கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 September, 2012

அழகி சகானாஸ் தந்திரமும், பொது மக்களின் புத்திசாலிதனமும்

இப்போது பத்திரிகைகளில் மிக மும்முரமாக அடிபடும் செய்திகள் இரண்டு. ஒன்று, ஈமு கோழி பண்ணை என்று மக்களை ஏமாற்றி, பல லட்சங்களை சுருட்டிய கும்பல். அடுத்து, பல ஆண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டு, பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சகானாஸ் என்ற பெண். இந்த இரு வழக்கிலும், காவல் துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொது மக்களும், பத்திரிகைகளும் கதறுகின்றன. 

நியாயத்துக்கு புறம்பான எந்தசெயல் சமூகத்தில் நடந்தாலும், அதை கட்டுப்படுத்த அரசும், காவல் துறையும் முனைப்பு காட்டவேண்டும் என்பது சரியான கோரிக்கையே. ஆனால், இதுபோன்ற குற்றங்களுக்கு அடிப்படை காரணம் என்ன? நாமும், நம் ஊடகங்களும் எப்போதும் சுட்டிக்காட்டும் அரசியலா? ஈமு கோழி முதலீட்டில் மக்கள், லட்சம் லட்சமாக பணம் கொட்டியதற்கு காரணம், அவர்களின் பேராசை. இதை ஊக்குவித்தது எந்த அரசியல்வாதி? வேண்டுமானால், "டிவி'யில் நடிகர்கள், நடிகைகள் வந்து விளம்பரம் செய்து எங்களை நம்ப வைத்தனர் என்று மக்கள் புலம்பலாம். 
சகானாஸ் கதையில் எப்படி அந்த பெண்மணியால் கண்சொடுக்கும் நேரத்தில் இத்தனை ஆண்களை ஏமாற்ற முடிந்தது? கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர், இரண்டாயிரம் காலத்து விருட்சம் என்றெல்லாம் கதைக்கும் இந்தியாவில் எப்படி, இப்படி ஆண்கள் வழுக்கி விழுந்தனர்? அவளிடம் மாட்டிக் கொண்ட அத்தனை ஆண்களுக்கும் தாய், தந்தை மற்றும் சுற்றம் இல்லையா? ஆயிரம் விசாரணை செய்து, வரதட்சணை வாங்கி கல்யாணம் செய்யும் வழக்கம் இன்னும் இந்த நாட்டில் தானே இருக்கிறது! 

அப்படிப்பட்ட சூழலில் இந்த பெண்ணால் மட்டும், எப்படி இந்த வித்தை செய்ய முடிந்தது? காரணம், இந்த நாட்டு ஆண்களின் காமம், அவர்கள் கண்ணை மறைத்து இருக்கிறது. இதற்கு எந்த அரசியல் கட்சி மீது பழிபோடுவீர்கள்? குற்றங்கள் மலிந்த சமூகம் இந்திய நாடு. 

தவறு செய்யும் போது, அது தனிமனித சுதந்திரம். அதே ஏமாற்று வேலை என்று உணரும் போது, சமூக பிரச்சனை. ஆக, பகுத்தறிய வேண்டிய சுய அறிவை பேராசை, காமம் இவற்றிடம் அடகு வைத்து விட்டு, நஷ்டம் வந்தவுடன் சமூக பிரச்சனை ஆக்கும் இந்திய மக்கள், நிஜமாகவே மகா புத்திசாலிகள்.

24 comments:

 1. என்னாது......ஒரு பெண் பல ஆண்களை ஏமாற்றினதா..?
  ஆண் வர்க்கமே இது நமக்கு கேவலமாகத் தெரியவில்லையா

  ReplyDelete
  Replies
  1. ஏங்க என்ன இப்பத்தான் ஷாக் ஆகறீங்க...

   கடந்த 10 நாட்களுக்கு மேலாக செய்திதாள்களை ஆக்கிறமித்துள்ள செய்தி இதுதாங்க....


   இதுதாங்க உங்க டக்கா...?

   Delete
 2. /// இந்தியாவில் எப்படி, இப்படி ஆண்கள் வழுக்கி விழுந்தனர்? அவளிடம் மாட்டிக் கொண்ட அத்தனை ஆண்களுக்கும் தாய், தந்தை மற்றும் சுற்றம் இல்லையா? ///

  கூட்டத்தோடு கும்மி அடிக்கும் (ஜால்ரா) கோஷ்டிகள், எங்கும்... எதிலும்... உண்டு...

  நல்ல பல கேள்விகள்... எல்லாவற்றிக்கும் அறியாமை தான் காரணம்...

  முடிவில் நன்றாக சொல்லி உள்ளீர்கள்... அறிய வேண்டியவர்கள் அறிவார்களா...?

  ReplyDelete
  Replies
  1. நாட்டில் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்கள் ஆசையை விட்டு வெளியில் வருவதில்லை...

   அதிக இலாபம் அதிக வட்டி என்று சொல்லிவிட்டால் இவர்களே தன்னுடைய தலையை கொண்டு சென்று அவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்...


