கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 October, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!


வணக்கம் மக்களே... கொஞ்சம் இடைவேளைக்குபிறகு மீண்டும் வந்திருக்கிறேன். பதிவின் தலைப்பு அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கின்ற ஒரு தமிழ் திரைப்படத்தின் பெயர். படத்தின் தலைப்பு ‌உண்மையில் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த பதிவு அந்தப்படத்தைப்பற்றியது அல்ல.

பொதுவாக ஒரு காலத்தில் நம்முடைய நினைவுகளை ஞாபகப்படுத்திக்கொள்ள நாம் நம்முடைய மூளையையும், மனதையுமே நம்பியிருந்தோம். இதில் நிறைய தகவல்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்பதால் தம்முடைய நினைவுகளை குறிப்புகளாக நோட்டுபுத்தகங்கள் அல்லது டைரிகளில் குறித்து வைத்திருந்தோம். 

கால மாற்றத்தால் தகவல்களை சேமித்துவைக்கும் பொக்கிஷங்களாக நமக்கு கிடைத்தவைகள் தான் கணினியும், கைபேசியும். கணினியின் பயன்பாடும் மற்றும் கைபேசியின் பயன்பாடும் வந்தப்பிறகு நிறைய தகவல்களை சேமித்து வைக்கும் அக்ஷய பாத்திரங்களாக இந்த இரண்டும் விளங்கி வருகிறது.

ஆனால் கணினியும் கைபேசியும் நம்மைவிட்ட சென்று விட்டால் என்னவாகும் உண்மையில் நம்முடைய வாழ்க்கையின் கொஞ்சப்பக்கங்கள் காணாமலே போய்விடும் என்பதுதான் உன்மை.


கடந்த வாரம் என்னுடைய கணினியின் செயல்பாடுகள் மிகவும் வேகம் குறைந்து காணப்பட்டது. அதன்பிறகு என்னுடைய சாப்டவேர் இன்ஜினியரை அழைத்து சோதித்தது போது கணினியின் ஹார்ட் டிஸ்க் (Hard Disk) போய் விட்டது என்று சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட 5 வருடங்களாக சேமித்த வைத்த விஷயங்கள் அலுவலக பயன்படு தகவல்கள், இன்னும் என்ன... என்ன தகவல்கள் என்று கூட சொல்ல முடியவில்லை அவ்வளவு தகவல்களும் கேள்விக்குறியாகிவிட்டது...

என்னுடைய கணினியில் C, D, E, F, G  என 5 பகுதியாக பிரிக்கபட்டு இருந்தது. தற்போது D  கோலனிலிருந்து மட்டும் கொஞ்சம் தகவல்களை மீட்டிருக்கிறேன் G முழுமையாக அழிந்து விட்டதாகவும்ஈ, மீதமிருக்கும் E, F  கோலன்களில் இருக்கும் தகவல்களை மீட்டெடுக்க என்னுடைய ஹார்ட் டிஸ்க் சென்னை பயனப்பட்டிருக்கிறது. அவைத் திரும்பியப் பிறகே என்னுடைய பழைய நினைவுகள் மீண்டும் திரும்பும். தற்போது புதிய 500 GP ஹார்ட் டிஸ்க் மாற்றியிருக்கிறேன் ஆனால் 1 GP  அளவுக்கூட இதில பழைய தகவல்கள் இல்லை.

10, 15 நாட்களுக்கு பிறகு என்னுடைய கணினி முதலில் இருந்து ஆரம்பித்திருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் நேற்று கண்விழித்து என்னுடைய கைபேசியை எடுத்து பார்த்தால் மற்றோர் அதிர்ச்சி  என்னுடைய SIM 2 TATA DOCOMO-வில் access error  (9042235550) என்று வந்தது என்னாச்சி என்று பார்த்தபோது. அதிலிருந்த அத்தனை தெலைபேசி ‌எண்கள் குறுந்தகவல்கள், என அத்தனை தகவல்களும் அழிந்துபோயிருக்கிறது. 


