கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 September, 2012

அளவுக்கு மீறினால்...!ளவுக்கு மீறினாலும் 
அமிர்தமாகத்தான் இருக்கிறது
உன்னோடான உரையாடல்கள்...

விலக விலக மறைவதில்லை நீ
அப்போதுதான் 
எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...

னம் இனத்தோடு சேருமாமே..?
பின்பு ஏன் உன் காதலும் என் காதலும்
சேரமறுக்கிறது...

மௌனத்திற்கு பொருள் சம்மதம் தானே
இந்த நாள்வரை அப்படித்தான் இருக்கிறாய்...
ஆனால் சம்மதம் மட்டுதான் கிடைக்க வில்லை..!

காதலை நம்பினோர் 
கைவிடப்படுவதி்ல்லை என்ற 
புதிய வரலாற்றை எழுதுவோம்
அன்பே...! கைகொடுத்து விடு...

22 comments:

 1. ம்ம்ம் காதல் முத்துக்கள் கவிஞரே

  ReplyDelete
 2. நல்ல வரிகள்...

  நீங்க எழுதுங்க புதிய வரலாற்றை... நிச்சயம் கைகொடுப்பாங்க...

  ReplyDelete
 3. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....கவிதை கலக்கல்

  ReplyDelete
 4. விலக விலக மறைவதில்லை நீ
  அப்போதுதான்
  எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...

  நண்பரே உருக வைத்துவிட்டீர்கள். அருமை

  ReplyDelete
 5. காதல் படுத்தும் பாடு... ..... ம்

  ReplyDelete
 6. நீங்கள் சொல்வது சரியாகத்தானே இருக்கிறது
  காதல் கவிதைகளில் மட்டுமே இப்படி
  எப்படி மாற்றிச் சொன்னாலும் ரசிக்கும்படியாக உள்ளது
  மனம் தொட்ட பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. கை கொடுத்துட்டாங்களா?

  ReplyDelete
 8. //இனம் இனத்தோடு சேருமாமே..?
  பின்பு ஏன் உன் காதலும் என் காதலும்
  சேரமறுக்கிறது... //

  அட.. அட..
  என்னமா ஜிந்திக்கிறீங்க.

  ReplyDelete
 9. வித்தியாசமான காதல் கவிதை
  அருமையாக இருக்கின்றது பாஸ்

  ReplyDelete
 10. ரைட்டு இன்னைக்கு என்னமோ நடக்க போகுது ..
  உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 11. காதல் கஸல்கள்! அருமை! வாழ்த்துக்கள் நண்பரே!

  இன்று என் தளத்தில்
  பழஞ்சோறு! அழகான கிழவி!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

  ReplyDelete


 12. உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. எப்பிடி சார் எழுதுரீங்க.......
  அழகான சிந்தனை

  ReplyDelete
 14. அமிர்தங்கள் அளவுக்கு மீறினாலும் சந்தோஷமே மிஞ்சுகிறது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. //விலக விலக மறைவதில்லை நீ
  அப்போதுதான்
  எனக்குள் விஸ்வரூபம் எடுக்கிறாய்...//

  அழகான வரிகள்..

  ReplyDelete
 17. அன்பின் சௌந்தர் - காதல் கை கூட நல்வாழ்த்துகள் - கவிதை அருமை - இரசித்தேன் - ஆசிரியர் தின நல் வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 18. ரசனையான காதல் கவி.

  ReplyDelete
 19. அருமையான வரிகள்

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...