கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 September, 2012

அந்த பிரபல பதிவர்களுக்கு.... ஒரு சிறப்பு கிடாவெட்டு...

 

நிருபர் : ஜாக்கி நீங்கள் சிறுவனாக இருந்த போது நினைத்த ஏதேனும் இப்போது நடந்து உள்ளதா..?

ஜாக்கி சேகர் : “நான் சிறுவனாக இருந்த போது எங்க அம்மா எப்ப பார்த்தாலும் என் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருப்பார்கள்.

தலையில் முடியே இல்லாமல் இருந்தால் நல்லது என்று அப்போது நினைத்தேன். அது தற்போது நிறைவேறி உள்ளது..!”


****************************************************


பிலசபி பிரபாகரன் : “என்னைக் கல்யாணம் செய்து கொள். கல்யாணம் செய்துக்கொள் என்று எப்போதும் பார்த்தாலும் நச்சரிக்கிறார்கள்..!”

அஞ்சா சிங்கம் செல்வின் : யார்.. யார்.. நச்சரிக்காங்க..?

பிலசபி பிரபாகரன் : ”வேற யாரு.. எல்லாம் எங்க அம்மாவும் அப்பாவும்தான்..”


****************************************************
(வல்லரசு விஜயகாந்த்)

இரவு நேரம் பன்னிக்குட்டி ராமசாமியும், நாஞ்சில் மனோவும் தங்களுடைய அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று மின்சாரம் நின்று விட்டது.

நாஞ்சில் மனோ மெழுகுவர்த்தியை ஏற்றி மேசையின்மேல் வைத்தார். இருவரும் சாப்பிடத் தொடங்கினார்.

“ஒரே புழுக்கமாக இருக்கிறது. அந்த பேனைப் போடு” என்று ஏதோ நினைப்பில் சொன்னார் ப.ரா.

“என்ன முட்டாள் தனமாப் பேசறீங்க. பேன் போட்டால் மெழுகுவர்த்தி அணைந்து விடாதா..? பிறகு நாம் எப்படி இருட்டில் சாப்பிடுவது..” என்று கேட்டார் மனோ..!


****************************************************


அதிகம் சாப்பிடும் போட்டி நடந்தது.

அதில் ஆரூர் மூனா செந்தில் கலந்துக்கொண்டு 120 இட்லிகளை ஒரே மூச்சில் சாப்பிட்டு விட்டு முதல் பரிசை பெற்றார்.
 ‌
செந்தில் தன்னோடு இருந்த நாய்-நக்ஸிடம் “நான் சாப்பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றதை எங்க வீட்டிற்கு சொல்லி விடாதே.” என்றார்.

“ஏன்..?“ என கேட்டார் நாய் நக்ஸ்

“ அப்புறம் எனக்கு வீட்டில் சாப்பாடு போட மாட்டார்கள்” என்றார் செந்தில்.

 ****************************************************
 

கேபிள் சங்கர் ஒரு விளம்பரத்தை படித்தார்...

“இன்று இரவு இங்கு நடனம் ஆடுபவர்கள் அனைவரும் மேலாடையின்றி நடனம் ஆடுவார்கள்” என்று விளம்பரம் படுத்தப்பட்டிருந்தது...

கேபிளாரும் ஆர்வத்துடன் அந்த விழாவுக்கு சென்றார்..

சொன்னபடியே அன்று நடனத்தில் ஆடிய அனைவரும் மேலாடையின்றியே நடனம் ஆடினார்கள்...

ஆனால் கேபிள் சங்கர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்...
காரணம்.. அன்று நடனம் ஆடிய எல்லோரும் ஆண்கள்...

*****************************************

டிஸ்கி : இங்கு பிரபல பதிவர்கள் கலாய்க்கப்பட்டிருக்கிறார்கள்...
இதற்கு அந்த பதிவரே அல்லது வேறு யாராவதோ ஆட்சேபனை தெரிவித்தால் இன்னும் கடுமையாக கலாய்க்கப்படுவாகள் என்று எச்சரிக்கிறேன்...!


தொடரும்....

19 comments:

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம

    ReplyDelete
  2. கிடாவெட்டு செமஜோர் தான் நண்பரே...

    ReplyDelete
  3. செம கிடாவெட்டு
    எச்சரிக்கை அதைவிட பயங்கரம்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அன்பின் சௌந்தர் - அருமை அருமை - கலாய்ப்பு அருமை - பிரபல பதிவர்களும் இரசித்திருப்பார்கள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. கிடாவெட்டு சூப்பருங்கோ....

    ReplyDelete
  6. ஹ்ம்ம் ...............நடக்கட்டும் நடக்கட்டும்

    ReplyDelete
  7. சூப்பர் கடாவெட்டு..

    ReplyDelete
  8. கிடா ரொம்ப வெட்டிடீங்க...

    ReplyDelete
  9. பல கிடாயை வெட்டி இருக்கீகளே

    ReplyDelete
    Replies
    1. ஆனா, உங்களுக்கு யாரு கிடா வெட்ட போறங்களோன்னுதானே கேட்க வந்தீங்க சகோ

      Delete
  10. டிஸ்கி : இங்கு பிரபல பதிவர்கள் கலாய்க்கப்பட்டிருக்கிறார்கள்...
    இதற்கு அந்த பதிவரே அல்லது வேறு யாராவதோ ஆட்சேபனை தெரிவித்தால் இன்னும் கடுமையாக கலாய்க்கப்படுவாகள் என்று எச்சரிக்கிறேன்...!


    கடைசியில் எச்சரிக்கையைப் படிக்கும் பொழுது தான் எத்தனைப் பேர் தப்பித்திருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். சிரிப்பு வருகிறது.

    ReplyDelete
  11. நீங்க நடத்துங்க தலைவரே...

    ReplyDelete
  12. ஆரூர் முனா செந்தில் டயலாக்கிற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை :)))))))))))))

    ReplyDelete
  13. உலவை தூக்கிடுங்க ; பல நேரம் உள்ளே வர கஷ்டமா இருக்கு கடைசி மூணும் ரசித்தேன்

    ReplyDelete
  14. ஆயிரம் இருந்தாலும் இந்தியாவின் பாதுகாப்பு அரண் எங்க வல்லரசுவை கலாய்த்ததை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் ... (இப்ப எங்க மனோ அண்ணாவை கலாயிங்க பாப்போம்)

    ReplyDelete
  15. மற்றவை அனைத்தும் அருமை அண்ணா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...