ஒரு காலத்தில் தெலைப்பேசி எண்களை பாக்கெட் டைரியில் குறித்து வைத்திருப்போம். சில எண்களை ஞாபகத்தில் வைத்திருப்போம். ஆனால் கைபேசி வந்தபிறகு ஒரு எண்னை கூட ஞாபத்தில் வைத்திருக்க வில்லை. அதிலிருந்த அத்தைனை எண்களும் போய் விட்டது. அதிக அதிகமான எண்கள் பதிவுலகத்தை சார்ந்தவர்களுடையது என்பதுதான் என் வேதனையை இன்னும் அதிகமாக்குகிறது. அவைகளை நான் எப்படி திரும்பப்பெறப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

என்னுடைய வாழ்க்கையில் இந்த இரண்டு சம்பவங்களும் புதியதாகவும் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியுட்டுவதாகவும் இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையின் சிலபக்கங்களை இழந்துவிட்டதுபோன்ற உணர்வே எனக்குள் மேலோங்கி நிற்கிறது. அதுவும் ஒரே சமயத்தில் இப்படி நடந்திருப்பது இன்னும் அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

தாமஸ் அல்வா எடிசன் தன்னுடைய ஆய்வு கூடம் எரிந்தபோது வருத்தப்படாமல் அமைதியாக இருந்தாராம்  எரிந்த அந்த ஆய்வுகூடத்தில் எடிசனின் 14 ஆயிரம் ஆராய்ச்சி குறிப்புகள் இருந்ததாம். ஆனால் பழையவைகள் போகட்டும் இப்போது நான் புதியதாக சிந்திக்கப்போகிறேன் என்றாறாம் எடிசன் அவர்கள்.

அதேபோல்தான் நானும் தற்போது அமைதியுடன் என்னுடைய புதிய நினைவுகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறேன். கணினியில் இருந்து எவ்வளவு தகவல்கள் மீட்டெடுக்க முடியும் என்று இதுவரையில் தெரியவில்லை. கைபேசியில் இருந்து அழிந்துபோன எண்களை மீட்டெடுக்கவும் கொஞ்சம் நாள் ஆகலாம். அதுவரையில் கொஞ்சம் கடினம்தான்.

 இது நல்லதா அல்லது கெட்டதா என்று பகுத்துப்பார்க்க கூடிய மனநிலையில் இல்லை. இருந்தாலும் எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக்கொண்டு பயணப்படுகிறேன்...

21 comments:

 1. அச்சச்சோ .. பாவம் நீங்க.
  ஆனா.. சத்தியமா நான் எடுக்கல.

  ReplyDelete
  Replies
  1. அது எனக்கு தெரியுங்க ஏன்னா இதை உள்நாட்டை சார்ந்த யாரும் செய்யவில்லை என்று அதிகார பூர்வமான தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது...

   என்னுடைய சந்தேகம் பாகிஸ்தான் அல்லது அமெரிக்கா மேலதான்...

   Delete

 2. தங்கள் நிலை மிகவும் சங்கடமானதே!

  ReplyDelete
  Replies
  1. சங்கடத்தை விட வெருமை மேலோங்கி நிற்கிறது ஐயா...!

   தற்போது பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்

   Delete
 3. சோதனை மேல் சோதனை...

  ...ம்ஹீம்... கொஞ்சம் சிரமம் தான்...

  பேக் அப்... பேக் அப்... என்று சொல்வார்களே... கேள்விப்பட்டது உண்டா... (நான் கணினி சம்பந்தப்பட்டதை சொன்னேன்...) அப்பாடா... சிரித்து விட்டர்கள்...

  Take it Easy...

  ReplyDelete
  Replies
  1. ஐயா...! பேக் அப் எடுத்து வைக்கும் பழக்கம் இருக்கிறது பொதுவாக கணினியை Fotmet செய்தால் கூட C: இருக்கும் கோப்புகள்மட்டும்தான் அழியும் மேலும் என்னுடைய தகவல்கள் அனைத்து 10 GP மேல்தான் இருக்கிறது அதனால்தான் பேக்அப் எடுக்க வில்லை.

   மேலும் இதுபோன்று ஆகும் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை.

   இனி ஜாக்கிரதையாக இருப்பேன்..


   நன்றி தலைவரே...

