கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 September, 2012

எரித்தாலும் இல்லை இதற்கு தீர்வு...


சூரியன் மரிக்கும் ஒரு மாலையில்
கடற்கரையில் சந்தித்த நாம்
முத்தமிட்டுக்கொண்டது...

நானே மறந்த என் பிறந்த நாளில்
வாழ்த்துச்சொல்லி நீ எனக்கு தந்த 
வாழ்த்து அட்டைகள்...

நம்பிக்கையற்று தளர்ந்துப்போகும்போது
ஆறுதல் சொல்லி அ‌ரவணைத்த உன்
மடியில் தூங்கியது...

அதிகமாய் அன்பு கொண்டு பாசமாய்
என் தலைக்கோதி என்னை புதுப்பிக்கும்
உன் விரல்களின் ஸ்பரிஷம்...

நம்மை கேட்காமலே நம் இதயங்கள்
பறிமாறிக்கொள்ளும் மௌனம் கலந்த
காதல் மொழிகள்...

இவைகளையெல்லாம் மறந்துவிட்டு
நீ.. வேண்டாம் என என்கையை
உதறிவிட்டுச் சென்றாயே...

அந்தநிமிட நினைவுகள் வரை
நான் மறப்பேன் என நீ நினைக்கலாம்
 
ஆனால் அவைகள் 
நான் மறித்தாலும் இறக்காதவை...
என்னை எரித்தாலும் கருகாதவை...


14 comments:

 1. கண்டிப்பா கவிஞரே
  ம்ம்ம் ..அருமை

  ReplyDelete
 2. ஆஹா....பேஷ் ..பேஷ்....ரொம்ப நல்லா இருக்கு...

  ReplyDelete
 3. சூப்பரா இருக்கு தலைவரே...

  ReplyDelete
 4. அழகான வரிகள் அற்புதமா இருந்ததுங்க.

  ReplyDelete
 5. என்ன ஒரு கவிதை!

  ReplyDelete
 6. ////நானே மறந்த என் பிறந்த நாளில்
  வாழ்த்துச்சொல்லி நீ எனக்கு தந்த
  வாழ்த்து அட்டைகள்...////

  இயல்பான வரிகள் மிக அழகு

  ReplyDelete
 7. வேதனை புரிகிறது ஐயா!அருமை.

  ReplyDelete


 8. // ஆனால் அவைகள்
  நான் மறித்தாலும் இறக்காதவை...
  என்னை எரித்தாலும் கருகாதவை..//

  உண்மைக் காதலை உணர்த்தும் உன்னத வரிகள்!

  ReplyDelete
 9. அன்பின் சௌந்தர் - கவிதை அருமை- காதலி உதறி விட்டுச் சென்ற பின்னும் எரித்தாலும் கருகாத நினைவுகளைத் தாங்கி வாழ்ந்து கொண்டிருப்பது பற்றிய கவிதை அருமை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 10. மிகவும் அருமையான வரிகள்...பகிர்வுக்கு நன்றி...

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
 11. கமெண்ட்ஸ் படித்து கவிதையின் அர்த்தம் அறிந்து கொண்டேன்.
  :-)))

  ReplyDelete
 12. அழகான ஆழமான நினைவுகள்..

  ReplyDelete
 13. மிக அழகான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...