   பாஸ்டர் ஜான் என்பவர் கூட பல கிறிஸ்துவமக்களை ஏமாற்றி சம்பாதித்து விட்டு தற்பேர்து தலைவறைவாகி விட்டார்...

   மக்கள் விழிப்போடு இல்லாத வரை இதற்கு முடிவே இல்லை

   Delete
  2. //மக்கள் விழிப்போடு இல்லாத வரை இதற்கு முடிவே இல்லை//

   கரெக்டா சொன்னீங்க அண்ணா...

   Delete
 3. # ஈமு கோழி முதலீட்டில் மக்கள், லட்சம் லட்சமாக பணம் கொட்டியதற்கு காரணம், அவர்களின் பேராசை. இதை ஊக்குவித்தது எந்த அரசியல்வாதி?#

  அப்படி சொல்ல முடியாது நண்பா .....விவசாயம் அழிந்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு புதிதாக ஒரு தொழில் என ஆசை கட்டினால் அதில் அவர்கள் விழத்தான் செய்வார்கள்.....அரசுதான் மக்களை பணம் போட சொல்லி அதை நிதியாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதித்து கண்காணித்து இருக்க வேண்டும்....ஏனென்றால் நடந்ததுக்கு பிறகு அரசுதானே நடவடிக்கை எடுக்கிறது?

  ReplyDelete
  Replies
  1. அரசியல் வாதிகள் முழுக்க காரணம் என்று இல்லாவிட்டாலும் அவர்களும் ஒரு காரணம்...


   தாங்கள் சொல்வது போல் அரசு கண்காணிக்க வேண்டும் என்றால் தற்போது அரசியல்வாதிகள் தானே அரசாக பிரிதிபலிக்கிறார்கள்...

   அரசு எதிர்காலத்தில் இதுபோன்ற அமைப்புகளை கண்காணித்து முறையாக ஒழுங்குபடுத்தி சில கட்டுபாடுகளோடு செயல்படுத்தினால் மக்கள் பாதிப்பில் இருந்து விடுபடுவார்கள்...

   தங்கள் கருத்துக்கு நன்றி ஹாஜா

   Delete
 4. தவறு செய்யும் போது, அது தனி மனித சுதந்திரம். அதே ஏமாற்று வேலை என்று உணரும் போது, சமூக பிரச்சனை.
  >>
  நல்லாதான் யோசிக்குறிங்க சகோ. உங்களால் மட்டும் எப்படி இப்படி யோசிக்க முடியுது. ஒரு வேளை ரெண்டு இலையில் சாப்பிட்டதால இருக்குமோ?!

  ReplyDelete
 5. ராஜி அக்கா அறிமுகம் கிடைத்ததில் இருந்து ஒரு மாதிரியாகத்தான் இருக்கிங்களாம்.

  ReplyDelete
  Replies
  1. பதிவர் சந்திப்புக்கு முன்னாடியே அவங்களை சந்திச்சிருக்கேங்க...

   Delete
 6. ஒரு பெண் தனியாக இருந்து இத்தனை ஆண்களை ஏமாற்றி இருக்க முடியாது. நிச்சயம் ஒரு கும்பலே இருக்கும். ஏனோ இந்த பெண்ணின் மீது மட்டுமே எல்லோரும் கல்லெறிந்து கொண்டு இருக்கிறார்கள்.
  பணம் இல்லை! பணம் இல்லை! என்கிறார்கள். ஆனாலும் ஈமுவை நம்பி இத்தனை பேர்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக பின்னணியையும் ஆராய்ந்து அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும்...

   Delete
 7. எல்லாவற்றிற்கும் சபலம் தான் காரணம்! அதை விட்டொழித்தால் விமோசனம் கிடைக்கும்! சிறப்பான அலசல்!

  இன்று என் தளத்தில்
  வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

  ReplyDelete
  Replies
  1. சபலத்தில் தான் வம்சம் முதல் வரலாறு வரை மாறுகிறது..

   Delete
 8. தவறு செய்யும் போது, அது தனி மனித சுதந்திரம். அதே ஏமாற்று வேலை என்று உணரும் போது, சமூக பிரச்சனை. அருமையான வார்த்தை. ஆனாலும் உண்மையான வார்த்தை.

  ReplyDelete
 9. உங்க கேள்விகள் நியாயமானதே, மக்களிடையே விழிப்புணர்ச்சி பெருக வேண்டும், தனி மனித ஒழுக்கம் வளர வேண்டும்!!

  ReplyDelete
  Replies
  1. விழிப்புணர்வு வந்தாலும் ஏமாற்றுபவர்கள் புதுபுது வழியை கண்டறிந்து வருகிறார்கள்...

   மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்

   Delete
 10. அன்பின் சௌந்தர் - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - பேராசையும் மற்ற ஆசைகளும் படுத்தும் பாடு - ஏமாந்த பின்னர் வருந்துவதில் என்ன இருக்கிறது ........ ஆசைகளை அழிக்க வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...