   Delete
 4. அட! எனக்கும் இதே போன்றதொரு நிலை ஏற்பட்டு இப்போதுதான் சீர் செய்து வருகிறேன்! என்ன ஒற்றுமை!

  ReplyDelete
  Replies
  1. மிகவும் கவலையான தகவல்தான் நண்பரே...

   நான் பழைய நிலைய அடைய இன்னும் நிறைய நாள் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..

   தற்போது சிம்கார்டு வாங்கியாகிவிட்டது... எண்கள் தான் அம்பே...

   Delete
 5. அய்யய்யோ ... ஹார்ட் டிஸ்க்கில் எப்படிப்பட்ட பிரச்சினை ஆனாலும் டேட்டாவை மீட்டுக் கொள்ளலாம் என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்? கைவசம் அண்ணளவா 3TBக்கு டேட்டா இருக்கே? பேக்-அப் எடுத்துக் கொள்ள இன்னோரு 3TBக்கு எங்கு போவது?

  ReplyDelete
  Replies
  1. இனி உஷாராக இருகக்வேண்டும்...

   பேக்அப் எடுத்துக்கொள்ளுங்கள் ரசிகன்

   Delete
 6. அடடா... நானும் நண்பர் ஹாலிவுட் ரசிகன் போலத்தான் நினைத்திருந்தேன். இப்பவே என் கணினியில் உள்ள தகவல்களை அடர்குறுந்தகடில் (அதாங்க டிவிடி) பதிந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். எங்களுக்கு எச்சரிக்கை. ஆனால் உங்கள் நிலைதான் பாவமாகி விட்டது நண்பா.

  ReplyDelete
  Replies
  1. நல்ல முடிவு...

   எப்போதும் உஷாராக இருக்கவேண்டும்

   Delete
 7. ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.. கணிணியில் உள்ள தகவல்களை மாதம் ஒருமுறை அதில் காப்பி செய்துகொள்ளுங்கள்... அதேபோல் உங்கள் போனில் உள்ள தகவல்களை கணிணியிலும் மெயிலிலும் ஒரு Backup வைத்துக்கொள்ளுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. அந்த முடிவுக்குதான் வந்திருக்கிறேன்...


   நன்றி நண்பரே...

   Delete
 8. தாமஸ் அல்வா எடிசன்
  >>>
  எடிசன் உங்களுக்கு அல்வா குடுத்துட்டாரா சகோ?!

  ReplyDelete
 9. எல்லாம் நல்லதுக்கே சார்......
  உண்மையில் கணனியும் கைபேசியும் எம் வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்து விட்டது தான்...
  சில மணிப் பொழுதுகள் கூட கைபேசி இல்லாமல் இருப்பதென்பது மிகவும் கடினமான செயலாக எனக்குத் தோன்றுகிறது

  ReplyDelete
 10. மனம் தளர வேண்டாம்.பல்வேறு மீட்பு மென்பொருள்கள் உள்ளன. ஒன்று மீட்காததை மற்றொன்று மீட்க வாய்ப்பு உண்டு.நீங்களே முயற்சித்துப் பாருங்கள்.

  ReplyDelete
 11. அன்பின் சௌந்தர் - பொக்கிஷம் களவு போன கதை - முயன்று கொண்டே இருங்கள் - நிச்சயம் கிடைக்கும் - அதற்குள் மாற்று ஏற்பாடுகள் செய்யுங்கள் - எக்ஸ்டேர்னல் ஹார்ட் டிஸ்க் போட்டு - ஒரு காப்பி தின்ம தின்ம சேமியுங்கள். - சொல்வது எளிது - செய்வது கடினம் - தெரியும் எனக்கு. இருப்பினும் ஆலோசனைகள் - அனைத்துத் தகவல்களூம் மீட்டெடுக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 12. வேறு எதுவும் SOFTWARE பயன்படுத்தி அனைத்தையும் எடுக்க முடியாதா?எனக்கு தெரியவில்லை....

  ReplyDelete
 13. இரண்டு வாரங்களுக்கு முன் நானும் இதே காரணத்தால் உங்களது மனநிலையிலேயே தான் நானும் இருந்தேன் நண்பரே..

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...