கள் எந்த பகுதி என்று தெரியவில்லை...

      வீடியோ படம் எடுக்கிறோம் கண்டிப்பாக வீடியோ காட்சிகள் இணையத்தில் வலம்வரும்...

      Delete
    2. தாங்கள் இலங்கை என்று புரேபைலில் இருக்கிறது...

      நன்றி நண்புரே... வெளிநாடு வாழ் தமிழ் பதிவர்களுக்காக வீடியோ காட்சிகள் கண்டிப்பாக இணைக்கப்படும்...

      ஆனால் நேரடி காட்சிகளுக்கான முயற்சிகள் எடுக்க வில்லை

      Delete
  25. பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள் நண்பர்களே....!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி மக்கா...

      நீங்கல்லாம் இருந்தா விழா கலைகட்டும்...

      வாழ்த்துக்கு மிக்க நன்றி மனோ...

      Delete
  26. எப்படில்லாம் போடவேண்டியிருக்கு...அழைப்பிதழ் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தாங்களும் கண்டிப்பாக வருவதாக சொல்லியிருக்கிறீர்கள்...

      தங்கள் வருகையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்...

      Delete
  27. பதிவர் சந்திப்புக்கு எனது மனம்திறந்த வாழ்த்துக்கள்... தமிழன் மொய் வைக்கும் போது எப்போது 100 . 200 என்று வைப்பதற்கு பதிலாக கூட ஒன்றை சேர்த்து வைப்பார்கள் அதுமாதிரி 500 ப்ளோவர் என்பதற்கு பதிலாக என்னை இணைத்துள்ளேன் இப்ப 501 ஆகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கவிதை வீதியோடு இணைந்தமைக்கு பெருமைப்படுகிறேன்...

      மிக்க நன்றி நண்பரே...

      Delete
  28. வேறு ஒரு அவசர வேலை காரணமாக இரண்டாவது ஆலோசனை கூட்டத்திற்கு வர இயலவில்லை.நல்ல முறையில் பதிவர் திருவிழா நடைபெற இணைந்து செயல்படுவோம்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது முரளி...

      இணைந்து செயல்படுவோம்

      Delete
  29. ம்ம் நடத்துங்க நடத்துங்க

    ReplyDelete
  30. விழா சிறப்புற நடைபெற
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நல்லது ரமணி சார்...

      தங்களை கவிதை கேட்க ஆர்வமாக இருக்கிறேன்...

      Delete
  31. பதிவர் சந்திப்பு வெற்றி கரமாக நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு நன்றி அமரபாரதி...

      Delete
  32. தலைப்பை பார்த்து சற்றே துணுக்குற்று வந்தேன், அப்படி ஒன்றும் இல்லையென்றே பின்பே நிம்மதியடைதேன்! ஏன் தல இப்பிடியெல்லாம் தலைப்பு வைக்குறீங்க?!

    ReplyDelete
    Replies
    1. அப்பதாம்மா ஜனங்க இம்புட்டு பேர் படிச்சிருக்காங்க மக்களுக்கு தெரியுது...

      பதிவர் சந்திப்பில் இது குறித்து விவாதிப்போம்...

      Delete
  33. வாழ்த்துகள்..

    இப்படியெல்லாம பயமுருத்துறது...

    ReplyDelete
  34. நல்லா கெளப்புறாருயா பீதிய... எதிர்ப்புன்னு சொன்ன உடனே நான் கூட எவன் அவன்னு ஆரவமா பார்க்க வந்தேன்..புஸ்ஸுன்னு போச்சு... எதிர்ப்பு இல்லாட்டி எதுவுமே நல்லா இருக்காது.. யாரயவது நாமலே செட் பண்ணி எதிர்க்க சொல்லுவமா கவிதை வீதி அவர்களே?????

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...

      வில்லன் இருந்தாதான் படமே களைகட்டுது...
      ஆனா இந்த பதிவர்சந்திப்பிற்கு எதிர்ப்பு என்று இதுவரையாரும் இல்லை...

      மகிழ்ச்சியே...

      Delete
  35. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்..! அன்று ஏதேனும் அலுவலகப் பணிகள் இல்லாவிடில் நிச்சயமாக நானும் கலந்து கொள்கிறேன்..

    நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. ஜயா... தாங்களும் கலந்துக்கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்...

      Delete
  36. நானும் ஏதோ பிரச்னைதான் போலிருக்கு என்று நினைத்து வந்தால்........

    பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்..!

    ReplyDelete
  37. அன்பின் நண்பர்களே

    பதிவர் திருவிழா வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நல்லது ஐயா...

      தங்களையும் பார்க்க ஆவலோடு இருக்கிறேன்...

      Delete
  38. பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற எனது வாழ்த்துகள்..

    அலுவலக வேலை இல்லை என்றால் அவசியம் கலந்து கொள்கின்றேன்.... நன்றி கணேஷ்... போனில் அழைத்தமைக்கு என் நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜாக்கி இப்படி சொன்ன எப்படி...

      நீங்க கண்டிப்பாக கலந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்...

      Delete
  39. நல்லது....

    பகுதி வரிசையாக வலைப்பதிவர்கள் குழுமம் இருந்தாலும் இதை அனைத்தையும் ஒண்றினைந்த ஒரு குழுமம் வேண்டும் நண்பரே...

    தாங்களும் இந்த பதிவர் சந்திப்புக்கு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை...

    மதுரையில் இருந்து சீனா ஐயா.. தமிழ்வாசி பிரகாஷ் இன்னும் பிற நண்பர்கள் வருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள்...

    ReplyDelete
  40. அருமை சௌந்தர் !மதுமதி சொன்ன பிறகே பார்த்தேன்! அனைவரின் கவனத்தைத் தன்பால் ஈர்க்கும் தலைப்பு! நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  41. இனி பெயர் வைக்கும் "பெரிய திலகம்" என்று அன்போடு அழைக்கபடுவீராக ...
    செம அமர்க்களம் அண்ணாச்சி... இப்படியே தொடரட்டும் ...

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  43. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. முதற்கண் பதிவர்கள் சந்திப்பிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.! அயல் தேசத்தில் வாழும் எ(ன்னை)ங்களைப் போன்ற மற்ற பதிவர்களும் விரைவில் மாநாட்டில் தங்களையெல்லாம் சந்திப்போம் என்று மாநம்பிக் கொள்கிறோம்.

    மேலும், தாங்கள் இவ்விடுகைக்கு வைத்த தலைப்பும் உட்கருத்தும் சரியானபடி சேர்ப்பில்லாமல் அமைந்து விட்டதென நினைக்கின்றேன். வாசகர்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக இல்லாவொன்றை முதலில் இருக்கின்றது என சொல்லிவிட்டு, தீர நோக்கிடும் போது இல்லை என்று சொல்லிடும் பொருட்களின் விளம்பர போல அமைந்திருக்கின்றது.

    இதற்கு மாற்றாக முயன்று யோசித்து தலைப்பினைச் சரிவர தந்திருக்கலாம்.

    மனம் கசந்தின் வருந்தற்க,

    நன்றியுடன்,

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...